அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 28 July 2010

பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்


(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை:

இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்:

ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)

Monday 26 July 2010

என் இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்! அளவ‌ற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய்மையான‌ வடிவில் அறிந்துக்கொள்ளவும், இஸ்லாம் என்ற பெயரால் பலரும் பலவிதமான கொள்கைகளை மார்க்கமாகவும், தவறான வழிகாட்டுதல்களை அமல்களாகவும் நினைத்து செயல்படுத்தி இறைவனிடத்தில் நஷ்டவாளியாக ஆகிவிடாமல், அல்லாஹ் தந்த குர்ஆனையும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழும் நன்மக்களாக நம்முடையை வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே, இந்த ப்ளாக் தொடங்கியதன் நோக்கமாகும்! இதில் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலான சொந்த கட்டுரைகளும், தேவைப்பட்டால் பிற சகோதர, சகோதரிகளின் ஆக்கங்களும், தொகுப்புகளும் அவர்களின் பெயர்களோடு இன்ஷா அல்லாஹ் இடம் பெறும். இதன் மூலம் இஸ்லாமிய மக்கள் அனைவரும் பயன்பெற்று ஈருலகிலும் வெற்றி பெறவும், நாம் செய்யும் இந்த நல்ல த‌ஃவா பணியை வல்ல ரஹ்மான் ஏற்று, நற்கூலி வழங்கவும் பிரார்த்தித்தவளாய் இதை தொடங்குகிறேன். இதில் எதுவும் குறைகள் ஏற்படின், அது முழுக்க என்னைச் சார்ந்ததே! இதில் கிடைக்கும் நிறைகள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வினால் கிடைப்பவையே! அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு:- மாற்றுமத அன்புள்ளங்களும் பயன்பெறும் வகையில் சமையல், கைவினைப் பொருட்கள்,  செய்திகள், மருத்துவம், டிப்ஸ் என்று எக்ஸ்ட்ரா பகுதிகள் விரைவில் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ்!
பயணிக்கும் பாதை