அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 8 May 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 3)

முதல் பாகத்தைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.
இரண்டாம் பாகத்தை இங்கே காணவும்.




1. இப்போது நடு பாகத்தில் இரட்டை கலரில் வரும் 20 வரிகள் கொண்ட பின்னல்களின் சரி பாதி நடுவிலுள்ள 2 வரிகளின் ஓர சோவிகளை எடுத்து இணைத்து ஒரு சோவி போடவும். அதாவது அந்த 2 வரிகளுக்கு ஒவ்வொரு பக்கமும் தலா 9, 9 வரிகள் இருக்கும்படி விட்டுவிட்டு நடுவிலுள்ள சோவிகள் இரண்டையும் இணைக்கவேண்டும்.(புரியாவிட்டால் மீண்டும் படிக்கவும் அல்லது பின்னூட்டத்தில் கேட்கலாம்)

2. அடுத்து, இணைத்த பிறகு வந்த புதிய சோவியை வலது பக்க சோவியுடனும் இடது பக்க சோவியுடனும் "V" வடிவத்தில் இணைத்துக் கொண்டே வரவும்.






இப்போது "V" வடிவத்தில் இணைத்து வந்த சோவிகள் இவ்வாறு நடுவில் கட்டமாக வந்திருக்கும். (அடிப்பாகமும் லேசான‌ 
"V" வடிவத்தில் வளைந்திருக்கும்). அடுத்து, அந்த (மஞ்சள்) கட்டத்தின் இரு பக்கங்களிலும் உள்ள (பின்னப்படாத‌)புளூ ஒயர்களும் அந்த மஞ்சள் ஒயர்களும் "X" வடிவில் இருக்கும். அவற்றை இணைத்து சோவிகள் பின்னவும்.






1. மஞ்சள் நிற கட்டத்திற்கு இரு பக்கமும் இப்போது இரட்டை கலரில் வந்துள்ள ஒயர்களை இணைத்து பின்னும்போது புளூ நிற கட்டம் உருவாகும். இதேபோன்று கூடையின் இரண்டு பக்கங்களும் பின்னவும்.

2. பின்னிய இரண்டு பக்கங்களையும் படத்தில் காட்டியுள்ளபடி இணைத்து 
ரு சோவி பின்ன‌வும். (கவனிக்க: புளூ ஒயர்களை ஏற்கனவே கூடையின் உள்பக்கம் சொருகிவிட்டதால், இப்போது 2 பக்கங்களையும் இணைக்கும்போது இரட்டை கலரின் ஒயர்கள் இணைந்து மஞ்சள் நிற சோவி உருவாகியுள்ளது)


3. அப்படியே அந்த மஞ்சள் நிற ஒயர்களைத் தொடர்ந்து பின்னும்போது, படத்தில் காட்டியுள்ளதுபோல் மடிந்துவரும். ஏனெனில் அந்தப் பகுதி ஸ்டார் கூடையின் கூர்மையான‌ ஓரப் பகுதியாகும்.






1. இப்போது கூடையின் அடிப்பாகம் இவ்வாறு டைமண்ட் ஷேப்பில் வந்திருக்கும்.


2. ஓரப் பகுதிகளையும் பின்னி முடித்த பிறகு கூடையின் பின்னல்கள் நிறைவடைந்தது.

3. கூடையை பக்கவாட்டில் பார்த்தால் இவ்வாறு இருக்கும். அதுதான் சரியான வடிவம்.







1. அடுத்ததாக, பின்னி முடித்த எல்லா ஒயர்களையும் உள்பக்கமாக சொருக வேண்டும்.

2. ஒரு சோவியில் 2 ஒயர்கள் வீதம் "X" வடிவில், அந்தந்த ஒயர்களின் நேர் வரிசையில் சொருகவேண்டும். அதாவது இடது பக்க ஒயர்களுக்கு வலது பக்கமாகவும், வலது பக்க ஒயர்களுக்கு இடது பக்கமாகவும் நேர் வரிசை வரும். அதனால்தான் "X" வடிவில் சொருகும்படி இருக்கும். 

3. தொடர்ந்து 10 சோவிகளுக்கு உள்ளே எல்லா ஒயர்களையும் இவ்வாறு சொருகி முடிக்கவும்.







1. இப்போது மீதியுள்ள ஒயர்களை ஒரே அளவில் வெட்டி எடுக்கவும்.

2. சொருகி முடித்த ஸ்டார் 
ஒயர் கூடை ரெடி! அடுத்த பாகத்தில் கூடைக்கான கைப்பிடி பின்னும் முறையைக் காணலாம்.


(...இறைவன் நாடினால்)

33 comments:

  1. வாவ்வ்வ் அஸ்மா ரொம்ப அழகா இருக்கு கூடை.விளக்கமாவும் சொல்லிருக்கீங்க ஆனா எனக்குதான் புரியல..ஒருவேளை பின்னி பார்க்கும்போது புரியும்னு நினைக்கிறேன்.

    அந்தந்த கலர் எத்தனை பண்டல் ஆந்து இந்த கூடை பின்னுவதற்க்கு..ஏன்னா யாராவது போனா வாங்கிட்டு வரசொல்றதுக்குதான்.எனக்கு ரொம்பநாளா இந்த கூடை பின்ன ஆசை.கைப்பிடிகூட பின்னுவேன் ஆனா மறந்துப்போச்சு,அதனால் உங்க அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

    ReplyDelete
  2. சூப்பர் அஸ்மா,
    கலக்கலா இருக்கு, கலர் காம்பினேஷன் சூப்பர்,21

    ReplyDelete
  3. @ S.Menaga...

    //விளக்கமாவும் சொல்லிருக்கீங்க ஆனா எனக்குதான் புரியல..ஒருவேளை பின்னி பார்க்கும்போது புரியும்னு நினைக்கிறேன்//

    இதுபோன்ற க்ராஃப்ட் செய்முறைகளை சில நேரங்களில் ஒன்றுக்கு பல தடவை படித்து, படத்தையும் பார்த்தால்தான் புரியும் மேனகா :) அதனால் பொறுமையா மீண்டும் பாருங்கள், நிச்சயம் புரியும். எந்த இடத்தில் புரியவில்லையோ அதை கேளுங்கள், மீண்டும் சொல்லித் தருகிறேன். சரியா? பின்ன ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சகஜமாக வந்துவிடும் :)

    //அந்தந்த கலர் எத்தனை பண்டல் ஆந்து இந்த கூடை பின்னுவதற்க்கு..//

    இதன் முதல் பகுதியில் "தேவையான பொருட்களி"ல் சொல்லியுள்ளதுபோல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பண்டல் போதும் மேனகா.

    //கைப்பிடிகூட பின்னுவேன் ஆனா மறந்துப்போச்சு,அதனால் உங்க அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..//

    கைப்பிடி ஃபோட்டோவும் ரெடியா இருக்கு. விரைவில் போடுகிறேன். வருகைக்கு நன்றி மேனகா. உங்களுக்கு மெயில் பண்ணியுள்ளேன், பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. Ethoda adipagam perisa venumuna evalavu wire nelam cut pananum

      Delete
    2. Ethoda adipagam perisa venumuna evalavu wire nelam cut pananum

      Delete
    3. pudi poda solithanga

      Delete
  4. @ Jaleela Kamal...

    //சூப்பர் அஸ்மா,
    கலக்கலா இருக்கு, கலர் காம்பினேஷன் சூப்பர்,21//

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜலீலாக்கா.
    //சூப்பர்,21// அப்படின்னா என்ன ஜலீலாக்கா?

    ReplyDelete
  5. கூடை அழகா இருக்குங்க அஸ்மா.நார்மல் கூடைதான் பின்னியிருக்கிறேன்..இந்த ஸ்டார் கூடை,கலர்ஃபுல்லா க்யூட்டா இருக்கு. :)

    ReplyDelete
  6. @ Mahi...

    //கூடை அழகா இருக்குங்க அஸ்மா// நன்றி மஹி!

    //நார்மல் கூடைதான் பின்னியிருக்கிறேன்..இந்த ஸ்டார் கூடை,கலர்ஃபுல்லா க்யூட்டா இருக்கு. :)//வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றிகள் :)

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    எனக்கு வழக்கமான கூடைதான் பின்ன தெரியும்
    ஸ்டார் கூடை பின்னியது இல்லை
    இதைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்

    நான் யார் என்று தெரிகிறதா?

    வலையுகத்தின் சொந்தக்காரி

    ReplyDelete
  8. @ ரஹ்மத் நிஸா...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வாங்க ரஹ்மத், முதன்முதலாக வருகைத் தந்திருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம் :) நேற்றிலிருந்து ப்ளாக் ஓபன் பண்ண முடியாமல், இன்று உங்களுக்கு பதில் கொடுக்கலாம் என்று வந்தால் உங்களின் கமெண்ட்டையே காணோம். என்ன மாயமோ, அந்த இறைவனுக்குதான் தெரியும். இப்போ மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி :)

    //எனக்கு வழக்கமான கூடைதான் பின்ன தெரியும்
    ஸ்டார் கூடை பின்னியது இல்லை
    இதைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்//

    இன்ஷா அல்லாஹ் நிச்சயமா பின்னிப் பாருங்கள். நல்ல இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்.

    //நான் யார் என்று தெரிகிறதா?

    வலையுகத்தின் சொந்தக்காரி//

    அப்போ மிஸஸ். வலையுகம்னு சொல்லுங்க :))) சந்தோஷம் ரஹ்மத், இனி தொடர்ந்து வாங்க. வருகைக்கு மிக்க‌ நன்றி!

    ReplyDelete
  9. sumathisukumar3 June 2011 at 14:50

    தோழி அஸ்மா,மிக அழகு கூடை,உடனே பின்னப் போகிறேன்.ஆனா கைப்பிடி போட தெரியாதே,சொல்லித்தர்றீங்களா.ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.எனது யிமெயில் suminathan19@gmail.com

    ReplyDelete
  10. @ sumathisukumar...

    //தோழி அஸ்மா,மிக அழகு கூடை,உடனே பின்னப் போகிறேன்.ஆனா கைப்பிடி போட தெரியாதே,சொல்லித்தர்றீங்களா.ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்//

    கைப்பிடி பின்னுவதும் விரைவில் சொல்லித் தர்றேன்பா. அதுவரை கூடையை பின்ன ஆரம்பியுங்கள். வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  11. i am very like it this koodai,aasmaa aunt.it's really very super.one request pls ask basic koodai making pa

    ReplyDelete
  12. @ sleelanitin...

    //i am very like it this koodai,aasmaa aunt.it's really very super.one request pls ask basic koodai making pa//

    'பேசிக் கூடை' ரொம்ப ஈசிதான். நிறைய பேருக்கு அது தெரியும் என்பதால்தான் 'ஸ்டார் கூடை' பின்னும் முறை கொடுத்தேன். இதில் கைப்பிடி பின்னும் முறையை ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்து ரெடியாக உள்ளது. அதைக் கொடுத்துவிட்டு பிறகு உங்களுக்கு 'பேசிக் கூடை' சொல்லித்தர முயற்சி செய்கிறேன், சரியா? அப்புறம் பெயரை ரொம்ப நீளமாக்கிட்டீங்களே? aasmaa இல்லபா, asma தான் :) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  13. ok aunt,i am waiting.

    ReplyDelete
  14. hi asma aunt, iam waiting for basic koodai

    ReplyDelete
  15. @ sleelanitin...

    //hi asma aunt, iam waiting for basic koodai//

    அதற்கான ஒயரும் இப்போதைக்கு கைவசம் இல்லை. உங்களுக்காக இனி வரவழைக்கிறேன் :)

    ReplyDelete
  16. akka unka age thariyathu athanala unkala eppadi kupputanu thariyala
    ipothaikku akka ok va...........
    ennutaiya age 19 akka.....
    nalla irukku akka anna annakkuthan onnu puriyala akka
    akka ennakka kutai pinnuvathu eppadinu videova ennutaya emailukku annupurinkala
    pleesssssssssssssssssssssssssssssssssssssssssssssssss........
    rompa arvam akka enna annka vittula kutai vayru irukku
    but athu nan vankala akka .......
    ennutaya sister vankinathu
    oru varama kutai saiya computerla thati parthan
    unnaka apsitela irunthathu but sariya buriyala
    ennakku yaravuthu burium bati sollithantha kathubban
    ennakku tharinthavanka yarum illa
    video anupiringala
    konjam helpa irukkum
    akka plesssssssssssssss help meeeeeeeeeeeeeeee

    MY ID ::: varashanetcafe@gmail.com
    elizabethe62@gmail.com

    plessssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss..........................................

    ReplyDelete
  17. Assalamualaikum Akka... Alhamdulilah ur blog s soo nice and we really felt like we visited the Makkah.. Jazakallahu khair u shared ur experience with us which s soo exciting One :) and my periyama ( ur machi) eyes filled with tears on reading ur experience... By Shereen. Wassalam

    ReplyDelete
  18. Hi asma ji!
    can you pls post the basic rectangular koodai technique ? If possible please add small small videos in making it. it ll be easier to learn.
    one more doubt pls. for each line or row a new running line will come or the running line never ends till the finish ? if i cut the wire as per ur instruction can I be able to create a regular rectangular koodai ?

    ReplyDelete
  19. Hai asma ji!
    First of all thank you very much and hats off to u for teaching all of us. cos even in you tube or any other site doesnt have koodai pinnal techniques. i cant say that i understood fully but i already have a small experience so i hope that when i start i ll come to know it. can u pls pls pls post the regular rectangular koodai ? if i cut the wires as per ur instruction above, can i create the basic rectangular koodai or the measurements vary ? i reuest you to add small small videos so that we can learn them easily.

    ReplyDelete
  20. Nan koodai try panni parthen romba alaga vandhuruku. Vera model koodai eathavathu therinja post pannunga pls. Unga sevaiku mikka nanri.

    ReplyDelete
  21. Hi........ normal koodai pinnuvathu eppdi nu sollunga please

    ReplyDelete
  22. Hi............ normal koodai pinnuvathu eppadi nu sollunga please

    ReplyDelete
  23. pillow yappadi pandradhunu solunga plz

    ReplyDelete
  24. Can you please post a detailed video for the wire koodai demo?

    ReplyDelete
  25. Enaku innum vera ethavathu kathu kudunga please

    ReplyDelete
  26. I'm kavitha.pls basic koodai solli kodunga

    ReplyDelete
  27. Hi aunty canu post the sivan kan koodai making....

    ReplyDelete
  28. Hi
    I am P.Raja from Andaman & NIcobar Islands.
    I am running a retail Shop here "RAMANI FANCY STORE"
    I want "Wire Koodai" for my shop in Wholesale.
    If u interest please contact : 09476051050

    ReplyDelete
  29. Hi
    நான் வாங்கவும் கற்கவும் விரும்புகிறேன்.
    நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை