அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 16 December 2010

3G செல்ஃபோன் கோபுரங்களால் புற்றுநோய் ஆபத்து! புதிய ஆய்வில் தகவல்



மக்களின் தேவைகள் அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்புகளும் பெருகி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த வகையில் விஞ்ஞானத்தை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம் எந்த மக்களுக்காக அந்த கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகின்றனவோ, அதே மக்களை முதுகுப் புறத்திலிருந்து தாக்கும் எதிரியாக அதன் பின்விளைவுகளும் அமைந்து விடுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அச்சமும் வருத்தமும் நம்மை ஆட்கொள்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சக்தி மிகுந்த 3G செல்ஃபோன் டவர்கள்! இன்னும் இரண்டு வருடங்களில் சுமார் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் இந்த 3G செல்ஃபோன் டவர்களால் இருக்கிறது என்றால், அதைக் கேட்டுவிட்டு அலட்சியப் படுத்திவிட முடியுமா? அதனால்தான் இந்தப் பதிவு.

கணிசமான மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? பக்க விளைவு இல்லாத முறையில் அமைக்கவும் பயன்படுத்தவும், இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எந்த ஐடியாவும் தோன்றவில்லையா? இதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கத்தின் அக்கறை உள்ளதா? .... இப்படியே கேள்விக் கணைகள் நம்மை துளைக்கிறதே தவிர, அதற்கான விடைகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து, மக்கள் நடமாட்ட‌ம் உள்ள பகுதிகளில் அந்த டவர்கள் அமைப்பதை விடுத்து, எவ்வளவு எல்லைத் தாண்டி அமைத்தால் மக்களுக்கு அதன் பாதிப்பு இருக்காதோ அவ்வளவு தூரமான இடங்களில் அவற்றை அமைத்துக் கொள்வதே பாதுகாப்பானது என்று தோன்றுகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே நம்மை பயமுறுத்திக் கொண்டு ஆங்காங்கே நிற்கின்றன அந்த உயிர்க் கொல்லிகள் :( கீழுள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். இவற்றை அறிந்த மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். மக்களின் எதிர்ப்பை மேலிடத்திற்கு கொண்டு செல்வ‌தற்கான சரியான வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள். உங்களின் மேலான ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.

"3ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும்" என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது செல்போன்களின் பயன்பாடு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன்படத்தக்கதாக உள்ளது. செல்போன்களின் தேவை அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது.

தொலைபேசி துறையில் 2ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த செல்போன் தற்போது 3ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்தி வாய்ந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 40 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீதம் செல்போன் கோபுரங்கள் மூலம் "3ஜி" தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை பல நகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள சிக்னல்கள் "2ஜி"ஐ விட 2 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.


அவற்றில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்க
க்கூடியது என கருதப்படுகிறது. மூளை புற்றுநோய், தலைவலி, ஞாபகமறதி, புற்றுநோய் கட்டி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

"3ஜி" செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் அதிக அளவில் தாக்கக்கூடியது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நோய்களால் பாதக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.


அவற்றின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் வெளிப்படும். இந்த தகவலை மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார். இவர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "3ஜி" செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் சில மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் இதன் விளைவை கட்டாயம் சந்தித்தே தீருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த ஆய்வறிக்கையின் தகவல் தொலைபேசி துறைக்கு இம்மாத இறுதியில் அனுப்பப்பட்டு தேவையான சீரமைப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, "3ஜி" செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பது குறைக்கப்பட்டுள்ளது.

(thanks:maalaimalar)


.  

10 comments:

  1. அடேங்கப்பா...

    இவ்வலவு பெரிய தீங்கு காத்திருக்கா?? கவலையான விஷயம் தான் :(

    ReplyDelete
  2. @ ஆமினா...

    ///அடேங்கப்பா...

    இவ்வலவு பெரிய தீங்கு காத்திருக்கா?? கவலையான விஷயம் தான் :(//

    இந்த தீங்கிற்கு என்ன தீர்வு என்றுதான் புரியவில்லை ஆமினா. நம்மால் கவலைப்பட மட்டுமே முடிகிறது :(

    ReplyDelete
  3. என்னங்க இது... இவ்வளவு தீமை இருக்கா இந்தத் தொழில்நுட்பத்தால்..

    நல்ல பதிவுங்க.. இப்பதிவின் லிங்கை நண்பர்களுக்குப் பகிர்கிறேன்..

    ReplyDelete
  4. @ பதிவுலகில் பாபு...

    //என்னங்க இது... இவ்வளவு தீமை இருக்கா இந்தத் தொழில்நுட்பத்தால்..

    நல்ல பதிவுங்க.. இப்பதிவின் லிங்கை நண்பர்களுக்குப் பகிர்கிறேன்..//

    நல்லது சகோ, உங்க நண்பர்களுக்கும் கொடுங்க. உங்கள் முயற்சிக்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா!
    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @ ஆயிஷா அபுல்...

    //அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா!
    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்//

    வ அலைக்குமுஸ்ஸலாம்! நன்றி ஆயிஷா.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
    சகோ அஸ்மா

    ////இன்னும் இரண்டு வருடங்களில் சுமார் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம்///

    ”ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்”
    அல்குர்ஆன்:5:32
    ஒர் உயிர்க்கே குர்ஆன் இப்படி எச்சரிக்கும்போது
    ஒரு கோடி மக்கள்
    அதுவும் கட்டணமாக அவர்களுடைய காசை பிடுங்கிக் கொண்டே
    (இதுதான் சொந்த காசுல சூணியம் வச்சுக்கிறதுன்னு சொல்லுறது)
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை நன்றி சகோ
    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  8. மிக அருமையாக எல்லொருக்கும் படித்த பதிவை விழிப்புணர்வு செய்து இருக்கீங்க.

    என் வலை இப்ப http://samaiyalattakaasam.blogspot.com
    இதில் முடிந்த போது வாஙக அஸ்மா
    நீங்கள் கருத்திட்டது கிடையாது அது சும்மா இம்போட் செய்தது அதில் அனைத்தும் வந்துவிட்டது.

    ReplyDelete
  9. @ ஹைதர் அலி...

    //”ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்”
    அல்குர்ஆன்:5:32
    ஒர் உயிர்க்கே குர்ஆன் இப்படி எச்சரிக்கும்போது
    ஒரு கோடி மக்கள்
    அதுவும் கட்டணமாக அவர்களுடைய காசை பிடுங்கிக் கொண்டே
    (இதுதான் சொந்த காசுல சூணியம் வச்சுக்கிறதுன்னு சொல்லுறது)
    நல்ல விழிப்புணர்வு கட்டுரை நன்றி சகோ//

    அல்குர்ஆனின் வசனத்தோடு தங்களின் கருத்து அருமை! நன்றி சகோ.

    ReplyDelete
  10. @ Jaleela Kamal...

    //மிக அருமையாக எல்லொருக்கும் படித்த பதிவை விழிப்புணர்வு செய்து இருக்கீங்க.

    என் வலை இப்ப http://samaiyalattakaasam.blogspot.com
    இதில் முடிந்த போது வாஙக அஸ்மா
    நீங்கள் கருத்திட்டது கிடையாது அது சும்மா இம்போட் செய்தது அதில் அனைத்தும் வந்துவிட்டது//

    உங்களின் புது URL ல் நான் கமெண்ட் போட்டேனே ஜலீலாக்கா? அது "jaleelakamal.blogspot.com" என்று இருந்த மாதிரி ஞாபகம் உள்ளது. அப்போ அது வேற ப்ளாக்கா? முடியும்போது இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வருகிறேன். உங்கள் கருத்திற்கு நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை