அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 28 January 2011

சுறும்பு மீன் பத்திய ஆனம்புளி சேர்க்காத பத்தியத்தில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைப் பெற்றவர்களுக்கு 'பத்திய மீன் ஆனம்' ஆக்குவதற்கு என்றே நம்மூரில் சில மீன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட மீன்க‌ள் சாப்பிடும்போது பாலூட்டும் தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் (சிலவேளை மீன் சாப்பிடுவதால் ஏற்படும்) வாயுக் கோளாறுகள், மாந்தம், வயிற்றுப் பிரச்சனைகள் என்று எந்தவித பிரச்சனையும் வராது. அதுபோன்ற மீன்களில் ஒன்றுதான் இந்த‌ சுறும்பு மீன். பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த 'பத்திய ஆனம்' குழந்தைப் பெற்றவர்களுக்கு நன்கு பால் சுரக்கவும் உதவுகிறது. சத்துக்கள் நிறைந்தது! எனவே திட உணவு சாப்பிட ஆரம்பித்த குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்:

சுறும்பு மீன் - 1 (சுமார் 1/2 கிலோ)
நாட்டு வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
அரைத்த தேங்காய் - 1 எலுமிச்சை அளவு
தக்காளி - 1(சுமார் 75 கிராம்)
முழு பூண்டு - 1
எலுமிச்சம் பழம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லிக்கீரை - 1 கைப்பிடி(திக்கான) தேங்காய்ப் பால் - சுமார் 125 மில்லி
நல்லெண்ணெய் - சுமார் 75 மில்லி
வெந்தயம் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 ஸ்பூன்
ஜீரகத் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:தக்காளி, பாதியளவு பூண்டு, 6 நாட்டு வெங்காயம் மூன்றையும் கொஞ்சம் பொடிதாக நறுக்கி வைக்கவும்.மீதி பூண்டு, பெரிய வெங்காயம் இரண்டையும் நன்கு நசுக்கி, அதிலிருந்து பாதி மட்டும் சூடாக்கிய நல்லெண்ணெயில் போட்டு தாளிக்கவும்.
பூண்டு வெங்காயம் லேசாக முறுக ஆரம்பிக்கும்போதே வெந்தயத்தைப் போடவும்.வெந்தயம் (தீயாமல் முறுகி) வாசனை வந்தவுடன் கறிவேப்பிலை மற்றும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள நாட்டு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியவுடன் வெட்டிய தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து சற்று குழைய வதக்கவும்.தேங்காய்ப் பாலில் (மீன் வேக‌ தேவையான‌ அளவுக்கு) தண்ணீர் சேர்த்து, அத்துடன் பூண்டு + பெரிய வெங்காயம் நசுக்கி வைத்துள்ளதின் மீதி, 4 தூள் வகைகள், உப்பு சேர்த்து கலக்கி ரெடியாக வைத்து, இப்போது ஊற்றவும்.ஆனம் கொதி வந்ததும் அதில் பச்சை மிளகாயை உடைத்துப் போட்டு மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.சிறிது நேரம் மூடி வைத்து, மீன் வெந்ததும் மல்லிக் கீரையைத் தூவி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.எலுமிச்சை பழம் பிழிந்த பிறகு மெதுவாக கலக்கிவிட்டு உடனே இறக்கவும்.


டிஸ்கி:  சுவையும் சத்துக்களும் நிறைந்த இந்த சுறும்பு மீன் பத்திய ஆனத்தை கூடுதலாக சமைக்கும் சமயங்களில், ஆக்கியவுடன் ஒரு மண் சட்டியில் (தேவைப்படும் அளவு) எடுத்து வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிட, சுறும்பு மீனின் சுவை முழுதும் இறங்கி முந்திய நாளைவிட சுவை கூடுதலாக, ரொம்ப அருமையாக இருக்கும்! 

40 comments:

 1. ஸலாம் சகோ அஸ்மா..

