அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 20 September 2010

"சுன்னத் ஜமாஅத்" - பெயரை மாற்றுங்கள்!

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


சுன்னத் வ‌ல் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!






சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?ஷிர்க்கா?

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.


சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
 

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  •  அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும், 
  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்பதும் பொருளாகும். 
மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான். இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிக்காகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!(அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம். இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்


எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கையேந்திப் பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். 

இந்த நபிமார்களின் அறிவுரையை நாம் கேட்கும்போது அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம். மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை "சுன்னத் ஜமாஅத்" என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

                            சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக முன்பே கூறியிருந்தோம். அதை இப்போது வெளிச்சம் போட்டு காட்டலாமா? 'சுன்னத்' என்பதற்கு 'நபிவழி' என்று பொருள்படுகிறது. இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத் 
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூட 'யா கவுஸ்!', நாகூர் ஆண்டவரே!, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது 
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துஆ செய்வது அவ்லியாவிடம் அழுது துஆ கேட்பதை தெய்வீகமாக கருதுவது 
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம் 
மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைப் புகுத்துவது 
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரீது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது! 
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துஆக்கள், வணக்க வழிபாடுகளை மட்டும் மேற்கொள்வது ஸலவாத்துன் நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி வணக்கமாக‌ மேற்கொள்வது 
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்றும் பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைக் கொடுப்பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! 
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணை வைப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது 

சுன்னத் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?

  • தர்காவுக்கு போவது சுன்னத்தா?
  • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
  • கப்ரு வணக்கம் சுன்னத்தா?
  • மவ்லூது சுன்னத்தா?
  • மீலாது சுன்னத்தா?
  • ஸலவாத்துன் நாரியா சுன்னத்தா?
  • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
  • முரீது சுன்னத்தா?
  • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
  • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
  • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
  • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா?
  • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
  • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
  • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
  • நாகூர் மொட்டை சுன்னத்தா?
  • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
  • மரணித்தால் ஜியாரத் பொரி வழங்குவது சுன்னத்தா?
  • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
  • தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
  • உரூஸ், படையல் சுன்னத்தா?
  • சந்தனக்கூடு சுன்னத்தா?
  • கொடிமரம் சுன்னத்தா?
  • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சுன்னத்தா?
  • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
  • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
  • கவாலி இசைக் கச்சேரிகள் சுன்னத்தா?
  • யானை, குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
  • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
  • கருமணி, தாலி கட்டுதல் சுன்னத்தா?
  • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
  • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ்தஆலா 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை இந்த உலகத்திற்கு அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான். எந்த நபியாவது மேற்கண்ட இழிச்செயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் - ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

இவர்களின் சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!


அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான 'சுன்னத் ஜமாஅத்தினர்' என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்கக் கூடாதா?

இணைக் கற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது!


     ‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைக் கற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்!


     (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைக் கற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்!


      அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

 இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். 


       நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன்:    39:65,66)

இறைத்தூதர்களும்கூட‌ இணைக் கற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


       நீர் இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்:  039:065, 066)

         அல்லாஹ் கூறுகிறான்:  “…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

பெயர் மாற்ற கோரிக்கை:


நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறோம்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக் காட்டுவானாக!
நன்றி-AN ISLAMIC PARADISE BLOG 


19 comments:

  1. சரியா சொல்லிருக்கீங்க அஸ்மா.. ஒவ்வொரு வரியிலும் உண்மை..... அவர்களுக்கு உரைத்தால் சரிதான்..

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    சரியான முறையில் இஸ்லாத்தைப் புரிந்து, இணைவைப்பை விட்டும்(இன்ஷா அல்லாஹ்) அனைவரும் விலகினால் ரொம்ப சந்தோஷமே! வருகைக்கு நன்றி நானா!

    ReplyDelete
  3. அருமையான பதிவு அஸ்மா. அல்லாஹ் இதன் கூலியாக தங்களின் எல்லா சிறு பிழைகளையும் பெருந்தவறுகளியும் பொறுத்தருள து'ஆ செய்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
  4. @ அன்னு...

    உங்கள் துஆவுக்கும் வருகைக்கும் நன்றி அன்னு..! இதை தொகுத்து அளித்தவ‌ர்களுக்கும் உங்களின் துஆ நிச்சயம் சேரும், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  5. ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி., உண்மை தான். ஆனால் பாருங்கள் இவ்வாறு விமர்சிக்கும் யாரும் (என்னை உட்பட) அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதை சரிவர அறிந்துக்கொள்ளவில்லை. இஸ்லாத்தில் இல்லாததை செய்கிறார்கள் என்ற ஆதங்கமே அவர்கள் மீது கோபமாக மாறுகிறதே தவிர அஃது அவர்கள் செய்ய காரணம் குறித்து அறிய முன்வரவில்லை. சகோதரி உங்கள் ஊருக்கு அருகாமைதான் நாகூர்.அதன் நிலை என்னவென்பது உங்களுக்கு மிக தெளிவாய் தெரியும்! எனவே தான் நான் பேசும் போது அவர்களிடம் முன்னிருத்தி கேட்கும் கேள்வி இதுதான் இன்று அவ்லியாக்கள் என்று சொல்லக்கூடியவர்கள் உலகத்திற்கு வந்ததன் நோக்கம் என்ன? பொதுவாக இஸ்லாத்தை பரப்புவதற்காக என்பதே பெரும்பாலோர் பதிலாக இருக்கும். அதைதொடர்ந்து.
    *அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்ல வந்தவர்கள் என் மரணத்திற்கு பிறகு எனக்கு ஜியாரத் எனும்பெயரில் சந்தனக்கூடு நடத்த சொல்லி இருப்பார்களா?
    * எல்லா புகழும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்று சொன்னவர்கள் என் மரணத்திற்கு பின் என் புகழை (மௌலிது எனும் பெயரில்) பரப்புங்கள் என சொல்லிருப்பர்களா...?
    *செருப்பின் வாரு அறுந்தால் கூட அதற்கான துவாவை அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள் எனக்கூறிய மா நபி வழிவந்தவர்கள் என் இறப்புக்கு பின் எந்த தேவைக்கும் என்னிடம் வஸீலா தேடுங்கள் எனக் கூறியிருப்பபார்களா...?
    இன்னும் எவ்வளவு அனாச்சாரியங்கள் அவர்கள் பெயரில் ..(நீங்கள் சுட்டிக்காட்டியதை போன்று) உண்மையாகவே அவர்கள் தான் சொல்லியிருப்பார்களா...?

    ReplyDelete
  6. என அவர்களிடம் அவர்கள் மதிப்பு வைத்திருக்கும் அவ்லியாக்கள் குறித்து விளக்கும் போது இன்ஷா அல்லாஹ் அவர்கள் சற்று தெளிந்த மனநிலையுடன் குர்-ஆன்,ஹதிஸ் வெளிச்சத்தில் இஸ்லாத்தை அணுகுவார்கள்.அஃதில்லாமல் தர்ஹாவிற்கு போனால், நீ ஷிர்க் வைத்து விட்டாய் உனக்கு அல்லாஹ் நரகம் தான் கொடுப்பான் என்றால் அதன் உண்மையே அவர்கள் அறிந்துக்கொள்வதற்கு முன் அவர்கள் கோவம் அவர்களின் அறிவை மாய்த்துவிடுகிறது.அதற்கு பிறகு நாம் எது சொன்னாலும் அவர்கள் காதில்போட்டு கொள்வதில்லை.மாறாக யுத்த முனையில் மாட்டிக்கொண்ட மாற்றான் போலதான் நம்மை பார்க்கிறார்கள்..
    நன்றாக பாருங்கள் சகோதரி
    //தர்காவுக்கு போவது சுன்னத்தா? முதல் சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா? // அவை அனைத்தும் ஒரு சராசரி முஸ்லிம் சடங்கென்ற பெயரில் அறியாமல் அரங்கேற்றினாலும் அதன் பின்புலம் பணம் பண்ணவேண்டும் என்ற நோக்கில் அமையப்பெற்றது தெளிவு.சில சுயநல மிக்க ஆலிம்களும், ஹஜ்ரத்துக்களும் மார்க்க போர்வைப்போத்தி தனது வயிறு வளர்க்க தலைப்பட்டனர்.தன்னை முன்னிருத்தினால் ஆதாயம் அவ்வளவாக பெற முடியாது என்பதை உணர்ந்து அவ்லியாக்கள் பெயரால் இறைவனுக்கு இடைதரகர்களை ஏற்படுத்தி பாமர முஸ்லிம்களிடம் இலகுவாக பணம் பண்ணும் வித்தையே கற்றுக்கொண்டனர்.மேலும் உபரியான தேவைகளுக்கு இஸ்லாமிய பெயரால் போலியாக நீங்கள் பட்டியலிட்ட 32 விசயங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள். படித்த முஸ்லிம்கள் கூட இந்த ஆனாச்சரியங்களை ஆர்வத்துடன் புரிய ஆரம்பித்து விட்டனர். ஒரு புறம் அறியாமையும் மறுபுறம் ஹஜரத்,செய்குமார்கள் போன்றவர்களின் மீதான முஹப்பத்தும்.தான் இதை போன்ற பித்அத் போன்றவற்றிற்கு மூல காரணம்.இவர்கள் குறித்து அவர்களுக்கு விளங்க செய்தால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் அறியாமை திரை இனி மெல்ல விலகும்

