Saturday, 30 April 2011

விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 1)

குழந்தைகளுக்கான இஸ்லாமிய பொது அறிவு

நம் அன்பான குழந்தைச் செல்வங்களுக்கு உலகக் கல்வியைக் கற்றுத் தருவதோடு, சரியான முறையில் வாழத் தேவையான அடிப்படை மார்க்க அறிவையும் வளரும் பருவத்திலேயே நாம் சொல்லிக் கொடுப்பது அவசியமாகும். நாளைய சமுதாயத்தின் ஆணிவேர், இன்றைய குழந்தைகளே! எனவே குழந்தைகள் தெரிந்திருக்கவேண்டிய, (குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்)அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் எடுக்கப்பட்ட) அடிப்படை விஷயங்களைத் தொகுத்து, பகுதி பகுதிகளாக பிரித்துக் கொடுக்கும் சிறிய முயற்சி இது. ஒவ்வொரு நாளும் இவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பகுதியும் சிறு சிறு பகுதிகளாக கேள்வி-பதில் வடிவத்தில் கொடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!1 . நம்மைப் படைத்த இறைவன் யார்?

நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

2. இறைவன் நம்மை மட்டும்தான் படைத்தானா?

இல்லை. நம்மையும், வானங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி மற்றும் அதிலுள்ள கடல்கள், மலைகள், மரங்கள், மற்ற கண்ணுக்குத் தெரிந்த/தெரியாத கோடானு கோடி உயிரினங்கள், உயிரற்ற இயற்கைப் பொருட்கள் அத்தனையும் அவனே படைத்தான். 

3 . நம் இறைவன் எங்கே இருக்கிறான்?

நம் இறைவன்(அல்லாஹ்) ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4. எதனால் நாம் அல்லாஹ்வுக்கு என்றும் அஞ்சி வாழ‌வேண்டும்?

அல்லாஹ் எப்போதும்/எந்த நொடியிலும்/இரவிலும், பகலிலும்/எந்த இடத்தில் இருந்தாலும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அதனால் அவனுக்கு என்றும் அஞ்சி வாழ‌வேண்டும்.

5. அல்லாஹ்வின் அர்ஷை சுமப்பதற்கு அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டவர்கள் யார்?

வானவர்கள்(மலக்குகள்) என்ற இறைவனின் படைப்புகள்.

6. அல்லாஹ்வின் தன்மைகளில் சிலவற்றைக் கூறு.

அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு அளவில்லாத அருள் புரிபவன். நிகரில்லாத அன்பு காட்டுப‌வன். மிக்க கருணையாளன். அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் அதை மன்னிக்காமல் தண்டிப்பதில் கடுமையானவன்.(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) மற்ற பாவங்களை தான் விரும்பினால் மன்னிப்பவன்.

7. அல்லாஹ்வை நாம் எவ்வாறு அறிந்துக் கொள்கிறோம்?

திருக்குர்ஆன் கூறும் இறைவனின் அற்புதமான அத்தாட்சிகள் மூலமும் அவனுடைய இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் விளக்கிச் சென்ற வாழ்க்கைப் பாடங்களின் மூலமும் நாம் அல்லாஹ்வை அறிகிறோம்.

8. அனைத்து முஸ்லிம்களும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?

1) இவ்வுலகைப் படைத்து, பாதுகாத்து, நிர்வகித்து வருபவனும் மறு உலகின் அதிபதியுமான‌ நம் இறைவனான அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2) அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.


3) இஸ்லாமிய‌ மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.


9. அல்லாஹ்வைப் பற்றி நாம் அவசியம் தெரிந்துக்கொள்ள‌ வேண்டியவை எவை?

அல்லாஹ் ஒருவனே; அவன் எந்த தேவையுமற்றவன்; பரிசுத்தமானவன்; அவனுக்கு இணைதுணை இல்லை. அவன் யாரையும் பெறவும் இல்லை; யாராலும் பெறப்படவுமில்லை. அதனால் அவனுக்கு முன்னோர்களோ, வாரிசுகளோ, குடும்பமோ இல்லை. அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.  உணவு, உறக்கம், மறதி, மயக்கம், இயலாமை அவனுக்கு கிடையாது. அவனுக்கு நோய் நொடிகளோ மரணமோ இல்லை. 

10. அல்லாஹ்விற்கு பிரியமான‌ நேசர்கள் யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்விற்கு அதிகம் அஞ்சி, நேரான சத்திய வழியில் நடப்பவர்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்பவர்கள். அனைத்து விதமான நல்ல வணக்கங்களையும் செய்து வருபவர்கள். திருக்குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வழி முறைகளையும் மட்டுமே வாழ்க்கையில் கடைப்பிடித்து வருபவர்கள். நன்மைகளை ஏவி, தீமைகளை விட்டும் தடுப்பவர்கள். இவை அனைத்தும் பெற்றவர்கள்.28 comments:

 1. தேவையான நல்ல பகிர்வு அஸ்மா.என் பிள்ளைகளை தொடர்ந்து இந்த பகிர்வை வாசிக்க சொல்கிறேன்.மிக்க நன்றி.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  அருமையான முயற்சி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ்.நல்ல தொடக்கம்.தொடருங்கள்!

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் "இஸ்லாமிய எதிர்ப்பு காபி பேஸ்ட் பதிவு" போட்டுவிட்டு, கேள்வியும் கேடகத்தெறியாமல், அப்புறம் நாம் கேள்வி கேட்டால்... பதிலும் இல்லாமல், மீண்டும் உளரும் பின்நவீனத்துவ பிற்போக்கு பதிவர்களுக்கு அருமையான பாடம் ஆரம்பத்திருக்கிறீர்கள்...!

  சகோ.அஸ்மா, தொடரட்டும் உங்கள் பணி..!

  ReplyDelete
 5. en magalukku ippa dhaan suratul ikhlas il irundhu aarambithirukkiren..eppadi azhagaaga muraiyaaga solli koduppadhu enru yosithu kondirundhen..aarambichuteenga..thanks Asma

  Thalika

  ReplyDelete
 6. ஸலாம்.
  குழந்தைகளுக்கு பயனுள்ள பதிவு.தொடருங்கள் .....எதிபார்க்கிறோம்.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் ... மிகவும் தேவையான பதிவு அக்கா..தொடருங்கள்

  ReplyDelete
 8. ஸலாம் சகோ..

  வளரும் மொட்டுகள்,அவசியம் அறிந்து கொள்ளவேண்டியவற்றை அழகாக தொகுத்துள்ளீர்கள்,,

  இதுவல்லாது..இன்றைய பெற்றோர் உலக விஷயங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதிலும்,அதை அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதும்,வரும் சமுதாயத்தை மார்க்க அடிப்படையில் இருந்து நகர்த்திவிடும்..அவ்வாறில்லாது இருக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியமே...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
  முக்கியமானதொரு பதிவு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.தொடருங்கள்..

  ReplyDelete
 10. சகோ.அஸ்மா, தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 11. மாஷா அல்லாஹ் ,சிறந்த பணியை கையில் எடுத்துள்ளீர்கள். அல்லாஹ் தாங்களுக்கு இப்பணியை முழுமையாக, முறையாக செய்திட உதவிசெய்வானாக ஆமீன்!

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  அருமையான பதிவு தோழி

  நானும் இதைபற்றி எழுதனும் என நினைத்திருந்தேன்.என உடல்நிலை காராணமாக பதிவு எழுதவில்லை.நீங்கள் தொடருங்கள்.

  ReplyDelete
 13. @ asiya omar...

  //என் பிள்ளைகளை தொடர்ந்து இந்த பகிர்வை வாசிக்க சொல்கிறேன்//

  நிச்சயம் வாசிக்கச் சொல்லுங்க ஆசியாக்கா. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது கொடுக்கணும் என்றிருக்கிறேன். துஆ செய்யுங்கள். வருகைக்கு நன்றி ஆசியாக்கா.

  ReplyDelete
 14. @ அந்நியன் 2...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

  //அருமையான முயற்சி//

  அல்ஹம்துலில்லாஹ், துஆ செய்யுங்கள். தங்களின் வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 15. @ ஸாதிகா...

  //அல்ஹம்துலில்லாஹ்.நல்ல தொடக்கம்.தொடருங்கள்!//

  இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக தொடர்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா!

  ReplyDelete
 16. @ முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் "இஸ்லாமிய எதிர்ப்பு காபி பேஸ்ட் பதிவு" போட்டுவிட்டு, கேள்வியும் கேடகத்தெறியாமல், அப்புறம் நாம் கேள்வி கேட்டால்... பதிலும் இல்லாமல், மீண்டும் உளரும் பின்நவீனத்துவ பிற்போக்கு பதிவர்களுக்கு அருமையான பாடம் ஆரம்பத்திருக்கிறீர்கள்...!//

  குழந்தைகளுக்கான இந்த பாடம் நீங்கள் சொல்வதுபோல் (இன்ஷா அல்லாஹ்) அவர்களுக்கும் தெளிவைக் கொடுத்தால், அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷமே! துஆ செய்யுங்க சகோ. தங்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 17. @ Thalika...

  //en magalukku ippa dhaan suratul ikhlas il irundhu aarambithirukkiren..eppadi azhagaaga muraiyaaga solli koduppadhu enru yosithu kondirundhen..aarambichuteenga..thanks Asma//

  அப்படியா ருபீனா..? :) சந்தோஷம். மாதத்தில் 2 பதிவிலாவது இந்த பாடத்தை கொடுக்க முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ். கண்டிப்பா பார்த்து, குழந்தைக்கு தகுந்த மாதிரி சொல்லிக் கொடுங்கள். வருகைக்கு நன்றி ருபீனா.

  ReplyDelete
 18. @ zumaras...

  ஸலாம் சகோ.

  //குழந்தைகளுக்கு பயனுள்ள பதிவு.தொடருங்கள் .....எதிபார்க்கிறோம்//

  இன்ஷா அல்லாஹ், துஆ செய்யுங்கள். தங்களின் வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 19. @ சிநேகிதி...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் ஃபாயிஜா.

  //மிகவும் தேவையான பதிவு அக்கா..தொடருங்கள்//

  இன்ஷா அல்லாஹ், என்னால் முடிந்தவரை தொடர்கிறேன். துஆ செய்யுங்கள். வருகைக்கு நன்றி ஃபாயிஜா.

  ReplyDelete
 20. @ RAZIN ABDUL RAHMAN...

  ஸலாம் சகோ.

  //இதுவல்லாது..இன்றைய பெற்றோர் உலக விஷயங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதிலும்,அதை அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதும்,வரும் சமுதாயத்தை மார்க்க அடிப்படையில் இருந்து நகர்த்திவிடும்..அவ்வாறில்லாது இருக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியமே...//

  நீங்கள் சொல்வது மிகவும் சரியானது சகோ. அந்தக் கவலை நீண்ட நாட்களாக இருந்ததன் விளைவே இந்த முயற்சி. தொய்வின்றி இதைத் தொடர துஆ செய்யுங்கள். வருகைக்கு நன்றி சகோ ரஜின்.

  ReplyDelete
 21. @ அன்புடன் மலிக்கா...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் மலிக்கா.

  //முக்கியமானதொரு பதிவு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.தொடருங்கள்..//

  இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் எல்லா குழந்தைகளும் பயனடைய வேண்டும். துஆ செய்யுங்க தோழி. தங்க‌ள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 22. @ பாத்திமா ஜொஹ்ரா...

  //சகோ.அஸ்மா, தொடரட்டும் உங்கள் பணி//

  இன்ஷா அல்லாஹ், துஆ செய்யுங்க சகோ. தங்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 23. @ abiramamnatham...

  //அல்லாஹ் தாங்களுக்கு இப்பணியை முழுமையாக, முறையாக செய்திட உதவிசெய்வானாக ஆமீன்!//

  தங்களின் துஆவை வல்ல இறைவன் ஏற்றுக் கொள்வானாக! தங்களின் முதல் வருகைக்கும் துஆவுக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 24. @ ஆயிஷா அபுல்...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

  //நானும் இதைபற்றி எழுதனும் என நினைத்திருந்தேன்.என உடல்நிலை காராணமாக பதிவு எழுதவில்லை.நீங்கள் தொடருங்கள்//

  உடல்நிலை சரியானவுடன் பொறுமையாக வந்து எழுதுங்க தோழி. நானும் தொடர்கிறேன், இன்ஷா அல்லாஹ். துஆ செய்யுங்கள். தங்களின் வருகைக்கு நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 25. அக்கா, ஸலாம். நல்லதொரு அணி. சிறுவர்கள் மட்டுமல்லாது, இஸ்லாமை அறிய விரும்பும் மற்றவர்களுக்கும் இது தகவல் களஞ்சியமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 26. @ ஹுஸைனம்மா...

  ஸலாம் ஹுஸைனம்மா.

  //சிறுவர்கள் மட்டுமல்லாது, இஸ்லாமை அறிய விரும்பும் மற்றவர்களுக்கும் இது தகவல் களஞ்சியமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்//

  துஆ செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ்! தங்கள் வருகைக்கு நன்றிமா.

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  நல்ல முயற்சி தொடருங்கள் சகோ

  இறைவன் இதற்கான கூலியை தருவானாக

  ReplyDelete
 28. @ ஹைதர் அலி...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

  //நல்ல முயற்சி தொடருங்கள் சகோ

  இறைவன் இதற்கான கூலியை தருவானாக//

  தங்களின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ. தொடர்ந்து எழுத மேலும் துஆ செய்யுங்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!