  மீன் ஆனம் செய்முறை மற்றும் போட்டோ அசத்தல்,,பார்க்கும்போதே சாப்பிடத்தோன்ற வைத்துவிட்டீர்கள்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 2. @ RAZIN ABDUL RAHMAN...

  //மீன் ஆனம் செய்முறை மற்றும் போட்டோ அசத்தல்,,பார்க்கும்போதே சாப்பிடத்தோன்ற வைத்துவிட்டீர்கள்...//

  ஸலாம் ரஜின். சாப்பிட தோன்றினால் சாப்பிட்டு விடுங்க, இதற்கெல்லாம் யோசிக்கக் கூடாது :-) நன்றி சகோ!

  ReplyDelete
 3. surumbu meen, arumai. inghu intha meen kidaikkinrathaa, enna peyar, mudinthaal sollavum.
  salaam......

  ReplyDelete
 4. @ afsherzimana...

  //surumbu meen, arumai//

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  //inghu intha meen kidaikkinrathaa, enna peyar//

  'இங்கு'ன்னா... நீங்க எங்கு இருக்கீங்கன்னு தெரியலயே..? ஃபிரான்சில்தான் இருக்கீங்களா? அப்படியானால் Paris ல் இந்தியன் ஸ்டோர்க‌ளில் மட்டும்தான் இது கிடைக்கும். 'சுறும்பு'ன்னு சொல்லியே கேட்கலாம். மற்றபடி நீங்க வேறு நாட்டில் இருக்கீங்கன்னா சொல்லுங்க, பெயர் தெரிஞ்சிக்க என்னால் முடிந்தால் ஹெல்ப் பண்ணுகிறேன், இன்ஷா அல்லாஹ்!

  (அடுத்த முறை தமிழில் டைப் பண்ணுங்களேன், plz)

  ReplyDelete
 5. ஸலாம் சகோ அஸ்மா!!

  இந்த 'சுறும்பு' மீன் இப்ப கிடைக்குதா? அருமையான டேஸ்டா இருக்கும். இப்பவும் நான் மார்கெட் (சவுதி அல்லது நாகூர்) போனால் தேடி தேடி பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்குது! அதான். அருமையான பகிர்வு சகோ.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அழைக்கும்,

  செய்முறை மற்றும் போட்டோ அருமை.


  //RAZIN ABDUL RAHMAN
  பார்க்கும்போதே சாப்பிடத்தோன்ற வைத்துவிட்டீர்கள்...//


  சகோக்கு, பார்சல் அனுப்பிவிடுங்கள் அஸ்மா.

  ReplyDelete
 7. @ எம் அப்துல் காதர்...

  //ஸலாம் சகோ அஸ்மா!!

  இந்த 'சுறும்பு' மீன் இப்ப கிடைக்குதா? அருமையான டேஸ்டா இருக்கும்//

  ஸலாம் சகோ! கவுச்சி கொஞ்சமும் இல்லாமல் நீங்கள் சொல்வதுபோல் சூப்பர் டேஸ்ட்! ஃபிரான்ஸில் எப்பவுமே கிடைக்குது சகோ.

  //இப்பவும் நான் மார்கெட் (சவுதி அல்லது நாகூர்) போனால் தேடி தேடி பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்குது! அதான். அருமையான பகிர்வு சகோ.//

  நாகூரில் கிடைக்காவிட்டால் நாகப்பட்டிணத்தில் நீங்கள் பார்க்கலாமே சகோ? காரைக்கால் மார்க்கெட்டில் எப்போதாவது கிடைக்கிறது. எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணி எங்க பக்கம்(ஈரோப்பிற்கு)வந்துவிடுகிறதுன்னு நினைக்கிறேன். அடுத்த ஃப்ளைட் வந்தா அப்படியே ஒரு 'U'Turn போட சொல்லி சவூதி பக்கம் திருப்பிவிடுகிறேன் சகோ, கவலைப்படாதீங்க :))

  நன்றி சகோ.

  ReplyDelete
 8. @ ஆயிஷா...

  //அஸ்ஸலாமு அழைக்கும்,

  செய்முறை மற்றும் போட்டோ அருமை// நன்றி ஆயிஷா!

  //சகோக்கு, பார்சல் அனுப்பிவிடுங்கள் அஸ்மா//

  ரஜின் வீட்டில் பத்திய ஆனம் கொதிக்க ஆரம்பிச்சுடுச்சி :)) அதான் அனுப்பல.

  நன்றி ஆயிஷா!

  ReplyDelete
 9. அருமையாக செய்திருக்கீங்க அஸ்மா,எங்க பக்கம் இந்த பத்திய மீனை குதிப்பு மீன்னு சொல்வோம்,சிறிய மாற்றத்துடன் நானும் தேங்காய்ப்பால் விட்டும் சில சமயம் செய்வதுண்டு.தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு முறை செய்து பாருங்க அருமையாக இருக்கும்.என் ப்ளாக்கில் ட்ராஃபிக்கில் அடிக்கடி உங்களை பார்ப்பேன்.

  ReplyDelete
 10. சுறும்பு மீன்..பேர் புதியதாக இருக்கு... படங்களும் விளக்கமும் நாக்கை ஊறச் செய்கிறது அஸ்மா

  ReplyDelete
 11. சூப்பராக செய்து காட்டியிருக்கிறீங்க அஸ்மா. இந்த மீனைப் பார்த்தால் நாங்கள் பாரை மீன் என அழைப்போம் என நினைக்கிறேன்.

  உங்கட படங்கள் மிக மிக துலக்கமாக இருக்கு... வாழ்க கமெரா.... திருஷ்டி சுத்துங்க.. உங்களுக்கல்ல:), கமெராவுக்கு:)))).

  ReplyDelete
 12. /ரஜின் வீட்டில் பத்திய ஆனம் கொதிக்க ஆரம்பிச்சுடுச்சி :)) அதான் அனுப்பல./

  அது சரி...சமாளிக்க இப்டி ஒரு காரணமா..

  /இந்த பத்திய மீனை குதிப்பு மீன்னு சொல்வோம்,/
  ஆசியாக்கா,ஓ குதிப்பு மீனா..எங்க ஊர் பக்கமும் இப்டித்தா சொல்லுவோம்..இங்க அமீரகத்துலையும் இத பாத்ததா நியாபகம்...மீன் மார்க்கெட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்து சொல்றேன்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 13. படிக்க வச்சி பழசையும் நினைக்க வச்சி இப்படி ஜொள்விட வச்சிட்டீங்களே.!! இப்ப இந்த மீனுக்கு நா எங்கே போவேன் ...அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 14. @ asiya omar...

  //எங்க பக்கம் இந்த பத்திய மீனை குதிப்பு மீன்னு சொல்வோம்// சுறும்பு மீனை மட்டும்தான் அப்படி சொல்வார்களா, இல்லை எல்லா பத்திய மீன்களுக்கும் பெயர் 'குதிப்பு' மீன்தானா ஆசியாக்கா?

  //தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு முறை செய்து பாருங்க அருமையாக இருக்கும்// பலகார வகைகளில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது அவ்வளவாக பிடிக்காது. ஆனத்தில் என்றால் நீங்கள் சொல்வதுபோல் ஒருநாள் செய்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்! ஆனால் நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லது என்றுதான் சேர்ப்பார்கள்.

  //என் ப்ளாக்கில் ட்ராஃபிக்கில் அடிக்கடி உங்களை பார்ப்பேன்//

  ஆமா ஆசியாக்கா.. கமெண்ட் கொடுக்க நேரமில்லாவிட்டாலும் சும்மா எல்லோர் ப்ளாக்குக்கும் கொஞ்ச நேரம் ஒரு ரவுண்ட் அடிப்பது வழக்கம் :) அதான். நன்றி ஆசியாக்கா!

  ReplyDelete
 15. @ enrenrum16...

  //சுறும்பு மீன்..பேர் புதியதாக இருக்கு...// ஒருவேளை உங்க ஊரில் வேறு பெயராக இருக்குமோ? மீன் படத்தைப் பார்த்து அவரவர் ஊர்ப் பக்கம் என்ன பெயர் என்று தெரிந்துக் கொள்ளவே முழு மீன் வைத்து படத்தை போட்டேன் பானு. அதைப் பார்த்தால்கூட உங்களுக்கு பெயர் நினைவுக்கு வரலாம்.

  //படங்களும் விளக்கமும் நாக்கை ஊறச் செய்கிறது அஸ்மா// :) 'வெள்ளை வௌவால் மீன்', 'ஐ வௌவால் மீன்', 'காலா மீன்', 'சுறா மீன்' போன்றவற்றில் கூட இதே டைப்பில் பத்திய ஆனம் செய்யலாம். வாய்ப்பு கிடைத்தால் செய்து பாருங்க. நன்றி பானு.

  ReplyDelete
 16. @ athira...

  //சூப்பராக செய்து காட்டியிருக்கிறீங்க அஸ்மா. இந்த மீனைப் பார்த்தால் நாங்கள் பாரை மீன் என அழைப்போம் என நினைக்கிறேன்//

  நன்றி அதிரா. இது பாரை மீன் அல்லமா! பாரை மீனுக்கு வால் ப‌க்க சதையில் முள் போன்று அழுத்தமான சிலாம்பு இருக்கும். வாய் பக்கமும் வித்தியாசம் தெரியும். கீழேயுள்ள 2 லிங்க்கையும் பாருங்க, அதுதான் பாரை மீன்.

  http://4.bp.blogspot.com/_FjVclGDTe9w/TUXCxNe25bI/AAAAAAAAAJA/yIew--TaNtY/s1600/2.jpg

  http://1.bp.blogspot.com/_FjVclGDTe9w/TUXClz2p3OI/AAAAAAAAAI8/Amhza0ZxQYs/s1600/1.JPG

  //உங்கட படங்கள் மிக மிக துலக்கமாக இருக்கு... வாழ்க கமெரா.... திருஷ்டி சுத்துங்க.. உங்களுக்கல்ல:), கமெராவுக்கு:))))//

  வாழ்த்துக்கு நன்றி. உங்க வாழ்த்து ஒன்றே போதும் என்று அதுக்கு திருஷ்டியெல்லாம் சுத்தவில்லை அதிரா :)))

  ReplyDelete
 17. @ RAZIN ABDUL RAHMAN...

  //அது சரி...சமாளிக்க இப்டி ஒரு காரணமா..//

  அப்போ இன்னும் மீன் வாங்கலியா..? :))))

  ReplyDelete
 18. @ ஜெய்லானி...

  //படிக்க வச்சி பழசையும் நினைக்க வச்சி இப்படி ஜொள்விட வச்சிட்டீங்களே.!!// அப்போ ஏற்கனவே நல்லா வெட்டியிருக்கீங்கன்னு சொல்லுங்க :))

  //இப்ப இந்த மீனுக்கு நா எங்கே போவேன் ...அவ்வ்வ்வ்வ்//

  இந்த மீன் கிடைக்காட்டி மேலே சொன்னதுபோல், 'வெள்ளை வௌவால் மீன்', 'ஐ வௌவால் மீன்', 'காலா மீன்', 'சுறா மீன்', காரை மீன்(இதில் முள் அதிகமா இருக்கும்) போன்றவற்றில் கூட இதே டைப்பில் பத்திய ஆனம் செய்யலாம். வாய்ப்பு கிடைத்தால் செய்து பாருங்க. அழாதீங்க சகோ :))) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோதரி அஸ்மா அவர்களுக்கு

  அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சுறும்பு மீனிற்கு தான குதிப்பு மீன் என்று பெயர்.நாங்களும் பத்திய சமையலிற்கு நல்ல எண்ணை தான்.மாறுதலுக்கு தேங்காய் எண்ணை சேர்த்து செய்யலாம்.அஸ்மா,கமெண்ட் முக்கியமில்லை,வந்து பார்வையிடுவதே பெரிசு.

  ReplyDelete
 21. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
  ரொம்ப அருமையான குறிப்பு கொடுத்திருக்கீங்க....
  இந்த மீனுக்கு குழம்பு ஒரு டேஸ்ட்டு கொடுக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க.... படங்களை பார்க்கும் போதே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கு.
  வாழ்த்துக்கள்.....

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 22. @ ஹைதர் அலி...

  //அருமையான பதிவு வாழ்த்துக்கள்//

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... ரொம்ப நன்றி சகோ.

  ReplyDelete
 23. @ asiya omar...

  //சுறும்பு மீனிற்கு தான குதிப்பு மீன் என்று பெயர்//

  ஓ..அப்படியா..? மீண்டும் வந்து விளக்கம் சொன்னதற்கு நன்றி ஆசியாக்கா.

  //அஸ்மா,கமெண்ட் முக்கியமில்லை,வந்து பார்வையிடுவதே பெரிசு//

  சந்தோஷம்:), நன்றிமா.

  ReplyDelete
 24. @ apsara-illam...

  //இந்த மீனுக்கு குழம்பு ஒரு டேஸ்ட்டு கொடுக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க.... படங்களை பார்க்கும் போதே தெளிவாகவும் நன்றாகவும் இருக்கு//

  வ அலைக்குமுஸ்ஸலாம்! உண்மைதான் அப்சரா, டேஸ்ட் இதற்கு அதிகம்தான். அதான் இந்தியா போறீங்களே... கிடைக்குதான்னு பாருங்க, கிடைத்தால் விட்டுடாதீங்க :-) நன்றி அப்சரா!

  ReplyDelete
 25. பட லிங்குக்கு நன்றி அஸ்மா, இப்பத்தான் வித்தியாசம் புரியுது, எனக்கு பெரிதாக மீன் பெயர் தெரியாது, இங்கு மீன் கிடைத்தாலும் இங்கத்தைய பெயர் அல்லது பாகிஸ்தான், அவ்ரிக்கன் பெயர்களில்தான் கிடைக்கும் அதால... எனக்கு இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகுது நிலைமை:).

  உங்கள் புளொக்கில், எனக்கு பின்னூட்டம் இடுவது எப்பவும் தெரிவதில்லை, தெய்வாதீனமாக எப்பவாவதுதான் கிடைக்குது... லோட் அதிகமோ தெரியவில்லை.

  ///ஜெய்லானி said... 13 படிக்க வச்சி பழசையும் நினைக்க வச்சி இப்படி ஜொள்விட வச்சிட்டீங்களே.!! இப்ப இந்த மீனுக்கு நா எங்கே போவேன் ...அவ்வ்வ்வ்வ்
  //// உந்த அவ்வ்வ்வ் சொல்ற நேரத்தில மார்க்கட்டுக்கே போயிட்டு வந்திடலாம் என்று சொல்லுங்க அஸ்மா, எனக்கு சொல்ல நேரமில்லாமல் இருக்கு அதுதான் உங்களிடம் சொல்றன்:)... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 26. @ athira...

  //பட லிங்குக்கு நன்றி அஸ்மா, இப்பத்தான் வித்தியாசம் புரியுது//

  சந்தோஷம் அதிரா.

  //எனக்கு பெரிதாக மீன் பெயர் தெரியாது, இங்கு மீன் கிடைத்தாலும் இங்கத்தைய பெயர் அல்லது பாகிஸ்தான், அவ்ரிக்கன் பெயர்களில்தான் கிடைக்கும்//

  UK வில் தமிழ் கடைகளில் கிடைக்குமே அதிரா? அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

  //உந்த அவ்வ்வ்வ் சொல்ற நேரத்தில மார்க்கட்டுக்கே போயிட்டு வந்திடலாம் என்று சொல்லுங்க அஸ்மா, எனக்கு சொல்ல நேரமில்லாமல் இருக்கு அதுதான் உங்களிடம் சொல்றன்:)... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

  :))))

  ReplyDelete
 27. //UK வில் தமிழ் கடைகளில் கிடைக்குமே அதிரா? அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் ட்ரை பண்ணிப் பாருங்கள்.//

  கடைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை பக்கத்தில இருக்கிற தேம்ஸில, உள் நீச்சல அடிச்சே மீனை பிடிச்சிடும் பூஸ் ஹா.ஹா.

  ReplyDelete
 28. @ ஜெய்லானி...

  தேம்ஸில் ஐஸ் உறைந்து கிடக்குதாம்! பாவம் பூஸார்... அதான் தமிழ்க் கடைக்கு வழி காட்டிவிட்டேன் சகோ :))

  ReplyDelete
 29. ஸலாம் அலைக்கும் சகோதரி!

  சுறும்பு மீனுன்னா, காரப்பொடி மீனா? நான் புள்ளை பெத்தவுடன் மொளவானப்பொடி ஒன்னு போட்டு புளி ஊத்தாம செஞு தருவாங்க.,.

  ReplyDelete
 30. //தேம்ஸில் ஐஸ் உறைந்து கிடக்குதாம்! பாவம் பூஸார்... அதான் தமிழ்க் கடைக்கு வழி காட்டிவிட்டேன் சகோ :)) //

  எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி நினைதான் வருது ஹா..ஹா...ஹா..

  ReplyDelete
 31. //சுறும்பு மீனுன்னா, காரப்பொடி மீனா?..//

  ரொம்ப நாளைக்கி பிறகு மீன் பதிவில் ‘பிரியாணியின்’ வாசம் தெரிகிறதே..!! :-)

  ReplyDelete
 32. @ நாஸியா...

  ஸலாம் நாஸியா, வாங்க!

  //சுறும்பு மீனுன்னா, காரப்பொடி மீனா?//

  சுறும்பு மீன் வேறு, காரப்பொடி வேறு நாஸியா. சுறும்பு மீனின் படம் மேலே 2 வது படத்தில் இருக்கிறது, பார்த்திருப்பீர்கள். காரப்பொடியின் படம் கீழுள்ள லிங்க் கொடுத்துள்ளேன், பாருங்கள்.

  http://2.bp.blogspot.com/_FjVclGDTe9w/TUmlBBKXCFI/AAAAAAAAAJI/C9bjNonzmz0/s1600/1.jpg

  சுறும்பு மீனில் சிறிய மீன்கள் இருந்தாலும் அதிகபட்சம் 3/4 முழம் வரை வளரும். சுமார் 800 கிராம் வரை (அதிகபட்ச) எடை இருக்கும். ஆனால் காரப்பொடி அதிகபட்சமாக ஒரு உள்ளங்கை அளவுதான் வளரும். வெளி ஓரத்திலும் கூரிய‌ முள் இருக்கும். உள்ளேயும் முள் அதிகமாகவும் சதை கம்மியாகவும் இருக்கும். ஆனால் அதுவும் பத்திய மீன்தான்.

  //நான் புள்ளை பெத்தவுடன் மொளவானப்பொடி ஒன்னு போட்டு புளி ஊத்தாம செஞு தருவாங்க.,.//

  கிட்டத்தட்ட அந்த டைப்தான் இந்த பத்திய ஆனமும். (மிளகானத்தில் காரம் கூடுதலாக இருக்கும்). வருகைக்கு நன்றி நாஸியா.

  ReplyDelete
 33. @ ஜெய்லானி...

  //எனக்கு டாம் அண்ட் ஜெர்ரி நினைதான் வருது ஹா..ஹா...ஹா..//

  உங்க டார்ச்சர் தாங்காமதான் 'டாம்' ஒளிந்துக் கொண்டு எட்டிப் பார்க்கிறது :)) அதிரா...! எஸ்கேப் ஆகிட்டீங்களா..?

  ReplyDelete
 34. @ ஜெய்லானி...

  //ரொம்ப நாளைக்கி பிறகு மீன் பதிவில் ‘பிரியாணியின்’ வாசம் தெரிகிறதே..!! :‍)//

  அதிராவுக்கு அடுத்து இப்போ நாஸியாவா? :‍)))

  ReplyDelete
 35. அஸ்ஸலாமு அழைக்கும் தோழி நலமா?

  சுறும்பு மீனா? பேரே இப்பதான் கேள்விடுகிறேன். ஆனா இந்த மீனை பார்த்திருக்கேன். செய்முறை விளக்கங்கள் அருமை போட்டோக்கள் நச்..சூப்பர்..

  ஒரு கிண்ணம் ஆனம் கிடைக்குமா

  ReplyDelete
 36. asukku pusukku.... mii not tom... meeeeeeeee jerry... rompa puththi.... mee eSSSS

  ReplyDelete
 37. @ அன்புடன் மலிக்கா...

  //சுறும்பு மீனா? பேரே இப்பதான் கேள்விடுகிறேன். ஆனா இந்த மீனை பார்த்திருக்கேன்.//

  வ அலைக்குமுஸ்ஸலாம் மலிக்கா! நீங்க இந்த மீனைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் உங்க ஊர் பக்கமெல்லாம் ஒருவேளை இதற்கு வேறு பெயரா இருக்கலாம் தோழி! ஊருக்கு சென்றால் விசாரித்து பாருங்க.

  //செய்முறை விளக்கங்கள் அருமை போட்டோக்கள் நச்..சூப்பர்..ஒரு கிண்ணம் ஆனம் கிடைக்குமா// நன்றி மலிக்கா! அட... உங்களுக்கு இல்லாத ஆனமா..? நீங்க வர்றீங்கன்னு ஒரு ஃபோன் மட்டும் போடுங்க, மணக்க மணக்க ரெடி பண்ணிடுவோம் :))

  ReplyDelete
 38. @ athira...

  //asukku pusukku.... mii not tom... meeeeeeeee jerry... rompa puththi....//

  ok ok, cool athira! :))

  ReplyDelete
 39. அஸ்மா, எனக்காக இந்த மீனுக்கு ஆங்கில பேர் ஏதும் இருந்தால் கேட்டு சொல்லுங்கப்பா. இங்கே சைனீஸ் கடைதேன் இருக்கு. அங்க கேட்டுப்பாக்கறேன். இல்லைன்னா சைனீஸ் பேர் தெரிஞ்சாலும் சொல்லுங்க.

  ReplyDelete
 40. @ அன்னு...

  //எனக்காக இந்த மீனுக்கு ஆங்கில பேர் ஏதும் இருந்தால் கேட்டு சொல்லுங்கப்பா//

  இதை நாங்கள் தமிழ் கடைகளில் வாங்குவதால் அங்கு தமிழிலேயேதான் பெயர் போட்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் ஆங்கிலப்பெயர் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தால் கண்டிப்பா சொல்கிறேன் அனிஷா.

  அல்லது மேலே ஃபோட்டோவில் உள்ள மீனின் சாடையை (அதன் வாய், கண், வால், நிறம், விலா பக்கம் என்று) நன்கு பார்த்து தெரிந்துக்கொண்டால் ஈசியா வாங்கலாம் அனிஷா. அதற்குதான் முழு மீனை வச்சு க்ளிக் பண்ணினேன் :-)

  //இங்கே சைனீஸ் கடைதேன் இருக்கு. அங்க கேட்டுப்பாக்கறேன்//

  சைனீஸ் கடைகளிலும் கிடைக்கும் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். கேட்டுப்பாருங்கள். அங்குள்ள சைனீஸ் கடைகளில் import பண்ணினால் உங்களுக்கு லக்குதான்! :)

  //இல்லைன்னா சைனீஸ் பேர் தெரிஞ்சாலும் சொல்லுங்க//

  சைனீஸ் பெயர் போட்டிருந்தாலும் அதை எப்படிபா படிப்பது? :-) ஏதோ பாக்ஸ் பாக்ஸா வரைஞ்சு வச்ச மாதிரில்ல இருக்கும்..? :)) நீங்க இப்போ கண்டிப்பா சாப்பிடணும் அனிஷா. என்ன செய்ய..? :) சரி கவலைய விடுங்க, உங்களுக்கு ரிஜ்க் இருந்தா எப்படியோ கிடைச்சிடும் :-) இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!