Sunday, 31 October 2010

உயிரையும் கொடுக்க உறுதிமொழி (ஹுதைபிய்யா தொடர் 2)

பைஅத்துர் ரிள்வான்:

தூதுச் சென்ற உஸ்மான்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியதும், நபி(ஸல்)அவர்களும் தோழர்களும் உஸ்மான்(ரலி)அவர்களின் உயிருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணிப்போம் என்று உடன்படிக்கை எடுக்கிறார்கள். மேற்கொண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து நிராகரிப்பாளர்கள் இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக‌ பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் நபி(ஸல்)அவர்கள் ஸஹாபாக்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்திருக்க ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்கிறார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை (தொடர் 1)


நபி(ஸல்)அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைக்க ஆரம்பித்த சமய‌ம், அண்ணல் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஃஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். அதை மீறிச் செல்பவர்கள் தாக்கப்பட்டனர். குறைஷிகளின் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் ஹிஜ்ரி 6 - ம் ஆண்டு வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக, உம்ரா செய்வதற்காக‌ வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். எந்த வகையிலும் முஸ்லிம்களை மக்காவினுள்ளே அனுமதிக்க மக்கத்து காஃபிர்கள் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவாக இந்நிகழ்ச்சியின் இறுதியில், இறைவனின் உதவியினாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களது நுண்ணறிவு மிக்க நடத்தையினாலும் ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை தான் இஸ்லாமிய வரலாற்றில் 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' என்று அழைக்கப்படுகின்றது. ‍‍‍‍‍‍‍‍‍அந்த நிகழ்ச்சி நடந்தது, இப்போது நாம் எந்த மாதத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோமோ இதே 'துல்கஃதா' மாதத்தில்தான். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்பதாலும் அதைப்பற்றி தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்வதற்காகவும் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த இந்த துல்கஃதா மாதத்தில் இதைப் பதிவிடுவது பொருத்தமாக அமையும் இன்ஷா அல்லாஹ்!

Friday, 29 October 2010

முறுக்கு மாவு

தேவையான பொருட்கள்:


உலுந்து - 125 மில்லி
பொட்டுக் கடலை - 150 மில்லி
பாசிப் பருப்பு - 125 மில்லி
எள் - 1 ஸ்பூன்
ஜீரகம் - 2 ஸ்பூன்

Wednesday, 27 October 2010

மலேஷியாவின் இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்


மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்திய - மலேஷிய உறவில் இன்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், ரஜாக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இரு நாடுகளும் கைக்கோர்த்துக் கொண்டு பயணிக்க இருக்கிறது. மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

Tuesday, 26 October 2010

முள்ளு முறுக்கு

தேவையான பொருட்கள்:


முறுக்கு மாவு - 400 மில்லி
அரிசி மாவு - 1/2 கிலோ
தேங்காய்ப் பால் - 150 மில்லி
நெய் -  3 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்
சீனி - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு

Monday, 25 October 2010

இஸ்லாத்தை தழுவிய இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் டோனி ப்ளேயரின் உறவினர்!


பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக இருந்த டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர். இவரது ஒன்று விட்ட சகோதரிதான் லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த லாரன் பூத் (Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க‌ பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

(கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்)லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற இடத்தில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டத‌ற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

"நான் 6 வாரத்திற்கு முன்பு ஈரானிற்கு சென்றிருந்தேன். அங்கு முஸ்லிம் சமூகத்தினருடன் பழகினேன். அது எனக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்தது. மேலும் நான் இப்போது 5 வேளைகள் தொழுகின்றேன். பள்ளிவாசலுக்கு செல்கின்றேன்.

இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதிலிருந்து மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன். தற்போது நான் மது அருந்தி 45 நாட்களாகின்றது. தினமும் மது அருந்தாமல் இருக்கமுடியாத நான், இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சரியப்படுகிறேன். குர்ஆனை தினமும் படித்து வருகிறேன். தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டேன். இஸ்லாமிய சமூகம் மிகவும் அமைதியானது! நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் லாரன் பூத் தெரிவித்துள்ளார்.

எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே!Sunday, 24 October 2010

இறைவனிடம் கையேந்தி நிற்போம்!திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்:-

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த பிரார்த்தனைகள் இம்மை, மறுமை வாழ்வின் நலனுக்கு வேண்டிய அற்புதமான வேண்டுதல்களை உள்ளடக்கியவை! இவற்றை நாம் முடிந்தளவுக்கு மனப்பாடம் செய்துக் கொண்டால் நம் அன்றாட துஆக்களில் பிரார்த்திக்கலாம்.

Wednesday, 20 October 2010

சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 2)


சன் நியூஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம். இந்த விவாதம் இஸ்லாமிய‌ பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட‌வேண்டியது.

பங்கேற்பு:- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன்.

நெறியாளுகை: திரு. வீரபாண்டியன்.

"அநீதி இழைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அமைதி காக்கிறார்கள். அதற்காக இஸ்லாமிய சகோதர‌ர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும்." - சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன்.முதல் பாகத்தை பார்ப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

நீதியும் நேர்மையும் மனித நேயமும் கொண்ட மனிதர்கள் நமக்கு தெரியாமலே எத்தனையோ பேர்! அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் என்பதை இந்த சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சியினைப் பார்த்து நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போராடும் வழக்கறிஞர் திரு. ஜி. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 18 October 2010

இந்திய நீதி மன்றங்களில்...இந்திய நீதிமன்றங்களில் மைனாரிட்டி குடிமக்களுக்கு சரியான நீதி...?

-   சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி.முத்து கிருஷ்ணன் அவர்களின் உரை கீழே காண்க:
                                                                  
                                                       

Friday, 15 October 2010

இஸ்லாத்தில் இல்லாத முஸ்லிம்கள்!

நம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணையாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்ப‌தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.

அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது. ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே,

"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத(மற்ற பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்." (அல்குர்ஆன் 4:116) என்று கூறுகிறான்.

ஆனால் இன்றைக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும்போது,  தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது, முன்னோர் கொண்டு வந்ததுதான் மார்க்கம் என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, செல்லுமிடம் பற்றி கவலைக் கொள்ளாமல் தவறான பாதையில்தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நான் உங்களை தெள்ளத் தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்." 
             (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா; ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)

சில நாட்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு சம்பவத்தைப் பார்த்து, 'இவர்களுக்கு எந்தளவுக்கு மார்க்கம் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்! இம்மையில் கஷ்டப்பட்ட இவர்கள் தங்க‌ளின் மறுமை வாழ்வையும் தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்களே! இவர்கள் தெளிவான மார்க்கத்தை தூய்மையான முறையில் புரிந்துக் கொள்ள முயலாதது அவர்களின் குற்றமாக இருந்தாலும், இவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பில் இருந்தவர்களும் இப்போது அல்லாஹ்வுக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார்களே!' என்றெல்லாம் நாம் கைசேதப்படாமல் இருக்க முடியவில்லை.

இதோ பத்திரிக்கையில் வந்த அந்த செய்தி: 


"ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. உத்தரபிரதேசம் அலகாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 1 1/2 ஆண்டாக அஜ்மீரில் வசித்து வந்தனர். அவர்கள் குடும்பத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டன. இதற்கு தீய சக்திகளின் பாதிப்புதான் காரணம் என்று கருதினார்கள்.

இது சம்பந்தமாக அவர்கள் ஒருவரிடம் குறி கேட்டுள்ளனர். அதற்கு அவர் 40 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் இருந்தால் தீய சக்தி விலகிவிடும் என்று கூறினார்.

இதை நம்பி அந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 39 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயிர் இழந்தனர். 25 வயது, 22 வயது கொண்ட 2 வாலிபர்களும், 16 வயது கொண்ட இளம் பெண்ணும் இறந்தனர்.

மற்ற 9 பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர். இதை அறிந்த தர்கா நிர்வாகத்தினர் 9 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்."


அறிவுப் பூர்வமான இஸ்லாமிய மார்க்கத்தில் நல்லவையும் தீயவையும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. இரண்டையும் பிரித்தறியக்கூடிய‌ தெளிவான வழிகாட்டுதல்களான குர்ஆனும் ஹதீஸும் நம்மிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இறைவன் அல்லாத‌வர்களுக்கு வணக்க வழிபாடுகளில் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற்பட்டு இட்டுக்கட்டப்பட்ட‌ கட்டுக் கதைகளை நம்பி, இஸ்லாத்தையே களங்கப்படுத்துவது வேதனையிலும் வேதனை!

நாம் பின்பற்றி வாழக்கூடிய கொள்கைக் கோட்பாடுகளும், அன்றாடம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளும், நம்முடைய அனைத்து சிந்தனை மற்றும் செயல்பாடுகளும் சரியானவை தானா என்பதை திருக்குர்ஆனின் அடிப்படையிலும், இறைத்தூதர்(ஸல்)அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின் அடிப்படையிலும் ஒவ்வொருவரும் மறு பரிசீலனை செய்துப் பார்த்தால், எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயம் புரிந்துக் கொள்ளமுடியும்.

தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கிவிட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள‌ முயற்சி செய்து, அதன்படி தம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப்படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே எவை வழக்கத்தில் உள்ளதோ அதில்தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் நமக்கு தேவைப்படுகிறது.

நல்ல பொருட்கள் என்று நம்பி நாம் புழங்கக் கூடியவற்றில்தான் போலிகள் கலக்கப்பட்டு விற்பனைக்கு வரும். அதுபோலவே இறை வணக்கங்களில் ஈடுபாடு உடைய‌வர்களை வழி கெடுப்பதில்தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. இதுதான் சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய நேரான பாதை என்று நரகத்தின் வழியை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவான்.

ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கறைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும். அதுபோல யாரெல்லாம் இறைவழிபாட்டை நேசிக்கிறார்களோ அவர்களைதான் தன் பக்கம் திசை திருப்புவதை ஷைத்தான் விரும்புவான். ஆனால், குர்ஆனையும் ஹதீஸையும் உறுதியான ஈமானோடு கடைப்பிடிப்பவர்கள் அவனுடைய இந்த சூழ்ச்சிகளுக்கெல்லாம் (இன்ஷா அல்லாஹ்) அடிபணியமாட்டார்கள். அதேசமயம் இதற்கெல்லாம் ஆளாகக்கூடியவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் கண் திறந்து பார்க்காதவர்கள்தான்! காது கொடுத்து கேட்காதவர்கள்தான்!

இறைவனும், இறைத்தூதர்(ஸல்)அவர்களும் எவற்றையெல்லாம் நன்மை என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை மட்டுமே நன்மைகளாகும். அவற்றைத் தவிர மற்றவர்களால் தம் சுய விருப்பத்திற்கு இவை நல்லவை என்று பட்டியலிடப்ப‌ட்டவை எதுவும் நல்ல வணக்கங்களாக ஆகாது. சொல்லக்கூடியவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரிதான்! ஆகவே எனதன்பு சகோதர, சகோதரிகளே! இதை உணர்ந்து, இறையோனுக்கு இணைவைத்தல் என்ற‌ மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெற்றவர்களாக, இறுதி மூச்சுவரை ஏக இறைவனை மட்டுமே வணங்கக் கூடியவர்களாக வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் வாழ வைப்பானாக!

Wednesday, 13 October 2010

கண்களோடு மனதையும் கொள்ளைக் கொள்ளும் கஃபா!

புதிய கட்டிட பணிகளுக்கு பிறகு இறையில்லமான கஃஅபதுல்லாஹ்வின் கண்கொள்ளாக் காட்சி! சுப்ஹானல்லாஹ்!
(மெயிலில் அனுப்பி வைத்த தோழி தளிகாவுக்கு நன்றிகள்)

Tuesday, 12 October 2010

"லெமன் க்ராஸ்" பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்!

லெமன் க்ராஸ்


"லெமன் க்ராஸ்" என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் "வாசனைப் புல்", "எலுமிச்சைப் புல்" மற்றும் "இஞ்சிப் புல்" போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை காமாட்சிப் புல் என்பார்கள். இதன் தாவரப் பெயர் "CYMBOPOGAN FLEXOSUS" என்றும், GRAMINAE என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.

பொதுவாக இதுபோன்று அதிகம் அறிமுகமில்லாதவைப் பற்றி கேள்விப்படும்போது, இது மரமா அல்லது செடியா, அல்லது எதனுடைய வேரோ என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். அதனாலேயே இதன் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் முன், இது ஒரு புல் இனம் என்பதையும், அது கிடைக்கும் இடங்களையும் தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது.

Monday, 11 October 2010

சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 1)

சன் நியூஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி. இந்த விவாதம் முஸ்லிம் பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பு:-  மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன்


நெறியாளுகை: திரு. வீரபாண்டியன்.

        Sunday, 10 October 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)
சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களின் ப்ளாக்கை விசிட் பண்ணியபோது இந்த தொடர் பதிவு கண்ணில் பட்டது. பொது சேவை செய்யக்கூடிய சமூக நல அமைப்புகள் நிறைய இருந்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் உதவி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் எப்போதெல்லாம் இது போன்ற வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மனித நேயத்தோடு ஜாதி, ம‌த, இன வேறுபாடின்றி உதவ நாம் முன் வரவேண்டும். அதனால், நல்லது செய்ய நாள் தள்ளக் கூடாதே என்று நானும் அந்த தொடர் பதிவில் கலந்துக் கொண்டு, என்னுடைய ப்ளாக்கிலும் இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இதோ அந்த தொடர் பதிவு:-  


வலையுலக‌ சகோதர, சகோதரிகளே! இது ரொம்ப நல்ல விஷயம். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க. நிறைய பேருக்கு ரீச் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர் பதிவை தொடரலாம். .உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்...


உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க பிளீஸ்!!

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேட்க மாட்டேன்.  இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!


-------------------

                                          
டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த, உடைந்த பொருட்களை தருகிறார்கள். உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. கொடுக்கப் போகும் துணிகளை நன்றாக துவைத்து, அயன் செய்து உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள். இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள்.


Wednesday, 6 October 2010

லெமன் க்ராஸ் கிரீன் டீலெமன் க்ராஸ் கிரீன் டீ என்பது ஒருவகை மூலிகை டீயாகும். நாம் பலவிதமாகவும் மூலிகை டீயை தயார் பண்ணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக‌ பயன் தரக்கூடியவை.

இதில் 'கிரீன் டீ' இலைகள் கலந்து செய்வதால் இந்த டீ இதயத்தை சுத்தப்படுத்தக் கூடியதாக உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ப்ளட் பிரஷ்ஷர் உள்ளவ‌ர்கள் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 'லெமன் க்ராஸ்' நல்ல செரிமாணத்தை உண்டு பண்ணும். கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்! 'கிரீன் டீ'யிலும் 'ஆன்ட்டி கேன்சர்' தன்மைகள் இருப்பதால் இத்தகைய மூலிகை பானங்கள் இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானது என்று சொல்லலாம்.

Monday, 4 October 2010

நியாயமான சில பார்வைகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பைப் பற்றி "இது நீதியற்ற தீர்ப்பு" என உலக அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,  அவற்றிலிருந்து உங்கள் பார்வைக்காக சில:

"இந்த தீர்ப்பு அரசியல் தனமானது; நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது."
- முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள்

                                                

                                                                                                        
                                                                                                                   **********************


"பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.


450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக் கூடப் புரியும்.


இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.


பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.


இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது."


- திருமாவளவன்                                  
                                       **********************


"அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது. மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக் கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமைக் கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது." - Early India என்ற‌ புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர், முன்னணி ஆங்கில நாளேடான THE HINDU வில்
                                                                                                              *********************
                                                                                                        
"ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது!(?)

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது."- முதலமைச்சர் கருணாநிதி 


                                  **********************
"அயோத்தி தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நமது நாடு மத நம்பிக்கையை விட, சட்டம் மற்றும் அரசியல் சட்டத்தால்தான் ஆளப்படுகிறது. ஆனால் அயோத்தி தீர்ப்போ, சட்டம் மற்றும் ஆதாரங்களைவிட, மத நம்பிக்கைக்கே முன்னுரிமைக் கொடுத்து அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கோ, அரசியல் சட்டத்துக்கோ, ஏன் நீதித்துறைக்கோ கூட நல்ல அறிகுறி அல்ல. இத்தீர்ப்பால், முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாக அறிந்தேன். அங்காவது மத நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல், சட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன். "

-   முலாயம்சிங் யாதவ்
                                      **********************

"உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, வருங்கால‌த்திற்கு மோசமான ஒரு முன் உதாரணத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு இந்திய மதச் சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதை முறையாக விசாரிக்க வேண்டும்." 

-   மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 

                                                            

                                   **********************


"உயர்நீதி மன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது. எந்த வாதியும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிடுவார்கள். இங்கு இப்போதைக்குள்ள கேள்வி, உயர் நீதி மன்றம் ஒரு தவறான அடிப்படையை உருவாக்கியுள்ளதா என்பதே! இது (இந்த தீர்ப்பு ) மிகவும் ஒரு தலைப்பட்சமானது. இந்த சொத்து யாருக்கு சொந்தம் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். ‘இந்த கேள்விக்கு எங்களால் (உயர் நீதிமன்றம்) பதில் சொல்ல இயலாது. ஆகவே பிரித்துக்க் கொள்ளுங்கள்’ என்று சொல்லப்படக்கூடாது. யாருக்கு இடம் சொந்தம் என்பது தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்”
-  பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான்Friday, 1 October 2010

இதுவெல்லாம் ஒரு தீர்ப்பு..?!


பொதுவாக ஒரு நீதிமன்றம் இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஏனெனில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக இருந்தன. ஆனால் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு சவாலாக இருந்த இந்த வழக்கில், வரலாற்று உண்மைகளையும் ஆதாரங்களையும் குழி தோண்டிப் புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

ஆம்!சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் இரண்டு பங்கை இந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலகாபாத் லக்னோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, நேர்மையான இந்து சகோதர சகோதரிகளையே வியக்க வைத்துள்ளது! உணர்ச்சிப் பூர்வமான பிரச்னைக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவேண்டிய நீதிமன்றங்களிலும் இப்படியெல்லாம் ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு எழுதப்பட முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்தத் தீர்ப்பு எந்த சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்படவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், சட்டப்படி இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான் ஒரு நீதிமன்றத்தின் பணியாக இருக்கவேண்டுமே தவிர, சட்டங்களை அப்பட்டமாக மீறி அநீதியான முறையில் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றமும் தேவையில்லை... தீர்ப்பும் தேவையில்லையே...! பங்காளிகளாக இல்லாத இருவருடைய‌ ஒரு சொத்து குறித்து வழக்கு வந்தால், ஆக்ரமித்தவனுக்கு இரண்டும் ஆக்ரமிக்கப்பட்டவனுக்கு ஒன்றும் என்று தீர்ப்பு அளிப்பதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து நிச்சயம் இதை விட சிறப்பானதாகவே இருக்கும்! அப்படியென்றால் நீதிமன்றங்கள் எதற்கு...?? ASI சர்வே செய்வதற்காக‌ கோடிக்கணக்கான ரூபாய்களை எதற்காக செலவிட வேண்டும்? இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும்? நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றால், அது சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கக் கூடாது என்பதுதான், நியாய உணர்வு கொண்ட அனைத்து மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருந்தது!

சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த இந்த அநீதிக்கு எத்தனையோ நேர்மையான எழுத்தாளர்கள் இருந்தும் ஏனோ யாரும் இதுபற்றி மூச்சுவிட மறந்து விட்டார்கள்! ஆனால், இதுவே மற்ற மத மக்களுக்கு இதுபோன்ற அநீதி நடந்தாலும் நிச்சயமாக நாம் தட்டிக்கேட்கவோ அல்லது அதுபற்றி குரல் கொடுக்கவோ செய்வோம். ஏனெனில் மதமோ மார்க்கமோ நமக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நீதி, நேர்மையை அப்போதுதான் நாம் உண்மையிலேயே கடைப்பிடித்தவர்களாவோம்!

அதுபோல் சில நியாய உள்ளங்களைத் தவிர‌ எல்லா அரசியல்வாதிகளும் 'இது நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு' என்று பாராட்ட மட்டும் வாய் திறக்கிறார்கள். அரசியல்வாதிகள் அப்படிதான், போகட்டும்! ஆனால் இது சரியான தீர்ப்புதான் என்று சொல்லும் எந்த நடுநிலையாளர்களும் அவரவர்கள் தங்கள் வீட்டை இடித்துக் கொடுத்துவிட்டு, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தன‌க்கென்று வாங்கிக்கொள்வார்களா என்று நெஞ்சில் கைவைத்து சிந்தித்துக் கொள்ளட்டும்!


தீர்ப்பு சொல்லப்பட்ட அன்று இங்கு CNN செய்தி பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆஃப்ரிக்க பெண்மணி கேட்ட ('இதுவெல்லாம் ஒரு தீர்ப்பா?' என்றகேள்வியை தான் இந்த இடுகைக்கு தலைப்பாக கொடுத்துள்ளேன். அதற்கு பிறகு அந்த பெண்மணி இந்திய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் காரித் துப்பாத குறையாக, "முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழக்கு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது பகிரங்கமாக‌ இடிக்கப்பட்டதை, 'இப்படியும் ஒரு கையாளாகாத நீதிமன்றமா? இப்படியும் ஒரு கோழைத்தனமான அரசாங்கமா?' என்று உலகமே கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைச் சொல்லி அங்குள்ள சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது மதச்சார்பற்ற நாடு என்று இந்தியா தன்னை சொல்லிக்கொள்ள தகுதியற்றது என்பதை நிரூபித்துவிட்டது" என்று அந்தப் பெண்மணி சொன்னதும், கூடியிருந்த மற்ற நாட்டுக்கார மக்களும் அதை ஆமோதித்ததும் (உண்மை அதுதான் என்றாலும்) நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது :(  

எப்படியோ ஒன்றை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாக சொல்லிவிட்ட அந்த நீதிமன்றத்தை வேறு வழியில்லாமல் பாராட்டியே(?!) ஆகவேண்டும். அதாவது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் ஒரு விருப்பம், அது சட்ட விரோதமாக இருந்தாலும் அது நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். அதே சமயம், சிறுபான்மை மக்களின் சட்டப்படியான உரிமைகள் எதுவாக‌ இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பவில்லை என்று தெரிந்தால், அது சட்ட விரோதமானதாக முடிவுசெய்து தீர்ப்பளிக்க‌ப்படும் என்ற செய்தி இப்போது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றங்களுக்கு அலைந்து பல ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடத்தி, கடைசியில் இதுபோன்று அநியாயமான‌ ஒரு டுபாக்கூர் தீர்ப்புதான் கிடைக்கும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு, நீதிமன்றங்கள் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையையும் சிறுபான்மை மக்கள் இதன் மூலம் இழந்து விட்டனர். இன்னும் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கவேண்டிய மேல் முறையீடு ஒன்றுதான் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக‌ எஞ்சி நிற்கிறது. அங்காவது நேர்மையான, தூரநோக்கு கொண்ட நீதிபதிகள் இல்லாமலா போய்விடுவார்கள்? பொறுத்திருந்து அதையும் பார்ப்போமே!

நல்லவேளை, பிரச்னைக்குரிய இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி மூன்று தரப்பினர் தொடர்ந்த வழக்கில் முப்பது பேர் வழக்குத் தொடர்ந்திருந்தால், சுமூகத்திற்கும் சமரசத்திற்கும் வழி வகுக்கிறோம் என்று முப்பது கூறுகளாக போட்டு ஆளுக்கொரு பங்கு வழங்கி தீர்ப்பு சொல்லியிருப்பார்கள்!!
அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!