அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 25 October 2010

இஸ்லாத்தை தழுவிய இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் டோனி ப்ளேயரின் உறவினர்!


பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக இருந்த டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர். இவரது ஒன்று விட்ட சகோதரிதான் லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த லாரன் பூத் (Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க‌ பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

(கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்)லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற இடத்தில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டத‌ற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

"நான் 6 வாரத்திற்கு முன்பு ஈரானிற்கு சென்றிருந்தேன். அங்கு முஸ்லிம் சமூகத்தினருடன் பழகினேன். அது எனக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்தது. மேலும் நான் இப்போது 5 வேளைகள் தொழுகின்றேன். பள்ளிவாசலுக்கு செல்கின்றேன்.

இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதிலிருந்து மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன். தற்போது நான் மது அருந்தி 45 நாட்களாகின்றது. தினமும் மது அருந்தாமல் இருக்கமுடியாத நான், இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சரியப்படுகிறேன். குர்ஆனை தினமும் படித்து வருகிறேன். தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டேன். இஸ்லாமிய சமூகம் மிகவும் அமைதியானது! நானும் அதில் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் லாரன் பூத் தெரிவித்துள்ளார்.

எல்லாப் புகழும் ஏக இறைவன் ஒருவனுக்கே!5 comments:

 1. masha Allah. May all the women from the top families in UK and US take heed from her and start learning abt t real Islam. Welcome Sister Lauren.

  ReplyDelete
 2. sister asma,

  as salamu alaykum,

  I started another blog to share what I read. Basically Ia m running short of time, so no time to translate a lot in Tamil. S that blog is in English. You can join me if you would like. Let me know.

  it's at http://islambypractice.blogspot.com/

  wa Salam

  ReplyDelete
 3. @ அன்னு...

  இஸ்லாத்திற்கு யாரை தேர்வு செய்யவேண்டும் என அல்லாஹுத்தஆலா முடிவு செய்கிறானோ அவர்கள் நிச்சயம் சிறந்தவர்களாகதான் இருப்பார்கள். அவர்கள் எந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரியே! அவர்கள் உண்மையான இஸ்லாத்தைப் படித்து, புரிந்து வருகிறார்கள்.

  தங்களின் வருகைக்கு நன்றி அன்னு! தங்களின் புது ப்ளாக் பார்த்தேன், வாழ்த்துக்கள். அது ஆங்கில தளம் என்பதால், இங்கேயும் ஆங்கிலத்திலேயே கமெண்ட்டா அன்னு...? :) எப்போதும்போல் அழகு தமிழில் கமெண்ட் கொடுங்கபா...ப்ளீஸ்! :)

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ்!இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. @ sumraz...

  //மாஷா அல்லாஹ்!இஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்தமைக்கு நன்றி//

  வாங்க sumraz! வருகைக்கு நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!