அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 6 October 2010

லெமன் க்ராஸ் கிரீன் டீ



லெமன் க்ராஸ் கிரீன் டீ என்பது ஒருவகை மூலிகை டீயாகும். நாம் பலவிதமாகவும் மூலிகை டீயை தயார் பண்ணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக‌ பயன் தரக்கூடியவை.

இதில் 'கிரீன் டீ' இலைகள் கலந்து செய்வதால் இந்த டீ இதயத்தை சுத்தப்படுத்தக் கூடியதாக உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ப்ளட் பிரஷ்ஷர் உள்ளவ‌ர்கள் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 'லெமன் க்ராஸ்' நல்ல செரிமாணத்தை உண்டு பண்ணும். கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்! 'கிரீன் டீ'யிலும் 'ஆன்ட்டி கேன்சர்' தன்மைகள் இருப்பதால் இத்தகைய மூலிகை பானங்கள் இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானது என்று சொல்லலாம்.

இந்த 'லெமன் க்ராஸ்' கொஞ்சம் லெமனின் நறுமணமும் கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். நல்ல மணமும் சுவையும் கொண்ட இந்த டீயை தினமும் அருந்தலாம்!

தேவையான பொருட்கள்:


லெமன் க்ராஸ் (1 இன்ச் அளவு) - 8 அல்லது 10 துண்டுகள்
கிரீன் டீ இலை - 1/2 ஸ்பூன்
சீனி - 5 ஸ்பூன்
தண்ணீர் - 2 டம்ளர்


செய்முறை:-



லெமன் க்ராஸ் துண்டுகளை நன்கு நசுக்கிக் கொள்ளவும்.





ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கிரீன் டீ இலைகள் மற்றும் லெமன் க்ராஸைப் போட்டு மெதுவாக அடுப்பை வைத்து சுமார் 10 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும்.





ஒரு க்ளாஸில் சீனியைப் போட்டு கொதித்த டீயை வடிகட்டி, சிறிது ஆற்றி பரிமாறவும்.

குறிப்பு: கிரீன் டீயை அதிகம் சேர்த்தால் துவர்ப்புடன் கசப்பு சுவையும் கூடிவிடும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவை கவனித்துக் கொள்ளவும்.

14 comments:

  1. arumai.with lemongrass new idea.

    ReplyDelete
  2. @ vanathy...

    வானதி, நலமா? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. @ asiya omar...

    ஹஸ் சொல்லித் தந்த ஐடியா :) ரொம்ப நாளா இந்த டீ குடிக்கிறோம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  4. @ Mrs.Menagasathia...

    மேனகா, எப்படியிருக்கீங்க? கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    ஆமா, சூப்பரா இருக்கும். வேலைக்கு செல்லும் பேச்சுலர்ஸ் கூட தினமும் அருந்தினால் உற்சாகமா இருக்கும்! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, நானா.

    ReplyDelete
  6. லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்று இப்பத்தான் பாக்கிறேன். இது என்ன மரம்/செடியின் எந்த பாகம்?

    சின்ன உரல் ஊர்லருந்து கொண்டுவந்ததா? அவசியமான ஒன்று.

    ReplyDelete
  7. @ ஹுஸைனம்மா...

    //லெமன்கிராஸ் எப்படி இருக்கும் என்று இப்பத்தான் பாக்கிறேன். இது என்ன மரம்/செடியின் எந்த பாகம்?//

    அப்படியா, உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில் சந்தோஷம்! இது மரமும் அல்ல, செடியுமல்ல. இதை விடுகதை மாதிரி கூட சொல்லலாம் போலிருக்கு :) அருகம்புல் மாதிரி இது ஒரு வகை புல் இனம், மிஸஸ். ஹுஸைன்! இதுபற்றி பிறகு ஒரு இடுகை தயார் பண்ணுகிறேன், இன்ஷா அல்லாஹ்!

    //சின்ன உரல் ஊர்லருந்து கொண்டுவந்ததா? அவசியமான ஒன்று//

    ஆமா, 10 வருஷத்துக்கு முன்பு வாங்கி வந்தது :) ரொம்ப யூஸ் ஃபுல்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  8. ஆஹா ..நான் கேக்க வேண்டிய ரெண்டு கேள்வியையும் ஹுஸைனம்மா கேட்டுட்டாங்களே..!!

    இந்த லெமன் கிராஸ் ஒரு வேளை நன்னாரி வேரா..? எங்கே கிடைக்கும்..அதையும் மற்க்காம சொல்லவும் :-)

    ReplyDelete
  9. @ ஜெய்லானி...

    ஸாரி ஜெய்லானி நானா! உங்களுக்கு உடனே பதில் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

    //இந்த லெமன் கிராஸ் ஒரு வேளை நன்னாரி வேரா..? எங்கே கிடைக்கும்..அதையும் மற்க்காம சொல்லவும் :‍)//

    இது நன்னாரி வேரும் அல்ல! இதுபற்றி அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கிறேன்(எல்லோருக்கும் பயன்படுமென்று). சரியா? இது சூப்பர் மார்கெட்டுகளில் காய்கறி செக்க்ஷனிலேயே, வெளிநாட்டு பொருட்கள் கிடைக்கும் செக்க்ஷனில் பாருங்கள், கிடைக்கும். அல்லது சைனீஸ் கடைகள் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

    ReplyDelete
  10. அஸ்மா உங்களுக்குள் ஒரு நல ஃபோட்டோக்ராஃபெர் இருக்காங்க தெரியுமா..படங்கள் ரொம்ப அழகாக எடுத்திருக்கீங்க...

    Thalika

    ReplyDelete
  11. @ Thalika...

    என்ன ருபீனா, கொஞ்ச நாளா ஆளையே காணோமே?

    //அஸ்மா உங்களுக்குள் ஒரு நல ஃபோட்டோக்ராஃபெர் இருக்காங்க தெரியுமா..படங்கள் ரொம்ப அழகாக எடுத்திருக்கீங்க...//

    உண்மையாவா..? :) இன்னும் ட்ரைனிங் வேணும் அதற்கு என்றுதான் எனக்கு தோணுது. ஏன்னா, கிச்சனில் பட்டப்பகலில் கூட சமையல் பண்ண மட்டும் போதுமான வெளிச்சம் இருக்குமே தவிர, கிளியரா ஃபோட்டோ எடுக்கவெல்லாம் முடியாது. அதிகமான நேரங்களில் இங்கு வெயில் இல்லாததால் இப்படி :( ஆனா, அந்த மாதிரி வெளிச்சம் போதாத இடத்திலும் பளிச்சென்று ஃபோட்டோ எடுக்கும் ஃபோட்டோக்ராஃபர் இன்னும் எனக்குள் சரியா வரல ருபீ :-) முதல் ஃபோட்டோவே அதற்கு சாட்சி :)

    மெயில் பாருங்க ருபீனா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை