"என் இனிய இல்லம்" ஃபாயிஜா, குழந்தைகளுக்கான வரைபட போட்டி அறிவித்து ஒரு மாதமாகியும் இதோ.. அதோ.. என அலட்சியமாக இருந்து, கூடவே பல தடங்கல்கள் வந்து, போட்டி முடியும் கடைசி நேரத்தில் எப்படியாவது நானும் வரைய வேண்டும் என்று செல்ல மகன் ஆசையோடு அடம்பிடிக்கவே.. நஃபீஸ் உடைய 'இயற்கைக் காட்சி' ஓவியத்தினையும் ஒருவாறாக போட்டிக்கு அனுப்பியாச்சு :) போட்டிக்கு அனுப்பவேண்டிய நேரம் முடிந்துவிட்டதால், (இனி யாரும் இதைப் பார்த்து காப்பியடிக்க முடியாது என்ற தைரியத்தில்) :) மகன் வரைந்த படத்தினை இங்கே பிற்ச்சேர்க்கையாக சேர்த்துள்ளேன்.
அவர் வரைந்த படம் இதோ:
சின்ன வயதிலேயே ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர் மகன். எந்தளவுக்கு என்றால், 3 வயது இருக்கும்போது.. யாரும் பார்க்காத நேரத்தில் பெட் (Bed) மீது ஏறி சுவர் முழுவதும் பெரிய பெரிய அலைகள் போட்டு எல்லோரும் ஓடுவதுபோல் குட்டி குட்டியாய் பொம்மைப் போட்டு வாடகை வீட்டு சுவரையே "ச்சுன்னாமி" வரைந்திருக்கிறேன் என்று ஒருவழி பண்ணி வைத்துவிட்டு, அடி விழுமோன்னு பயந்து நின்றார் :) 'சுவற்றுல எப்படி இவ்வளவு உயரத்துக்கு அலை போட்டாய்?' எனக் கேட்டதற்கு பெட்டில் அட்டேச் ஆகியுள்ள ஒரு உயரமான ஆர்ச் போன்ற பைப்பைக் காட்டி, 'இது மேல குதிச்சு குதிச்சு ஏறி அலை போட்டேன்' என சொல்ல, தூக்கி வாரிப்போட்டது. வால்தனம் பண்ணாமல் பொறுமையான பிள்ளைன்னு நம்பியும் தனியாக விடக்கூடாது. 'இளம் கன்று பயமறியாது!'
"சுனாமி" ன்னா என்ன.. எப்படி தெரியும் உனக்கு?ன்னு கேட்டால் 'கம்பீத்தர்ல (கம்பியூட்டர்ல) ச்சுன்னாமி வந்துச்சுல்ல.., அப்பதான் பார்த்தேன்' என்றார் :)) 'அதை ஏன் இந்த சுவற்றுல வரையணும், பத்ரோன் (வீட்டு ஓனர்) வந்தா இவந்தான் வரைந்து சுவற்றை இப்படி கிறுக்கி வைத்தான்னு உன்னைதான் காட்டுவோம்'னு சொன்னபோது, 'ஏந்தியால (இந்தியா- ல) நம்ம ஊரு பீச்சுக்கு போனப்ப.. அவங்க மட்டும் லைத்து அவுஸ்ல (லைட் ஹவுஸ்ல) :)) இப்படிதானே வரைஞ்சு வச்சிருந்தாங்க.., இப்போ நாம இங்க வந்துட்டோம்ல.. அதுக்குதான் இங்க வரைஞ்சேன்'னு மழலையோடு சொன்னதும் அடிவிழாம தப்பிச்சிட்டார் :-) ('அடி'ன்னா என்ன.. சும்மா பயம் வர, மிரட்டல் சவுண்ட் மட்டும் விட்டு, லைட்டா ரெண்டு தட்டுதான் :)) )
மாஷா அல்லா ரொம்ப அழகாக வரைந்து இருக்கிறார் உங்கள் நபீஸுக்கு பாராட்டுக்கள்
ReplyDelete.
http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_30.html
உங்கள் முதல் பாராட்டினை நஃபீஸுக்கு சொன்னதும் சந்தோஷம் தாங்க முடியல :) 'மெர்சி' (தேங்க்ஸ்) சொல்ல சொன்னார். நன்றி ஜலீலாக்கா :)
Deleteஅஸ்மா. சமையல் போட்டிக்கு உள்ள குறிப்பு லின்க் மொத்தததையும் நீங்க மொத்தமாக ஒரு பதிவா போட்டு லின்குகள் மட்டும் போட்டால் நல்ல இருக்கும்.
ReplyDeleteகிடைக்க பெற்ற குறிப்புகளை நானாக தேடி சேர்த்தது அது, மற்ற குறீப்புகளுக்கு கீழும் போட்டிக்கு அனுப்பவதாக தெரிவிக்க படவில்லை, ஒரு குறிப்பை தவிர , கவனிக்கவும்
மொத்த பதிவு எடுத்து போட வேண்டாம் நீஙக் மெயிலில் அனுப்பியது போல் லிங்க் + ஒரு படம் இது மட்டும் போட்டு அறிவித்தால் போதும்
//சமையல் போட்டிக்கு உள்ள குறிப்பு லின்க் மொத்தததையும் நீங்க மொத்தமாக ஒரு பதிவா போட்டு லின்குகள் மட்டும் போட்டால் நல்ல இருக்கும்//
Deleteஇப்போது போட்டுவிட்டேன் ஜலீலாக்கா :)
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்..ரொம்ப அழகா இருக்கு
வஅலைக்குமுஸ்ஸலாம்.
Delete//மாஷா அல்லாஹ்..ரொம்ப அழகா இருக்கு//
அல்ஹம்துலில்லாஹ்!
நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் வருகை.. நன்றி சகோ :)
இயற்கை காட்சி ரொம்ப அழகாக வந்துள்ளது.நஃபீஸுக்கு என் வாழ்த்துக்களை சொல்லவும்.
ReplyDelete//இயற்கை காட்சி ரொம்ப அழகாக வந்துள்ளது.நஃபீஸுக்கு என் வாழ்த்துக்களை சொல்லவும்.//
Deleteஉங்கள் வாழ்த்தினை சொல்லிவிட்டேன். 'தோழிம்மா (உம்மாவின் தோழி) :) எல்லோரும் எனக்கு 'Bravo' (சபாஷ்) சொல்றாங்களா?'ன்னு அவருக்கு ஒரே சந்தோஷம் :) நன்றி ஸாதிகா லாத்தா.
Masha allah mahan in padam romba romba alaga irunthathu
ReplyDeletePakirvuku nandri
//Masha allah mahan in padam romba romba alaga irunthathu
DeletePakirvuku nandri//
நீங்கள் ஏற்படுத்தித் தந்த ஒரு வாய்ப்பு குழந்தைகளுக்கு சந்தோஷமாக அமைந்துவிட்டது :) நன்றி ஃபாயிஜா.
அஸ்மாக்கா.. படம் அழகா வரையப்பட்டுள்ளது... முக்கியமாக கலரிங் நீட்டாக உள்ளது.. நஃபீஸுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete/உயரமான ஆர்ச் போன்ற பைப்பைக் காட்டி, 'இது மேல குதிச்சு குதிச்சு ஏறி அலை போட்டேன்' /// yammaadiiii....
//அஸ்மாக்கா.. படம் அழகா வரையப்பட்டுள்ளது... முக்கியமாக கலரிங் நீட்டாக உள்ளது..//
Deleteபோட்டி என்பதால் கூடுதல் அக்கறையில் பல தடவை அழித்து, அழித்து.. பேப்பர் மாற்றி அவர் வரைந்து முடிப்பதற்குள் மகனைவிட நாந்தான் ரொம்ப களைத்து போயிட்டேன் :( நம்ம கண்காணிப்பு அதுல இல்லாட்டா.. நீட்னஸ் கம்மியாதான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன் :) உங்கள் வாழ்த்துக்கு மகன் சார்பாக நன்றி பானு.
/உயரமான ஆர்ச் போன்ற பைப்பைக் காட்டி, 'இது மேல குதிச்சு குதிச்சு ஏறி அலை போட்டேன்' /// yammaadiiii....////
:-) :-)
அக்கா.. நானும் எனது மகள் சோனா வரைந்த ஓவியத்தை அனுப்பி இருக்கிறேன்....
ReplyDeleteஉங்க பையன் வரைந்த ஒவியம் மிக மிக அருமை.... வாழ்த்துக்கள்... நிச்சயம் பரிசு இந்த ஒவியத்துக்கு உண்டு...
//உங்க பையன் வரைந்த ஒவியம் மிக மிக அருமை.... வாழ்த்துக்கள்...//
Deleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி.
//நிச்சயம் பரிசு இந்த ஒவியத்துக்கு உண்டு...//
முடிவே பண்ணிட்டீங்களா...? :))))
Akka enakku avolo nambikkai irukku... Vazhthukkkal .....
Delete//Akka enakku avolo nambikkai irukku... Vazhthukkkal .....//
Deleteஅப்படியா..? உங்க நம்பிக்கை வீண் போகாதுன்னு நானும் நினைக்கிறேன் :) நாளை தெரிந்துவிடும், பார்ப்போம்! வாழ்த்துக்கு நன்றிபா :)
ஸலாம் சகோ.
ReplyDeleteமாஷா அல்லாஹ்...இந்த வரைபடத்தில் அந்த மலையும் மற்றும் அந்த வீட்டிற்கும் அருமையான கலரையும், செடிங்கை கொடுத்துள்ளர். சகோதரியின் மகன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
எனது ஓட்டு Neefees க்கே, திரேம்பியன்
ஸலாம் சகோ.
Delete//மாஷா அல்லாஹ்...இந்த வரைபடத்தில் அந்த மலையும் மற்றும் அந்த வீட்டிற்கும் அருமையான கலரையும், செடிங்கை கொடுத்துள்ளர். சகோதரியின் மகன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.//
அவருக்கு தூக்கக் கலக்கமும், எனக்கு சுகவீனமும் இல்லாட்டா இதை இன்னும் அழகாக்க அவருக்கு டார்ச்சர் கொடுத்திருக்கலாம் :) வாழ்த்திற்கும் ஓட்டுக்கும் ஜஸாகல்லாஹ் சகோ :)
//எனது ஓட்டு Neefees க்கே, திரேம்பியன்//
திரும்ப திரும்ப படித்த பிறகுதான் அது 'த்ரே பிய(ன்)' (Très Bien) என்று புரிந்தது :)) நீங்க ஜிபுத்தியில் இருப்பதால் ஃப்ரெஞ்ச் தெரியும்னு நினைக்கிறேன். சரியா?
மாசா அல்லாஹ். எனது அன்பு செல்லக்குட்டி வரைந்த ஓவியம் அருமையிலும் அருமை.
ReplyDeleteஇயற்கை சூழ்ந்த நிலதிலும் வீடுகட்டியயோடு சின்னம்மா மலிக்கா வந்து தங்குவதற்காக மேல்வீடும் எடுத்துவைத்துள்ளான் ஓவியத்திலும்.
வெற்றி பெற்றுவிடும் இன்ஷால்லாஹ். அதில் சின்னமாவுக்கும் பங்குதரனும் சொல்லிவிட்டேன் ஆமா..
வாழ்த்துகளும் அன்பு முத்தங்களும். அக்காவுக்கும் அன்பு மகனுக்கும்..
//மாசா அல்லாஹ். எனது அன்பு செல்லக்குட்டி வரைந்த ஓவியம் அருமையிலும் அருமை//
Deleteஜஸாகல்லாஹ் மலிக்கா :)
//இயற்கை சூழ்ந்த நிலதிலும் வீடுகட்டியயோடு சின்னம்மா மலிக்கா வந்து தங்குவதற்காக மேல்வீடும் எடுத்துவைத்துள்ளான் ஓவியத்திலும்//
ஹா..ஹா.. உனக்கு இல்லாத இடமா நம்ம வீட்டில்..? :-)
//வெற்றி பெற்றுவிடும் இன்ஷால்லாஹ். அதில் சின்னமாவுக்கும் பங்குதரனும் சொல்லிவிட்டேன் ஆமா..//
கொடுத்தா போகுது.. :) முதல்ல ரிசல்ட் வரட்டும், இன்ஷா அல்லாஹ் :)
//வாழ்த்துகளும் அன்பு முத்தங்களும். அக்காவுக்கும் அன்பு மகனுக்கும்..//
எனக்குமா...?!! நீ ரொம்ப naughty மல்லி :))))
Wow.... Akka ungalukku sirappu parisu kidachu irukkee ... Vazhthukkkal......:-)
ReplyDelete//Akka ungalukku sirappu parisu kidachu irukkee ... Vazhthukkkal......:)//
Deleteஅந்த பரிசு எனக்கா..?! எனக்கு 10 வயது தாண்டிவிட்டதே..? :))) அது என் மகனுக்கு :) வாழ்த்துக்கு நன்றிபா.
நஃபீஸ் இந்தளவுக்கு வரைவார்னு நினைச்சே பாக்கல..நேர்த்தியா வரைந்த இந்த விதம் 13,14 வயசு பிள்ளைக தான் இப்படி வரைவாங்க..மூணு வயசில் வரைந்த ச்சுனாமி ஓவியத்தை நீங்கள் எழுதிய விதம் அருமை..எனக்கே ச்சுனாமியை பாக்க ஆசை வந்துடுச்சு..ஃபோட்டோ எடுத்து வெச்சீங்களா,பத்ரோன் திட்டினாரா இல்ல குட்டிப் பைய்யன் இவ்வளவு அழகா வரைஞ்சிருக்கார்னு ஆச்சரியப்பட்டாரா..
ReplyDeleteThalika
//நஃபீஸ் இந்தளவுக்கு வரைவார்னு நினைச்சே பாக்கல..நேர்த்தியா வரைந்த இந்த விதம் 13,14 வயசு பிள்ளைக தான் இப்படி வரைவாங்க..//
Deleteதன்னிஷ்டத்துக்கு வரையதான் அவருக்கு ஆசை. ஆனா போட்டின்னு சொன்னதும் 'மாடலுக்கு நீ ஒண்ணு வரைஞ்சு காட்டுமா.. அதப் பார்த்து வரைகிறேன்'னு சொன்னதால், தனியா ஒரு பேப்பர்ல மெயின் பார்ட்ஸ் மட்டும் வரைந்து காட்டி, அதுபோல் வரையச் சொல்லி கலரும் மற்ற டெகரேஷன்ஸும் கொடுக்க சொல்லி ஐடியா கொடுத்தேன். நான் 1/2 மணி நேரத்தில் வரைந்து காட்டியதை, அவர் வரைந்து.. பூக்கள் மற்றும் கலரெல்லாம் கொடுத்து, ஒவ்வொரு இடத்தையும் ஸ்கேல் வச்சு வேற அளந்து.. வரைந்து முடிப்பதற்கு 5 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது :( ஆனா தன் கற்பனைக்கு வரைந்தால் இவ்வளவு லேட்டாகாது. என்ன செய்ய... பிள்ளைகள்னா அப்படிதானே :-)
//மூணு வயசில் வரைந்த ச்சுனாமி ஓவியத்தை நீங்கள் எழுதிய விதம் அருமை..எனக்கே ச்சுனாமியை பாக்க ஆசை வந்துடுச்சு..//
ஹா..ஹா.. ச்சுனாமியை பாக்க ஆசையா..? புதுசா பார்க்க வேணாம் :) இதை ஒருமுறை பாருங்க.. ஆசையெல்லாம் போயிடும் :0
http://www.youtube.com/watch?v=AcoDQ9fRvAQ&list=PLCDE1E3BA0A9F00B2
//ஃபோட்டோ எடுத்து வெச்சீங்களா,பத்ரோன் திட்டினாரா இல்ல குட்டிப் பைய்யன் இவ்வளவு அழகா வரைஞ்சிருக்கார்னு ஆச்சரியப்பட்டாரா..//
அதான் எடுத்து வச்ச மாதிரிதான் ஞாபகம்.. ஆனா இப்போ கையில் இல்ல ருபீனா :( இருந்தால் அதையும் கொடுத்திருப்பேன். பத்ரோன் ஒருமுறை வந்தபோது நாங்க சொல்லாம அவரே அதைப் பார்த்துவிட்டு, 'என்ன ஆர்ட்லாம் சூப்பரா இருக்கு, இந்த சின்னப் பையன் வேலையா இது..?'ன்னு சொல்லி, இது என்னவென்று கேட்டார். 'சுனாமி வரைஞ்சிருக்கான், நாங்க பெயிண்ட் அடித்து தந்துவிடுகிறோம்'னு சொன்னதும், 'நோ..நோ.. இவ்ளோ தூரம் வரைஞ்சிருக்கானே, பரவாயில்லையே..' என மகனை அழைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தார் :) அன்றிலிருந்து மகனுக்கு பத்ரோனை ரொம்ப பிடிச்சிருச்சு :))) 'நம்ம பத்ரோன் ழான்த்தி (நல்லவர்)'னு சொல்லிட்டே இருப்பான். ஆனாலும் எனக்கு பயந்து சுவற்றில் வரைவதில்லை, பேப்பர்ஸ்தான் காலியாகும் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ருபீனா :)
வணக்கம்,
ReplyDeleteநான் ரவிச்சந்திரன் சென்னையில் இருந்து. தங்களின் தங்க மகன் நஃபீஸ் மிக மிக நன்றாக வரைந்திருக்கிறார். வாழ்த்துக்கள். இனிய இல்லம் வீடு,சூரியன்,சூரியன்,சிற்றோடை,மலைகள்,மரம்,வயல்வெளிஅனைத்துமே நன்றாக உள்ளது.