அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 22 February 2012

"முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" - தொகுப்பு


பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய "முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் 38 இடங்களில் நடந்தது. அதன் வீடியோ தொகுப்பை இங்கே காணலாம்:


                       

எங்கள் காரை மாநகரிலும் (14/02/12 அன்று) காலை 11.00 மணிக்கு, புதுவை சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 6.1% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், மத்தியில் சச்சார் கமிஷன் மற்றும் மிஸ்ரா பரிந்துரையின்படி 10% சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடியோவைக் காண‌:







 



 

(படங்கள்: karaikaltntj)


13 comments:

  1. இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

    சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கி காத்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

    நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் .

    நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

    அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌ இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்

    இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.

    .
    .சொடுக்கி >>>>>
    அடித்தாலும் அழக்கூடாத சமுதாயமாக, கண்ணீரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.
    <<<<<< கேளுங்க‌ள்.
    .
    .

    ReplyDelete
    Replies
    1. @ VANJOOR

      கண்ணீர் வரவழைக்கும் உண்மைகளின் தொகுப்பைப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி சகோ, ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  2. சலாம் சகோ!

    பல ஊர்களிலும் நடந்த போராட்டத்தை அழகாக கொடுத்துள்ளீர்க்ள. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  3. சலாம் சகோ!

    பல ஊர்களிலும் நடந்த போராட்டத்தை அழகாக கொடுத்துள்ளீர்க்ள. நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @ சுவனப்பிரியன்

      சலாம் சகோ.

      //நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்//

      நிச்சயமா சகோ. ஒரே சமய‌த்தில் பல இடங்களிலும் நடந்த நிகழ்ச்சியாக இருப்பதால் லைவ் டெலிகாஸ்ட்டுக்கு சான்ஸ் இல்லாமல் போய்விட்டது. அதனால் இமயம் டிவியில் அவர்கள் தொகுத்தளித்தவற்றை இங்கே பகிர்ந்துக் கொண்டேன் :) அவசியமான இந்த போராட்டத்திற்கு இறைவன் வெற்றியளிக்கட்டும்! வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  4. என்னங்க நீங்க ! எல்லோரும் நண்பர்களே !

    ReplyDelete
    Replies
    1. @ திண்டுக்கல் தனபாலன்

      //என்னங்க நீங்க ! எல்லோரும் நண்பர்களே !//

      என்ன சொல்ல வர்றீங்க சகோ? தெளிவா சொல்லுங்க.

      Delete
  5. போராட்டம் பற்றி பலரும் அறிய காட்சிகளுடன் அறிய தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @ Barari

      //போராட்டம் பற்றி பலரும் அறிய காட்சிகளுடன் அறிய தந்தமைக்கு வாழ்த்துக்கள்//

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  6. சலாம் சகோ அஸ்மா,

    நல்ல பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. @ சிராஜ்

      சலாம் சகோ.

      //நல்ல பகிர்விற்கு நன்றி//

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  7. Replies
    1. @ ஸாதிகா

      //தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்//

      அறிமுகத்திற்கு நன்றி ஸாதிகா அக்கா! இதுவரை உங்களின் அறிமுகம் சேர்த்து வலைச்சரத்தில் என் வலைப்பதிவு ஐந்தாவது முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி:) எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை