Tuesday, 24 August 2010

நரக நெருப்பும் அதன் அகோரமும் (உலகத்திலுள்ள அதன் சிறு உதாரணம்)Photobucket
இஸ்லாம் நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும், அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன. நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த உதாரணங்கள் போதுமானதாகும்.

وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (அல்குர்ஆன் 32:20)
Photobucket

لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ

(ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(அல்குர்ஆன் 7:41)உலக நெருப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ள வேறுபாடு:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி

فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:24)
கற்பாறைகளே உருகி ஓடுமளவு வெப்பம் கொண்ட இந்த உலக நெருப்பே இப்படியென்றால், இதைவிட 70 மடங்கு அதிக வெப்பத்தை கக்கும் நரக நெருப்புக்கு, கற்பாறைகளை விட பல மடங்கு மென்மையான மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்? சிந்திக்கவேண்டாமா?إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيى


நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 20:74)
சீறும் எரிமலையைப் பாருங்கள்! நரகத்தின் கொந்தளிப்பைப் பற்றி இறைவன் கூறுவதையும் பாருங்கள்!


إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا

(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள். (அல்குர்ஆன் 25:12)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களுக்காக நாங்கள் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். நாங்கள் அறிந்துக்கொண்டே பாவம் செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அறியாமல் செய்யும் பாவங்களுக்காக எங்களைப் பொறுத்தருள வேண்டுகிறோம். இந்த பயங்கர நரக வேதனையிலிருந்து எங்களை தூரமாக்கிவைப்பாயாக‌!

6 comments:

 1. ஒரு மனிதன் சிந்திக்க தொடங்கி விட்டாலே, அவன் ஏகத்துவ வழியில் நடைபோட ஆரம்பித்து விடுவான்,
  சிலரிடம் நீங்கள் எவ்வளவு எடுத்துரைத்தாலும். அவர்கள் ஆணவத்தால் இவை அவர்களின் செவிகளை சென்று
  அடைவது இல்லை.

  ReplyDelete
 2. எடுத்துச் சொல்வது நம் கடமை; கேட்பதும் கேட்காததும் மற்றவர்களின் உரிமை. இறைவன் நாடினால், அவர்களின் செவிகளை சென்று அடையட்டும்! உங்களின் கருத்துக்கு நன்றி, இளம் தூயவன்.

  ReplyDelete
 3. அல்லாஹ் எம்மை இதிலிருந்து காப்பாற்றுயுவாக என துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன் .

  இந்த நெருப்பினைக் கண்ட என் மனதில் உள்ள ஈரம் காய்ந்து விட்டது .( படத்தில்)
  நானும் நிறையா கேள்விப் பட்டிருக்கேன் நரகத்தைப் பற்றி,எங்கள் ஊரில் ஜூம்மா தொழுகையின் போது இமாம் அவர்கள் பயான் செய்தார்.
  அதாவது நரகவாசியான மனிதனின் உடல் சங்கிலியால் கட்டப் பட்டிருக்குமாம்,அவனது உடலானது கரிந்துபோயி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து பின்னேயும் நெருப்பு அவனை சுவைக்கும் என்று,
  இப்படியே ..இரவும் பகலும் எப்படி மாறி மாறி வருதோ அதே மாதிரித்தான் நரகவாசிகளுக்கு தண்டனை வழங்கப் படும் என்று இமாம் சொன்னார்.

  பிறகு நரகவாசியின் ஒருப் pallin அளவு உஹது மலையைப் போல இருக்குமாம்,அப்படினா ஒடம்பு எவ்வளவு பெருசா இருக்கும்னு இப்போ உள்ள ஒரு பல்லின் அளவை எடுத்து உஹது மலையை கணக்கிட்டு அப்படியே நமது உடம்பையும் மல்ட்டி ப்லஸ் பண்ணி பார்க்கவும்.

  நல்லப் பதிவு அக்காள் ,இந்த நெருப்பிர்க்கே இப்படி பயப்ட்ரமே இதை விட எழுபது மடங்கு அதிகம் உஷ்ணம் தரக்கூடிய நெருப்பின் பக்கம் நாம் நெருங்க முடியுமா ?

  அதுனாலே உயிர் இருக்கிற வரை
  உண்மையாக வாழ்ந்துவிட்டு,அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்வதற்கான பாதையை நாம் சென்றடைய நல்ல அமல்களை செய்வோமாக ஆமின் .

  அருமையான பதிப்பும் கருத்தும்.

  நன்றிகள்

  ReplyDelete
 4. @ Mohamed Ayoub K...

  //உயிர் இருக்கிற வரை
  உண்மையாக வாழ்ந்துவிட்டு,அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்வதற்கான பாதையை நாம் சென்றடைய நல்ல அமல்களை செய்வோமாக //

  அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,

  அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கு இன்னும் நிறைய எழுதலாம். இன்ஷா அல்லாஹ் ரமலானுக்கு பிறகு எழுதணும். நாம் எல்லோருக்கும் அல்லாஹ்வுடைய அச்சம் அதிகமாக வந்து, நீங்கள் துஆ செய்தது போல் சுவர்க்கத்தின் பக்கம் செல்லக்கூடிய அமல்களை அதிகமாக செய்ய இறைவன் துணை புரிவானாக!

  ReplyDelete
 5. very nice post

  shareef

  ReplyDelete
 6. @ shareef...

  தொடர்ந்து வந்து படிங்க, வருகைக்கு நன்றி!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!