அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 10 July 2011

கோடை விடுமுறைக் கொண்டாட்டம்!


சென்ற வாரம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமானது. வருடம் முழுவதிலும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 15 நாட்கள் என இங்கே பள்ளி விடுமுறை விடப்பட்டாலும், இந்த கோடை விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு அது ஸ்பெஷல் கொண்டாட்டம்தான்!

விடுமுறை ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் நடக்கும் ஃபங்ஷனுக்கு, விரும்பியவர்கள் ஏதாவது பலகாரமோ, கேக் வகைகளோ செய்து எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி எல்லோரும் சமைத்து எடுத்துச் செல்லும் உணவுகளைக் கொண்டு ஒரு Buffet உருவாக்கி, அதில் பள்ளி சார்பில் கூல் ட்ரிங்ஸ், சாக்லேட்ஸ் போன்றவற்றையும் வைத்து, குழந்தைகளின் விளையாட்டுப் போட்டிகள் முடிந்தவுடன் அந்த Buffet ல் சென்று சாப்பிடுவோம். ஆனால் இந்த Buffet முறையில் உணவுகள் அதிக அளவில் வீண்விரயமாகும். மக்கள் தங்களுக்கு இஷ்டப்பட்டதை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதால், பார்க்கும் உணவுகளையெல்லாம் ப்ளேட்டில் அள்ளி வைத்துக் கொண்டு, அதில் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே தட்டுடன் தூக்கி எறிந்துவிட்டு, சிறிது நேரத்தில் இன்னொரு தட்டில் வேறு எதையாவது அள்ளிக்கொண்டு வருவார்கள். விருந்தாளிகளோடு விருந்தாளிகளாக இருக்கும் நாமும் எதையும் சொல்ல முடியாத நிலையில், எல்லாம் முடிந்த பிறகு வகுப்பு ஆசிரியையிடம் மட்டும் (சென்ற முறை) ஒரு சிறிய புகாரை வைத்துவிட்டு வந்தோம். இந்த வருடம் இதற்காக அறிவிப்பு செய்தபோதே உணவுகள் விரயமாவதை மீண்டும் நினைவுபடுத்தி, நம் புகாரை புதுப்பித்து வைத்ததில் இந்த முறை Buffet ன் நிலமை தலைகீழானது. உணவை வீணாக்கியவர்களுக்கும் நமக்கும் சேர்த்தே வைத்தார்கள் ஆப்பு :))





உள்ளே நுழைந்தவுடன் Buffet 0.50 € என போர்டு போட்டிருந்தார்கள். அதிலும் எப்போதும்போல் இஷ்டத்துக்கு சாப்பிட முடியாதபடி, 0.50 € வாங்கிக் கொண்டு கேட்கும் உணவை தட்டில் வைத்துக் கொடுக்க ஆட்கள் போட்டிருந்தார்கள். இருந்தாலும் மக்கள் சளைப்பார்களா என்ன..?


ஆரம்பத்தில் ஈ ஓட்டிக் கொண்டிருந்த Buffet கவனிப்பார்களுக்கு போகப்போக வியாபரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது :) வியாபாரம் ஒருபக்கம் ஜரூராக நடந்துக் கொண்டிருக்க ஆங்காங்கே ஒரு சிறிய அதிருப்தியுடன் மக்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் Buffet யில் ஏதாவது வாங்குவோமே என்று சென்ற பிறகுதான் மக்களின் அதிருப்தி என்னவென்று எங்களுக்கும் புரிந்தது :) ஒருமுறை வாங்கும் பொருட்கள் 0.50€ க்கு ஒரு பீஸ் மட்டும்தான் , வேறு வகை உணவு வேண்டுமென்றால் அடுத்த 0.50€ என்றார்கள். அடப் பாவமே! 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதற்கு நீங்களும் உணவுகள் கொண்டு வாருங்கள்' என்று சொல்லிவிட்டு எங்களுக்கே இத்தனை கண்டிஷனா? ன்னு இதுக்குதான் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் :) 5 € கட்டியவர்களுக்கு அட்டை ஒன்று வழங்கப்பட்டு விளையாட்டிலும் பங்கு பெற்றுக் கொண்டு 3 முறை சாப்பிடலாம் என்று வைத்திருந்தார்கள். சில ஊர்களில் நோன்புக் கஞ்சி வாங்க அட்டை கொடுத்திருப்பார்கள். அதுபோல அட்டையைக் காட்டினால், அதில் டிக் பண்ணிக்கொண்டு கொடுத்தது வித்தியாசமாக இருந்தது.


உணவு எடுத்து வந்தவர்கள், எடுத்து வராதவர்கள் எல்லோருக்கும் ஒரே நிலைதான்! அந்த ஊர் மேயரே 'பெற்றோர்' என்ற அடிப்படையில் வந்தாலும் அதே நிலைதான். (சமத்துவம் பேணும் நாடல்லவா?) எங்களுக்கு என்னவோ இதுவும் சரிதான் என பட்டது. இல்லன்னா 'வெறும் 0.50€ தானே'ன்னு கொடுத்துவிட்டு மீண்டும் அதேபோல் இஷ்டத்துக்கு உணவை எடுத்துக் கொண்டு வீணாக்குவார்கள்.

இந்த முறையில் அவர்கள் செய்ததைப் பார்க்கும்போது, பள்ளி நாட்களில் ஆசிரியைகள் 'Luck Deep' என்று ஒரு ஃபங்ஷன் ஏற்பாடு செய்து நடத்துவது நினைவுக்கு வந்தது. அதாவது, எல்லா மாணவிகளும் குறைந்தபட்சம் 5 ரூ. கட்டாயமாக பள்ளிக்கு (அந்த ஃபங்ஷனுக்காக) கொடுக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். (அதிகமா கொடுத்தா யார்தான் வேணாம்பாங்க..:)) பிறகு அந்தப் பணத்தில் பல பொருட்கள் வாங்கி 'Luck Deep' அன்று ஒவ்வொரு ஆசிரியையும் தனித் தனி கடைகளாக வைத்து மாணவிகளிடமே வியாபாரம் பண்ணுவார்கள். வெளியில் விற்பதைவிட விலையும் கூடுதலாக விற்பார்கள். அதில் ஏதாவது வாங்கியே ஆகவேண்டும் என்பதும் அவர்களின் கண்டிஷன்களில் ஒன்று. இதை வாங்குவதை தவிர்ப்பத‌ற்காகவே நிறைய மாணவிகள் 'Luck Deep' அன்று பள்ளிக்கு வரமாட்டார்கள். யாரெல்லாம் வரவில்லையோ மறுநாள் அவர்களுக்கு நல்லா டோஸ் விழும் :) 'நம்மிடமே பணத்தை வசூலித்து, அதை நம்மிடமே மற்ற வெளிக் கடைகளைவிட அதிக விலைக்கு விற்பது ரொம்ப அநியாயம்' என்று மாணவிகள் பேசிக் கொள்வார்கள். ஆனால் பார்ப்பதற்கு அநியாயமாக தோன்றினாலும் அதன் லாபம் அனைத்தும் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த 'முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர்கள் இல்லம்' தான் சேருகிறது என்பதை நினைக்கும்போது ஆறுதலாக இருக்கும். மாணவிகளையும் குறை சொல்ல வழி இல்லை. ஏன்னா தன் பிள்ளையின் படிப்பு தரம் நன்றாக இருக்கவேண்டும் என்பதால், அதிகமான ஸ்கூல் ஃபீஸ் கட்டி கான்வென்ட்டில் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்து பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்?

சரி, இப்போ விடுபட்ட இடத்திற்கு செல்வோம் :) இங்குள்ள பள்ளிகளின் படிப்பு தரத்துக்கு சொல்லவே தேவையில்லை. அதுவும் எந்த செலவுமில்லாமல் நம் குழந்தைகளுக்கு கல்வி பயின்று கொடுக்கும் தரம் வாய்ந்த இப்படிப்பட்ட பள்ளிகளுக்குதான் இதன் லாபம் அனைத்தும் செல்கிறது எனும்போது சந்தோஷமே! உணவு சிறிது கூட வீணாவதில்லை என்பது மற்றொரு சந்தோஷம். கீழேயுள்ள படத்தில் உள்ள‌து நாங்கள் செய்து எடுத்துச் சென்ற 'தம்ரூட்'. எடுத்துச் சென்ற 2 தட்டுகளில் ஒன்று காலியான பிறகுதான் க்ளிக் பண்ண‌ நினைவு வந்தது :)


அவரவர்களின் உணவுகளின் பெயரையும் (நாம் கொடுக்கும்போதே) அவர்களிடம் சொல்லவேண்டும். 'தம்ரூட்' என்று சொன்னவுடன், அது நான்கு எழுத்துதான் என்றாலும் சரியாக வாயில் நுழையவில்லை அவர்களுக்கு :) அதனால் 'Gateau d'Indienne' ('இந்தியன கேக்') என்று அதற்கு ஒரு அடைப்பெயரையும் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்கள்.


இந்த ஃபங்ஷனில் (அட்டை வைத்திருக்கும்) குழந்தைகளுக்கு 'மேக்அப்' செய்துவிடுவதற்கென்று சிலர் இருந்தார்கள். அங்கு சென்று சந்தோஷமாக பல வேடங்கள் போட்டுக் கொண்டு திரிந்த குழந்தைகளில் சிலர்:





அடுத்தது பலவித விளையாட்டுப் போட்டிகள் வைத்து ஜெயித்த குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களும், தோற்ற குழந்தைகளுக்கு சாக்லேட்கள் மட்டும் கொடுக்கப்பட்டன.


தண்ணீர் வாளியில் ப்ளாஸ்டிக் கப்களை வைத்து அதில் ஒவ்வொரு கோலியாக (போட்டியிடும் இருவரும்) மாறி மாறி போடவேண்டும். யாருடைய கோலி அந்த கப்பை மூழ்கடிக்கிறதோ அவருக்கு தோல்வி.


மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கலர் டப்பாக்களை 3 பந்துகளை மட்டும் வீசி கீழே சாய்க்கவேண்டும்.


வாளியில் உள்ள தண்ணீரில் ஸ்பாஞ்சை முக்கி அதை பாட்டிலில் பிழிந்து விரைவாக பாட்டிலை நிறைக்கவேண்டும்.


இந்தப் போட்டியில் விரைவாக ஆடைகளை அணிந்துக் கொண்டு, ஷூவையும் மாட்டவேண்டும். அதிலும் யார் அதிகமான ஆடைகளை சீக்கிரமாக‌ அணிகிறார்களோ அவர்களுக்கே வெற்றி.


இதில் போட்டியிட்ட சிறிய பையன் தோற்றதால் சாக்லேட் கொடுத்தும் பயங்கர அழுகை :) கடைசி படத்தைப் பாருங்கள், அழுகை ஸ்டார்ட் ஆகுது :-)


தண்ணீர் நிறைந்த கப்களை தட்டில் ஏந்திக் கொண்டுச் சென்று, அந்த பெஞ்சின் மீது ஏறி கேட் வரைச் சென்று மீண்டும் அதேபோல் திரும்பி வரணும்.


இந்தப் போட்டியில் பெரும்பாலும் இருவருமே வெற்றி பெறுகிறார்கள் என்பதால் பெஞ்சுக்கு இரண்டு பக்கமும் இரண்டிரண்டு வளையங்களைப் போட்டு, அந்த வளையங்களில் நின்று ஒருமுறை சுற்றிவிட்டுதான் பெஞ்சில் ஏறணும் என்று வைத்துவிட்டார்கள். அதேபோல் பெஞ்சிலிருந்து இறங்கிய பிறகும் மறுபக்கமுள்ள‌ வளையத்திற்குள் சுற்றிவிட்டுதான் திரும்பணும்.  பாவம் குழந்தைகள் :)


இது மீன் தூண்டில் போல் ஒரு தூண்டிலைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதில் பார்சல் பண்ணி போடப்பட்டுள்ள பொருட்களில் எதை எடுக்கிறோமோ அது அவர்களுக்கு. ஒருவர் ஒரு பார்சலை எடுத்துவிட்டால் இன்னொருவருக்கு தோல்வி. இவ்வாறு எல்லாம் இனிதே நிறைவடைந்தன.

