அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 25 March 2011

மஞ்சள் காமாலைக்கு பத்தியமில்லா மருந்து!

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் குளிர்காலத்தில் மக்கள் அனுபவித்த நோய்கள் குறைந்து, வழக்கம்போல் வேறுபல நோய்கள் உண்டாகும். நீர்க்கடுப்பு/எரிச்சல், அம்மை, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு என்று குறிப்பிட்ட சில நோய்கள் வருடாவருடம் வந்து மக்களை வாட்டி எடுக்கும். இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும் இயற்கை முறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப‌ நிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த‌ சிகிச்சை எடுத்தால் சுலபமாக குணப்படுத்திவிடலாம். அதற்கு இயற்கை முறையில் வீட்டிலேயே செய்துக்கொள்ளும் வைத்தியம் உள்ளது.  இதுபோல் ஆரம்ப நிலையில் சாப்பிட்டு பலரும் பலன் அடைந்துள்ளதால், எல்லோருக்கும் பயன்பட‌ அந்த வைத்திய முறையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

மஞ்சள் காமலையின் அறிகுறிகள்:

மஞ்சள் காமாலை ஏற்பட்ட‌வருக்கு ஆரம்பத்தில் பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, வயிறு உப்புசம் ஆகியவை இருக்கும். அதுபோன்று இருக்கும்போது அது சாதாரண செரிமான கோளாறுதான் என்று அலட்சியப்படுத்தினால்
 வயிற்றில் (வலதுபக்க மேல் பாகத்தில்) வலி, மூட்டுக்கு மூட்டு வலி, ஜுரம் போன்றவை தலைத்தூக்கும். உடலும் மெலிய ஆரம்பிக்கும். கண்ணின் வெள்ளை விழியிலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் மற்றும் வியர்வையிலும் மஞ்சள் நிறம் கலந்து வெளியாகும்.

சாதாரணமாகவே வெயில் காலங்களில் மஞ்சள் நிறம் கலந்து சிறுநீர் போனாலும், அதற்கும் காமாலை பாதித்த மஞ்சள்நிற சிறுநீருக்குமுள்ள‌ வித்தியாசத்தை சுலபமாக கண்டுபிடிக்கலாம். சுத்தமான ஒரு பஞ்சை எடுத்து சிறுநீரில் போட்டு, பிறகு அதன்மேல் தண்ணீர் ஊற்றினால் அது உஷ்ணத்தினால் சாதாரணமாக ஏற்பட்ட மஞ்சளாக இருக்குமேயானால் அந்த பஞ்சு மீண்டும் வெள்ளை நிறமாகிவிடும். மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட மஞ்சள் நிறமென்றால், தண்ணீர் ஊற்றினாலும் அந்த நிறம் போகாமல், மஞ்சள் நிறம் பஞ்சில் கறையாக பிடித்துக் கொள்ளும். லேபுக்கு போய் டெஸ்ட் பண்ணும்போதுகூட சில நேரங்களில் ஆரம்ப நிலையில் உள்ள காமாலையாக இருந்தால் நார்மல் என்றே ரிசல்ட் வரும். அப்போது இதுபோல் சுயபரிசோதனைச் செய்து பார்த்துக்கொண்டு, மீண்டும் ஓரிரு நாட்களில் லேப் டெஸ்ட் பண்ணிப் பார்க்க‌லாம். ஆனால் சிகிச்சை எடுக்கும் விஷயத்தில் அலட்சியப்படுத்தக் கூடாது.

மருந்து தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கடுக்காய் - 100 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
சுத்தமான பசுநெய் - 100 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பசுநெய் விட்டு அடுப்பில் வைத்து பிஞ்சு கடுக்காயை அதனுடன் சேர்த்து மெதுவான தீயில் பொரித்து எடுக்கவும். பிறகு அதே நெய்யில் பனங்கற்கண்டு போட்டு சிறிது நேரம் பொரியவிட்டு எடுக்கவும். இப்போது சுத்தமாக கழுவி காயவைத்த அம்மியில் (ஈரமில்லாத நிலையில்) வைத்து மைபோல் அரைத்து எடுக்கவும். அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்காமல் பொரிப்பதற்கு பயன்படுத்திய நெய்யை தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவேண்டும். நன்கு அரைந்தவுடன் கோகோ பட்டர் போன்று இருக்கும். அதை புளியங்கொட்டையைவிட சற்று பெரிய‌ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

மஞ்சள் காமாலை ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்பதை (ரத்தம், சிறுநீர் போன்ற) லேப் டெஸ்ட்டுகளுக்கு பிறகு உறுதியானால் உடனடியாக இந்த மருந்தை சாப்பிட்டு குணமடையலாம்(இன்ஷா அல்லாஹ்!). சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்போ இந்த உருண்டைகளில் 3 உருண்டைகள் வீதம் 3 வேளைக்கும் சாப்பிடவேண்டும். இவ்வாறு முதல் 5 நாட்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்து, காமாலையின் பாதிப்பு குறைந்து இருக்குமானால் அடுத்த 5 நாட்களுக்கு மீண்டும் சாப்பிடவேண்டும். கொஞ்சமும் குறையவில்லை என்றால் தகுந்த மருத்துவரை அணுகி உடனடியாக மற்ற வைத்தியங்களை மேற்கொள்ளவேண்டும். முன்னேற்றம் தெரிபவர்கள் தொடர்ந்து இதை 3 வாரங்களுக்கு சாப்பிட உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

பக்க விளைவு, பத்தியம் உண்டா? 

இந்த மருந்தில் எந்தவித பக்க விளைவும் கிடையாது. நெய் சேர்ப்பதாலும் பயப்பட தேவையில்லை. கலப்படமில்லாத சுத்தமான பசுநெய் மட்டுமே சேர்க்கவேண்டும். இந்த மருந்து சாப்பிடும்போது தயிர், பழைய சோறு(நீர்ச்சோறு) மட்டும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். காரணம் அவை இரண்டும் இந்த மருந்தின் பலனைத் தடுக்கும். அதுபோல் மருந்தின் பலனை முறிக்கும் உணவுகளான‌ பாகற்காய், அகத்திக் கீரையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மற்றபடி வேறெந்த பத்தியமும் இருக்கத் தேவையில்லை. திருப்திக்காக ஆங்கில மருந்துகளை சேர்த்து எடுத்துக் கொள்பவர்களும்கூட இந்த மருந்தையும் சேர்த்து சாப்பிடுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.

அதன் பலன்கள்:

இதை சாப்பிடுவதால் பசியின்மை, குமட்டல் குறைந்து, வாந்தியும் நிற்கும். நன்கு பசியும் எடுக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது வயிறு உப்புசம் நீங்கிவிடும். முற்றிலுமாக காமாலையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மஞ்சள் காமாலை பாதிக்காத மற்ற நேரங்களிலும்கூட‌ பசியிண்மை, குமட்டல், அஜீரண கோளாறுகளுக்கு இதை செய்து கொடுப்பார்கள்.

காமாலையில் பல விதங்கள் இருப்பதால் ஆங்கில வைத்திய முறையில் எல்லா விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை எடுக்க‌ முடியாது. ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும், ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ளும்படி டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் மேலே சொன்ன மருந்து எந்தவகை மஞ்சள் காமாலையாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு அருமையான மருந்தாகும். 'அது ஆரம்பநிலை கிடையாது, பாதித்து நாட்களாகிவிட்டது' என்று லேப் டெஸ்ட்டில் தெரிந்தால், உடனடியாக அதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் இது இயற்கை முறை வைத்தியமாக இருப்பதால் இந்த மருந்து மெதுவாகதான் வேலை செய்யும். அதேசமயம் பக்க விளைவின்றி முழுமையாக குணமாக்கும். ஆனால், ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டு காமாலையின் தீவிரம் அதிகமாகியவர்களுக்கு இதில் சீக்கிரம் நலன் தெரியாது என்பதால்தான் "ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு" என்று குறிப்பிட்டுள்ளேன். இது கைதேர்ந்த வைத்தியர் சொல்லிக் கொடுத்தது. அத்துடன் மஞ்சள் காமாலை உள்ளவர்களும், ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு குணமடைந்த‌வர்களும் தினமும் அன்னாசி பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

பொதுவாகவே "ஹெப்பாடைட்டிஸ் ஏ" (Hepatitis A) என்ற வைரசினால் உண்டாகும் மஞ்சள் காமாலைதான் இளம் வயதினரில் 80% பேருக்கு உண்டாவதால், ஒரு சில வாரங்களில் தானாகவே அது குணமாகிவிடும் என்று ஜூரம், வாந்தி, உடல்சோர்வுக்கு மட்டும் டாக்டர்கள் மருந்து கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அவசியப்படாது. ஆனால் மருந்து தேவைப்படாத அதுபோன்ற ஆரம்ப நிலையாக இருந்தாலும், காமாலை நீங்கி உடல் நலமான பிறகும்கூட, பாதிக்கப்பட்ட கல்லீரல் முழுமையாக குணம் அடைவதற்காக‌ இந்த மருந்தை தயாரித்து உட்கொள்ளும்படி இயற்கை முறை வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.

19 comments:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சமூக அக்கறையுள்ள சமகாலத்திற்கு தேவையான பதிவு

    நன்றி சகோதரி

    இறைவன் இதற்கான நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    கீழாநெல்லி, முள்ளங்கி, கடைந்த மோர், சுட்ட அப்பளம், எண்ணெய்-இது கண்ணால் கூட பார்க்க கூடாத சமாச்சாரம்.... என்றுதான் தெரியும்.

    ஆனால், இங்கே நீங்கள் சொல்லி இருப்பவை இதுவரை நான் அறிந்திராத புதிய மற்றும் எளிய வகை மருத்துவம்... மஞ்சள் காமாலைக்கு.

    புக்மார்க் செய்யப்படவேண்டிய பதிவு.
    மிக்க நன்றி சகோ.அஸ்மா.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் அக்கா

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


    கடுக்காய் மலச்சிக்கலுக்கு மெயின்னு தெரியும் இது புதுசா ஈஸியா தெரியுது . நினைவில் வைத்துக்கொள்கிறேன் யாருக்காவது பயன் படும்
    முக்கியமா சிக்கன் , மட்டன் வகைகள் சாப்பிடவே கூடாது

    சகோ ஆஷிக் ,மஞ்சள் காமாலைக்கு ஆயுர் வேத மருந்தில முதல் நெம்பர் கீழா நெல்லிக்கு தான். பச்சையா அப்படியேவும் சாப்பிடலாம் :-))

    ReplyDelete
  6. //இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும்//

    யூ ஏ இல விசா ரினுவலுக்காக மெடிகல் டெஸ்டில கண்டு பிடிச்சா விசா ரினுவல் கிடையாது .நேரே கான்சல்தான் . குணப்படுத்தி கிட்டு வாங்கங்கிற பேச்சே கிடையாது

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்.
    நல்லதொரு பகிர்வு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  9. @ தமிழ்த்தோட்டம்...

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  10. @ ஹைதர் அலி...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //இறைவன் இதற்கான நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக//

    தங்களின் துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ முஹம்மத் ஆஷிக்...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //கீழாநெல்லி, முள்ளங்கி, கடைந்த மோர், சுட்ட அப்பளம், எண்ணெய்..//

    கீழாநெல்லியும் மஞ்சள் காமாலைக்காக ரொம்ப காலமாக பயன்படுத்தப்படும் மருந்தல்லவா சகோ? :‍‍-) ஏதோ மறதியாக சொல்கிறீர்கள்னு நினைக்கிறேன், பரவாயில்லை.

    //புக்மார்க் செய்யப்படவேண்டிய பதிவு//

    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  12. @ சிநேகிதி...

    எப்போ வந்தீங்க ஃபாயிஜா? நலமா? வருகைக்கு நன்றி ஃபாயிஜா.

    ReplyDelete
  13. @ ஜெய்லானி...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //முக்கியமா சிக்கன், மட்டன் வகைகள் சாப்பிடவே கூடாது//

    இந்த மருந்து சாப்பிடும்போது மருந்தை முறிக்கும் உணவுகளைத் தவிர மற்ற எந்த உணவையும் அளவோடு சாப்பிடலாம் என்றும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்வது மற்ற ட்ரீட்மெண்ட் எடுக்கும்போதுதான் என்றும் வைத்தியர்கள் சொல்வார்கள் சகோ.

    //சகோ ஆஷிக் ,மஞ்சள் காமாலைக்கு ஆயுர் வேத மருந்தில முதல் நெம்பர் கீழா நெல்லிக்கு தான்//

    ஆமா சகோ, கீழாநெல்லியும் நல்ல மருந்துதான். நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ அந்நியன் 2...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  15. @ ஜெய்லானி...

    //யூ ஏ இல விசா ரினுவலுக்காக மெடிகல் டெஸ்டில கண்டு பிடிச்சா விசா ரினுவல் கிடையாது .நேரே கான்சல்தான் . குணப்படுத்தி கிட்டு வாங்கங்கிற பேச்சே கிடையாது//

    அப்படியா..? அவர்களிடமெல்லாம் போய் இயற்கை முறை வைத்தியர்களின் டயலாக்கை சொல்லமுடியுமா என்ன? விரட்டிதான் விடுவார்கள் :-)

    ReplyDelete
  16. @ ஆயிஷா அபுல்...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,மிகவும் விரிவான முறையில் நல்ல பயனுள்ள பதிவு எழுதியிருக்கீங்க...
    வைத்தியமுறையும் புதிதாக உள்ளது.எனக்கு தெரிந்து எங்கள் ஊர் பகுதியில் மஞ்சள் காமாலை என்றவுடனேயே பத்தியத்தோடு பறவையில் போய் சோறு வாங்கி சாப்பிடணும் என்பார்கள்.அதை நான் இது வரை பார்த்ததும் கிடையாது.என்ன மருந்து கலந்தது என்றும் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டதுதான்...
    இனி இந்த பயனுள்ள தகவலை,மருந்தின் செய்முறையை மனதில் சேகரித்து கொள்ள வேண்டியதுதான்.... நிறைய பேருக்கு பயன்படும்படி சொல்லலாம் அல்லவா...?
    நல்ல பகிர்வுக்கு மிக மிக நன்றி அஸ்மா..

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  18. @ apsara-illam...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!

    //எனக்கு தெரிந்து எங்கள் ஊர் பகுதியில் மஞ்சள் காமாலை என்றவுடனேயே பத்தியத்தோடு பறவையில் போய் சோறு வாங்கி சாப்பிடணும் என்பார்கள்.அதை நான் இது வரை பார்த்ததும் கிடையாது.என்ன மருந்து கலந்தது என்றும் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டதுதான்...//

    ஆமா அப்சரா, பரவையில்தான் மருந்துசோறு வாங்கி சாப்பிடுவார்கள். ஏதோ பச்சிளையை நறுக்கி சோற்றுடன் சேர்த்து(வேறு என்ன சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை) பச்சை கலரில் ஒரு ஆப்பை அளவு கொடுப்பார்கள். சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்குமாம். அவர்கள் சொல்லும் நாட்களுக்கு(2,3 முறை) செல்லவேண்டும். பத்தியம் நிறைய சொல்வார்கள். முக்கியமா முட்டை, கோழி தொடவே கூடாது. நாங்களும் முன்பு அதுபோல் அங்கு போய் இருக்கோம். மஞ்சள் காமாலை அதிகமாகிவிட்டால் வேறு மருந்துகளுக்கு அது பெட்டர்தான்!

    //இனி இந்த பயனுள்ள தகவலை,மருந்தின் செய்முறையை மனதில் சேகரித்து கொள்ள வேண்டியதுதான்.... நிறைய பேருக்கு பயன்படும்படி சொல்லலாம் அல்லவா...?//

    நிச்சயம் சொல்லலாம். பதிவில் சொன்னதுபோல், ஆரம்ப நிலைதானா என்று மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி அப்சரா!

    ReplyDelete
  19. பயனுள்ள பாதை வலைத்தள அமைப்பாளருக்கு அன்புடன் அஸ்ஸலாமு அலைக்கும்! பெட்டகம் (pettagum) என்கிற எனது வலைப்பதிவையும் தங்களின் பிளாக்கில் இணைத்தால் வாசகர்கள் பயன் பெறுவார்கள். நன்றி அன்புடன் முஹம்மது அலி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை