அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 29 October 2010

முறுக்கு மாவு

தேவையான பொருட்கள்:


உலுந்து - 125 மில்லி
பொட்டுக் கடலை - 150 மில்லி
பாசிப் பருப்பு - 125 மில்லி
எள் - 1 ஸ்பூன்
ஜீரகம் - 2 ஸ்பூன்



செய்முறை:

உலுந்து, பாசிப் பருப்பு இரண்டையும் கழுவி காயவைத்துக் கொண்டு, ஒரு வாணலியில் முதலில் பாசிப் பருப்பை (மிதமான தீயில்) வாசம் வரும் வரை வறுக்கவும்.


பிறகு உலுந்தை தனியாக‌ப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.


அதே போல் பொட்டுக் கடலையையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.


சற்று சூடு ஆறியவுடன் வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.


பொடியாக்கிய மாவில் எள், ஜீரகம் இரண்டையும் சேர்த்து கலந்து நன்கு ஆற வைக்கவும்.


அறவே சூடு இல்லாமல் ஆறியதும் எடுத்து காற்றுப் புகாத பாக்ஸில் போட்டு இறுக மூடி வைக்கவும்.

இதை 2 மாதங்கள் வரை வைத்து யூஸ் பண்ணலாம். இந்த முறையில் தயாரிக்க‌ப்படும் முறுக்கு மாவில் செய்யக்கூடிய‌ முறுக்கு செய்முறையை காண இங்கே க்ளிக் பண்ண‌வும். (இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் 1/2 கிலோ அரிசி மாவுடன் சேர்த்து செய்யவேண்டிய அளவுகளாகும்.)

குறிப்பு: வெயில் இல்லாத காலங்களில் மாவு தயார் பண்ணுவதாக இருந்தால் உலுந்து, பாசிப் பருப்பு இரண்டையும் கழுவிய பிறகு தண்ணீரை நன்கு வடியவிட்டு, சுத்த‌மான கிச்சன் டவலில் போட்டு சுமார் 4, 5 மணி நேரங்கள் உலர்த்திய பிறகு, ஓவனில் மிகக் குறைந்த டெம்ப‌ரேச்சரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் வெயிலில் காய்ந்தது போன்று உலர்ந்துவிடும். ஆனால் நீண்ட நேரம் வைத்து தீய்ந்துவிடாமல் கவனமாக எடுக்கவேண்டும்.

14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா,

  அப்பாடா. கடைசில எப்படியோ முறுக்கு மாவு போட்டுட்டீங்க. ஆனால் இங்க குளிர் பயங்கரமா ஆரம்பம் ஆயிடுச்சு. வெயிலும் சுள்ளுன்னுதான் இருக்கு. ஆனா குளிரும் இருக்கு. பார்க்கலாம் ரெண்டு வித செய்முறை இருப்பதால் எதையாவது ஒன்னை வழிமொழிந்திட வேண்டியதுதான்.

  சரி இன்னொரு விஷயம், என்னுடைய புது வலையை பாத்திருப்பீங்க. அதுல அதிகமா படிச்ச, மெயில்ல கிடைச்ச கட்டுரைகளை போட ஆசை என்றாலும் மனதின் ஒரு மூலையில் இதையும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்குமே என்றே இருக்கிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால் நடைமுறை வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை அழகாக் சுட்டிக்காட்டவும், இன்னும் அழகாய் மார்க்கத்தை எப்படி பின்பற்றுவது என்று எழுதவும் ஆசையாக இருக்கிறது. அதுவும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்குமே என்றால், என்னிடம் நேரமின்மை ஒரு பிரச்சினை. கணிணியிலும் வேலை செய்து கொண்டிருப்பதால் நேரம் கிட்டுவதில்லை. உங்களால் முடிந்தால் என்னுடன் சேர்ந்து கட்டுரைகளை தமிழாக்கப்படுத்த முடியுமா, நேரமிருக்குமா என்று தெரியப்படுத்தவும், இஙோ அல்லது என் ப்ரொஃபைலில் மெயில் ஐடி உண்டு, அதன் மூலம் இன்ஷா அல்லாஹ். அதுவரை, நல்லா முறுக்கு சுட்டு சாப்பிடுங்க... :))

  வ ஸலாம்.

  ReplyDelete
 2. தெளிவான விளக்கங்கள்..

