அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 2 July 2011

நண்டு முருங்கைக்காய் குருமா


தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
அரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு
இஞ்சி பூண்டு - 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு ஜீரகத்தூள் - 3 ஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் ‍ - 6 ஸ்பூன்
உப்பு - தேவையானது




முருங்கைக்காய் பெரியது - 1
வெங்காயம் பெரியது - 1
தக்காளி - 1
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து



செய்முறை:



சுத்தம் செய்த நண்டுகளுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டும் சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு ஜீரகத்தூள், கறி மசாலாத்தூள், மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌வேண்டும்.



பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறிய ப. மிளகாயை தாளித்து, கால் பகுதி வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துப் போட்டு தாளிக்கவும்.



வெங்காயம் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.





பிறகு மீதியுள்ள 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, அரிந்த தக்காளியையும் மீதியுள்ள வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.


தக்காளி, வெங்காயம் குழைந்து வரும்போது பிரட்டி வைத்துள்ள நண்டு மசாலாவைக் கொட்டி வதக்கி, 3/4 டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும்.


பிறகு நறுக்கிய முருங்கைக்காயை நீளவாக்கில் கீறிவிட்டு அத்துடன் சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் மட்டும் மீண்டும் மூடிபோட்டு வைக்கவும். (அதிக நேரம் வைத்தால் முருங்கைக்காய் பழுத்துவிடும்)


இப்போது முருங்கைக்காய் வெந்துவிட்டதை உறுத்தி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டிவிட்டு, சுமார் 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க‌வும்.


சுவையான, சத்து நிறைந்த‌ நண்டு முருங்கைக்காய் குருமா தயார்! சூடாக(வோ ஆறியோ கூட) பரிமாற சுவையாக இருக்கும்.

டிப்ஸ்: நண்டு சமைக்கும்போது அதன் கால்களை வெயிட்டான கரண்டி போன்ற பொருளால் மேல் தோடு உடையுமளவு தட்டிவிட்டு அல்லது Nut Cutter கொண்டு மெதுவாக உடைத்துவிட்டு சமைத்தால், அதன் உள்ளே மசாலாவின் சுவை நன்கு ஏறும். சாப்பிடும்போதும் சுலபமாக இருக்கும்.

14 comments:

  1. Wow.. it's delicious!! Thanks for sharing your yummy recipes with us.

    ReplyDelete
  2. @ Malar...

    //Wow.. it's delicious!! Thanks for sharing your yummy recipes with us//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. மலர்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நண்டு சாப்பிடுவதற்கு முன் சுன்னத் வால் ஜமாத் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் சட்ட திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

    ஆமா நீங்க ஷாபியா,ஹனபியா
    ஷாபியாக இருந்தால் நீங்கள் நண்டு சாப்பிடலாம் ஹனபியாக இருந்தால் மக்ரூஹ்.

    அப்புறம் ஷாபி வீட்டுக்கு விருந்துக்கு ஹனபி போனால் சாப்பிடலாம் அது விதிவிலக்கு.

    எப்படி எங்க சட்டதிட்டம் என்ன சிரிப்பு வருதா

    உண்மையில் இது மத்ஹபு சட்டமுங்க

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நான் ஊரில் இருக்கும் போதே இப்பதிவை நீங்கள் எழுதியிருக்கலாம்.ம்ம்

    எங்க வீட்டுக்காரம்மா வளர்க்கும் தோட்டத்தில் கொத்து கொத்தாய் முருங்கை காய்த்து தொங்கியது

    இரமேஸ்வரத்திலிருந்து பிரஸ் நண்டு எங்க ஊருக்கு வந்து இறங்கும் இரண்டையும் கலந்து சாப்பிட்டு இருப்பேன் போச்சு போச்சு.

    ReplyDelete
  5. @ ஹைதர் அலி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //நண்டு சாப்பிடுவதற்கு முன் சுன்னத் வால் ஜமாத் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் சட்ட திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்//

    தெரிஞ்சிக்கலாமே, சொல்லுங்க சகோ.

    //ஆமா நீங்க ஷாபியா,ஹனபியா
    ஷாபியாக இருந்தால் நீங்கள் நண்டு சாப்பிடலாம் ஹனபியாக இருந்தால் மக்ரூஹ்//

    நான் ஷாஃபியுமில்ல, ஹனஃபியுமில்லயே...? அப்போ அதுக்கு என்ன சட்டம் சகோ...? :-)

    //அப்புறம் ஷாபி வீட்டுக்கு விருந்துக்கு ஹனபி போனால் சாப்பிடலாம் அது விதிவிலக்கு//

    இதுதான் சட்டத்துல ஓட்டை என்பதோ..? எப்படியோ நண்டு சாப்பிட 'ஹனஃபி'ன்னு சொல்லிக்கிறவங்களுக்கு இது ஒரு சான்ஸ் :))

    //எப்படி எங்க சட்டதிட்டம் என்ன சிரிப்பு வருதா

    உண்மையில் இது மத்ஹபு சட்டமுங்க//

    அதானே பார்த்தேன்... இஸ்லாமிய சட்டமெல்லாம் இப்படி இருக்காதே என்று நானும் யோசிச்சேன். மத்ஹபு சட்டம்தானா இது...? :))) சுன்னத் ஜமாஅத் மட்டுமில்ல சகோ, 'தப்லீக் ஜமாஅத்'தும் இதை ஃபாலோ பண்ணுகிறார்கள். குர்ஆன் ஹதீஸை நேரடியாக பின்பற்றாதவரை இந்த அவலம்தான் :(

    நன்றி சகோ.

    ReplyDelete
  6. @ ஹைதர் அலி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //நான் ஊரில் இருக்கும் போதே இப்பதிவை நீங்கள் எழுதியிருக்கலாம்.ம்ம்//

    :))

    //எங்க வீட்டுக்காரம்மா வளர்க்கும் தோட்டத்தில் கொத்து கொத்தாய் முருங்கை காய்த்து தொங்கியது

    இரமேஸ்வரத்திலிருந்து பிரஸ் நண்டு எங்க ஊருக்கு வந்து இறங்கும் இரண்டையும் கலந்து சாப்பிட்டு இருப்பேன் போச்சு போச்சு//

    :))) சவூதி நண்டில் செய்து சாப்பிட்டு பாருங்க, அதுவும் நல்லாதான் இருக்கும் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  7. நண்டு குழம்பில் முருங்கைக்காய் போட்டால் மணம் ஊரைக்கூட்டுமே..படமே நாவூரச்செய்துவிட்டது அஸ்மா

    ReplyDelete
  8. @ ஸாதிகா...

    //நண்டு குழம்பில் முருங்கைக்காய் போட்டால் மணம் ஊரைக்கூட்டுமே..படமே நாவூரச்செய்துவிட்டது அஸ்மா//

    இதன் சுவையையும் மணத்தையும் அழகா வர்ணித்துள்ளீர்கள் ஸாதிகா அக்கா :) மிகச் சரியான வர்ணனைதான் :) நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  9. இதை சாப்பிட்டு 4 நாள்தான் ஆகுது . திரும்ப சாப்பிடமுன்னா ஊருக்குதான் போகனும் .அவ்வ்வ்வ்

    ReplyDelete
  10. @ ஜெய்லானி...

    //இதை சாப்பிட்டு 4 நாள்தான் ஆகுது . திரும்ப சாப்பிடமுன்னா ஊருக்குதான் போகனும் .அவ்வ்வ்வ்//

    ஊரிலிருந்து வந்தாச்சா சகோ? வெல்கம் பேக்! இப்பதானே இதை சாப்பிட்டீங்க.. அப்போ அடுத்த வகேஷனில் சாப்பிட்டுக்கலாம் :))

    ReplyDelete
  11. bat has left a comment on your post "நண்டு முருங்கைக்காய் குருமா":

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல சமயத்தில் இந்த குர்மா பதிவு போட்டீர்கள் போங்க இங்கு ( Muscat ) இப்போ temperature 49.5 C சும்மா சொல்லகூடாது குர்மா நல்ல சுவையாக இருந்தது உங்களின் ரெசிபி நன்றாக இருந்தது ஒரு சிறிய மாற்றத்துடன் செய்தோம் தேன்காயிக்கு பதிலாக பாதாம் பால் சேர்த்தோம் உங்களது டிப்ஸ் யில் இதையும் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  12. @ bat...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம்.

    //சும்மா சொல்லகூடாது குர்மா நல்ல சுவையாக இருந்தது உங்களின் ரெசிபி நன்றாக இருந்தது ஒரு சிறிய மாற்றத்துடன் செய்தோம் தேன்காயிக்கு பதிலாக பாதாம் பால் சேர்த்தோம் உங்களது டிப்ஸ் யில் இதையும் சேர்த்திருக்கலாம்//

    தேங்காய்க்கு பதிலாக பாதாம் பாலோ அல்லது அரைத்த பாதாம் பேஸ்ட்டோ கூட சேர்க்கலாம். தங்களின் டிப்ஸுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  13. ஆஹா! படம் பார்க்கவே நாவூறுதே. நண்டு சாப்பிட்டு 2 வருஷம் ஆகுது. ;(

    எங்க பக்கம் நண்டுக்கறி இறக்கும் முன்னாடி முருங்கைக் கீரை சேர்ப்போம். அதுல குழம்பு சிக்கி இருக்கும் சுவையே தனி. முருங்கைக்காய் சேர்த்துச் சாப்பிட்டது இல்லை.

    ReplyDelete
  14. @ இமா...

    //ஆஹா! படம் பார்க்கவே நாவூறுதே. நண்டு சாப்பிட்டு 2 வருஷம் ஆகுது. ;(//

    இங்க வந்துடுங்க இமா, அடிக்கடி சாப்பிடலாம் :)

    //எங்க பக்கம் நண்டுக்கறி இறக்கும் முன்னாடி முருங்கைக் கீரை சேர்ப்போம். அதுல குழம்பு சிக்கி இருக்கும் சுவையே தனி. முருங்கைக்காய் சேர்த்துச் சாப்பிட்டது இல்லை//

    அப்படியா..? ஒருநாள் உங்க முறையிலும் செய்து பார்த்துடுவோம் ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை