இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.
Showing posts with label வழிகேடுகள். Show all posts
Showing posts with label வழிகேடுகள். Show all posts
Saturday, 18 May 2013
பணம் தருமா பூரியான் ஃபாத்திஹா?
இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களிடம் தெளிவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தை உண்மையான இஸ்லாத்தின் வழியில் வாழவைக்க, ஏகத்துவக் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியில் இறைவன் உதவியால் மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! ஆயினும் எல்லா இஸ்லாமிய மக்களையும் அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் முழுமையான அளவில் வென்றெடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மைதான்.
Saturday, 30 March 2013
ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!
பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.
Friday, 16 November 2012
முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 3)
முதல் பாகத்தைக் காண, இரண்டாம் பாகத்தைக் காண
முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணை வைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன் (ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.
முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணை வைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன் (ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.
முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 2)
முதல் பாகத்தை இங்கே பார்க்கவும்.
தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.
பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.
தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.
பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.
முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 1)
புது வருடத்தை அடைந்திருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.
இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.
இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.
Thursday, 5 July 2012
பராஅத் இரவு - பாவமா புண்ணியமா?

நம் இஸ்லாமிய மக்களில் இன்னும் அறியாத நிலையிலுள்ளவர்களுக்கு, ஷஃபான் மாதம் 15ஆம் இரவு, "ஷபே பராஅத்" அல்லது "பராஅத் இரவு" என்று மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்படும் ஒரு விழா கொண்டாட்டம்! இதை கொண்டாடுவதில் அறியாத மக்களோடு சேர்ந்து, ஹஜ்ரத்மார்கள் என்று சொல்லப்படும் ஆலிம்களும்(?) ஆர்வத்துடன் முன்னின்று நடத்தி வருகின்றனர். மார்க்கத்தின் பெயராலும், அமல்களின் பெயராலும் முன்னோர்கள் ஏற்படுத்தியவற்றை எல்லாம், அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லியவைதானா என்று பார்க்காமல், இதற்கும் நன்மையுண்டு என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு, அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.
Monday, 13 February 2012
'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!
வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!
Friday, 13 January 2012
ஒழியட்டும் 'ஒடுக்கத்து புதன்'!
ஸஃபர் மாதம் பிறந்து பாதி நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டன. இஸ்லாமிய வீடுகளில் ஒரே பரபரப்பு! அரிசியைக் கழுவி, காய வைத்து, இடித்து, சலித்து, பக்குவப்படுத்தி..... என்று ஏகப்பட்ட முன்னேற்பாடுகள்! இருக்கும் உடுப்புகளில் பழைய துணிமணிகளைப் பொறுக்கி ஏழைகளுக்கு கொடுத்து கழித்துவிட வேண்டும் என்று ஓரம்கட்டி வைப்பார்கள். இதெல்லாம் எதற்காக..? ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையான 'ஒடுக்கத்து புதன்' கிழமையைக் கொண்டாடவே! தயார்படுத்திய அரிசி மாவில் அன்றைய தினம் 'ஒரட்டி' என்று சொல்லப்படும் ஒரு வகை ரொட்டியைத் தயாரித்து, அதனுடன் சேவல் குழம்பு செய்வார்கள். அதற்காக கோழி வியாபாரிகளிடம் முன் கூட்டியே நாட்டுச் சேவல் ஆர்டர் பண்ணி வைக்கப்படும். முந்திய நாள் ஒட்டடை அடித்து, பழசு பட்டு நீக்கி, வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள்.
Thursday, 30 June 2011
'மிஃராஜ்' இரவும் பித்அத்களும்
நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததற்கு பிறகு, அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த மாபெரும் ஒரு அற்புதமான விண்ணுலகப் பயணம்தான் 'மிஃராஜ்' என்பதாகும். இதைப்பற்றி வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளை விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்! அதற்கு முன்பாக, இந்த மிஃராஜ் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் வணக்கங்கள் 'பித்அத்' என்னும் வழிகேடுகளின் பட்டியலில் உள்ளவைதானா, அல்லது அதற்கு குர்ஆன் - ஹதீஸ்களில் எதுவும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.
Thursday, 17 February 2011
Monday, 20 September 2010
"சுன்னத் ஜமாஅத்" - பெயரை மாற்றுங்கள்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!
சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
- அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்,
- அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்பதும் பொருளாகும்.
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம். இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!
நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கையேந்திப் பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும் மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
இந்த நபிமார்களின் அறிவுரையை நாம் கேட்கும்போது அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம். மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை "சுன்னத் ஜமாஅத்" என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?
சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்
சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக முன்பே கூறியிருந்தோம். அதை இப்போது வெளிச்சம் போட்டு காட்டலாமா? 'சுன்னத்' என்பதற்கு 'நபிவழி' என்று பொருள்படுகிறது. இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?
| நபி வழி சுன்னத் | சுன்னத் ஜமாஅத் |
| எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. | சாதாரண எறும்பு கடித்தால் கூட 'யா கவுஸ்!', நாகூர் ஆண்டவரே!, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது |
| அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துஆ செய்வது | அவ்லியாவிடம் அழுது துஆ கேட்பதை தெய்வீகமாக கருதுவது |
| இணைவைப்பு வழிபாடு கிடையாது | சமாதி வழிபாடு முக்கியத்துவம் |
| மார்க்கத்தில் புதுமையைப் புகுத்துவதை தடுப்பது! | மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைப் புகுத்துவது |
| நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது | பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரீது, பைஅத், தீட்சை என்று நம்பி மோசம் போவது! |
| அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துஆக்கள், வணக்க வழிபாடுகளை மட்டும் மேற்கொள்வது | ஸலவாத்துன் நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி வணக்கமாக மேற்கொள்வது |
| இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்றும் பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது | இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைக் கொடுப்பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! |
| அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! | இணை வைப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது |
சுன்னத் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?
- தர்காவுக்கு போவது சுன்னத்தா?
- அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
- கப்ரு வணக்கம் சுன்னத்தா?
- மவ்லூது சுன்னத்தா?
- மீலாது சுன்னத்தா?
- ஸலவாத்துன் நாரியா சுன்னத்தா?
- தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
- முரீது சுன்னத்தா?
- ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
- கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
- 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
- 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா?
- ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
- வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
- வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
- நாகூர் மொட்டை சுன்னத்தா?
- தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
- மரணித்தால் ஜியாரத் பொரி வழங்குவது சுன்னத்தா?
- சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
- தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
- உரூஸ், படையல் சுன்னத்தா?
- சந்தனக்கூடு சுன்னத்தா?
- கொடிமரம் சுன்னத்தா?
- அவ்லியாக்களுக்கு நேர்ச்சை செய்வது சுன்னத்தா?
- கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
- தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
- கவாலி இசைக் கச்சேரிகள் சுன்னத்தா?
- யானை, குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
- ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
- கருமணி, தாலி கட்டுதல் சுன்னத்தா?
- மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
- சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?
அல்லாஹ்தஆலா 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களை இந்த உலகத்திற்கு அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான். எந்த நபியாவது மேற்கண்ட இழிச்செயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் - ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!
இவர்களின் சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!
அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான 'சுன்னத் ஜமாஅத்தினர்' என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்கக் கூடாதா?
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைக் கற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்!
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக் கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைக் கற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்!
அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.
நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன்: 39:65,66)
இறைத்தூதர்களும்கூட இணைக் கற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
நீர் இணைக் கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன்: 039:065, 066)
அல்லாஹ் கூறுகிறான்: “…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
பெயர் மாற்ற கோரிக்கை:
நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர் வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறோம்!
என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிக் காட்டுவானாக!
நன்றி-AN ISLAMIC PARADISE BLOG
Sunday, 15 August 2010
என்று மாறுமோ இந்த இழிநிலை...?
அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தை இஸ்லாமிய மக்கள் மிகுந்த ஆவலுடனும் பயபக்தியுடனும் வரவேற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம் சமுதாயத்தின் இன்னொரு சாரார் தமது எஜமானிக்கு விசுவாசமாக நடந்துக் கொண்டிருக்கின்ற அவல நிலையை பாருங்கள்!அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வண்ணமும் தங்களுக்காக நன்மைகளை கொள்ளையடிக்கும் அமல்களை அதிகப்படுத்திக் கொண்டு, தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் விதமாகவும் ரமலானை வரவேற்காமல், அரசியல் சாக்கடைக்குள் சங்கமமான இந்த மனிதர்கள் ரமலானை எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் படங்களோடு வரவேற்கும் பரிதாப நிலையை கீழேயுள்ள இந்தப் படம் சித்தரிக்கிறது. ரமலானின் புனிதத்தை உணர்ந்த, ஈமானுள்ள எந்த முஸ்லிமும் இதுபோல் செய்யமாட்டர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்புத்தியையும் நேர்வழியையும் கொடுத்து, நம்மையும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்து பாதுகாப்பானாக!
(மெயிலில் வந்த தகவலிலிருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது)
(படத்தின் மீது க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கவும்)



Wednesday, 28 July 2010
பராஅத் இரவும் ஆதாரமாகக் காட்டப்படும் ஹதீஸ்களின் நிலையும்

(1) பராஅத் இரவுக்கு ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ்களின் நிலை:
இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்:
ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில், 'ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத்தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் பகீஃ என்னும் அடக்கஸ்தலத்தில் இருந்தார்கள். என்னைக் கண்டவுடன் சொன்னார்கள், ஆயிஷாவே! அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு துரோகம் இழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறாயா? அதற்கு நான் அவ்வாறில்லை நீங்கள் மனைவியர் ஒருவரிடத்தில் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவில் இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் ரோமங்களின் எண்ணிக்கையை விட உங்களில் அதிகமானவர்களின் பாவங்களை மன்னித்துவிடுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதி 670)
Subscribe to:
Posts (Atom)







