Tuesday, 6 August 2013

திரமிஸு/Tiramisuஇது ஒரு இத்தாலியன் டெஸர்ட். காஃபி மற்றும் சாக்லேட் இரண்டின் மணமும் கலந்த வித்தியாசமான நல்ல மணமும், குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பக்கூடிய சுவையும் நிறைந்தது!

ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் விமான பயணங்களில் பரிமாறப்படும் இந்த ஸ்பெஷல் டெஸர்ட், கடைகளில் வாங்கும்போது சில சமயங்களில் ஹலால் அல்லாத/உண்ணத் தகாத சில பொருட்கள் கலந்திருப்பதால் இதை வீட்டிலேயே செய்துக் கொள்ளும்போது, மன திருப்தியுட‌ன் சுகாதாரமும் கிடைக்கும் :) சுவையிலும் சற்றும் குறையாது! ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Saturday, 18 May 2013

பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?


இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட‌ முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்ற‌ம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.

Saturday, 30 March 2013

ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!


பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.

Saturday, 9 February 2013

'பேச்சுலர்ஸ் சமையல்' போட்டியும் பரிசும்


"சமையல் அட்டகாசங்கள்" ஜலீலாக்கா அவர்கள் சென்ற டிசம்பர் மாதம் நடத்திய பேச்சுலர்ஸ் சமையல் போட்டிக்கு அனுப்பி வைத்த என்னுடைய சமையல் குறிப்புகள் இவை. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்படி அழைத்த ஜலீலாக்காவுக்கு என் நன்றிகள் :)

வெளிநாடுகளில் தனியாக சமையல் செய்துக்கொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போல் சுலபமான குறிப்புகளாக அவர்கள் கேட்டிருந்ததால், ஏற்கனவே இந்த தளத்தில் கொடுக்கப்ப‌ட்ட குறிப்புகளிலிருந்து சுலபமானவை மட்டும் ஈவெண்டுக்காக அனுப்பி வைக்கப்ப‌ட்டன. கீழே கொடுக்கப்பட்டுள்ள‌ அந்த குறிப்புகள் உங்களுக்கும் உதவலாம். (அவற்றின் பெயர்களின் மீது க்ளிக் பண்ணி பார்க்கவும்.)

Wednesday, 30 January 2013

"விஸ்வரூபம்" - TNTJ மாநிலத் தலைவர் விளக்கம்


'விஸ்வரூபம்' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு அப்படத்தை வெளியிடலாமா? என்று மக்களிடையே சர்ச்சை எழுந்துள்ளதால், அதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கம் அளித்துள்ள வீடியோ onlinepj.com தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக இங்கும்!

                

(இது தகவலுக்காக பதியப்பட்டுள்ள‌தால் பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன.)

Wednesday, 23 January 2013

வேண்டாம் 'விஸ்வரூபம்'!    சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான‌ அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ள‌து, அல்ஹம்துலில்லாஹ்! இது இடைக்கால தடையாக இருப்பதால் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும், வசனமும் இனியும் இருக்காமல் சென்ஸார் செய்வதை அரசு கவனமுடன் கண்காணிக்கும், அல்லது (தேவைப்பட்டால்) முழுமையாக அதைத் தடை செய்யும் என்றும், வரும் காலங்களிலும் அதுபோன்ற கண்காணிப்பு தொடரும் என்றும் நம்புகிறோம்.

சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்கள், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் - அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள்! அவர்களுக்கும், மக்கள் நலன் கருதி தேவையற்ற பிரச்சனை உருவாகாமல் எதிர்க்குரல் கொடுத்த அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!

இது சம்பந்தமான விரிவான செய்திகளை கீழுள்ள தளங்களில் காணலாம்:-

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!