அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 28 January 2011

சுறும்பு மீன் பத்திய ஆனம்



புளி சேர்க்காத பத்தியத்தில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைப் பெற்றவர்களுக்கு 'பத்திய மீன் ஆனம்' ஆக்குவதற்கு என்றே நம்மூரில் சில மீன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட மீன்க‌ள் சாப்பிடும்போது பாலூட்டும் தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் (சிலவேளை மீன் சாப்பிடுவதால் ஏற்படும்) வாயுக் கோளாறுகள், மாந்தம், வயிற்றுப் பிரச்சனைகள் என்று எந்தவித பிரச்சனையும் வராது. அதுபோன்ற மீன்களில் ஒன்றுதான் இந்த‌ சுறும்பு மீன். பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த 'பத்திய ஆனம்' குழந்தைப் பெற்றவர்களுக்கு நன்கு பால் சுரக்கவும் உதவுகிறது. சத்துக்கள் நிறைந்தது! எனவே திட உணவு சாப்பிட ஆரம்பித்த குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.

Thursday 27 January 2011

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!

'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை 11 மணிக்கு சென்னையில், 'சென்ட்ரல் மெமோரியல் ஹால்' அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


மதுரை ஆர்ப்பாட்டம்

Tuesday 25 January 2011

தமிழகம் தழுவிய மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்!



'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத்தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் TNTJ உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தனர். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கிவிட்டது. சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது.

Friday 21 January 2011

பெட்ரோல் விலையுயர்வு குறித்த சிறப்பு ஆய்வுக் கட்டுரை!


இலவசப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பெட்ரோல்/டீசல் விலை உயர்வில் கவனம் செலுத்தாமல் இருப்பதே, எல்லா விலைவாசி உயர்வுக்கும் மிக முக்கிய காரணமாகும்! இதற்கு மத்திய அரசுக்கு மட்டுமில்லாமல் மாநில அரசுக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை TNTJ  இணைய தளத்தில் மக்களின் விழிப்புணர்வுக்காக 'அபூ நபீலா' அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட அருமையான ஒரு கட்டுரையாகும்! உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.


பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! 
மோட்டார் வாகனம் பயன்படுத்துவோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பறிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது "டப்பாவிங்களா! கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரோல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்டே போரானுங்களே" என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..

Thursday 13 January 2011

பேரீத்தம்பழப் பச்சடி


இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த ப‌ச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' :) சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! :) வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!

பயணிக்கும் பாதை