ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் விமான பயணங்களில் பரிமாறப்படும் இந்த ஸ்பெஷல் டெஸர்ட், கடைகளில் வாங்கும்போது சில சமயங்களில் ஹலால் அல்லாத/உண்ணத் தகாத சில பொருட்கள் கலந்திருப்பதால் இதை வீட்டிலேயே செய்துக் கொள்ளும்போது, மன திருப்தியுடன் சுகாதாரமும் கிடைக்கும் :) சுவையிலும் சற்றும் குறையாது! ட்ரை பண்ணிப் பாருங்கள்.
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts
Tuesday, 6 August 2013
திரமிஸு/Tiramisu
ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் விமான பயணங்களில் பரிமாறப்படும் இந்த ஸ்பெஷல் டெஸர்ட், கடைகளில் வாங்கும்போது சில சமயங்களில் ஹலால் அல்லாத/உண்ணத் தகாத சில பொருட்கள் கலந்திருப்பதால் இதை வீட்டிலேயே செய்துக் கொள்ளும்போது, மன திருப்தியுடன் சுகாதாரமும் கிடைக்கும் :) சுவையிலும் சற்றும் குறையாது! ட்ரை பண்ணிப் பாருங்கள்.
Friday, 17 August 2012
'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி
ரமலானில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது "கஞ்சி"தான்! பெரும்பாலான நாடுகளில் அவரவர் உணவு வழக்கத்திற்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு கஞ்சி வகையை இஃப்தாருக்கென தயார் செய்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அதிகாலைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் ஒரு மிடரு தண்ணீர்கூட அருந்தாமல் சூரியன் மறையும்வரை இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்துவிட்டு, இறைவன் அனுமதித்த நேரமான சூரியன் மறைந்தவுடனே நோன்பை முடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்போது சுவையறியும் நாவில் ஆரம்பித்து, உணவுக் குழாய், வயிறு என அத்தனையும் நீண்ட நேர ஓய்வில் இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும், சுலபமாக தயாரிக்கக்கூடியதும், முடிந்தவரை சத்துக்கள் அதிகம் நிறைந்ததும், கூடவே சுவையானதுமான :) உணவை நாம் எடுத்துக் கொள்வது அன்றைய பொழுதின் முதல் வேலை உணவான இஃப்தாரில் இதமானதாக இருக்கும்; ஆரோக்கியத்திற்கும் நல்லது!
Wednesday, 15 February 2012
Friday, 11 November 2011
ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)
தற்போது எல்லா இஸ்லாமிய இல்லங்களிலும் குர்பானி கறி பகிரப்பட்டு பலவிதமான சமையல்களும் செய்த வண்ணமிருக்கும் இந்த நேரத்தில், பீஃபில் செய்யும் இந்த ரெசிபி உதவியாக இருக்கலாம். இது மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். எந்தவித மசாலா பொடிகளும் கிடையாது. மசாலா வாசனை இல்லாமல் சமைக்க விரும்பும் நேரங்களில்கூட இதுபோன்று செய்யலாம். ரொம்ப சிம்பிளும்கூட!
பெயர்க் காரணம்: ஹகீம் = டாக்டர் (வைத்தியர்). மசாலா இன்றி செய்வதற்கு ஏதோ ஒரு காலத்தில் வைத்தியர்கள் சொல்லித்தந்த முறை என்பதால் இதற்கு 'ஹகீம் பொரியல்' என்ற இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள். அதுபோல் இந்த முறையில் செய்வது 4, 5 நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும் என்பதற்காக, காடுகளில் வேட்டையாட செல்பவர்கள் இதுபோன்று எடுத்துச் செல்வார்கள் என்பதால் 'காட்டுக்கறி' என்றும் சொல்வார்கள்.
பெயர்க் காரணம்: ஹகீம் = டாக்டர் (வைத்தியர்). மசாலா இன்றி செய்வதற்கு ஏதோ ஒரு காலத்தில் வைத்தியர்கள் சொல்லித்தந்த முறை என்பதால் இதற்கு 'ஹகீம் பொரியல்' என்ற இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள். அதுபோல் இந்த முறையில் செய்வது 4, 5 நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும் என்பதற்காக, காடுகளில் வேட்டையாட செல்பவர்கள் இதுபோன்று எடுத்துச் செல்வார்கள் என்பதால் 'காட்டுக்கறி' என்றும் சொல்வார்கள்.
Monday, 29 August 2011
பட்டர் பிஸ்கட்
Tuesday, 23 August 2011
குஜராத்தி கஞ்சி
ரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சியை பல விதங்களில் தயார் பண்ணிப் பார்த்திருப்போம். ஆனால் அத்தனையும் சுவையிலும் சத்துக்களிலும் குறையில்லாதவையாக இருந்தாலும், தமிழ்நாட்டு பாரம்பரிய முறைகளில் மட்டுமே இருந்திருக்கும். இப்போது குஜராத்தி முறையில் செய்யப்படும், அரிசி சேர்க்கப்படாத இந்தக் கஞ்சியையும் செய்து பாருங்கள். செய்வதற்கு மிகவும் சுலபம்தான். அத்துடன் சுவையும் வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கும்.
Wednesday, 10 August 2011
நோன்புக் கஞ்சி
இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டில் தயாரிக்க தேவையில்லாத அளவுக்கு பள்ளிவாசல்களிலிருந்து வரக்கூடிய நோன்புக் கஞ்சியே போதுமானதாகவும், சில சமயங்களில் அதிகமாகவும் கூட இருக்கும். ஆனால் வெளிநாடுவாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இந்திய (தமிழக) நோன்புக் கஞ்சியை வீட்டில்தான் தயார் செய்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்காக இந்த நோன்புக் கஞ்சி ரெசிபியை பகிர்ந்துக் கொள்கிறேன். நாமே தயார் செய்யும் ஒரு ஸ்பெஷல் உணவு சுவையாக அமையும்போது கூடுதல் சந்தோஷமும் கிடைக்கும் :) அதனால் இந்த செய்முறையை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
Saturday, 2 July 2011
Monday, 16 May 2011
தேங்காய்ப்பூ சோமாஸ்
இந்த தேங்காய்ப்பூ சோமாஸ் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய இல்லங்களில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவைக் கொண்டது. (முறையாக பாதுகாத்தால்) 1 வாரம் வரைகூட வைத்து சாப்பிடலாம்.
Thursday, 7 April 2011
மீன் பிரியாணி (Fish Biryani)
பிரியாணி பல வகையாக செய்யலாம் என்பது நாம் அறிந்ததே! இதில் மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்பதால், அவசரமில்லாமல் சமைக்கும் நேரங்களில் செய்வதே நல்லது. இதை முறையாக செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்! இதில் கொடுக்கப்பட்டுள்ள முறை, என்னருமை தாயார் பல விருந்துகளில் செய்துக் கொடுத்து பலரையும் அசத்திய செய்முறை. பெரும்பாலான சமையல்கள் என் தாயாரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் என்றாலும், சின்ன மாற்றம்கூட செய்து பார்க்காமல் அவர்களிடம் கற்றதை நான் அப்படியே செய்யக்கூடிய பல ரெசிபிகளில் இதுவும் ஒன்று :) நீங்களும் இதுபோல் செய்துப் பார்த்து சொல்லுங்கள்.
Tuesday, 22 February 2011
Friday, 28 January 2011
சுறும்பு மீன் பத்திய ஆனம்
புளி சேர்க்காத பத்தியத்தில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைப் பெற்றவர்களுக்கு 'பத்திய மீன் ஆனம்' ஆக்குவதற்கு என்றே நம்மூரில் சில மீன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட மீன்கள் சாப்பிடும்போது பாலூட்டும் தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் (சிலவேளை மீன் சாப்பிடுவதால் ஏற்படும்) வாயுக் கோளாறுகள், மாந்தம், வயிற்றுப் பிரச்சனைகள் என்று எந்தவித பிரச்சனையும் வராது. அதுபோன்ற மீன்களில் ஒன்றுதான் இந்த சுறும்பு மீன். பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த 'பத்திய ஆனம்' குழந்தைப் பெற்றவர்களுக்கு நன்கு பால் சுரக்கவும் உதவுகிறது. சத்துக்கள் நிறைந்தது! எனவே திட உணவு சாப்பிட ஆரம்பித்த குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.
Thursday, 13 January 2011
பேரீத்தம்பழப் பச்சடி
இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த பச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' :) சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! :) வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!
Saturday, 18 December 2010
Friday, 3 December 2010
மசால் தோசை
உள்ளடம்(ஸ்டப்பிங்) செய்ய
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 300 கிராம்
உருளைக் கிழங்கு - 1 கப்(சிறிய கட்டங்களாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப்(பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலைப் பருப்பு - 1 பிடி
கடுகு - 1 ஸ்பூன்
ஜீரகம் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர் அல்லது
சிக்கன் ஸ்டோக் பௌடர் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
Tuesday, 23 November 2010
வாழைப்பூ கீரை கடைசல்
இந்த கடைசலில் வாழைப்பூவுடன் முருங்கைக் கீரையும் சேர்ந்திருப்பதால் பல சத்துகள் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் வெள்ளைச் சோறோடு சேர்த்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
முருங்கைக் கீரை - 4 கப்
பாசிப் பருப்பு - 75 மில்லி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இறால் ஸ்டோக் - பாதி (சுமார் 5 கிராம்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
முருங்கைக் கீரை - 4 கப்
பாசிப் பருப்பு - 75 மில்லி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இறால் ஸ்டோக் - பாதி (சுமார் 5 கிராம்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1/2 ஸ்பூன்
Sunday, 14 November 2010
Tuesday, 26 October 2010
முள்ளு முறுக்கு
Wednesday, 6 October 2010
லெமன் க்ராஸ் கிரீன் டீ
இதில் 'கிரீன் டீ' இலைகள் கலந்து செய்வதால் இந்த டீ இதயத்தை சுத்தப்படுத்தக் கூடியதாக உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ப்ளட் பிரஷ்ஷர் உள்ளவர்கள் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 'லெமன் க்ராஸ்' நல்ல செரிமாணத்தை உண்டு பண்ணும். கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்! 'கிரீன் டீ'யிலும் 'ஆன்ட்டி கேன்சர்' தன்மைகள் இருப்பதால் இத்தகைய மூலிகை பானங்கள் இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானது என்று சொல்லலாம்.
Friday, 24 September 2010
பஃப் பேஸ்ட்ரி தயாரிக்கும் முறை
பஃப் பேஸ்ட்ரி பலவிதமான சமையல் செய்முறைகளுக்கு பயன்படக்கூடியது. இது தயாரிக்கும் முறையை அறுசுவை.காமில் விளக்கப் படங்களுடன் கொடுத்துள்ளேன். இதைக் கொண்டு செய்யக்கூடியவற்றை பின்னர் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.
இதன் செய்முறையை இங்கே க்ளிக் செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை இங்கு வந்து சொல்லுங்கள்! (முடிந்தால் அங்கேயும் உங்கள் கருத்துக்களை பதிந்துவிட்டு வாருங்கள்.)
Subscribe to:
Posts (Atom)



