அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 10 October 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)




சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களின் ப்ளாக்கை விசிட் பண்ணியபோது இந்த தொடர் பதிவு கண்ணில் பட்டது. பொது சேவை செய்யக்கூடிய சமூக நல அமைப்புகள் நிறைய இருந்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் உதவி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் எப்போதெல்லாம் இது போன்ற வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மனித நேயத்தோடு ஜாதி, ம‌த, இன வேறுபாடின்றி உதவ நாம் முன் வரவேண்டும். அதனால், நல்லது செய்ய நாள் தள்ளக் கூடாதே என்று நானும் அந்த தொடர் பதிவில் கலந்துக் கொண்டு, என்னுடைய ப்ளாக்கிலும் இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இதோ அந்த தொடர் பதிவு:-  


வலையுலக‌ சகோதர, சகோதரிகளே! இது ரொம்ப நல்ல விஷயம். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க. நிறைய பேருக்கு ரீச் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர் பதிவை தொடரலாம். .



உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்...


உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க பிளீஸ்!!

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேட்க மாட்டேன்.  இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!


-------------------

                                          
டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த, உடைந்த பொருட்களை தருகிறார்கள். உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. கொடுக்கப் போகும் துணிகளை நன்றாக துவைத்து, அயன் செய்து உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள். இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள்.


6 comments:

  1. நல்ல பகிர்வு அஸ்மா.. நன்றி.. நல்லுள்ளம் கொண்ட அனைவரையும் சென்றடைய இது உதவும்.

    ReplyDelete
  2. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //நல்லுள்ளம் கொண்ட அனைவரையும் சென்றடைய இது உதவும்.//

    நிச்சயமா! ஏதோ நம்மால் முடிந்த உதவி இது.

    ReplyDelete
  3. தொடர்ந்து பகிர்ந்து வருவது பாராட்டதக்கது.

    ReplyDelete
  4. @ asiya omar...

    நீங்களும் முடிந்தால் இதை பகிர்ந்துக் கொள்ளுங்க ஆசியாக்கா!

    ReplyDelete
  5. நல்ல முயற்சி. பலர் பயன்பெற வேண்டும்.

    ReplyDelete
  6. @ vanathy...

    //நல்ல முயற்சி. பலர் பயன்பெற வேண்டும்//

    வருகைக்கு நன்றி வானதி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை