'உம்ரா' செய்வது எப்படி?
❶ குளித்துவிட்டு, 'இஹ்ராம்' (நிலைக்குரிய) ஆடையை அணிந்துக் கொண்டு,
❷ கஃபாவில் ஏழு சுற்றுக்கள் சுற்றி தவாஃப் செய்து,
❸ 'மகாமு இப்ராஹீமி'ல் இரண்டு ரக்அத்கள் தொழுது,
❹ ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை வேகமாக நடப்பது/ஓடுவது
ஆகிய இந்த நான்கையும் நிறைவேற்றுவதே 'உம்ரா'வாகும். 'இஹ்ராம்' நிலைக்கு வந்ததிலிருந்து தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருப்பதும், ஸஃபா மர்வாவில் 'ஸயீ' என்ற தொங்கோட்டத்தை முடித்த பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்வதும் உம்ராவின் வணக்க வழிபாடுகளைச் சார்ந்ததாகும். இதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும். மேற்சொன்ன இந்த வணக்கங்களில் இஹ்ராம், கஅபாவை தவாஃப் செய்தல், ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் 'உம்ரா' இல்லை; அது செல்லாது.
உம்ராவின் செய்முறை விளக்கத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