  ReplyDelete
 3. @ அன்னு...

  வ அலைக்குமுஸ்ஸலாம்!

  //அப்பாடா. கடைசில எப்படியோ முறுக்கு மாவு போட்டுட்டீங்க. ஆனால் இங்க குளிர் பயங்கரமா ஆரம்பம் ஆயிடுச்சு. வெயிலும் சுள்ளுன்னுதான் இருக்கு. ஆனா குளிரும் இருக்கு. பார்க்கலாம் ரெண்டு வித செய்முறை இருப்பதால் எதையாவது ஒன்னை வழிமொழிந்திட வேண்டியதுதான்//

  இரண்டு நாள் கேப்பில் உங்கள் அனைவருக்காகவும் அவசரம் அவச‌ரமாக போட்டிருக்கிறேன். நீங்க வேற அழ ஆரம்பிச்சிட்டீங்கல்ல? :) சரி, இப்போ நிதானமா செஞ்சு பார்த்துட்டு, கண்டிப்பா வந்து கமெண்ட் கொடுங்க எப்படி வந்ததுன்னு, ok?

  இன்னும் உங்கள் மெயில் ஐடி பார்க்கவில்லை அன்னு. பார்த்துவிட்டு உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.

  ReplyDelete
 4. @ சசிகுமார்...

  //thanks its help for my wife //

  வாங்க சசி! என் வலைப்பூவில் முதல் ஃபாலோவெராக வந்த உங்களின் முதல் கமெண்ட் என்பதிலும் உங்க wife க்கு இந்த குறிப்பு உதவுவதிலும் ரொம்ப‌ சந்தோஷம் :)

  வருகைக்கு நன்றி சசி!

  ReplyDelete
 5. @ சிநேகிதி...

  //தெளிவான விளக்கங்கள்..// நன்றி ஃபாயிஜா! டெல்லியில் குளிர் ஆரம்பித்துவிட்டதா? கதீஜா நலமா?

  ReplyDelete
 6. இந்த முறை முறுக்கு உங்க ஸ்டைல்-ல செய்து பார்க்கறேன்..தேங்காய்ப்பால்தான் கொஞ்சம் இடிக்குது,அது இல்லாமல் தண்ணி மட்டும் ஊற்றி பிசைந்து செய்யலாமில்ல? :)

  பகிர்வுக்கு நன்றீங்க அஸ்மா!

  ReplyDelete
 7. ம்ம்.. அஸ்மாக்கா, ரெடிமேடாகவே இங்கே ஒரு கடையில் (சுத்தமான) உளுந்து, பாசிப்பருப்பு பொடியாகவேக் கிடைக்கீறது. அதைப் பயன்படுத்தி செய்வதென்றால், மாவை வறுத்துக் கொள்ள வேண்டுமா?

  அப்புறம், ஃபாயிஸா தற்போது சென்னையில் இருப்பதாகப் படித்த ஞாபகம்.

  ReplyDelete
 8. @ Mahi...

  //இந்த முறை முறுக்கு உங்க ஸ்டைல்-ல செய்து பார்க்கறேன்..தேங்காய்ப்பால்தான் கொஞ்சம் இடிக்குது,அது இல்லாமல் தண்ணி மட்டும் ஊற்றி பிசைந்து செய்யலாமில்ல? :)

  பகிர்வுக்கு நன்றீங்க அஸ்மா!//

  செய்து பாருங்க மஹி! நீங்களும்தான் விதவிதமா செய்வீங்களே, உங்க ரெசிபிலாம் எனக்கு பிடிக்கும். இந்த முறையில் செய்யும்போது தண்ணீர் மட்டும் ஊற்றினால் டேஸ்ட் கண்டிப்பா குறையும். ஏன் தேங்காய்ப்பால் உங்களுக்கு அலர்ஜியா? வருகைக்கு நன்றி மஹி.

  ReplyDelete
 9. @ ஹுஸைனம்மா...

  //ம்ம்.. அஸ்மாக்கா, ரெடிமேடாகவே இங்கே ஒரு கடையில் (சுத்தமான) உளுந்து, பாசிப்பருப்பு பொடியாகவேக் கிடைக்கீறது. அதைப் பயன்படுத்தி செய்வதென்றால், மாவை வறுத்துக் கொள்ள வேண்டுமா?

  அப்புறம், ஃபாயிஸா தற்போது சென்னையில் இருப்பதாகப் படித்த ஞாபகம்//

  ரெடிமேட் மாவு என்றால் அது வறுத்த மாவு என்று போட்டிருக்கிறார்களான்னு பாருங்க. வறுக்காத மாவு என்றால், வாணலியை நன்கு சூடுபடுத்திவிட்டு ஆஃப் பண்ணியவுடன் மாவைக் கொட்டி அந்த சூட்டிலேயே வாசம் வரும்வரை துலாவி விடுங்கள். பிறகு அடுத்த மாவை வறுக்கும் முன் பாத்திரத்தை கழுவி விட்டு மீண்டும் அதுபோல் சூடுபடுத்தி செய்யுங்கள். இல்லாவிட்டால் முதலில் வறுத்த மாவு அதில் ஒட்டுக்கொண்டு தீய்ந்துவிடும். உலுந்தெல்லாம் வறுப்பது, நல்ல மணமாக இருக்கும் என்பதாலும் மிக்ஸியில் சுலப‌மாக அரையும் என்பதாலும்தான். அவசரமாக செய்வதாக இருந்தால் நீங்கள் அப்படியே வறுக்காமால்கூட செய்யலாம். வறுத்த மணம்தான் இருக்காது.

  ஃபாயிஸா சென்னையில் இருக்காங்களா? டெல்லிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆனதாக ஞாபகத்தில்தான் கேட்டேன் :)

  ReplyDelete
 10. ரொம்ப நன்றி, அஸ்மாக்கா. இந்த வீக்கெண்ட் செய்யணும்னு வாங்கிவச்சுருக்கேன், இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 11. @ ஹுஸைனம்மா...

  //ரொம்ப நன்றி, அஸ்மாக்கா. இந்த வீக்கெண்ட் செய்யணும்னு வாங்கிவச்சுருக்கேன், இன்ஷா அல்லாஹ்//

  செய்து பார்த்துட்டு சொல்லுங்க மிஸஸ் ஹுஸைன்! இன்னொன்று சொல்ல மறந்துட்டேன். நாமே மாவு தயார் பண்ணும்போது வறுத்து செய்வதால் நீண்ட நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும். அதனால் அதிகமாக செய்து வைத்துக் கொண்டு அப்பப்போ முறுக்கு செய்யலாம் :)

  ReplyDelete
 12. /ஏன் தேங்காய்ப்பால் உங்களுக்கு அலர்ஜியா?/ஹாஹ்ஹா! அதெல்லாம் இல்லைங்க அஸ்மா.கொஞ்சம் டயட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கான்ஸியஸா கேட்டேன்(கேக்கறது மட்டும்தான்,ஹிஹி),அதுவும் இல்லாம தேங்காய்ப்பால் டின்ல வாங்கறதே இல்ல..பவுடர் வாங்கி கரைச்சுப்பேன்.பவுடரும் இப்ப கைவசம் இல்ல,அதான் ரீஸன்.:)

  ReplyDelete
 13. @ Mahi...

  //ஹாஹ்ஹா! அதெல்லாம் இல்லைங்க அஸ்மா.கொஞ்சம் டயட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கான்ஸியஸா கேட்டேன்(கேக்கறது மட்டும்தான்,ஹிஹி),அதுவும் இல்லாம தேங்காய்ப்பால் டின்ல வாங்கறதே இல்ல..பவுடர் வாங்கி கரைச்சுப்பேன்.பவுடரும் இப்ப கைவசம் இல்ல,அதான் ரீஸன்.:)//

  அப்படியா மஹி...? :) தேங்காய்ப்பால் டின்ல நீங்க வாங்காட்டாலும், கார்ட்டனில் கிடைக்குமே அதை வாங்கலாமே மஹி? அல்லது பவுடர் யூஸ் பண்ணினால் ஸ்டாக் பண்ணி வைக்கும் முறுக்கு மாவில் சேர்க்காமல், நீங்கள் முறுக்கு செய்யும்போது மட்டும் அப்போதைக்கு 5 ஸ்பூன் தேங்காய்ப் பவுடரை சேர்த்துக்கூட செய்யலாம். ட்ரை பண்ணிப் பார்த்து சொல்லுங்க.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!