அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 27 October 2010

மலேஷியாவின் இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்


மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்திய - மலேஷிய உறவில் இன்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், ரஜாக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இரு நாடுகளும் கைக்கோர்த்துக் கொண்டு பயணிக்க இருக்கிறது. மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

14 comments:

  1. இஸ்லாமிய வங்கியை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால் வரவேற்கத்தக்கது. வட்டியெனும் கொடுமையில் இருந்து அனைவரும் மீளலாம். நல்ல யோசனை. ஆனால் அரசியல்வாதிகளும் பணமுதலைகளும் விடுவார்களா?.. சந்தேகமே.

    உங்களுடைய முள்ளு முறுக்கு நல்லாருக்கு. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க அஸ்மா. நான் விரும்பி சாப்பிடுவேன்.‌

    ReplyDelete
  2. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //இஸ்லாமிய வங்கியை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால் வரவேற்கத்தக்கது. வட்டியெனும் கொடுமையில் இருந்து அனைவரும் மீளலாம். நல்ல யோசனை. ஆனால் அரசியல்வாதிகளும் பணமுதலைகளும் விடுவார்களா?.. சந்தேகமே//

    பண முதலைகளுக்கு இதில் பாதிப்பு நிச்சயம்தான்! நீங்கள் சொல்வதுபோல் அரசியல்வாதிகள் இதையும் அரசியலாக்கி முட்டுக்கட்டைப் போடாமல் இருக்கவேண்டும். ஆனால் சென்ட்ரலில் மனம் வைத்தால் இதை எப்படியும் கொண்டு வரலாம். இறைவன் உதவி செய்வான், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி நானா.

    ReplyDelete
  3. ஹ ஹ ஹ...வேற என்ன சொல்ல??

    ஏற்கனவே இந்த முறை பரிசீலிக்கப்பட வேண்டி நம் சகோதர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் முயற்சி செய்து, கூட்டங்கள் பல கண்டு தோற்ற துறை இது. ஏன் பெங்களூருவில் கஷ்டப்பட்டு ஒரு இஸ்லாமிய வங்கியை தோற்றுவிக்கவும் செய்தார்கள், அதிகாரத்தின் அலட்சிய போக்கினாலும் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் தர வேண்டியும் இன்னும் பல நெருக்கும் சூழ்நிலைகளுக்காகவும் அந்த வங்கியும் இப்போது மற்ற வங்கிகளைப் போன்றுதான் நடக்கிறது. மற்றபடி இன்னும் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் சத்தமில்லாமல் இஸ்லாமிய முறையில் கடனளித்து நம் உம்மத்தினரை முன்னேற்றவும் சில பேர் செய்கிறார்கள். பார்க்கலாம். இந்த தடவையாவது ஆள்பவர்கள், மலேசிய இன்வெஸ்ட்மெண்ட்டுகளுக்காக வேண்டியாவது இப்படி ஒரு வங்கியை நாமாக கேட்காமலே துவக்க விடுவார்களா என்று. அல்லாஹூ ஆலம்.

    சரி, விஷயத்துக்கு வாங்க...முறுக்கு மாவு எங்க? நான் ப்ளாஸ்டிக் பேப்பரெல்லாம் தேடி ரெடியா வச்சிருக்கேன் :))

    ReplyDelete
  4. // இந்த தடவையாவது ஆள்பவர்கள், மலேசிய இன்வெஸ்ட்மெண்ட்டுகளுக்காக வேண்டியாவது இப்படி ஒரு வங்கியை நாமாக கேட்காமலே துவக்க விடுவார்களா. //

    ஆமா,, நடக்கும்....கவலையே படாதீர்கள்.

    ReplyDelete
  5. @ அன்னு...

    //ஏற்கனவே இந்த முறை பரிசீலிக்கப்பட வேண்டி நம் சகோதர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் முயற்சி செய்து, கூட்டங்கள் பல கண்டு தோற்ற துறை இது. ஏன் பெங்களூருவில் கஷ்டப்பட்டு ஒரு இஸ்லாமிய வங்கியை தோற்றுவிக்கவும் செய்தார்கள், அதிகாரத்தின் அலட்சிய போக்கினாலும் ஆட்சியிலிருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் தர வேண்டியும் இன்னும் பல நெருக்கும் சூழ்நிலைகளுக்காகவும் அந்த வங்கியும் இப்போது மற்ற வங்கிகளைப் போன்றுதான் நடக்கிறது//

    பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் இந்த முறை என்னவோ நல்லவிதமாக அமைவதாக தோன்றுகிறது. இறைவன் உதவியால் அப்படியொரு வங்கி முறை அமைந்துவிட்டால், கஷ்டத்தில் இருக்கும் நம் மக்களுக்கு பொருளாதாரத்தில் நல்லதொரு விடிவு காலம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!

    //சரி, விஷயத்துக்கு வாங்க...முறுக்கு மாவு எங்க?//

    முறுக்கு மாவுதானே கேட்கிறீங்க‌? எங்க வீட்டு கிச்சன் கபோர்டில் இருக்கு.. :))

    //நான் ப்ளாஸ்டிக் பேப்பரெல்லாம் தேடி ரெடியா வச்சிருக்கேன் :))//

    நாளைக்கே போட்டு விடுகிறேன்பா... கொஞ்சம் பொறுத்துக்கோங்க :) என்னது ப்ளாஸ்டிக் பேப்பரா அன்னு...? முறுக்கு உரலில் வசதியா இருக்குமே, ஊரிலிருந்து எடுத்து வரலயோ?

    ReplyDelete
  6. @ எம் அப்துல் காதர்...

    //ஆமா,, நடக்கும்....கவலையே படாதீர்கள்//

    இன்ஷா அல்லாஹ், எப்படியோ நிறைவேறினால் சந்தோஷம்தான்.

    ReplyDelete
  7. இல்லம்மா... நான் பிழிஞ்சு வக்க அலுமினிய டப்பாக்கு?ள்ள இருக்கற கவர் எடுத்து வச்சிருக்கேன்னு சொன்னேன். உரலெல்லாம் கப் போர்டுல இருக்கு....மாவுதேன் இல்ல:(

    ReplyDelete
  8. @ அன்னு...

    //இல்லம்மா... நான் பிழிஞ்சு வக்க அலுமினிய டப்பாக்கு?ள்ள இருக்கற கவர் எடுத்து வச்சிருக்கேன்னு சொன்னேன்// அப்படியா..? ok, ok.

    //உரலெல்லாம் கப் போர்டுல இருக்கு....மாவுதேன் இல்ல:( //

    அழாதீங்க அன்னு... நல்ல பிள்ளைலோ, நாளைக்கு செய்யலாம் முறுக்கு... ம்ம்... சரியா? எங்கே சிரிங்க பார்க்கலாம் :‍-)

    ReplyDelete
  9. தோ சிரிச்சிட்டேன்(http://www.funny-potato.com/images/funniest-pictures/funny-twins/dog-baby.jpg)...ஹி ஹி ஹி பக்கத்து வீட்டு ஃப்ரெண்டையும் சேர்த்து ஃபோட்டோ பிடிச்சிட்டாங்க...ஹி ஹி

    ReplyDelete
  10. @ அன்னு...

    அட சூப்பரா சிரிக்கிறீங்களே... :‍-) அதுல நீங்க எது, உங்க ஃப்ரெண்ட் எதுன்னுதான் கொஞ்சம் புரியல அன்னு .. :)

    ReplyDelete
  11. இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய வங்கிகள் வந்து, வட்டிக் கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்றட்டும்!!

    ReplyDelete
  12. http://www.tamilpaper.net/?p=845

    மேற்கூறிய லின்கில் இஸ்லாமிய வங்கி முறை பற்றி விளக்கமாக (முஸ்லிமல்லாத ஒருவர்) பாராட்டி எழுதி வருகிறார். விரும்புகிறவர்கள் படித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  13. @ ஹுஸைனம்மா...

    //இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய வங்கிகள் வந்து, வட்டிக் கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்றட்டும்!!//

    அதுதான் நம் எல்லோருடைய ஆவலும் ஹுஸைனம்மா! அல்லாஹ் நிறைவேற்றிவைப்பான், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  14. @ ஹுஸைனம்மா...

    //http://www.tamilpaper.net/?p=845

    மேற்கூறிய லின்கில் இஸ்லாமிய வங்கி முறை பற்றி விளக்கமாக (முஸ்லிமல்லாத ஒருவர்) பாராட்டி எழுதி வருகிறார். விரும்புகிறவர்கள் படித்துக் கொள்ளலாம்.//

    இஸ்லாமிய வங்கி முறை பற்றிய லிங்க் தந்ததற்கு ரொம்ப நன்றி ஹுஸைனம்மா..! படித்துவிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்லலாம் என்றிருந்தேன். ரொம்ப தெளிவா அருமையா சொல்லியிருக்கிறார். இன்னும் முழுமையாக படிக்கணும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை