அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 18 December 2010

காக்கி மில்க் ஷேக்



ஆங்கிலத்தில் "ஷரன் ஃபுரூட்" (sharon fruit) என்று சொல்லப்படும் இந்தப் பழம் ஃபிரெஞ்ச் மொழியில் "காக்கி" என்று அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் தயாரிக்கப்படும் சுவையான‌ 'மில்ஷேக்'கின் சுலபமான செய்முறையை வீடியோ வடிவில் காணவும். முதல் முறையாக‌ முயற்சித்த ஒரு சிறிய முயற்சி :)




குறிப்பு:

- நன்கு கூழாக்கக் கூடாது. சிறிய துண்டுகள் இருக்குமளவு வந்தவுடன் மிக்ஸியை நிறுத்திவிட வேண்டும்.

- விரும்பினால் ரோஸ் எஸென்ஸ் 4,5 சொட்டுகள் விட்டுக் கொள்ளலாம்.

- வெயில் காலமாக இருந்தால் இத்துடன் 2 ஐஸ் க்யூப் சேர்த்து அடிக்கலாம். 

- நன்கு பழுத்த பழமாக இருப்பதைவிட, சிவந்த ஆரஞ்சு நிறத்தில் பழுத்த, சற்று அழுத்தமாக உள்ள பழமே நன்றாக இருக்கும். நன்கு சிவந்து, 'தழதழ'வென்று  அமுங்கும் நிலையில் உள்ள‌ பழம் (துவர்ப்பு சுவை சேர்ந்துவிடுவதால்) அவ்வளவு சுவையாக இருக்காது.

- இந்த காக்கி பழத்தைப் பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில்



31 comments:

  1. ஜூஸ் ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  2. அஸ்மா,இந்தப்பழம் சமீபத்தில்தான் சாப்பிட்டேன்.தக்காளி மாதிரி இருக்கே,ருசி எப்படி இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன்.சுவை நன்றாகவேஇருந்தது.

    மில்க் ஷேக்-ஐ விட வீடியோவில் வரும் குரல் ஸ்வீட்டாக இருக்கு. அழுத்தம் திருத்தமா பேசறார் உங்க குட்டிப்பையன்.சூப்பர்! :) :)

    ReplyDelete
  3. இந்த பழம் எங்க விட்டில் எல்லோருக்கும் பிடித்தது,
    பழுத்த பழமா இருந்தா தான் ரொம்ப நல்ல இருக்கும்.
    நுங்குபோல்
    இல்லை என்றால் துவர்க்கும். வாயில் வெத்திலை போட்டார் போல இருக்கும்

    இங்கு இதன் பெயர் அரபியில் காக்கா பழம், என்று போட்டு இருக்கும் ஆங்கிலத்தில்தெரிய வில்லை , உஙக்ள்ப் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
    நேற்று கூட சாப்பிட்டோம், அப்ப என்ன சுவை.

    மில்க் ஷேக்கும் அருமை,.

    ReplyDelete
  4. வீடியோ படமும் பிரமாதம்

    ReplyDelete
  5. மில்க் ஷேக் சூப்பர்..

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா.
    வீடியோ +மில்க் சேக் சூப்பர்.

    ReplyDelete
  7. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //ஜூஸ் ரொம்ப நல்லாருக்கு//

    நன்றி சகோ.

    ReplyDelete
  8. @ Mahi...

    //அஸ்மா,இந்தப்பழம் சமீபத்தில்தான் சாப்பிட்டேன்.தக்காளி மாதிரி இருக்கே,ருசி எப்படி இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே சாப்பிட்டேன்.சுவை நன்றாகவேஇருந்தது//

    நாங்களும் நான்கைந்து வருடங்களாகதான் சாப்பிடுகிறோம். முதலில் டேஸ்ட்டைப் பற்றி யோசித்தே சாப்பிடாமல் விட்டாச்சு. இப்போ டேஸ்ட் தெரிந்தவுடன் விடுவதாக இல்லை :))

    //மில்க் ஷேக்-ஐ விட வீடியோவில் வரும் குரல் ஸ்வீட்டாக இருக்கு. அழுத்தம் திருத்தமா பேசறார் உங்க குட்டிப்பையன்.சூப்பர்! :) :)//

    :))பேச வைப்பதற்குள் பெரிய பாடாகிவிட்டது. தேங்க்ஸ் மஹி!:)

    ReplyDelete
  9. @ vanathy...

    //super milk shake//

    தேங்க்ஸ் வானதி!

    ReplyDelete
  10. @ Geetha6...

    delicious madam..

    தேங்க்ஸ் கீதா!

    ReplyDelete
  11. @ Geetha6...

    Demo BGM voice super!!!

    தேங்க்ஸ்மா!:))

    ReplyDelete
  12. @ Jaleela Kamal...

    //இந்த பழம் எங்க விட்டில் எல்லோருக்கும் பிடித்தது,
    பழுத்த பழமா இருந்தா தான் ரொம்ப நல்ல இருக்கும்.
    நுங்குபோல்
    இல்லை என்றால் துவர்க்கும். வாயில் வெத்திலை போட்டார் போல இருக்கும்//

    ஆமா ஜலீலாக்கா, பழுக்காமல் இருந்தாலோ, ரொம்ப பழுத்து போனதாக இருந்தாலோ தோல் துவர்ப்பாக இருக்கும். தோலை உரித்துவிட்டுதான் யூஸ் பண்ண முடியும். பதமாக இருந்தால் ஆப்பிள் மாதிரி அப்படியே தோலோடு சாப்பிடலாம்.

    //இங்கு இதன் பெயர் அரபியில் காக்கா பழம், என்று போட்டு இருக்கும் ஆங்கிலத்தில்தெரிய வில்லை , உஙக்ள்ப் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
    நேற்று கூட சாப்பிட்டோம், அப்ப என்ன சுவை.

    மில்க் ஷேக்கும் அருமை,.//

    ஓ.. ஃபிரெஞ்சிலும் அரபியிலும் இதன் பெயர் கொஞ்சம்தான் வித்தியாசமா இருக்கா?

    //வீடியோ படமும் பிரமாதம்//

    நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete
  13. @ பதிவுலகில் பாபு...

    //மில்க் ஷேக் சூப்பர்..//

    நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ ஆயிஷா அபுல்...

    //அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா.
    வீடியோ +மில்க் சேக் சூப்பர்//

    வ அலைக்கும் சலாம்! நன்றி ஆயிஷா.

    ReplyDelete
  15. காக்கா பழ ஷேக் ரெஸிபி சிம்பிளாயிருக்கு...இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்!

    உங்கள் குட்டிபையனின் குரலை கேட்டதும் இந்த குறள் டக்குன்னு நினைவுக்கு வந்தது

    மில்க் சேக்கை விட அந்த குரல்
    ஆயிரம் மடங்கு இனிது

    ”எங்கள் குழந்தைகளை எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக” அல்குர்ஆன்:25:74

    குர்ஆனில் வரக்கூடிய இந்த துஆ வும் நினைவுக்கு வந்தது

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  17. இங்கு இதன் பெயர் அரபியில் காக்கா பழம்.

    ஹா ..ஹா..ஹா ...அரபியில் காக்கா பழமா ?

    விந்தையா இருக்கு ஜலீலா அக்காள்.

    அஸ்மா அக்காளுக்கு அரபி தெரியாதுன்னு அள்ளி விட்றமாதுரி தெரியுது ?

    எல்லாமே சூப்பர் நான்தான் கொஞ்சம் தாமதம் ப்ளாக்கை டெவலப்மென்ட் பண்ற வேளையில் பிசி அதான் கொஞ்சம் லேட்டு.

    அரபிகள் இதை விரும்பி குடிப்பதினால் சேக் என்று பெயர் வைத்த மாதுரி தெரியுது ?

    ReplyDelete
  18. @ enrenrum16...

    //காக்கா பழ ஷேக் ரெஸிபி சிம்பிளாயிருக்கு...இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கிறேன்...//

    செய்து பாருங்க, நன்றி பானு.