    ReplyDelete
  7. //நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர் வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. ...என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்! //
    அஃதில்லாமல் வைத்திருக்கு பெயருக்கும் பொருத்தமாக நபிகளார் காட்டிய சுன்னத் அடிப்படையில் அவர்கள் வாழ குர்-ஆன் சுன்னாவை எத்தி வைத்து உண்மையாக சுன்னத் வல் ஜமாத்தாக அவர்களும் நாமும் வாழ அல்லாஹ் தவ்ஃபிக் தந்தருள்வானாக
    (சகோதரி சிறிய பின்னூட்டம் இடத்தான் நினைத்தேன் மன்னிக்கவும்.சற்று நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு விட்டது)

    ReplyDelete
  8. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....! நீண்ட பின்னூட்டமாக இருந்தாலும் அதன் மூலம் பதில் சொல்ல வாய்ப்பு கிடைத்தமைக்காக உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    * //அவர்கள் மதிப்பு வைத்திருக்கும் அவ்லியாக்கள் குறித்து விளக்கும் போது...//

    * //அவர்களுக்கு விளங்க செய்தால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் அறியாமை திரை இனி மெல்ல விலகும்//

    * //...நபிகளார் காட்டிய சுன்னத் அடிப்படையில் அவர்கள் வாழ குர்-ஆன் சுன்னாவை எத்தி வைத்து//

    * //இஸ்லாத்தில் இல்லாததை செய்கிறார்கள் என்ற ஆதங்கமே அவர்கள் மீது கோபமாக மாறுகிறதே தவிர...//

    நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே பல மார்க்க அறிஞர்கள் பல மேடைகளிலும் அழகிய முறையில் இணைவைத்தலையும் அதன் தீங்குகளையும் பற்றி விளக்கம் கொடுத்து, குர்ஆன்-சுன்னாவை முறையாக எத்திவைத்து, ஷிர்க்கில் மூழ்கிக் கிடக்கும் மக்களின் அறியாமையைப் போக்க பாடுபட்டிருக்கிறார்கள். பலபேர் அதிலிருந்து அல்லாஹ் உதவியால் மீண்டு வந்தாலும் கூட, அதிலேயே பிடிவாதமாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைக் கண்டிப்பான முறையில் தொடர்ந்து நாம் எடுத்துச் சொல்வது கடமையாக உள்ளது.

    // நீ ஷிர்க் வைத்து விட்டாய் உனக்கு அல்லாஹ் நரகம் தான் கொடுப்பான் என்றால் அதன் உண்மையே அவர்கள் அறிந்துக்கொள்வதற்கு முன் அவர்கள் கோவம் அவர்களின் அறிவை மாய்த்துவிடுகிறது//

    அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

    "(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்." (அல்குர்ஆன் 98:6)

    இது ஏக வல்லோனின் எச்சரிக்கை! நம்முடைய இஷ்டத்தில் உள்ள மிரட்டல் அல்ல என்பதை கவனியுங்கள் சகோதரரே!

    "நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!"(14:44)

    இணைவைப்பிற்கான மறுமை தண்டனைப்பற்றி நாம் அச்சமூட்டும்போதுதான், அதன் உண்மை நிலையை/தண்டனைக்கான காரணத்தை அறிந்து, அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் தயாராகுவார்கள். அவ்வாறு உண்மையை அறிய முற்படும் மக்கள்தான் அந்த இணைவைப்பின் பாதாளத்திலிருந்து தப்பித்து வருகிறார்களே தவிர, ஷிர்க் பற்றி வாய் திறந்தாலே 'நீங்கள் வஹ்ஹாபிகள், உங்கள் பேச்சைக் கேட்கமாட்டோம்' என்று காதில் கைவைத்துப் பொத்திக் கொள்பவர்கள்தான், நீங்கள் சொல்வதுபோல் கோபத்தினால் அறிவை மாய்த்துக் கொள்கிறார்கள்!

    "(தரையைவிட)உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டுவிடாதீர்" நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்:அலி(ரலி); நூல்:முஸ்லிம் (1764)

    ஷிர்க்கை விட்டும் மக்கள் அகலவேண்டும் என்பதற்காக முயற்சி செய்யும் நாம் யாராவது, (மேற்கண்ட)அண்ணல் நபி(ஸல்)அவர்களின் கட்டளையை செயல்படுத்தினோமா? அப்படி செயபடுத்தியிருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இப்படியெல்லாம் செய்திருந்தால் //அதன் உண்மையே அவர்கள் அறிந்துக்கொள்வதற்கு முன் அவர்கள் கோவம் அவர்களின் அறிவை மாய்த்துவிடுகிறது// என்றுதான் சொல்லியிருப்பீர்கள் தம்பி!

    ஆக, அல்லாஹ்வின், அவனது தூதர்(ஸல்)அவர்களின் கட்டளைகளை இப்படிதான் செயல்படுத்தமுடியும். தட்டிக்கொடுத்து சொல்லவேண்டிய இடத்தில்தான் தட்டிக் கொடுக்கவேண்டும். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இடத்தில் எச்சரிக்கைதான் செய்ய‌வேண்டும். இதுதானே தவிர, அவர்கள் மீது கோபம் கொள்ள வேறென்ன இருக்கிறது?

    உங்கள் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா,
    தெளிவான விளக்கம்
    தேவையான கருத்துக்கள்
    என்னதான் சொன்னாலும்
    திருந்த மாட்டார்கள்.
    எல்லாம் தெரிந்தே {சிர்க்]
    அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி ., ஒரு விசயத்தை நன்றாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.குர்-ஆன்,சுன்னாவின் அடிப்படையே ஓரளவிற்கு தெரிந்தவர் கூட இதை போன்ற ஷிர்க் மற்றும் பித்அத் செயல்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.அஃது அறிந்து செயல்படும் நபர்கள் குறித்து நான் கூறவில்லை... அவ்வாறு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமான முறையில் செயல்படும் 75 சதவீகித மக்களுக்கு நீங்கள் சொல்லும் வழி ஓ.கே.அதில் எனக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது எனக்கு மட்டுமல்ல எந்த ஒரு முஸ்லிம்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.ஆனால் இப்போதும் கூட சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாகதான் இஸ்லாத்தை நபிகள் (ஸல்) அவர்கள் அரேபிய பாலையில் தோற்றுவித்தார்கள் என கூறுவோரும் உண்டு..நான் கூறியது அப்படிப்பட்ட மீதமுள்ள 25 சதவீகித மக்களை குறித்துத்தான்.அவர்களைதான் மிக சரியாக தவறான பாதையில் மார்க்க வியாபாரிகள் அழைத்து செல்கின்றனர்.அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் வழிமுறை தான் நான் சொன்னது.நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்தது.எனினும் அது எழுத்தாத மாறும்போது புரிதலின்றி உங்கள் கோபத்தோடு கைக்கோர்க்குமோ என அஞ்சி இத்துடன் நிறுத்தி விடுகிறேன்.
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். ((16:125))

    ReplyDelete
  11. @ ஆயிஷா அபுல்...

    //என்னதான் சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.// அல்லாஹ் நாடினால் திருந்துவார்கள் ஆயிஷா! அவர்களுக்காக துஆ செய்வோம். அத்துடன் நம்மையும் அந்த‌ ஷிர்க்கிலிருந்து இறுதி மூச்சுவரை காப்பற்றும்படி நமக்காகவும் இறைவனிடம் துஆ செய்வோம்!

    //எல்லாம் தெரிந்தே {சிர்க்] அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள்// பெரும்பாலான இன்றைய மக்கள் தெரிந்தே ஷிர் வைக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆயிஷா! அல்லாஹ்தான் அவர்களுக்கு நேர்வழியைக் கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  12. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....!

    //இப்போதும் கூட சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாகதான் இஸ்லாத்தை நபிகள் (ஸல்) அவர்கள் அரேபிய பாலையில் தோற்றுவித்தார்கள் என கூறுவோரும் உண்டு. நான் கூறியது அப்படிப்பட்ட மீதமுள்ள 25 சதவீகித மக்களை குறித்துத்தான்//

    உங்களுக்கு இரண்டு விஷயங்களைக் கூற விரும்புகிறேன். முதலாவது, இதுதான் மார்க்கம் என்று எத்திவைக்கப்படாத‌ ஆரம்ப நிலையில் உள்ள மக்களுக்கு நளினமாகவும் அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் பொறுமையாகவும் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதை நாம் நன்றாகவே அறிந்து, அதன்படிதான் செயல்படுகிறோம். ஆனால், நான் ஏற்கனவே உங்களுக்கு கூறியதுபோல், அதிலேயே பிடிவாதமாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையைக் கண்டிப்பான முறையில் தொடர்ந்து நாம் எடுத்துச் சொல்வது கடமையாக உள்ளது என்பதை மறுக்கவே முடியாது!

    நபி(ஸல்)அவர்களுக்கு முன் லட்சக்கணக்கான நபிமார்களை இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியிருந்தபோதும், நபி(ஸல்)அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கத்து குறைஷியர்கள், நீங்கள் எப்படிப்பட்ட மக்களைச் சொல்கிறீர்களோ அதைவிட மோசமான நிலையில்தான் இருந்தார்கள். அந்த மக்களுக்கு நபி(ஸல்)அவர்கள் நரகத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய‌வில்லையா? எந்த இறைவன் "உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!" என்று கூறுகிறானோ, அந்த இறைவன்தான் "நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" என்றும் கூறுகிறான் அல்லவா? ஆக, எந்த நிலையில் எப்படி சொல்லவேண்டும் என்பதைதான் இந்த ஆயத்களிலிருந்து அல்லாஹ்தஆலா நமக்கு உணர்த்துகிறான்.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைத் தொகுப்பில், மார்க்கத்தை அறிந்த நிலையிலேயே அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய, நீங்கள் சொன்ன அந்த "மார்க்க வியாபாரிகள்" தங்களை 'சுன்னத் ஜமாஅத்' என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றவேண்டாம் என்பதற்காகதான், "சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத் ஜமாஅத்", "பெய‌ர் மாற்றக் கோரிக்கை" என்ற தலைப்புகள் கொடுக்க‌ப்பட்டுள்ளதே தவிர, நீங்கள் குறிப்பிடக்கூடிய ஒன்றுமே அறியாத மக்களுக்காக சொல்லப்படவில்லை.

    இன்னும் சொல்லப்போனால் தமிழக முஸ்லிம்களின் இன்றைய நிலையில், இஸ்லாம் எடுத்துச் சொல்லப்படாத, ஒன்றுமே அறியாத மக்கள் மிக மிகக் குறைவு! அந்தளவுக்கு தமிழகமெங்கும் இஸ்லாத்தையும் இணைவைத்தலையும் 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே அல்லாஹ் உதவியால் சொல்லப்பட்டு வந்துள்ளது நீங்களும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி ஆரம்ப நிலையில் உள்ள மக்களுக்கு சொல்கிறோம் என்றால் கூட, அவர்களுக்கும் நரகத்தைப்பற்றி எச்சரிக்கை செய்வது எந்த விதத்திலும் தவறாகாது. ஏனெனில் நாம் எதற்காக அவர்களை இணைவைத்தலை விட்டும் மீண்டு வரச் சொல்கிறோமோ, அந்த முக்கிய காரணமே நிரந்தரமான நரக வேதனைதானே?

    இதுவரை சொன்னவை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கலாம். இதற்குமேல் இப்படியே தொட‌ர்வது ஏதோ விவாதக்களம்போல் உள்ளது:)! நான் சொல்ல விரும்பிய இரண்டாவது விஷயம், இந்த தொகுப்பு சம்பந்தப்பட்டதல்ல! //நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணமிருந்தது.எனினும் அது எழுத்தாத மாறும்போது புரிதலின்றி உங்கள் கோபத்தோடு கைக்கோர்க்குமோ என அஞ்சி இத்துடன் நிறுத்தி விடுகிறேன்// நீங்கள் சொல்வது நன்றாக புரியதான் செய்கிறது. நீங்கள் அடிக்கடி 'கோபம்', 'கோபம்'என்று யூஸ் பண்ணுகிறீர்களே அதுதான் புரியவில்லை :) இதுதான் நான் சொல்ல விரும்பிய இரண்டாவது விஷயம்! :) வேறு கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்கள், தம்பி குலாம்!

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    //இதற்குமேல் இப்படியே தொட‌ர்வது ஏதோ விவாதக்களம்போல் உள்ளது//
    சகோதரி., ஒத்த கருத்துடையவர்கள் இருவரும் ஆமோதிக்கிற விசயத்தில் விவாதிப்பதன்பது., தேவையற்ற ஒன்றுதான். நானும் உடன்படுகிறேன்.அஃது விவாதிப்பது பேசுப்பொருளுக்கு தொடர்பின்றி வேறொரு பாதைக்குதான் பயணப்பட்டுப்போகும்.
    //'கோபம்', 'கோபம்'என்று யூஸ் பண்ணுகிறீர்களே அதுதான் புரியவில்லை//
    உங்கள் எழுத்தின் சாரம் அவ்வாறு எனக்கு எண்ண தோன்றியது.இன்ஷா அல்லாஹ் இனி அவ்வாறு சொல்வதை தவிர்க்க முயல்கிறேன்
    .

    ReplyDelete
  14. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....!

    //ஒத்த கருத்துடையவர்கள் இருவரும் ஆமோதிக்கிற விசயத்தில் விவாதிப்பதன்பது., தேவையற்ற ஒன்றுதான். நானும் உடன்படுகிறேன்// சந்தோஷம், நன்றிகள்!

    //உங்கள் எழுத்தின் சாரம் அவ்வாறு எனக்கு எண்ண தோன்றியது// ஒரு கருத்தை அழுத்தமாக எடுத்து வைக்கும்போது, நீங்கள் சொல்வது போல் எழுத்தின் 'சாரம்' உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம். ஆனா அதில் 'காரம்' இருந்தால்தான் கோபம்னு எடுத்துக்கணும் :)) ஓகே நன்றி தம்பி, மீண்டும் தொடர்ந்து வாங்க!

    ReplyDelete
  15. இறைவனை நேசி இன்பம்பெறுவாய்
    அவனையே சுவாசி அனைத்தும் பெறுவாய்.

    இதை உணர்ந்தால் போதும். இறைவனுக்கு சிர்க் வைக்க யாரும் முன்வரமாட்டார்கள். உணர்தலில் உள்ள பிழைகளால் ஏற்படும் விளைவுதான் இவைகளெல்லாம்.

    அனைத்தும் அறிந்தவன் இறைவன் ஒருவனே!
    அவனே நம்மை சிர்கிலிருந்து அனைவரையும் பாதுகாத்து சுவர்கத்தில் நம்மை நுழைச்செய்வானாக. ஆமீன்

    ReplyDelete
  16. @ அன்புடன் மலிக்கா...

    //இறைவனை நேசி இன்பம்பெறுவாய்
    அவனையே சுவாசி அனைத்தும் பெறுவாய்//

    அழகான கவிதை வரிகள்! உண்மையான வார்த்தைகள்! இப்படி சிந்திப்பவர்கள் யாரும் நிச்சயமாக இறைவனுக்கு ஷிர்க் வைக்க முன்வர மாட்டார்கள்தான் மலிக்கா! அல்லாஹ்தான் நம் அனைவரையும் காப்பாற்றணும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா!

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    லாத்தா நேத்து புல்லா ஊருல பவர் கட்., ஸோ., கருத்து சொல்லும் வாய்ப்பும் கட்டு., //எழுத்தின் 'சாரம்' உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம். ஆனா அதில் 'காரம்' இருந்தால்தான் கோபம்னு எடுத்துக்கணும்// உங்க ஆக்கத்தின் கருத்துக்கள் காரசாரமாக இருந்தாலும் அதில் உள்ள சாரத்தை மட்டும் இனி எடுத்து கொள்ள முயற்சிக்கிறேன். தற்போது பிரான்ஸ், எப்போதும் நாகூரின் அருகாமை என எண்ணும்போது தாங்கள் காரைக்கால் லாத்தாவோ...? ஹைர்., அடுத்து மின்னலா...இறை நாடினால் அந்த கருத்து களத்தில் ஆரோக்கிய பரிமாற்றத்துடன் சந்திப்போம்

    ReplyDelete
  18. தர்காவுக்கு போக வேண்டாம்னு சொன்னா அடுத்து எதாவது பிரச்சனை நடக்கும் போது நீ அப்படி சொன்னதால் தான் இப்படி சீரழியிற. அங்கே போய் மன்றாடுன்னு சொல்றாங்க.... இது என்னிடம் இல்லை... நான் நிறைய இடத்தில் பார்த்துவிட்டேன். இப்படி பயமுறுத்தியதன் விளைவு தான் தர்கா வழிபாடு இன்னும் ஓங்கியே இருக்கு. தன் சுய லாபத்துக்காக சொன்னதை மக்களும் நம்பி அதையே பின்பற்றுவது தான் வேதனைக்குரியது. இஸ்லாத்தை பரப்பினார்கள் அதனால் நாங்கள் அவர்களிடம் செல்கிறோம் என சொல்கிறார்கள். நபி மார்களுக்கே தர்காக்கள் தனி இடங்கள், கல்லறைகள் என இல்லாத போது ஏன் இப்படி பித்து பிடித்து போய் கல்லறையை கட்டி அழுகிறார்கள் என தெரியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழி காட்டுவானாக ஆமீன்....

    ReplyDelete
  19. @ ஆமினா...

    //இப்படி பயமுறுத்தியதன் விளைவு தான் தர்கா வழிபாடு இன்னும் ஓங்கியே இருக்கு. தன் சுய லாபத்துக்காக சொன்னதை மக்களும் நம்பி அதையே பின்பற்றுவது தான் வேதனைக்குரியது//

    பயமுறுத்தினாலும் அதிலிருந்து தெளிந்து வர‌க்கூடிய மக்கள் இப்போது அதிகமாகி வருவது சந்தோஷத்திற்குரியது. ஆனால் இன்னும் தெளிவடையாமல் இருக்கும் மக்களை எண்ணிதான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது:(

    //நபி மார்களுக்கே தர்காக்கள் தனி இடங்கள், கல்லறைகள் என இல்லாத போது ஏன் இப்படி பித்து பிடித்து போய் கல்லறையை கட்டி அழுகிறார்கள் என தெரியவில்லை// அவர்களும் இப்படி சிந்தித்து நேர்வழிபெற அல்லாஹ் உதவி செய்யட்டும்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை