Monday, 27 January 2014

அழிவை நோக்கி ஃப்ரான்ஸ் நாடு..!

ஃப்ரான்ஸ் நாட்டில் ஜனாதிபதியாக இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மிஸ்டர் ஃப்ரான்ஸுவா ஹொலாந்த் ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம்! ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்க முயற்சி செய்து, சென்ற வருடம் (2013) ஜூன் மாதத்தில் அதற்கு அரசாங்க அனுமதியும் வழங்கினார். அதற்கு சில‌ இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பிறமத சகோதரர்களும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.


  
இப்போது அதன் தொடர்ச்சியாக மானங்கெட்ட அத்தகைய செயலை நியாயப்படுத்தி, பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறார்களுக்கு, அது தவறில்லை என்ற வகையில் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் பெயரில் ஆரம்ப வகுப்பு குழந்தைகள் முதல் 'டீன் ஏஜ்' ஆரம்பிக்கும் பதிமூன்று வயதினர் வரை 'செக்ஸ் கல்வி விழிப்புணர்வு' அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

இதனால் இன்று (27/01/2014) திங்கட்கிழமை இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணிக்குமாறு இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், இன்று பெரும்பான்மையான இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. நாளை மீண்டும் பள்ளிச் செல்லும்போது, "அரசாங்க உத்தவின்பேரில் கல்வித்துறை ஏற்படுத்தப்போகும் 'ஓரின பாலினக் கோட்பாடு' என்பது எங்கள் குழந்தைகளின் கல்வியோடு கல்வியாக‌ கலப்பதை நாங்கள் கடுமையாக புறக்கணிக்கிறோம். எனவேதான் பள்ளிக்கு அனுப்பாமல் பிள்ளைகளை புறக்கணிக்கச் செய்தோம்" என்றும் பிள்ளைகளின் 'தினக் கையேடு'களில் குறிப்பிடுவதற்கும் இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதை.. இஸ்லாமியர்கள் நாளை செயல்படுத்த காத்திருக்கிறோம். பாரிஸ் நகரிலும் இதற்காக‌ சிறிய அளவிலான போராட்டமும் நடைபெற்றுள்ளது. அவர்களுடைய கேடுகெட்ட இந்த கல்வி முறை திணித்தலை வல்ல இறைவன் தோல்வியடையச் செய்வானாக!

ஃப்ரான்ஸ் வாழ் இஸ்லாமியர்களுக்காக‌:
'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?' என்றனர். (அல்குர்ஆன் 11:81)
ஃப்ரெஞ்ச் அரசின் குடியுரிமைப் பெற்று தாய்நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து குடியேறினாலும், இறைவனின் மாபெரும் கோபத்துக்கு ஆளாகும் இத்தகைய வெட்கக் கேடான சட்டங்களும் செயல்களும் இங்கே அரங்கேறி.. தொடருமானால், மீண்டும் தாய்நாட்டுக்கே திரும்பும் நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்படுவார்களா?

இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தாலும் தீயவர்களுக்கு இறங்கும் அல்லாஹ்வின் தண்டனை அவர்களோடு சேர்ந்து அதே நாட்டில் மற்றவர்களுக்கும் வராது என என்ன நிச்சயம்? அருவருக்கத்தக்க, மகா மட்டமான இந்த செயல்களைச் செய்த சமுதாயத்தினரான, இறைத்தூதர் லூத்(அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு.. பூமியின் மேற்பரப்பை கீழாகவும், கீழ்ப்பரப்பை மேற்பரப்பாகவும் தலைகீழாகப் புரட்டப்படும் தண்டனை அளிக்கப்பட்டு கடுமையான முறையில் அழிக்கப்பட்டார்களே... அதுபோன்றதொரு தண்டனை இவர்களுக்கும் இறைவன் அளிக்கமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே..!! அவர்களுக்கு பொழியப்பட்ட கல்மாரியை அல்லாஹ் இவர்களுக்காக‌ இந்த நாட்டிலே பொழியச் செய்யமாட்டான் என எப்படி அலட்சியப்படுத்த இயலும்..??
அவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்தனர். (அல்குர்ஆன் 9:70)
அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம். (அல்குர்ஆன் 54:34)
யா அல்லாஹ்..! இவர்களை திருந்தி வாழச்செய்வாயாக! அல்லது அவர்களை நீ இவ்வுலகிலேயே தண்டிப்பாயேயானால், அவர்களோடு அக்கம்பக்கத்து வீட்டார்களாக கலந்து வாழும் எங்களுக்கும் சேர்த்து அந்த தண்டனையைக் கொடுத்துவிடாதே!

இரக்கமுள்ள ரஹ்மானே..! உன்னுடைய கோபப் பார்வையை எங்களால் அணுவளவும் தாங்க இயலாது! எங்களைப் பாதுகாப்பாயாக!

அல்லாஹ்வே..! எங்கள் இரட்சகனே..!! எங்களால் இயன்ற எதிர்ப்புகள் சிறிய அளவிலே ஆனாலும் அவர்களிடத்தில் வெளிப்படுத்துகிறோம். வேதனையைக் கொண்டு வரும் வானவர்களை லூத் நபியின் அந்த‌ சமுதாயத்தினரிடத்தில் நீ அனுப்பிய‌போது, லூத் நபியின் குடும்பத்தாரைக் காப்பாற்றியதுபோல் உனக்கு அஞ்சி வாழும் எங்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! உன்னைத் தவிர பாதுகாவலன் எங்களுக்கு யாருமில்லை!

'அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்' என்றனர். 'அங்கே லூத் இருக்கிறாரே' என்று அவர் கேட்டார். 'அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கிவிடுவாள்' என்றனர். (அல்குர்ஆன் 29:31,32)

நமது தூதர்கள் லூத்திடம் வந்தபோது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் 'நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்' என்றனர். (அல்குர்ஆன் 29:33)

13 comments:

 1. இறைவனின் கோபம் எத்தகையது என்பதை விளங்காத மக்கள். பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஜஸாகல்லாஹ் ஹைரா! நிறைய‌ துஆ செய்வோம் :'(

   Delete
 2. அல்லாஹ் பாதுகாப்பானாக.. ஃப்ரான்ஸ் வாழ் இஸ்லாமியர்களின் இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெற செய்வானாக..

  ReplyDelete
 3. இறை வார்த்தையயை புறக்கணித்து வாழ முற்பட்டால் அதை விட மடத்தனமான செயல் வேறு இல்லை. வல்லவன் ரப்புவோடு பகைத்துக்கொண்டு எங்கு செல்வது..? யா அல்லாஹ் இது போன்ற கயவர்களின் செயலினால் எம்மை யும் தண்டனைக்குல்லானவர்களோடு சேர்த்து அழித்து விடாதே..உனது விருப்பத்துக்கு உள்ளவர்களோடு மரணிக்கின்ற பாக்கியத்தை வழங்குவாயாக...

  ReplyDelete
 4. இறை வார்த்தையயை புறக்கணித்து வாழ முற்பட்டால் அதை விட மடத்தனமான செயல் வேறு இல்லை. வல்லவன் ரப்புவோடு பகைத்துக்கொண்டு எங்கு செல்வது..? யா அல்லாஹ் இது போன்ற கயவர்களின் செயலினால் எம்மை யும் தண்டனைக்குல்லானவர்களோடு சேர்த்து அழித்து விடாதே..உனது விருப்பத்துக்கு உள்ளவர்களோடு மரணிக்கின்ற பாக்கியத்தை வழங்குவாயாக...

  ReplyDelete
 5. இறை வார்த்தையயை புறக்கணித்து வாழ முற்பட்டால் அதை விட மடத்தனமான செயல் வேறு இல்லை. வல்லவன் ரப்புவோடு பகைத்துக்கொண்டு எங்கு செல்வது..? யா அல்லாஹ் இது போன்ற கயவர்களின் செயலினால் எம்மை யும் தண்டனைக்குல்லானவர்களோடு சேர்த்து அழித்து விடாதே..உனது விருப்பத்துக்கு உள்ளவர்களோடு மரணிக்கின்ற பாக்கியத்தை வழங்குவாயாக...

  ReplyDelete
 6. ம்... நல்லது நடக்க வேண்டும்...

  ReplyDelete
 7. அவர்கள் இஸ்லாமிய வாழ்வியலை அழிக்க பார்கிறார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களையும் மிஞ்சிய சூழ்ச்சியாளன் அவனின் உதவியை நடுவோம்.

  ReplyDelete
 8. இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகள் எதுவும் அங்கில்லையா அஸ்மா? இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியப் பள்ளிகளைத் துவங்க வேண்டும். அல்லது, இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து, தாய்மார்கள் கூட்டாக “home schooling" செய்யத் திட்டமிடலாம்.

  ReplyDelete
 9. கியமாவை நோக்கி விரையும் உலகம்... ஆல்லாஹ் போதுமானவன்...

  ReplyDelete
 10. //இதனால் இன்று (27/01/2014) திங்கட்கிழமை இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணிக்குமாறு இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், இன்று பெரும்பான்மையான இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. நாளை மீண்டும் பள்ளிச் செல்லும்போது, "அரசாங்க உத்தவின்பேரில் கல்வித்துறை ஏற்படுத்தப்போகும் 'ஓரின பாலினக் கோட்பாடு' என்பது எங்கள் குழந்தைகளின் கல்வியோடு கல்வியாக‌ கலப்பதை நாங்கள் கடுமையாக புறக்கணிக்கிறோம். எனவேதான் பள்ளிக்கு அனுப்பாமல் பிள்ளைகளை புறக்கணிக்கச் செய்தோம்" என்றும் பிள்ளைகளின் 'தினக் கையேடு'களில் குறிப்பிடுவதற்கும் இஸ்லாமிய சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதை.. இஸ்லாமியர்கள் நாளை செயல்படுத்த காத்திருக்கிறோம். பாரிஸ் நகரிலும் இதற்காக‌ சிறிய அளவிலான போராட்டமும் நடைபெற்றுள்ளது. அவர்களுடைய கேடுகெட்ட இந்த கல்வி முறை திணித்தலை வல்ல இறைவன் தோல்வியடையச் செய்வானாக!// --- ஆமீன்.

  மிக அருமையான போராட்ட நடவடிக்கை சகோ. அஸ்மா.

  மேற்படி நடவடிக்கைக்கு பள்ளியில் ஏதும் பதில் சொன்னார்களா..?

  அக்கேல்விகள் தேர்வுக்கு வந்தாலும் அதை புறக்கணிக்கும் வகையில் வினாத்தாளில் சாய்ஸ் வைக்க சொல்லி கோரிக்கை வைக்கலாம் சகோ.

  //இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தாலும் தீயவர்களுக்கு இறங்கும் அல்லாஹ்வின் தண்டனை அவர்களோடு சேர்ந்து அதே நாட்டில் மற்றவர்களுக்கும் வராது என என்ன நிச்சயம்? //

  தங்களை போன்ற நல்லோர்களின் பொருட்டால் தீய சட்டங்களை திணிக்கும் அந்த தீயவர்களின் மனம் மாறி திருந்தி அவர்கள் இஸ்லாமிய வழியில் நல்வழிப்பட்டு... அதன் மூலம் பிரான்ஸ் நாட்டை அல்லாஹ் காப்பாற்ற துவா செய்கிறேன்.

  ReplyDelete

 11. வணக்கம்!

  இறைவன் திருவருளை ஏந்தும் பதிவில்
  நிறையும் மனமே நெகிழ்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  (உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!