    ReplyDelete
  19. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்!

    உங்கள் குட்டிபையனின் குரலை கேட்டதும் இந்த குறள் டக்குன்னு நினைவுக்கு வந்தது

    மில்க் சேக்கை விட அந்த குரல்
    ஆயிரம் மடங்கு இனிது//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    அல்ஹம்துலில்லாஹ், உங்களின் கருத்துக்கு ரொம்ப சந்தோஷம் :)

    //”எங்கள் குழந்தைகளை எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக” அல்குர்ஆன்:25:74

    குர்ஆனில் வரக்கூடிய இந்த துஆ வும் நினைவுக்கு வந்தது//

    குழந்தைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாலே கவலைகள் மறந்துவிடும் :) சுப்ஹானல்லாஹ்! வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  20. @ அந்நியன் 2...

    //ஹா ..ஹா..ஹா ...அரபியில் காக்கா பழமா ?

    விந்தையா இருக்கு ஜலீலா அக்காள்.

    அஸ்மா அக்காளுக்கு அரபி தெரியாதுன்னு அள்ளி விட்றமாதுரி தெரியுது ?//

    :))) அப்போ அரபியில் என்னதான் அதற்கு பெயர்?

    //எல்லாமே சூப்பர் நான்தான் கொஞ்சம் தாமதம் ப்ளாக்கை டெவலப்மென்ட் பண்ற வேளையில் பிசி அதான் கொஞ்சம் லேட்டு.

    அரபிகள் இதை விரும்பி குடிப்பதினால் சேக் என்று பெயர் வைத்த மாதுரி தெரியுது ?//

    நல்ல கற்பனை :‍-) உங்க ப்ளாக்கை நல்ல முறையில் டெவலப் பண்ணுங்க. வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  21. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை
    &
    "நந்தலாலா" இணைய இதழ்,
    www.nanthalaalaa.blogspot.com

    ReplyDelete
  22. @ வைகறை...

    //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


    -கவிஞர்.வைகறை//

    புத்தாண்டு கொண்டாடுவதில்லை, மன்னிக்கவும். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா

    சொல்லாம போக முடியவில்லை..பையன் என்ன அழகா பேசுறார்.மழலை குரல் மாறவே இல்லை ஜோரா ஒரு கைதட்டு
    இங்கு காக்கா பழம் தான்.ஜலீலக்க சொல்வது உண்மை இங்கு கிடைக்கும் பழம் ரொம்ப அதிகமா பழுக்கனும் இல்லைன்னா துவர்க்கும்.
    ஆனால் அதிலேயே இன்னொரு ரகம் லெபனான் காக்கா பழம் வாங்குவேன் அது நீங்க சொல்வது போல் லேசாக பழுத்தாலே சுவையாக இருக்கும்.
    thalika

    ReplyDelete
  24. @ thalika...

    //அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா

    சொல்லாம போக முடியவில்லை..பையன் என்ன அழகா பேசுறார்.மழலை குரல் மாறவே இல்லை ஜோரா ஒரு கைதட்டு//

    மாஷா அல்லாஹ்..! 7½ வயசுதானே ஆகுது.. அதான் இன்னும் குழந்தை குரல் :) நீங்கள் தட்டிய ஜோரான கைத்தட்டு, துபாயிலிருந்து ஃபிரான்சுக்கு நல்லா கேட்டது தளிகா :‍-) தேங்க்ஸ்மா!

    //இங்கு காக்கா பழம் தான்.ஜலீலக்க சொல்வது உண்மை இங்கு கிடைக்கும் பழம் ரொம்ப அதிகமா பழுக்கனும் இல்லைன்னா துவர்க்கும்.
    ஆனால் அதிலேயே இன்னொரு ரகம் லெபனான் காக்கா பழம் வாங்குவேன் அது நீங்க சொல்வது போல் லேசாக பழுத்தாலே சுவையாக இருக்கும்//

    ஆமா தளிகா, அதில்தான் நூற்றுக்கணக்கான வெரைட்டிஸ் இருக்கே..! நீங்கள் சொல்லும் லெபனான் வகை கூட நன்கு பழுத்தால் தோல் மட்டும்தான் துவர்க்கும். சில வகை நன்கு பழுத்துவிட்டால் சதைப்பாகம் நார்த் தன்மையாகி, தொண்டையில் மாட்டுவதுபோல் இருக்கும்! ஒருமுறை ஒருவகையை வாங்கி சாப்பிட்டால் அதுபற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  25. அஸ்மா...,காக்கி மில்க் ஷேக் சிம்பிள் மற்றும் சூப்பர்.
    இந்த பழத்தை பற்றி இப்பதான் நான் கேள்வியேபடுறேன்.உங்களுடைய டிப்ஸை வைத்து வாங்கி முயற்ச்சிக்க வேண்டும்.
    அதை விட உங்க பைய்யனின் குரலும் சொன்னவிதமும் சூப்பர் சூப்பர்... ரொம்ப அழகாக இருந்தது கேட்பதற்க்கு.நல்ல முயற்ச்சி.
    பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

    அன்புடன்,அப்சரா.

    ReplyDelete
  26. @ அப்சரா...

    //அஸ்மா...,காக்கி மில்க் ஷேக் சிம்பிள் மற்றும் சூப்பர்.
    இந்த பழத்தை பற்றி இப்பதான் நான் கேள்வியேபடுறேன்.உங்களுடைய டிப்ஸை வைத்து வாங்கி முயற்ச்சிக்க வேண்டும்//

    கண்டிப்பா செய்து பாருங்கபா!

    //அதை விட உங்க பைய்யனின் குரலும் சொன்னவிதமும் சூப்பர் சூப்பர்... ரொம்ப அழகாக இருந்தது கேட்பதற்க்கு.நல்ல முயற்ச்சி.
    பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்//

    மாஷா அல்லாஹ்... :-) நன்றி அப்சரா!

    ReplyDelete
  27. Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
    dear sister Asma,
    Can you give me some advice to choose a good காக்கி ?!
    Because most of the time, they are not sweet !!!
    Adhu naley milk shakku spoilt ayirudhu, unfortunately !!!



    Your sister,
    M.Shameena

    ReplyDelete
  28. @ ஏம்.ஷமீனா...

    //Can you give me some advice to choose a good காக்கி ?!
    Because most of the time, they are not sweet !!!
    Adhu naley milk shakku spoilt ayirudhu, unfortunately !!!//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    காக்கி பழம் சிவந்த ஆரஞ்சு நிறத்தில், அழுத்தினால் லேசாக அழுந்துவதுபோல் இருக்கணும் ஷமீனா. அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும், துவர்ப்பும் இருக்காது. தோலை சீவிவிட்டு மில்க் க்ஷேக் செய்யுங்கள். (தோலை தனியாக சாப்பிடலாம். அதுபோல் சாதாரணமாக சாப்பிடுவதற்கும் தோலை உரிக்காமலே ஆப்பிள்போன்று சாப்பிடலாம்.)

    அதுபோன்ற பதமான நிலைக்கு முந்திய நிலையில் சற்று அழுத்தமாக இருந்தாலும் வாங்கி அந்த நிலைக்கு பழுக்கும் வரை இரண்டொரு நாட்கள் வைத்திருந்தால் இனிப்பு சுவையுடன், நார் இல்லாமல் பதமாக ஆகிவிடும். ஆனால் நன்கு கனிந்துப்போன தக்காளிபோல் தழதழவென்று இருந்தால் தோலை உரித்துவிட்டு சாப்பிடலாமே தவிர, மில்க் ஷேக் செய்ய அது பொருத்தமில்லை. மேலும் அந்த நிலையிலுள்ள‌ பழத்தில் நார் அதிகமாகிவிடும். அதனால் முதலில் சொன்னதுபோல் பார்த்து வாங்குங்கள். வேறு சந்தேகம் இருந்தாலும் கேளுங்க‌ ஷமீனா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை