அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 7 February 2011

மீனவர்களின் உயிர்காக்க இணைவோம் இணையத்தில்!

தமிழக மீனவர்களின் உயிர்காக்க இணையத்தில் நடக்கும் போராட்டத்தில் சிறு பங்களிக்கவே இந்த இடுகை! ஏற்கனவே நிறைய சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டாலும் இதுவரை வாய்ப்பில்லாத‌ ஒவ்வொருவரும் இதில் கண்டிப்பாக‌ கலந்துக் கொள்ளவேண்டும்.

நம் இந்திய திருநாட்டில் சில காலங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவற்றால் அப்பாவி பொது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் இப்போது ஒன்றுமறியா மீனவர்களின் உயிர்களும் துச்சமாக மதிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவேண்டிய முழு பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.குறிப்பாக இந்த மீனவப் படுகொலைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசாங்கம் மாண்ட உயிர்களுக்கு என்ன பரிகாரம் தேடிக்கொடுக்கப் போகிறது? மக்கள் அனைவரும் குரல் கொடுத்து தட்டியெழுப்பினால்தான் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுப்போம், இல்லாவிட்டால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருப்போம் என்றால், இப்படியொரு அரசாங்கம் மக்களுக்கு தேவைதானா? தன்னுயிரைப் போலவே தன் மக்களின் இன்னுயிரையும் பேணும் அரசாங்கம் இந்தியாவில் என்றுதான் வருமோ..?

இந்திய அரசே! தமிழக‌ அரசே!

• தமிழக‌ மீனவர்களை இலங்கைக் கடற்படை அநியாயமாக தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடு!


• மாண்ட மீனவர்களின் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு தேவையான‌ உதவிகளை உடனடியாக செயல்படுத்து!


• அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கத் தேவையான‌ அளவு கடற்படையை அப்பணிகளில் ஈடுபடுத்து!


• நிபந்தனைக்குட்பட்ட கச்சத்தீவு பகுதிகளில் IMLB விதிகளை தளர்த்தி, இரு நாட்டு மீனவர்களும் நிபந்தனை ஏதுமின்றி பாதுகாப்புடன் அங்கு மீன்பிடிக்க வழி செய்வதைத் துரிதப்படுத்து!


கீழ்க்காணும் தளத்திலுள்ள பெட்டிஷனில் பலரும் கையெழுத்திட்டிருப்பீர்கள். இதுவரை கையெழுத்து இடாதவர்கள் இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி தயவுசெய்து கையெழுத்திடுங்கள்.

முகவரி:    http://www.petitiononline.com/TNfisher/petition.html   

"கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல், ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்தால் அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்ஆன் 5:32)


குறிப்பு: உங்களுக்கு நேரமிருந்தால் மட்டும் இந்த இடுகையில் உங்கள் கருத்துக்களை பதியுங்கள். இல்லாவிட்டால் ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திட்டாலே போதுமானது.

4 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மேலும், எவரொருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்ஆன் 5:32)

  இந்த வசனத்திற்கு ஏற்ற பதிவு
  மனிதம் மதிப்போம்
  மனித உயிர்களை காப்போம்

  நன்றி சகோ

  ReplyDelete
 2. @ ஹைதர் அலி...

  //இந்த வசனத்திற்கு ஏற்ற பதிவு
  மனிதம் மதிப்போம்
  மனித உயிர்களை காப்போம்//

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்லதொரு பதிவு அக்கா...

  ReplyDelete
 4. @ Hasan1...

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நம்மால் முடிந்த சிறிய பங்களிப்பு! நன்றி சகோ.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!