கொண்டாட்டங்கள் முடிந்த அன்று மாலை ஆசிரியையிடம் பேசியபோது 'மற்ற சில பள்ளிகளில் Buffet ல் விற்கும் இந்த முறை உள்ள‌து. நாங்கள் அமுல்படுத்தாமல் இருந்தோம். உங்களைப் போன்று இன்னும் சில பெற்றோர்களும் சொன்னதால்தான் இந்த முறையை யோசித்து, உணவு வீணாகாமல் ('Buffet 0.50€' என்ற) இந்த முடிவுக்கு வந்தோம். உங்களுக்கு எங்களின் நன்றிகள்' என்று சொன்னபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

23 comments:

  1. ஆஹா.... படத்தை பார்க்கும் போதே நமது மனமும் குழந்தை யைபோல குதுகலிக்கிறது ....

    என்னது தம்ரூட் ...இந்தியன் கேக்காஆஆஆ அவ்வ்வ்வ்

    ReplyDelete
  2. உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்த ஐடியா சூப்பர் சகோஸ் :-)

    ReplyDelete
  3. ##
    இண்ட்லியில் என்ன பிராப்ளமுன்னு தெரியல ஓட்டு போட முடியல

    ##

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.அஸ்மா,
    சுவாரஸ்யமான பகிர்வு..!
    படங்கள் அனைத்துமே அருமை..!
    மாஷாஅல்லாஹ்.

    "உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)

    உணவு வீணாகாமல் இருக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கு ஈருலகிலும் தங்களுக்கு நற்கூலி கிடைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

    அப்புறம் அடி சக்கை....
    நம்மூர் 'தம்ரூட்'(ரவா அடை)-ஐ பிரான்சிலும் வெற்றிக்கொடி நாட்ட வைத்ததற்கு பாராட்டுக்கள் சகோ.அஸ்மா..!

    ReplyDelete
  5. அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்கமும். உங்கள் மகன்தானே படத்திலிருப்பவர்.. அழகாக இருக்கிறார்.

    ஸ்கூல் குழந்தைகளை இப்படி பப்ளிக்கில் போடுவது பறவாயில்லையோ அஸ்மா? இங்கு அதற்கெல்லாம் தடா..

    ReplyDelete
  6. அழகான படங்கள் .உணவை வீணாக்காமல் நல்ல யோசனை .
    இங்கே என் மகள் பள்ளியிலும் நடந்தது ஆனா எல்லாத்துக்கும் பணம் தான் .
    மேலும் ஆசிரியர்களே உணவை பரிமாறினர்.அதனால் வீண் ஆக சாத்தியமில்லை .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  7. ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே..

    அப்ப அடுத்தது தம்ரூட் செய்முறை பதிவுதானே? ;-))))

    ReplyDelete
  8. @ ஜெய்லானி...

    //ஆஹா.... படத்தை பார்க்கும் போதே நமது மனமும் குழந்தை யைபோல குதுகலிக்கிறது ....//

    உண்மைதான் சகோ. குழந்தைகளின் சந்தோஷத்தைப் பார்க்கும்போது நாமும் அவர்களோடு ஒன்றிப்போய் விடுவோம்.

    //என்னது தம்ரூட் ...இந்தியன் கேக்காஆஆஆ அவ்வ்வ்வ்//

    சிம்பிளான 'தம்ரூட்' பெயரையே சொல்ல வராமல் அவங்க இஷ்டத்துக்கு மாற்றிக்கிட்டாங்க, போனா போகட்டும்... :-) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ ஜெய்லானி...

    //உண்ணும் பொருட்கள் வீணாகாமல் செய்த ஐடியா சூப்பர் சகோஸ் :‍)//

    இதற்கு முன்பே சில ஸ்கூல்களில் இதுபோன்ற‌ முறை வைத்திருக்கிறார்களாம். மக்கள் 'சும்மா'ன்னாதான் இஷ்டத்துக்கு வீணாக்குவார்களே.. இனி இதுதான் சரிப்பட்டு வரும் அவங்களுக்கு :)

    //இண்ட்லியில் என்ன பிராப்ளமுன்னு தெரியல ஓட்டு போட முடியல//

    ஆமா சகோ. நாம் ஓட்டு போட்டு ஒருசில நாட்களுக்கு பிறகுதான் அது தெரிகிறது. அதுவரை நம்ம போஸ்ட்டை சப்மிட் பண்ணாத‌ மாதிரியே உள்ளது. இந்த பிரச்சனையை கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு மேல் கவனிக்கிறேன். என்னன்னு தெரியல. எப்படி சால்வ் பண்ணுவதுன்னு தெரிந்தால் சொல்லுங்க சகோ.

    ReplyDelete
  10. @ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //சுவாரஸ்யமான பகிர்வு..!
    படங்கள் அனைத்துமே அருமை..!
    மாஷாஅல்லாஹ்//

    நன்றி சகோ :)

    //"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)//

    இறைவனின் கட்டளை எங்கு மீறப்பட்டாலும் அங்கு நம் சக்திக்கு உட்பட்ட முயற்சியை எடுக்கிறோம். ஆனால் இங்கு இப்படி ஒரு மாற்றம் வரும் என்றெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. ஏதாவது ஒருவழி பண்ணி வீணாகாமல் தடுக்கட்டுமேன்னு நினைத்து சொன்னதுதான். அது நல்லதாக முடிந்துவிட்டது :)

    //அப்புறம் அடி சக்கை....
    நம்மூர் 'தம்ரூட்'(ரவா அடை)-ஐ பிரான்சிலும் வெற்றிக்கொடி நாட்ட வைத்ததற்கு பாராட்டுக்கள் சகோ.அஸ்மா..!//

    :))) ஒவ்வொரு ஃபங்ஷனிலும் ஏதாவது நம்மூர் ஐட்டத்தை இடம் பெறச் செய்தால்தான் திருப்தியாக இருக்கும் :) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ athira...

    //அழகான படங்கள்... கூடவே நல்ல விளக்கமும். உங்கள் மகன்தானே படத்திலிருப்பவர்.. அழகாக இருக்கிறார்//

    ஆமா அவரேதான் :) நன்றி அதிரா :)

    //ஸ்கூல் குழந்தைகளை இப்படி பப்ளிக்கில் போடுவது பறவாயில்லையோ அஸ்மா? இங்கு அதற்கெல்லாம் தடா..//

    குழந்தைகளின் பெயர், வயது, சொந்த நாடு போன்ற டீட்டெய்ல்களோடுதான் கொடுக்கக் கூடாது அதிரா. சும்மா பொதுவாக படம் கொடுக்கலாம். லண்டனில் இதுக்குக்கூட தடாவா? :) ம்.. சரியாப் போச்சு போங்க.. வருகைக்கு நன்றி அதிரா.

    ReplyDelete
  12. @ angelin...

    //அழகான படங்கள்//

    நன்றி ஏஞ்சலின் :)

    //உணவை வீணாக்காமல் நல்ல யோசனை. இங்கே என் மகள் பள்ளியிலும் நடந்தது ஆனா எல்லாத்துக்கும் பணம் தான் .
    மேலும் ஆசிரியர்களே உணவை பரிமாறினர்.அதனால் வீண் ஆக சாத்தியமில்லை .பகிர்வுக்கு நன்றி//

    அப்படியா.. நீங்கள் எந்த நாட்டில் சொல்கிறீர்கள்.. அமெரிக்காவிலா? உணவு வீணாகாமல் இருப்பதே சந்தோஷமான விருந்து :) உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின் :)

    ReplyDelete
  13. @ ஹுஸைனம்மா...

    //ஸ்வாரஸ்யமா நேரம் போயிருக்குமே..

    அப்ப அடுத்தது தம்ரூட் செய்முறை பதிவுதானே? ;-))))//

    உண்மையில் நேரம் போனதே தெரியாமல்தான் நின்றோம் :) அடுத்த பதிவு தம்ரூட் போட்டாப் போச்சு. ஆனா யாரிடமும் எந்த வேலையும் ஆர்டர் பண்ணாமல் நீங்களே செய்துப் பார்த்து வந்து சொல்லணும், சரியா? :))) வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அருமையான பதிவு

    ReplyDelete
  15. சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  16. @ bat...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //அருமையான பதிவு//

    நன்றி சகோ.

    ReplyDelete
  17. @ மனோ சாமிநாதன்...

    //சுவாரஸ்யமான பதிவு அஸ்மா! புகைப்படங்கள் அனைத்தும் அருமை!//

    தங்களின் முதல் வருகை சந்தோஷம் மனோ மேடம் :) கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்டால்தான். ஃபஃபே எல்லாம் கிடையாது. இன்டியன், சாமோவன், டொங்கன் என்று தனித்தனி ஃபுட் ஸ்டால் இருக்கும். கேக் ஸ்டால் மட்டும் பெரிதாக இருக்கும்.

    இப்படி எல்லாம் ரசித்துப் படம் பிடிக்க வேறு பாடசாலையில் நடக்கும் காலாவுக்குத் தான் போக வேண்டும் நான். எங்க ஸ்டால் வேலை முடிச்சு நிமிர்ந்து பார்க்கும் போது காலா கிட்டத்தட்ட வெறுமையாகி இருக்கும்.

    அஸ்மா.. ;) அடுத்த தடவை 'ரெக்கார்ட்' கிடைக்குதா என்றும் பாருங்க.

    ReplyDelete
  19. @ இமா...

    //எங்க ஸ்கூல்ல ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஸ்டால்தான். ஃபஃபே எல்லாம் கிடையாது. இன்டியன், சாமோவன், டொங்கன் என்று தனித்தனி ஃபுட் ஸ்டால் இருக்கும். கேக் ஸ்டால் மட்டும் பெரிதாக இருக்கும்//

    லண்டனிலும் அப்படிதான் என்று கேள்விப்பட்டேன் இமா. அதுவும் நல்லதுதான்.

    //இப்படி எல்லாம் ரசித்துப் படம் பிடிக்க வேறு பாடசாலையில் நடக்கும் காலாவுக்குத் தான் போக வேண்டும் நான். எங்க ஸ்டால் வேலை முடிச்சு நிமிர்ந்து பார்க்கும் போது காலா கிட்டத்தட்ட வெறுமையாகி இருக்கும்//

    பொறுப்பான ஒரு டீச்சரான‌ உங்களுக்கு யாராவது முன்கூட்டியே இனி எடுத்து வைக்கச் சொல்லிடுங்க இமா ;))

    //அஸ்மா.. ;) அடுத்த தடவை 'ரெக்கார்ட்' கிடைக்குதா என்றும் பாருங்க//

    நிச்சயம் பார்க்கிறேன் இமா. இல்லாட்டா என்ன..., அப்படியே நம்ம இமா ஒரு பார்சல் பண்ணிடுவாங்க‌ இங்கே :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா.

    ReplyDelete
  20. asma super all the pictures and your son too.
    I like your detailed writing. BYW how are u? Very long back I am visiting your blog.
    U did't go to India for vacation?

    ReplyDelete
  21. @ Vijiskitchencreations...

    //asma super all the pictures and your son too.
    I like your detailed writing//

    நன்றி விஜி :)

    //BYW how are u? Very long back I am visiting your blog.
    U did't go to India for vacation?//

    நான் நலமே விஜி! நீங்க எப்படியிருக்கீங்க? நாங்கள் இந்த வருடம் வகேஷன் செல்லவில்லை விஜி. நீங்கள் இப்போ இந்தியாவில் இருக்கீங்களா? உங்களுக்கு முடியும்போது இனி வாங்க விஜி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  22. வாவ்! சூப்பர் படங்கள் & விளக்கங்கள். உங்கள் மகன் அழகா இருக்கிறார்.

    ReplyDelete
  23. @ vanathy...

    //வாவ்! சூப்பர் படங்கள் & விளக்கங்கள்// கருத்துக்கு வானதி!

    //உங்கள் மகன் அழகா இருக்கிறார்//

    மீண்டும் நன்றிகள் :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை