அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 18 September 2010

முள்ளங்கிக் கீரை வதக்கல்


                                                                          

பொதுவாக தண்ணீர் சத்து நிறைந்த எல்லா கிழங்கு வகைகளுக்கும் மேல்புறத்தில் இலைகள் தழைத்து வளர்ந்திருக்கும். அதுபோல் முள்ளங்கிக் கிழங்கின் மேல்புறமும் வளர்கின்ற இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நாம் பெரும்பாலும் அப்படிப்பட்ட கீரைவகைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. முள்ளங்கிக் கீரையை எடுத்துக் கொண்டாலும், எப்போதும் முள்ளங்கியை மட்டும் நாம் சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, கீரையை எறிந்துவிடுகிறோம். ஆனால், முள்ளங்கியைவிட இந்த கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌!


தேவையான பொருட்கள்:



(பொடிதாக நறுக்கிய) முள்ளங்கிக் கீரை ‍- 6 பிடி
காய்ந்த மிளகாய் ‍- 3
(நறுக்கிய) வெங்காயம் - 1 
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் - 1/2  ஸ்பூன்
தேங்காய் துருவல் ‍- 1 கப்
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:


ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, முதலில் காய்ந்த மிளகாயை துண்டுகளாக கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.




பிறகு நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு போட்டு சற்று பொரிய‌ விட‌வும்.




நறுக்கி வைத்துள்ள‌ முள்ளங்கிக் கீரையைக் கொட்டி, மீதி வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும்.




கீரை வதங்க ஆரம்பிக்கும்போது வெஜிடபிள் பவுடர் சேர்த்து, உப்பு சேர்க்கவும்.




எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கி, கீரை வெந்தவுடன் தேங்காய் துருவலைக் கொட்டி 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.



வித்தியாசமான‌ சுவையுடன் கூடிய, சத்துக்கள் நிறைந்த‌ முள்ளங்கிக் கீரை வதக்கல் ரெடி!



குறிப்பு:-  சூடான‌ வெள்ளைச் சோற்றில் சிறிது நெய் விட்டு இந்த 'முள்ளங்கிக் கீரை வதக்கலை'ப் போட்டு புரட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளித் தொல்லை இருந்தால் அப்போது கொடுக்கவேண்டாம். கேஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் இதை சமைக்கும்போது 2 பல் பூண்டு எடுத்து பொடிதாக நறுக்கி தாளிக்கும்போது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பொதுவாகவே இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவும். இந்த கீரையின் பலன்களையும் யாரெல்லாம் (எப்போது) சாப்பிடக்கூடாது என்பதையும் சற்று விளக்கமாக‌ பார்க்க இங்கே க்ளிக் பண்ணவும்.

16 comments:

  1. வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.

    ReplyDelete
  2. அஸ்மா.. எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. சாப்பிட்டால் சுவை அதிகம். நான் விரும்பி சாப்பிடுவேன்..

    ReplyDelete
  3. @ asiya omar...

    //வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.//

    இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் (கொஞ்சமா) சேர்க்கும்போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும் ஆசியாக்கா! 'சிக்கன் ஸ்டாக்'லாம் பவுடராக கிடைக்குதல்லவா, அதுமாதிரிதான் இருக்கும். வாங்கிப் பாருங்கள்.

    ReplyDelete
  4. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. //

    அப்படியா...?! நாங்க 2, 3 வருங்களாகதான் இதை யூஸ் பண்ண‌ ஆரம்பித்திருக்கோம். சூப்பர் டேஸ்ட்டா இருக்கு! அப்போ நீங்களாம் ஏற்கனவே டேஸ்ட் பார்த்தவங்க‌னு சொல்லுங்க :) உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா!

    ReplyDelete
  5. முள்ளங்கி கீரை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும். சில இடங்களில் முள்ளங்கி மட்டுமே விற்பார்கள். கீரையை தூரப்போட்டிருவாங்க..

    ReplyDelete
  6. @ மின்மினி RS...

    //முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும்.//

    அப்போ நீங்களும் முள்ளங்கிக் கீரை பிரியர்தானா...?:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மின்மினி!

    ReplyDelete
  7. மிளகாய் வற்றல் போட்டு தாளித்தால் நார்மல் ஃப்ரைங் பேன் நான் ஸ்டிக்காக மாறி விடுமோ ? :)))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. ம்ம்ம்ம் சூப்பர்

    ReplyDelete
  9. @ ஹைஷ்126...

    ஆமாம் ஹைஷ் அண்ணா...! அது தெரியாதா உங்களுக்கு? உங்க வீட்டில இருக்குற எல்லா நார்மல் ஃப்ரைங் பேனையும் எடுத்து ஒருமுறை இப்படி மிளகாய் வற்றல் போட்டு தாளித்து பாருங்க‌... அப்படியே நான் ஸ்டிக் பேனா மாறிடும்!:))

    அது என்னன்னே தெரியல போங்க, நானும் அந்த ஸ்டெப்பில் எடுத்த எல்லா ஸ்நேப்பையும் பார்த்துட்டேன், இப்படிதான் நார்மல் பேன் மாதிரியே தெரியுது. உங்க வருகைக்கு நன்றிண்ணா! (உங்கள் கவலைகள் குறைந்து, கமெண்ட் கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது!)

    ReplyDelete
  10. @ Riyas...

    //ம்ம்ம்ம் சூப்பர்// சாப்பிட்டு பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Riyas!

    ReplyDelete
  11. நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..?
    என் மனைவி டா செஞ்சு தரசொல்லிஇருக்கேன்.. லாத்தா..!!!

    ReplyDelete
  12. @ Barakath...

    //நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..?//

    இதுல வேற சந்தேகமா உங்களுக்கு...?:) தாராளமா சாப்பிடுங்க! சாப்பிடும் முன் அப்படியே கீழே கொடுத்துள்ள குறிப்பையும் பார்த்துக்கோங்க.

    ReplyDelete
  13. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  14. @ சிநேகிதி...

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஃபாயிஜா!

    ReplyDelete
  15. நிறைய பேர் விரும்பி சாப்பிடுறாங்க இன்ஷா அல்லாஹ் நானும் முயற்ச்சி செய்கிறேன் அஸ்மா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஸியா. முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை