அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 20 April 2017

"ஸலஃப் கொள்கை" என்னும் வார்த்தை விளையாட்டு!

'ஸலஃபு கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள்' என்று கூறிக் கொள்வோருடன் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் ஸலஃப் கொள்கை என்றால் என்ன என்று பேச ஆரம்பித்து, முடிவின்றி பாதியில் நின்று போனது. அதில் பேசப்பட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் விடுபட்ட விஷயங்களையும் இதில் தெளிவுபடுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில் முழுக்க முழுக்க அல்லாஹ்வை மட்டுமே அஞ்சி இந்த பதிவை எழுதுகிறோம். அவசியம் இதை முழுமையாக படியுங்கள்!

மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாக நபித்தோழர்களை பின்பற்றும் கொள்கையில் உள்ளவர்களான "ஸலஃபிகள்" என்று தங்களை சொல்லிக் கொள்வோரிடம், ஸலஃப் கொள்கை என்பது ஸஹாபாக்களை பின்பற்றுவதுதானே என்று நாம் கேட்டால், இல்லவே இல்லை என்றும் நாங்கள் அப்படி சொன்னோமா என்று தற்சமயம் ஸலஃப் கொள்கைப் பற்றி பேசுவோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியா..?!! சரி, சலஃப் கொள்கை என்றால் என்ன என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்டால், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே விளங்க வேண்டும்; அதுதான் சலஃப் கொள்கை என்கிறார்கள்.


இதுதானேப்பா ஸஹாபிய மத்ஹப்..?

இமாம் அபூஹனீஃபா எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்போர் ஹனஃபி மத்ஹப்.
இமாம் ஷாஃபி எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஷாஃபி மத்ஹப்.
இமாம் மாலிக் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் மாலிக்கி மத்ஹப்.
இமாம் அஹ்மது பின் ஹம்பல் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஹம்பலி மத்ஹப் என்று நீங்களும் சொல்வீர்கள்தானே? அதேபோலதான்..

ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று சொல்பவர்களிடம் அதற்கு பெயர்தான் 'ஸஹாபிய மத்ஹப்' என்று நாம் புரிய வைக்கத் துவங்கினால், 'நாங்கள் அப்படி சொன்னோமோ..? சஹாபாக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்' என்கிறார்கள். அப்பாடா...! இப்பவாவது தங்களின் நிலைபாட்டை தெளிவாக சொல்லும் திசைக்கு திரும்பி வருகிறார்கள்போல் இருக்கிறதே என்று நினைத்து, "ஸஹாபாக்களுக்கு முன்னுரிமையா அல்லது ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்க வேண்டுமா?" என்று நாம் கேட்டால் மீண்டும் பல்ட்டி அடிக்கிறார்கள், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று..!

பயணிக்கும் பாதை