சுனாமி நினைவு நாளில் புதிய‌ சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விடுமுறையை கழிக்க தீவுக்கு நேற்று உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் அருகே பெரியப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் ஆலிம். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியப் பட்டிண‌ம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லைத் தீவிற்கு சுற்றுலா செல்ல தயாராகினர். இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியப் பட்டினத்தைச் சேர்ந்த ஐயூப் கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லைத் தீவிற்கு கிளம்பினர். ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூப் கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ. தூரத்தில் நிலை தடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூப் கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இப்னு மகள் நதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரக்கத்(37), ஹமீதா நிஷா(38), பெரியப் பட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி ஃபிர்தவ்ஸ் பானு(40),  மகன் அப்துல் வஹாப்(12), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மக்ஃபு(16), சதக்கத்துல்லா மனைவி ஹலிமத்(45), சாகுல் ஹமீது மகள் முஸ்ஃபிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), மனைவி ஃபர்சானா(35) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நாஜியா(18), ரஹீமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி. பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.விபத்து நடந்தது எப்படி?

பெரியப் பட்டிண‌ம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன. முல்லைத் தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும். விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும் லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்" செய்ய தவறியதாலும் படகு கவிழ்ந்தது.

அதிகாரிகளின் அலட்சியம்

மன்னார் வளைகுடா தீவுகளில் முறையான கண்காணிப்பு இல்லை. வனத்துறை, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, கடலோர காவல் படை, மரைன் போலீஸ், கடற்படை, மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு ரோந்து மேற்கொள்ள படகுகள் தரப்பட்டும், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை. தடை செய்யப்பட்ட தீவுக்கு சுற்றுலா செல்லும் அளவில், அவர்களின் கண்காணிப்பு பணி இருந்தது. ஒவ்வொரு முறை இதை சுட்டிக் காட்டும்போதும், அதைப் பற்றி யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்று இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம்.

ஜி.பி.எஸ். கருவி கொடுத்த "க்ளூ"

சம்பவத்திற்கு படகில் சென்ற டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோருக்கு படகின் இரண்டு பலகைகள் மட்டுமே தென்பட்டது. சம்பவ இடத்தை அறிய, மீட்புக் குழுவினர் பொருத்திய மிதவைகள் உதவின. படகின் ஜி.பி.எஸ்., கருவி மூலம் படகு ஆழப்பகுதியில் சென்று மூழ்கியது தெரிய வந்தது.கடலில் மூழ்கிய படகை கடலோர காவல்படை கப்பல் மூலம் கயிறு கட்டி இழுத்தபோது, படகு கடலுக்குள்ளேயே உடைந்து சேதமடைந்தது. படகை மீட்கும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடற்படையின் ஹெலிகாப்டர், கடலோர காவல் படையின் வலை தேடல் போன்றவற்றை பார்வையிட்ட அதிகாரிகள், சிறிது நேரத்திற்கு பின் கரை திரும்பினர்.

கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்" என்றார்.

எஸ்.பி. பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்" என்றார்.

விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்" என்றான்.

காணாமல் போன பெண்களைத் தேடி மீனவர்கள் பயணம்

நேற்று கடலில் நடந்த படகு விபத்தில் கீழக்கரையை சேர்ந்த கலீல் (11), அப்துல் வஹாப் (12) ஆகிய இரண்டு சகோதரர்கள், பரமக்குடியை சேர்ந்த தாய், மகள் ஆகியோர்களின் உடல்களை நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

பலியான பெரியப் பட்டிண‌த்தைச் சேர்ந்தவர்களில் இருவரை தவிர மற்றவர்கள் உடல்கள் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற குத்தூஸ் ஆலிம் மனைவி சலிமா பீவி உடலை இன்று காலை 7.30 மணிக்கு அடக்கம் செய்தனர். அதன் பின் மற்றொரு பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

கடலில் பயணம் செய்தவர்களில் பெரியப் பட்டிண‌த்தை சேர்ந்த ஹாஜா மகள் ரஹீமா(14), சீனி முகம்மது மகள் நாஜியா(16) ஆகியோர்கள் காணாமல் போய் விட்டனர். அவர்களின் நிலைக் குறித்து அறிய பெரியப் பட்டிண‌த்தைச் சேர்ந்த சங்கு குளி மீனவர்கள் ஏராளமானோர் ஆறு படகுகளில் இன்று காலை ஏழு மணிக்கு கடலுக்கு புறப்பட்டனர். இந்த இருவரில் நாஜியா ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜீனியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
source: dinamalar

நாம் பெறவேண்டிய படிப்பினைகள்:

- செல்வதற்கு தடை செய்யப்பட்ட இடங்களுக்கு மீறிச் செல்வது,

- தடை செய்யப்படாத இடங்களாக இருந்தாலும், அந்தந்த இடங்களுக்கு தகுந்த பாதுகாப்பின்றி செல்வது,

- பழுதடைந்த வாகனத்தில் செல்வது,

- இரவு நேரப் பிரயாணங்களைத் தேர்ந்தெடுப்பது,

- வாகனத்தின் கொள்ளளவுக்கும் தாண்டி ஆட்களை ஏற்றி செல்வது,

- அதிவேகங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்வது,

- விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவது

- மலிவான வாகன‌த்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது

‍போன்றவை பெரும் உயிர்ச் சேதங்களையும், தீராத சோகங்களையும் தரக்கூடியவை என்பதை நம்முடைய ஒவ்வொரு பிரயாணத்திலும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் கேள்விப்படும் ஒவ்வொரு விபத்துகளையும் நமக்கு இறைவன் கொடுக்கும் முன் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும். விபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சுவனப்பேற்றை அடையவும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக! நாம் அனைவரும் அவர்களுக்காக பிரார்த்திப்போம். இதைத் தவிர நாம் வேறெதுவும் செய்ய இயலவில்லை! :((

உறையும் பனியிலும் கனியும் "காக்கி"!

"காக்கி" என்ற "ஷரன் ஃப்ரூட்"

நுங்கின் வழவழப்பும் சப்போட்டாவின் சுவையும் கலந்ததுபோல் இருக்கும், சத்துக்கள் நிறைந்த "காக்கி"(Kaki) பழத்தைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம்.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளை தாய்நாடாகக் கொண்ட இந்தப் பழத்தில் சுமார் 800 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் "sharon fruit" என்றும் "Persimmon" என்றும் அழைக்கப்படுகிறது.

சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் "காக்கி"யில், நாட்டுத் தக்காளி வடிவம், சிம்லா ஆப்பிள் போன்ற வடிவம், உருளை வடிவம் என‌ பல வடிவங்கள் உள்ளன. இவை -5°C முதல் -20°C வரை குளிரைத் தாங்கக்கூடியது. (கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.) இவ்வளவு கடுமையான குளிரிலும் கூட‌ காக்கி பழம் பதமான நிலையில் பழுக்குமாம்!


காக்கி மில்க் ஷேக்ஆங்கிலத்தில் "ஷரன் ஃபுரூட்" (sharon fruit) என்று சொல்லப்படும் இந்தப் பழம் ஃபிரெஞ்ச் மொழியில் "காக்கி" என்று அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் தயாரிக்கப்படும் சுவையான‌ 'மில்ஷேக்'கின் சுலபமான செய்முறையை வீடியோ வடிவில் காணவும். முதல் முறையாக‌ முயற்சித்த ஒரு சிறிய முயற்சி :)

3G செல்ஃபோன் கோபுரங்களால் புற்றுநோய் ஆபத்து! புதிய ஆய்வில் தகவல்மக்களின் தேவைகள் அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்புகளும் பெருகி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த வகையில் விஞ்ஞானத்தை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம் எந்த மக்களுக்காக அந்த கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகின்றனவோ, அதே மக்களை முதுகுப் புறத்திலிருந்து தாக்கும் எதிரியாக அதன் பின்விளைவுகளும் அமைந்து விடுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அச்சமும் வருத்தமும் நம்மை ஆட்கொள்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சக்தி மிகுந்த 3G செல்ஃபோன் டவர்கள்! இன்னும் இரண்டு வருடங்களில் சுமார் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் இந்த 3G செல்ஃபோன் டவர்களால் இருக்கிறது என்றால், அதைக் கேட்டுவிட்டு அலட்சியப் படுத்திவிட முடியுமா? அதனால்தான் இந்தப் பதிவு.

கணிசமான மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? பக்க விளைவு இல்லாத முறையில் அமைக்கவும் பயன்படுத்தவும், இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எந்த ஐடியாவும் தோன்றவில்லையா? இதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கத்தின் அக்கறை உள்ளதா? .... இப்படியே கேள்விக் கணைகள் நம்மை துளைக்கிறதே தவிர, அதற்கான விடைகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து, மக்கள் நடமாட்ட‌ம் உள்ள பகுதிகளில் அந்த டவர்கள் அமைப்பதை விடுத்து, எவ்வளவு எல்லைத் தாண்டி அமைத்தால் மக்களுக்கு அதன் பாதிப்பு இருக்காதோ அவ்வளவு தூரமான இடங்களில் அவற்றை அமைத்துக் கொள்வதே பாதுகாப்பானது என்று தோன்றுகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே நம்மை பயமுறுத்திக் கொண்டு ஆங்காங்கே நிற்கின்றன அந்த உயிர்க் கொல்லிகள் :( கீழுள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். இவற்றை அறிந்த மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். மக்களின் எதிர்ப்பை மேலிடத்திற்கு கொண்டு செல்வ‌தற்கான சரியான வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள். உங்களின் மேலான ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.

"3ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும்" என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது செல்போன்களின் பயன்பாடு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன்படத்தக்கதாக உள்ளது. செல்போன்களின் தேவை அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது.

தொலைபேசி துறையில் 2ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த செல்போன் தற்போது 3ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்தி வாய்ந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 40 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீதம் செல்போன் கோபுரங்கள் மூலம் "3ஜி" தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை பல நகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள சிக்னல்கள் "2ஜி"ஐ விட 2 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.


அவற்றில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்க
க்கூடியது என கருதப்படுகிறது. மூளை புற்றுநோய், தலைவலி, ஞாபகமறதி, புற்றுநோய் கட்டி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

"3ஜி" செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் அதிக அளவில் தாக்கக்கூடியது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நோய்களால் பாதக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.


அவற்றின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் வெளிப்படும். இந்த தகவலை மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார். இவர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "3ஜி" செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் சில மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் இதன் விளைவை கட்டாயம் சந்தித்தே தீருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த ஆய்வறிக்கையின் தகவல் தொலைபேசி துறைக்கு இம்மாத இறுதியில் அனுப்பப்பட்டு தேவையான சீரமைப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, "3ஜி" செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பது குறைக்கப்பட்டுள்ளது.

(thanks:maalaimalar)


.  

மசால் தோசைஉள்ளடம்(ஸ்டப்பிங்) செய்ய‌
தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 300 கிராம்
உருளைக் கிழங்கு - 1 கப்(சிறிய கட்டங்களாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப்(பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலைப் பருப்பு - 1 பிடி
கடுகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர் அல்லது
சிக்கன் ஸ்டோக் பௌடர் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

.