அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 20 February 2011

ஃபாஸ்ட் ஃபுட் உணவினால் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம்!

அவரசகால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் அவசர பழக்க வழக்கங்களை பெரும்பாலும் பின்பற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறை குழந்தைகளையும் கூட ஆபத்தான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. இந்த‌ உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். நவீன வரவான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்க வழக்கத்தால் உடல்நலன் மிக விரைவில் பாதிக்கப்பட்டுவிடுகிறது.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான‌ நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக‌ குறிப்பிடப்பட்டுள்ள‌து. 



மேலும் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய், கேன்சர் போன்றவை இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியல் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது. ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறி உணவு உண்பதில்லை என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்ப்பதால் இரண்டாம்தர நீரிழிவு தாக்கும் அபாயம் உள்ளதாகவும் நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.

எனவே ஃபாஸ்ட் ஃபுட் (ஜங்க் ஃபுட்) உணவு வகைகளை தவிர்த்துவிட்டு இயற்கையான காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
(source: maalaimalar)

12 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நல்ல விழிப்புணர்வு பதிவு

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நல்ல விழிப்புணர்வு பதிவு//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் சுவை கண்ட நாக்கு சும்மா இருக்குமா .ரெண்டு நாளில் மறந்து போய் திரும்பவும் ஃபாஸ்ட் புட் ,டின் ஃபுட் பக்கமே அலையும் ..

    இதை விட்டு விட திட மனது வேனும் ..

    நோய்களை கண்டா பயமாதான் இருக்கு .. நோய் நொடி இல்லாததே உண்மையான செல்வம் :-)

    ReplyDelete
  4. @ ஜெய்லானி...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //நீங்க என்னதான் கரடியா கத்தினாலும் சுவை கண்ட நாக்கு சும்மா இருக்குமா//
    :))))

    //இதை விட்டு விட திட மனது வேனும்...//

    எப்போதாவது ஒருமுறை சாப்பிட்டால் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன். நீங்க சொல்வதுபோல் திட மனது இல்லாமல் :-) அதையே வழக்கமாக சாப்பிடுபவர்கள் பாதிக்கப்படுவது நிச்சயமே!

    //நோய் நொடி இல்லாததே உண்மையான செல்வம்// கண்டிப்பா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    இன்றைக்கு மக்களிடத்தில் விழிப்புணர்வு அதிகம் தேவை, என்னுடைய தளத்தில் பல விழிப்புணவு விசயங்களை கூறி வருகிறேன், அதை படித்து யாரவது ஒரு நபர் திருந்தினாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். இயற்கைக்கு மாறான பல பழக்க வழக்கங்கள் மனித சமுதாயத்தையே அழித்து விடும்.

    ReplyDelete
  6. @ இளம் தூயவன்...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //இன்றைக்கு மக்களிடத்தில் விழிப்புணர்வு அதிகம் தேவை, என்னுடைய தளத்தில் பல விழிப்புணவு விசயங்களை கூறி வருகிறேன், அதை படித்து யாரவது ஒரு நபர் திருந்தினாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்//

    நமக்கு தெரிந்த, படித்த ஒரு விஷயத்தை அனைவரின் நலனுக்காகவும் பகிர்ந்துக் கொள்ளும்போது நீங்கள் சொல்வதுபோல் யாராவது ஒருவர் அதனால் பயனடைந்தாலும் சந்தோஷம்தான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  7. பெரியவங்களாலேயே ஃபாஸ்ட் ஃபுட் மீதுள்ள ஆசையைக் குறைக்க முடியவில்லை... குழந்தைகளுக்காகவாவது தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்... குழந்தைகள் தம்மைப் பார்த்து தான் படிக்கிறார்கள் என்று ஆசையை அடக்க வேண்டும்..(என்னையும் சேர்த்துதான்..:( ஆனா என் நல்ல நேரம் என் மகனுக்கு பொரித்த உணவுகளைக் கூட கட்டாயப்படுத்தி ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுகிறான்) வயதுக்கு மீறின உடல் வளர்ச்சியோடு இருக்கும் பிள்ளைகளைப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் மீதுதான் கோபம் வருகிறது.நல்ல சிந்தனையூட்டும் பதிவு.

    ReplyDelete
  8. @ enrenrum16...

    //பெரியவங்களாலேயே ஃபாஸ்ட் ஃபுட் மீதுள்ள ஆசையைக் குறைக்க முடியவில்லை... குழந்தைகளுக்காகவாவது தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்...//

    ஆமா பானு, நாம அழைத்துச் சென்று பழக்கப்படுத்துவதால்தான் குழந்தைகளும் அதையே விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    //வயதுக்கு மீறின உடல் வளர்ச்சியோடு இருக்கும் பிள்ளைகளைப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் மீதுதான் கோபம் வருகிறது.நல்ல சிந்தனையூட்டும் பதிவு//

    சிலர் குடும்ப வாகினால்கூட வயதுக்கு மீறின உடல் வளர்ச்சியோடு இருப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இந்த உணவுமுறை மாற்றத்தினால் எல்லாம் தாறுமாறாகவே உள்ளது :( டிவி விளம்பரங்களும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டிவிடுகின்றன. நாமும் பிள்ளைகளுக்கு அதன் பின்விளைவை அவர்களுக்கு புரியும்படி சொல்லி வளர்ப்பது நல்லது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பானு!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,நலமா?
    மிகவும் நல்ல பதிவை போட்டுள்ளீர்கள்.
    இங்கே அரபியர்களின் உணவு எண்ணெய்,மசாலாக்கள் இல்லாத நல்ல ஆரோக்ய உணவு.ஆனால் அவர்களே...,இப்ப அதிகம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் மயக்கத்திற்க்கு ஆளாகி விட்டார்கள்.இதனால் அவர்களின் பிள்ளைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியோடு கானப்படுவதை பார்க்க முடிகின்றது.
    இங்கே ஸ்கூல்களிலெல்லாம் அதை பற்றி சொல்லி கொண்டுதான் இருக்கின்றார்கள்.அதை என் குழந்தைகளும் வந்து சொல்லி அதையெல்லாம் அவாய்டு பண்ணனும் என்று சொல்லும் போது நமக்கு பெருமையாக இருக்கின்றது.
    பயனுள்ள செய்திகளை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள் அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  10. எனக்கும் இதில் ரொம்பவே வருத்தம்.குழந்தைகள் சிப்ஸ் கொண்டு வருகிறது எனக்கும் வேனும் என்று குழந்தைகள் கேட்கையில் கஷ்டமாக தான் இருக்கு.நல்லதொரு பதிவு

    ReplyDelete
  11. @ apsara-illam...

    //அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,நலமா?//

    வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா! அல்ஹம்துலில்லாஹ்.. நலமே! நீங்க எப்படியிருக்கீங்க?

    //இங்கே அரபியர்களின் உணவு எண்ணெய்,மசாலாக்கள் இல்லாத நல்ல ஆரோக்ய உணவு. ஆனால் அவர்களே...,இப்ப அதிகம் இந்த ஃபாஸ்ட் ஃபுட் மயக்கத்திற்க்கு ஆளாகி விட்டார்கள்//

    உண்மைதான், இங்குள்ள அரபிய‌ர்களின் உணவுகளும் அப்படிதான் இருக்கும். எண்ணெய் என்றாலே பெரும்பாலும் ஆலிவ் ஆயில்தான் சேர்ப்பார்கள். பழக்கப்பட்ட சுவைக்கு மாற்றமான சுவையில் ஒரு உணவு கிடைக்கும்போது சுலபமாக அதற்கு மாறிவிடுவது எல்லோருக்குமே உண்டு அப்சரா. என்ன செய்ய.. அவசரத்திற்கு வேறு வழியில்லாமல் எப்போதாவது சாப்பிடுவது பரவாயில்லை. அதையே பழக்கமாக்கிக் கொள்ளும்போதுதான் ஆபத்தாகிறது.

    //அதை என் குழந்தைகளும் வந்து சொல்லி அதையெல்லாம் அவாய்டு பண்ணனும் என்று சொல்லும் போது நமக்கு பெருமையாக இருக்கின்றது//

    மாஷா அல்லாஹ், பிள்ளைகள் வளரும்போதே விழிப்புணர்வோடு இருப்பது சந்தோஷம் :) நன்றி அப்சரா!

    ReplyDelete
  12. @ தளிகா...

    //எனக்கும் இதில் ரொம்பவே வருத்தம்.குழந்தைகள் சிப்ஸ் கொண்டு வருகிறது எனக்கும் வேனும் என்று குழந்தைகள் கேட்கையில் கஷ்டமாக தான் இருக்கு//

    ஆமா தளிகா.. பொது இடங்களுக்கு போகும்போது என்னதான் நல்ல பண்டங்களை வீட்டில் செய்து எடுத்துச் சென்றாலும் குழந்தைகள் சில நேரங்களில் அப்படி கேட்பார்கள்தான். அதுபோன்ற சங்கடங்களால், இரக்கம் வந்து பிள்ளைகளுக்கு நாமும் வாங்கிக் கொடுத்து விடுவோம். ஆனா நாம் சொல்லி சொல்லி பழக்குவதால், ஒரு வயதில் அதையும்கூட அவாய்ட் பண்ணிக்கிற பக்குவமும் சில குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. வருகைக்கு நன்றி தளிகா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை