அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 18 August 2012

மீண்டும் வந்துவிடு.. இனிய‌ ரமலானே!


போய் வா ரமலானே...! போய் வா!
மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

நோற்காமல் இருந்திட்ட எங்களில் சிலர் மீது
கோபமோ ரமலானே.. செல்கிறாயே நீ....?
இறையருளால் அந்த சிலரும் திருந்திடுவர்
இன்ஷா அல்லாஹ் மீண்டும் நீ வந்துவிடு!

சுடும் வெயில் நேரங்களிலும்
கடும் குளிர் காலங்களிலும்
வசந்தமாக வந்துதிக்கும் ரமலானே....! - உன்
வருகையால் நாங்கள் வருந்தியதில்லை ஒருபோதும்!

உன் இரவுகளில் நின்று வணங்கியும்
உன் பகலில் பசித்திருந்தும் தவித்திருந்தும்
தீச்செயல்களை "தீ"யென ஒதுக்கியும்
தீனோடு எங்களை ஒன்றிணைய வைத்து

உன்னில் திருக்குர்ஆனை இறக்கி
அதன்மூலம் உன்னை சிறப்பித்து
எங்களின் ந‌ற்பண்புகளைப் புதுப்பிக்க‌
இம்மண்ணில் மகத்தான அருளளித்த‌

எல்லாம் வல்ல ஏக இறையோனுக்கே
எந்நாளும் புகழனைத்துமென கூறி
மீண்டும் எங்களிடத்தில் நீ வந்திடவே....
மனமுருகி வல்லோனை வேண்டுகிறோம்!

எளியவளின் பிரார்த்தனைகளுடன் அனைவருக்கும் அன்பான 
                              *நோன்புப் பெருநாள் ந‌ல்வாழ்த்துக்கள்!*


19 comments:

  1. நோன்பு பெரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா.

    ReplyDelete
  3. @ Lakshmi...

    //நோன்பு பெரு நாள் நல் வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு நன்றி லஷ்மிம்மா :)

    ReplyDelete
  4. @ athira...

    //பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா//

    வாழ்த்துக்கு நன்றி அதிரா :)

    ReplyDelete
  5. ரமளானை மீண்டும் வரவேற்கும் கவிதை அருமை

    என் பையனும் என்ன மம்மி இதற்குள் முடிந்து விட்டதா.
    என்கிறான்.

    இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ”சுடும் வெயில் நேரங்களிலும்
    கடும் குளிர் காலங்களிலும்
    வசந்தமாக வந்துதிக்கும் ரமலானே....! - உன்
    வருகையால் நாங்கள் வருந்தியதில்லை ஒருபோதும்!”

    சத்தியமான வரிகள்!!

    இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Arumai Akka,alakana varikal, aruputhamana karuthukkal,valarka ungal samuthaya panikal
    Valthukkal akka, engalin iniya perunal valthukkal

    ReplyDelete
  8. @ Jaleela Kamal...

    //ரமளானை மீண்டும் வரவேற்கும் கவிதை அருமை

    என் பையனும் என்ன மம்மி இதற்குள் முடிந்து விட்டதா.
    என்கிறான்//

    ரமலானில் தொடர்ந்து ஸஹர் செய்வது, போட்டிப் போட்டு குர்ஆன் ஓதுவது, தினமும் இரவில் கூட்டாக பள்ளியில் தொழுவது, தேடி தேடி தர்மங்கள் செய்வது, சின்ன சின்ன அமல்களையும் அதிகமாக செய்வது, நோன்பு திறப்பது என அந்த மாதத்தின் அழகும், அருமையும் வேறு எந்த மாதத்திலும் வராதல்லவா... அதனால்தான் உங்க மகனுக்கும் சீக்கிரம் முடிந்த மாதிரி இருந்திருக்கிறது :) இப்படியொரு மாதத்தை நமக்குத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!

    //இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்//

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete
  9. @ மு.ஜபருல்லாஹ்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //சத்தியமான வரிகள்!!

    இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்!//

    ஒவ்வொரு வருடமும் ரமலான் முடியும்போது தோன்றும் எண்ண‌ங்கள் இப்போது எழுத்தில் (சுருக்கமாக‌) பிரதிபலித்துள்ளது :) அல்லாஹ் நாடினால் அடுத்த வருடமும் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் ரமலானை சந்திப்போம்! வருகைக்கு நன்றி சகோ. உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. @ Rahila Masthan...

    //Arumai Akka,alakana varikal, aruputhamana karuthukkal,valarka ungal samuthaya panikal
    Valthukkal akka, engalin iniya perunal valthukkal//

    அல்ஹம்துலில்லாஹ்... ஏதோ எனக்கு தெரிந்த பாணியில் எண்ண ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டேன் :) நன்றி தங்கை ராஹிலா :)

    கடைசி நோன்பென்றால் அடுத்த நாள் பெருநாள் வரும் சந்தோஷம் ஒரு பக்கம், ரமலான் முடிகிறதே என்ற ஏக்கம் மறுபக்கம்! நம்மில் எத்தனை பேர் இதுபோன்று ரமலானைப் பிரிய மனமின்றி (வேறு வழியுமின்றி) பிரிந்திருப்போம்...! அந்த அனைவரின் சார்பாகவும்தான் இந்த புதுக்கவிதை :)

    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமை அஸ்மா,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. @ asiya omar...

    //அருமை அஸ்மா,வாழ்த்துக்கள்//

    நன்றி ஆசியாக்கா :)

    ReplyDelete
  13. உங்கள் கவிதை வரிகளில் சொன்னது உண்மைதான். நோன்பு முடிந்தும் இன்னும் சில நேரம் நோன்பு நினைவிலேயே இருக்கு :-)


    (ஸாரி ...இந்த பதிவு ரீடரில் தெரியவில்லை . நானே வந்ததால்தான் லேட் ))

    ReplyDelete
  14. @ ஜெய்லானி...

    //உங்கள் கவிதை வரிகளில் சொன்னது உண்மைதான். நோன்பு முடிந்தும் இன்னும் சில நேரம் நோன்பு நினைவிலேயே இருக்கு :‍)

    ஒரு மாதம் நாம் நோன்போடு ஒன்றிப்போய்விடுவ‌தால் அப்படிதான் இருக்கும் சகோ :) சுப்ஹானல்லாஹ்!

    //(ஸாரி ...இந்த பதிவு ரீடரில் தெரியவில்லை . நானே வந்ததால்தான் லேட் ))//

    பரவாயில்ல சகோ :) தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் அஸ்மா!

    ReplyDelete
  16. @ மனோ சாமிநாதன்

    //இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் அஸ்மா!//

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மனோ மேடம்! :)

    ReplyDelete
  17. very nice...good memories

    ReplyDelete
    Replies
    1. உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் சகோ! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் :)

      Delete
  18. அழகுத் தமிழில் ஓர் அற்புதக் கருத்து

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை