அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 30 January 2013

"விஸ்வரூபம்" - TNTJ மாநிலத் தலைவர் விளக்கம்


'விஸ்வரூபம்' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு அப்படத்தை வெளியிடலாமா? என்று மக்களிடையே சர்ச்சை எழுந்துள்ளதால், அதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கம் அளித்துள்ள வீடியோ onlinepj.com தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக இங்கும்!

                

(இது தகவலுக்காக பதியப்பட்டுள்ள‌தால் பின்னூட்டங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன.)

Wednesday 23 January 2013

வேண்டாம் 'விஸ்வரூபம்'!



    சில நாட்களாக அனைவர் மத்தியிலும் ஹாட் நியூஸாகிப் போன 'விஸ்வரூபம்' திரைப்படத்தினை, தமிழக அரசு அதிரடியாக தடை செய்துள்ளது பாராட்டப்பட வேண்டியது! தமிழகத்தில் பரவலான‌ அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலை தூக்காமல் காப்பாற்றப்பட்டதில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் அமைதியை விரும்பும் மற்ற அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டுள்ள‌து, அல்ஹம்துலில்லாஹ்! இது இடைக்கால தடையாக இருப்பதால் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும், வசனமும் இனியும் இருக்காமல் சென்ஸார் செய்வதை அரசு கவனமுடன் கண்காணிக்கும், அல்லது (தேவைப்பட்டால்) முழுமையாக அதைத் தடை செய்யும் என்றும், வரும் காலங்களிலும் அதுபோன்ற கண்காணிப்பு தொடரும் என்றும் நம்புகிறோம்.

சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியர்கள், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் - அனைவருக்கும் மனங்கனிந்த நன்றிகள்! அவர்களுக்கும், மக்கள் நலன் கருதி தேவையற்ற பிரச்சனை உருவாகாமல் எதிர்க்குரல் கொடுத்த அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக!

இது சம்பந்தமான விரிவான செய்திகளை கீழுள்ள தளங்களில் காணலாம்:-

பயணிக்கும் பாதை