அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 23 January 2013

வேண்டாம் 'விஸ்வரூபம்'!    சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான‌ அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ள‌து, அல்ஹம்துலில்லாஹ்! இது இடைக்கால தடையாக இருப்பதால் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும், வசனமும் இனியும் இருக்காமல் சென்ஸார் செய்வதை அரசு கவனமுடன் கண்காணிக்கும், அல்லது (தேவைப்பட்டால்) முழுமையாக அதைத் தடை செய்யும் என்றும், வரும் காலங்களிலும் அதுபோன்ற கண்காணிப்பு தொடரும் என்றும் நம்புகிறோம்.

சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்கள், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் - அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள்! அவர்களுக்கும், மக்கள் நலன் கருதி தேவையற்ற பிரச்சனை உருவாகாமல் எதிர்க்குரல் கொடுத்த அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!

இது சம்பந்தமான விரிவான செய்திகளை கீழுள்ள தளங்களில் காணலாம்:-1- விஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!

2- விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை!


3- விஸ்வரூபம் படத்தை தடை செய்த தமிழக அரசிற்கு நன்றி – பத்திரிக்கை செய்தி!


4- News Flash: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை


5- விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு இடைக்கால தடை?


                                             ***************


1- விஸ்வரூபம் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடம் டிஎன்டிஜே நேரில் வலியுறுத்தல்!

2- விஸ்வரூபம் படம் எங்கும் ஓடாது..!” சென்னை முழுவதும் கண்டன போஸ்டர்!

3- விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் : - முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


                                            ***************


                                                         
1- விஸ்வரூபத்தை எந்த ரூபத்தில் புரிந்துக் கொள்வது

2- உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

3- விஸ்வரூபம் - முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

4- விஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன?


                                             ***************1- விஸ்வரூபம் கருத்து சுதந்திரமா? 

2- விஸ்வரூபம் படமும் முதல்வருக்கு கடிதமும்

3- சினிமாவ சினிமாவா மட்டும்ம்ம்ம்ம்ம் பாருங்க..!!

4- அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்

5- விஸ்வரூபத்தால் ஆஸ்கார் வராது! ஆஸ்துமாதான் வரும்! 

                                            ***************1- முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்? 

2- ஒலக நாயகனும் ஓலம்போடும் படைப்புரிமைகளும் 

3- விஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்திரம் எனும் கேலிக்கூத்தும்

4- விஸ்வரூபம் அப்டேட்ஸ்........... 
  

மேலும்  புதிய செய்திகள் இதில் அப்டேட் செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்.

'மேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன்'. (அல்குர்ஆன் 3:54)

4 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ///தடை விதித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்கள், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் - அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள்! அவர்களுக்கும், மக்கள் நலன் கருதி தேவையற்ற பிரச்சனை உருவாகாமல் எதிர்க்குரல் கொடுத்த அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!///

  பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர நன்றி! நன்றி! நன்றி!

  ReplyDelete
 2. சலாம் சகோ.


  பதிவு அருமை ஜசாகல்லாஹ் ஹைர்.

  இஸ்லாத்தை குறிவைத்து தாக்கும் இதுபோன்ற சினிமாக்களை இனியும் வளரவிடக்கூடாது.சில நேரங்களில் உங்களின் பதிவும் என் பதிவும் ஒன்றாக ஒரே கருத்தை சொல்வதுபோல அமைகிறது.

  அல்லாஹ் மிக அறிந்தவன்.

  என் பதிவு:விஸ்வரூபம் படமும் முதல்வருக்கு கடிதமும்
  tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 3. SALAM,

  முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
  இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

  கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

  ReplyDelete
 4. hahaaaaaaaaaaaa ithan sonth selavula sooniyam vaikirathu

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!