ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது" என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!
முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அதே சமயம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!
இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.
இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. தடை செய்வதாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்தில் "X" குறியிட்டுள்ள இரண்டு வகைகள்தான் :
ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய எத்தகைய சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்தன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!
வாவ். ஆஹா. அருமை. அற்புதம். ரொம்ப ரொம்ப தெளிவா, விளக்கமா, இப்படி ஒரு கம்பீரமான ஒரு பெண்ணிய கட்டுரை படித்து எவ்வளவு நாளாச்சு..? ராணி மங்கம்மா, ஜான்சி ராணி, சாந்த் பீபி என்று எல்லா புரட்சி வீராங்கனைகளும் ஒண்ணா உட்கார்ந்து கூட்டா சேர்ந்து எழுதுன கட்டுரை போல இருக்கு. பாராட்டுக்கள். வெட்டு ஒன்னு துண்டு நூறு. அடிச்சு உடச்சு தூள் பண்ணிட்டீங்க அம்மணி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அஸ்மா...நல்லது தான் என்று நான் நினைக்கிறேன்...ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம் அதனை அணிவது...
ReplyDeleteநான் படித்தது கூட Crescent Engg. Collegeயில் தான்....என்னுடைய வகுப்பில் கூட நிறைய முஸ்லிம் தோழிகள் இருந்தாங்க..ஆனா ஒரு பொன்னு மட்டும் தான் அதனை அணிந்துவருவாங்க..மற்றவங்களை கேட்டால் அது கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது என்று சொல்லுவாங்க..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஇனி வேறு எங்கும் சென்று விபரம் அறிய அவசியமின்றி தெளிவாகவும் விரிவாகவும் பிரான்சிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட். இச்செய்தி பற்றிய இடுகைகளில் இது சிறப்பான பதிவு. மிக்க நன்றி சகோ.அஸ்மா. தங்கள் எழுத்துப்பணி சிறக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
நல்ல விளக்கமான பதிவு. கொக்கரிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
ReplyDeleteஇந்த சட்டம் இயற்ற, இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களையும் கலந்தாலோசித்துள்ளனர் என்பது புதிய செய்தி. சட்டஒழுங்கு காரணமாகத்தான் இச்சட்டம் அவசியமாகியிருக்கிறது இல்லையா? (ஆனால், சில பத்திரிகைகள்/பதிவர்கள் முஸ்லிம் பெண்களின் உரிமையைக் காக்க என்று எழுதியுள்ளார்கள். உண்மையா?)
இங்கே அமீரகத்தில்கூட, கார் கண்ணாடிகளைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் tint செய்யக்கூடாது என்று சட்டம் உண்டு. அதுவும் சட்டஒழுங்கு காரணமாகத்தான்.
as salamu alaykum,
ReplyDeletemasha allah, virivaana alasal asma. hijabukku thadai illai enbathai naanum paarthen. appa medical mask pottaalum allow seyya maattaangala??? enna youtube la niraiya sisters athai oru alternate aaga solliyirukkaanga...athaan ketten.
//ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்;//
itharkum aathaaram undumma. insha allaah mailil anuppugiren. ennaal ippothu poda mudiyavillai enraalum, naanum niqab aninthu kondirunthavale, innamum athai virumbubavale.
:)))
kadaisi varikku, kannaa pinnaavenru aatharavu tharugiren.
ReplyDeletealhamthulillah alaa kulli khayr :))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,
ReplyDeleteசகோ அஸ்மா
இது சம்பந்தமான விரிவான களப்பதிவை உங்களை எழுத சொல்லி உங்களுக்கு மெயில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன் (அல்ஹம்துலில்லாஹ்)
நீங்களே விரிவான சரியான தகவல்களுடன் பதிவிட்டுள்ளீர்கள் (ஜஸாக்கல்லாஹ் கைர்)
இன்னும் உங்களின் சொந்த வாழ்வியல் அனுபவங்களை ஹிஜாப் சம்பந்தமாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
//இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல, நம்ம இந்தியர்கள்தான்!)//
இது போன்று தவறாக எழுதக் கூடியவர்களுக்கு உங்களின் பதிவை மேற்கோள் காட்டி நான் எதிர்வினை புரிய வாய்ப்பாக இருந்திருக்கும்
நன்றி சகோ
இதே போல் இஸ்லாமிய மதத்தை சேராத பெண்களை இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி துன்புறுத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDelete//என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!//
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அவர்கள் இதையும் தெரிந்துக் கொள்ளட்டும்
இஸ்லாம் எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம்.
கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதல் தொடங்கி விட்ட இந்த கால பகுதியில் இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே (இன்ஷா அல்லாஹ்)
//Anonymous said... 8
ReplyDeleteஇதே போல் இஸ்லாமிய மதத்தை சேராத பெண்களை இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி துன்புறுத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா!
//
anony,
i think you were the same person who expressed the same thoughts in bro.suvanappiriyan's blog also, in the name of same anonymity. huh, I had already posted my comment there for you, but ;et me tell u simply here. Saudia has declared itself as Islamic country, and takes its rulings from Sharee'ah. Whereas France is a secular country and doesnt have any Official religion for itself. Compare two similar things, not North and East!!
//மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது.//
ReplyDeleteசகோ.அஸ்மா!
மிகச்சிறந்த பதிவு! செய்தியை முதலில் படித்தவுடன் நானும் கொஞ்சம் தடுமாறி விட்டேன். மிகத் தெளிவாக பிரான்ஸிலிருந்து விளக்கமளித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அஸ்மா..
ReplyDeleteஇது குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி,முஸ்லீம்கள் மத்தியில் நெருடலையும்,எதிர்கள் மத்தியில் குதூகலத்தையும் ஏற்படுத்த போதுமானதாக இருந்தது..
அவர்கள் முகத்திரையை பர்தா என சொல்லிவிட்டனர்.அது ஒருவகையில்,முஸ்லீம்களை மனதளவில் பலகீனப்படுத்த அவர்கள் செய்த உக்தியாக இருக்கலாம்.
முகத்திரைக்கான தடையாகத்தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.அதுவே சாத்தியமும் கூட..
மேலும் தங்களின் தெளிவான விளக்கமும்,கராரான பதிலும் மிகுந்த திருப்தியை தரக்கூடியதாக இருக்கிறது.
தாங்கள் ஃப்ரான்ஸில் இருப்பதாக நம்புகிறேன்..அங்கிருந்து நேரடி தகவலை தந்ததற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..
இஸ்லாம் நிபந்திக்காத ஒன்றை சட்டம் என கட்டாயப்படுத்தும் கூட்டத்தினர் இதை பெருத்த சேதமாக உணர்வார்கள்.அவர்களதான் அதை அணிய கட்டாயப்படுத்துபவர்களும் கூட..நபி(ஸல்)அவர்களே கட்டாயப்படுத்தாத ஒன்றை நிர்பந்திக்க இவர்கள் யார்??? அவர்கள் தெளிவது எப்போது..
அன்புடன்
ரஜின்
சகோதரி அஸ்மா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான, தெளிவான ஆக்கம். ஜசக்கல்லாஹ் க்ஹைர்.
சர்கோசி இந்த விசயத்தில் சற்று அவசரப்பட்டுவிட்டார் என்றே எண்ணுகின்றேன். இந்த தடை குறித்து சட்டம் கொண்டு வருவதற்கு முன்னால் இது குறித்து உளவுத்துறை ஆராய்ந்தது. பிரான்சின் மக்கள் தொகையில் பத்து-பனிரெண்டு சதவிதத்தனர் முஸ்லிம்கள். இவர்களில் சுமார் ஐநூறு பேர் மட்டுமே நிகாப் அணிவதாக உளவுத்துறை தெரிவித்தது. வெகு வெகு சொற்பமான அளவில் உள்ள ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கியது ஏனோ?
ஆக, இதில் ஏதோ உள்ளர்த்தம் உள்ளதாகவே தெரிகின்றது. கென்சா என்ற சகோதரி நிகாப் அணிந்து போராட்டம் நடத்தியதற்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
-------
ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்;
-------
இந்த வாக்கியம் சில சகோதரிகளை சங்கடப்படுத்தும்.
நிகாபின் வரலாற்றை பார்த்தோமானால் அது நாயகம் (ஸல்) அவர்களது காலம் வரை செல்கின்றது. பெண்களின் ஹிஜாப் குறித்த வசனம் இறங்கிய போது, அந்த வசனத்தை நாயகத்திடம் இருந்து கேட்ட தோழர்கள் தங்கள் மனைவி, மகள்கள், தங்கைகள், உறவின பெண்கள் என்று எல்லோரிடமும் ஓதி காட்டினர். இதனை செவியுற்ற அந்த பெண்களின் ஒரு பகுதியினர் தங்கள் ஆடைகளின் ஒரு பகுதியை கிழித்து தங்கள் முகங்களை மூடி கொண்டனர். வேறு சிலரோ தங்கள் தலைமுடிகளை மறைத்து கொண்டனர்.
பெண்கள் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாக வேறு சில ஹதீஸ்களில் இருந்தும் அறிகின்றோம். நிச்சயமாக நாயகம்(ஸல்) அவர்கள் இதனை போதிக்கவில்லை. ஆனால் அதே நேரம் அதனை கண்டிக்கவும் இல்லை. (ஹஜ் நேரங்களில் முகத்தை மூட வேண்டாமென்று சொல்லி இருக்கின்றார்கள். அது வேறு விஷயம்).
ஆக, இஸ்லாம் போதிப்பது ஹிஜாப் மட்டுமே. நிகாப் அணியும், பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த (பெரும்பாலான) சகோதரிகள் இதனை நன்கு அறிந்தே உள்ளனர். இருந்தும் அவர்கள் அணிகின்றனர் என்றால் அது அவர்களுக்கும். இறைவனுக்கும் உள்ளான விசயம். அவர்களுக்கு ஊக்கமாய் இருப்பது சகாபிய பெண்மணிகள் தான். இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றை அவர்கள் செய்யவில்லை. அவர்களின் நிலையிலிருந்து இதனை புரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். என் உறவுக்கார சகோதரி, நிகாப் அணிய எந்த பிரச்சனையும் இருக்காது என்பதற்காகவே இந்தியா வர விரும்புகின்றார்.
நிகாபிற்கு தடை விதித்ததின் மூலம் பிரான்ஸ் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கையல்ல இது என்ற போதிலும், மனித உரிமை சலசலப்பை ஏற்படுத்த போகின்றது இந்த சட்டம். ஏற்கனவே, இந்த சட்டத்தை செயல்படுத்துவது கடினம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. நிகாப் அணியும் சகோதரிகளை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.
ReplyDeleteஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.
முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.
பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வதைத்தான் பிரான்ஸ் தடை செய்துள்ளது.
முகத்திரை போட்டுக் கொள்வது மத அடையாளம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதில் இருந்து இஸ்லாத்தில் இது இல்லை என்ற கருத்தைத் தான் கூறியுள்ளார்.
முகத்திரை போட்டுக் கொண்டு தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளதில் இருந்து இதை அறியலாம்.
முகம் முன்கைகள் தவிர மற்ற உறுப்புக்களை மறைத்துக் கொள்ள அனுமதி இல்லை என்று அவர் கூறினால் அதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள் தெரிவிக்கலாம். அப்படி அவர் கூறியிருந்தால் அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொண்டு களமிறங்கிப் போராடியாக வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.
ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.
இஸ்லாம் கூறாமல் மக்ககளாக உருவாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரும் நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.
பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)
தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.
ஒரு பெண் முகத்தை மறைத்துக் கொண்டால் அவள் யாரோடும் ஊர் சுற்றலாம். கணவனுடன் செல்கிறாள் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைக்க இது வழி வகுத்துள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவிகளில் பலர் இப்படி முகம் மறைத்து செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.
முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலையில் முகத்திரை போட்டு கண்ட படி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.
சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.
முகத்தை பெண்கள் மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் தான் இதை எதிர்க்கிறார்களே தவிர பிரான்ஸின் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்திட விட முடியாது.
கேடு கெட்ட சில இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்கள் இடும் கருத்துக்களால் நமக்கு ஒன்றும் ஏற்ப்படப் போவது இல்லை உங்கள் கட்டுரை மிக தெளிவாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
மிகத் தெளிவாக எழுதி விளக்கியிருக்கீங்க,பகிர்வுக்கு நன்றி அஸ்மா!
ReplyDeletedear sister,
ReplyDeleteThe Qur'an instructs both Muslim men and women to dress in a modest way.
i hope in India most of the people ie Hindus, Christian, Sikhs, Janis etc are dressing modestly. I dont think Burka is only the modest dress in the world. Even Saree, Salwar are respectable dress. -bose
Saudia has declared itself as Islamic country...
ReplyDeleteஇஸ்லாமிய மதத்தின் மூளை சலவையில் ஊறிவர்கள் சொல்லும் பதிலே இங்கேயும் சொல்லப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடு சிறந்த மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மனித பண்பு நிறைந்த நாடு இஸ்லாம் பிரான்ஸ் இரு துருவங்கள்.
Anonymous
ReplyDelete//இஸ்லாமிய மதத்தின் மூளை சலவையில் ஊறிவர்கள் சொல்லும் பதிலே இங்கேயும் சொல்லப்பட்டுள்ளது.//
அப்புடியா? அப்புடியா?
//பிரான்ஸ் நாடு சிறந்த மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மனித பண்பு நிறைந்த நாடு//
மறுபடிக்கும் அப்புடியா?
அப்புடிப்பட்ட சிறந்த பண்பாடு உள்ள நீங்க சொந்த பெருல வந்த என்னணே ஒங்கள யாரும் அடிச்சுருவாங்களா? அண்ணே அடுத்த முறை சொந்த பெருல வந்து பண்பாடை காப்பற்றவும்
அன்பான சகோதர, சகோதரிகளுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தவிர்க்க முடியாத சில வேலைகளால் யாருக்கும் உடனே பதில் தர இயலவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். அதுவரை கருத்துக்கள் இருந்தால் பரிமாறிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் நாளை மாலை கருத்துக்களில் சந்திப்போம்.
அண்னே Anonymous
ReplyDelete//பிரான்ஸ் நாடு சிறந்த மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மனித பண்பு நிறைந்த நாடு//
அப்படியாப்பட்ட பிரான்ஸ் நாட்டின் பெண்களின் நிலையை சகோதரி தேனு சொல்வதை பாருங்கள்.
பிரான்ஸின் பெண் உரிமை:
25 நவம்பர் பெண்கள் மீதானவன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒண்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. ஆக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. ஆவ் வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி உதை சித்திரவதை என கணவன்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.
-நன்றி: பிரெஞ்சு மொழியிலிருந்து தேனுகா
பெண்கள் கவர்ச்சியாக உடை உடுத்துதலுக்கும் ஆண் பெண் இரு பாலாரும் சகஜமாக இணைந்து வேலை செய்தலுக்கும் ஆதரவளிக்கும் நபர்கள் மேற்கண்ட பிரச்னைகளுக்கு என்ன தீர்வை வைத்திருக்கிறார்கள்?
நன்றி சுவனப்பிரியன்
தெளிவான பதிவு
ReplyDeleteமாஷா அல்லாஹ்.தெளிவா சொல்லிட்டீங்க..இதில் பலருக்கும் ஒரு வித குழப்பமும் ,கோபமும் ஒரு பக்க சந்தோஷமும் கொண்டாட்டமும் தேவையே இல்லாமல் இருந்து வந்தது..உங்கள் பகிர்வால் பலருக்கும் விளக்கம் கிடைத்திருக்கும்
ReplyDeleteThalika
//dear sister,
ReplyDeleteThe Qur'an instructs both Muslim men and women to dress in a modest way.
i hope in India most of the people ie Hindus, Christian, Sikhs, Janis etc are dressing modestly. I dont think Burka is only the modest dress in the world. Even Saree, Salwar are respectable dress.//
Bose,
What is modesty, in Islam is defined by Almighty and His messenger. It is not defined by us.
In US, I have a neighbor who thinks her daughter (married with a kid) is modest even if she wears sleeveless tops and skirt which covers only up to knee. Would anyone from India say this is modesty? Who decides it?
Even now in Africa and in some parts of Native America, the tribal people are naked. Their women wear only a skirt. If they dont wear even that they think it is immodest. Now, what does Modesty mean here??
In ancient US, modesty meant long flowing gowns, full sleeved arms and hats for women. Now, modesty means half skirt, with stockings and plain tight fit shirts. Who modified the modesty - term again??
See, the man made laws are for only a short span of time. After that they again have revisions or rollbacks. God's laws are forever. Modesty defined by Almighty is modesty for ever.
I will give you another example. In 1920, USA decided to ban alcohol and they issued new rules for that. Thousands were jailed. Thousands of diseases spread because people tried to make their own wine hiding in their own houses. The government used law enforcement and everything ti could. What happened? After a misery of bloodshed and numerous diseases in 1933, the mighty govt of USA stepped back, allowed alcohol again. This mighty mighty state!! What could not be done by law and law enforcement is silently going on for ages in Islam. Why? Because it is God's rule. Everyone follows it. Because He defined it, there is no one to alter it. Either you follow or don't follow.
Hope you get it. 'We' dont make laws.'We' only abide.
@ ad.a.saf...
ReplyDelete//வாவ். ஆஹா. அருமை. அற்புதம். ரொம்ப ரொம்ப தெளிவா, விளக்கமா, இப்படி ஒரு கம்பீரமான ஒரு பெண்ணிய கட்டுரை படித்து எவ்வளவு நாளாச்சு..? ராணி மங்கம்மா, ஜான்சி ராணி, சாந்த் பீபி என்று எல்லா புரட்சி வீராங்கனைகளும் ஒண்ணா உட்கார்ந்து கூட்டா சேர்ந்து எழுதுன கட்டுரை போல இருக்கு//
அடேயப்பா... ஒருசில வரிகளில் இவ்வளவு பெரிய பாராட்டா?!! வேண்டாமே சகோ. சொல்கிறேன் என்று தவறா நினைக்கவேண்டாம். பாராட்டுகளைவிட பிரார்த்தனைகளே மிகவும் விருப்பமானது :) மற்றபடி தங்களின் முதல் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
@ GEETHA ACHAL...
ReplyDelete//நான் படித்தது கூட Crescent Engg. Collegeயில் தான்....என்னுடைய வகுப்பில் கூட நிறைய முஸ்லிம் தோழிகள் இருந்தாங்க..ஆனா ஒரு பொன்னு மட்டும் தான் அதனை அணிந்துவருவாங்க..மற்றவங்களை கேட்டால் அது கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கட்டாயம் கிடையாது என்று சொல்லுவாங்க..//
சரியாதான் சொல்லியிருக்காங்க! முகத்திரையைப் பொறுத்தவரை அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயம் இல்லை என்பதுதான் முக்கியமாக நாம் இங்கு கவனிக்கவேண்டியது. உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி கீதாச்சல் :)
@ முஹம்மத் ஆஷிக்...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இனி வேறு எங்கும் சென்று விபரம் அறிய அவசியமின்றி தெளிவாகவும் விரிவாகவும் பிரான்சிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்..... தங்கள் எழுத்துப்பணி சிறக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்//
எனக்குத் தெரிந்த விபரங்களை அது சரியானதுதானா என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு பதிவிட்டேன் சகோ. வீண் குழப்பமின்றி தெளிவு கிடைத்தது சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ் :) தங்களின் பிரார்த்தனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
@ ஹுஸைனம்மா...
ReplyDelete//நல்ல விளக்கமான பதிவு. கொக்கரிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்//
ஆமா ஹுஸைனம்மா. நடக்கும் உண்மைகளை வேண்டுமென்றே மாற்றி சொல்ல நம் இந்திய ஊடகங்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அதைப் பார்த்து சந்தோஷப்படுபவர்களாவது திருந்தட்டும்.
//சட்டஒழுங்கு காரணமாகத்தான் இச்சட்டம் அவசியமாகியிருக்கிறது இல்லையா? (ஆனால், சில பத்திரிகைகள்/பதிவர்கள் முஸ்லிம் பெண்களின் உரிமையைக் காக்க என்று எழுதியுள்ளார்கள். உண்மையா?)//
அப்படி எங்கும் ஃபிரான்ஸ் அதிபரோ வேறு யாருமோ சொல்லவில்லை. பத்திரிகைகளோ பதிவர்களோ அப்படி சொல்வது தங்களின் அறியாமையினால் இருக்கலாம். அல்லது கிடைக்கிற வாய்ப்பில் வேண்டுமென்றே இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த சொல்லி இருக்கலாம். முழு உரிமையுடன் வாழும் இஸ்லாமிய பெண்களின் உரிமையைக் காக்க(?) இவர்கள் யார்? உரிமை இல்லை என்றால் அதை சொல்லவேண்டியவர்கள் நாமல்லவா? ஆடு நனைகிறது என்று நரி அழுத கதைதான் :-)
//இங்கே அமீரகத்தில்கூட, கார் கண்ணாடிகளைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் tint செய்யக்கூடாது என்று சட்டம் உண்டு. அதுவும் சட்டஒழுங்கு காரணமாகத்தான்// அப்படியா.. நான் கேள்விப்பட்டதில்லை. தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா.
@ அன்னு...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//hijabukku thadai illai enbathai naanum paarthen. appa medical mask pottaalum allow seyya maattaangala???//
மெடிக்கல் மாஸ்க்காக இருந்தாலும், வேறு எந்தவிதமான செக்யூட்ரிகளுக்காக போடப்படும் (முகத்தை அடையாளம் தெரியாமல் மறைக்கும்) எதுவாக இருந்தாலும் அதற்கான தக்க காரணம் இருக்கவேண்டும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
//enna youtube la niraiya sisters athai oru alternate aaga solliyirukkaanga...athaan ketten//
நானும் அதைப் பார்த்தேன் அனிஷா. இதற்கு ஆல்டர்னேட்டாக நாம் ஒன்றை செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த நிகாபை நினைப்பதால் அவ்வாறு செய்கிறார்கள். ஒரு நாட்டின் சட்டம், இஸ்லாமிய சட்டத்தில் கைவைக்காதவரை இதுபோன்ற ஆல்டர்னேட்களை யோசிக்காமல், அந்த நாட்டுக்கு கட்டுப்படுவதே சிறந்தது அனிஷா.
//ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்;//
itharkum aathaaram undumma. insha allaah mailil anuppugiren. ennaal ippothu poda mudiyavillai enraalum, naanum niqab aninthu kondirunthavale, innamum athai virumbubavale.
:)))//
அதற்குரிய ஆதாரங்களாக சொல்லப்படுபவை எதுவுமே முகத்தை கட்டாயம் மறைத்தாகவேண்டும் என்பதை குறிக்கவில்லை அனிஷா. விருப்பப்பட்டால் அணிந்துக் கொள்வதில் தவறில்லை என்ற அடிப்படையில்தான் அத்தனையும் உள்ளது. உங்களிடம் உள்ளவற்றை இன்ஷா அல்லாஹ் (உங்களுக்கு முடியும்போது) மெயில் பண்ணுங்க அனிஷா. சொந்த ஊரில் நானும்தான் நிகாப் அணிவதை விரும்புவேன். அப்படிதான் அணிந்துக் கொண்டிருக்கேன். அதுபோல் நீங்க நிகாப் அணிந்து செல்வதும், அதை விரும்புவதும் உங்க விருப்பம் :)
'அதென்ன சொந்த ஊரில் மட்டும் நிகாப் அணிந்து வெளிநாடுகளுக்கு சென்றால் அணியாமல்..?' என்று நிகாப் அணிந்தே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் கேட்டுள்ளார்கள். அப்போதுதான் இஸ்லாத்தின்படி நிகாப் விஷயத்தில் 'விருப்பம்' என்ற சலுகையை கூற வாய்ப்பு கிடைத்தது. அதாவது சொந்த ஊரில் அணிவதும், வெளிநாடுகளில் அணியாமல் இருப்பதும் என்னுடைய விருப்பம். மற்றவர்களின் விருப்பம் இதில் மாறுபடலாம். 'கட்டாயம்' என்று இருக்கும் எதையும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதை செயல்படுத்த தயங்கமாட்டோம், இன்ஷா அல்லாஹ்! :)
//kadaisi varikku, kannaa pinnaavenru aatharavu tharugiren//
அதென்ன கண்ணா பின்னாவென்று ஆதரவு? :))) சந்தோஷம், அல்ஹம்துலில்லாஹ். தங்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு நன்றி அனிஷா.
@ ஹைதர் அலி...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//சகோ அஸ்மா இது சம்பந்தமான விரிவான களப்பதிவை உங்களை எழுத சொல்லி உங்களுக்கு மெயில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்//
நல்லது சகோ. அதுபோன்ற ஆலோசனைகளை உங்களைப் போன்றவர்களிடமிருந்து என்றும் எதிர்ப்பார்க்கிறேன்.
//இன்னும் உங்களின் சொந்த வாழ்வியல் அனுபவங்களை ஹிஜாப் சம்பந்தமாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்//
உண்மைதான் சகோ, எழுதியிருக்கலாம். ஆனா அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இணைய பக்கம் வருவதால் நீண்ட பதிவுகள் எழுத முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் முடிந்தால் பிற்ச்சேர்க்கையாக இணைக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி சகோ.(ஜஸாகல்லாஹு ஹைரா)
//இது போன்று தவறாக எழுதக் கூடியவர்களுக்கு உங்களின் பதிவை மேற்கோள் காட்டி நான் எதிர்வினை புரிய வாய்ப்பாக இருந்திருக்கும்//
வாய்ப்பு கிடைக்கும்போது இன்ஷா அல்லாஹ் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
@ Anonymous...
ReplyDelete//இதே போல் இஸ்லாமிய மதத்தை சேராத பெண்களை இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மத சட்டங்களின் படி துன்புறுத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டும் அல்லவா!//
அனானிமஸ், முதலில் நீங்கள் சொந்த பெயரில் வந்தால் நல்லது. "இஸ்லாமிய மத சட்டங்களின் படி துன்புறுத்துவது" என்று எதைச் சொல்கிறீர்கள்? திருடியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா? விபச்சார வழக்கில் கைதானவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா? அல்லது ஆடையைக் குறைத்து வீதியில் உலா வருபவர்களுக்கு கொடுக்கப்படும் அபராதங்களா? எதையுமே குறிப்பிடாமல் "துன்புறுத்துவதை" என்று மட்டும் சொன்னால் எப்படி விளக்கம் தரமுடியும்?
நியாயமின்றி செய்யும் எந்த அரசாங்கமும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே! அதேசமயம் எந்த மதத்தைச் சார்ந்த நாடாக இருந்தாலும், எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு நாடாக இருந்தாலும் 'இந்த குற்றம் புரிந்தால் இன்ன தண்டனை', 'இன்னின்ன விஷயங்கள் இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது' என்று ஒரு அரசாங்கம் அறிவித்த பிறகு, அதை அந்த நாட்டின் சட்டமாகதான் எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, 'இது இஸ்லாமியர்களுக்கான அபராதம்/தண்டனை' 'இது மற்ற மத்ததினருக்கான தண்டனை' என்று நீங்களாகவே பிரித்துக்கொண்டு எப்படி குற்றம் சாட்ட முடியும்? எந்தவொரு நாட்டிலும் குற்றவியல் சட்டங்கள் எல்லா தரப்பினருக்கும் பொதுவானதாகவே இருக்கும், அப்படிதான் இருக்க முடியும் என்பதை நீங்கள் விளங்கியிருந்தால் இந்தக் கேள்வியே கேட்டிருக்கமாட்டீர்கள் அனானிமஸ்!
@ ஹைதர் அலி...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..
//அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அவர்கள் இதையும் தெரிந்துக் கொள்ளட்டும்
இஸ்லாம் எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம்.
கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதல் தொடங்கி விட்ட இந்த கால பகுதியில் இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே (இன்ஷா அல்லாஹ்)//
சத்தியமே என்றும் நிலைத்து நிற்கும் இன்ஷா அல்லாஹ்!
@ சுவனப்பிரியன்...
ReplyDelete//செய்தியை முதலில் படித்தவுடன் நானும் கொஞ்சம் தடுமாறி விட்டேன். மிகத் தெளிவாக பிரான்ஸிலிருந்து விளக்கமளித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி//
நீங்கள் சொன்னவுடன் உங்களின் பதிவையும் பார்த்தேன் சகோ. உடனே பிற்ச்சேர்க்கையாக சேர்த்துவிட்டது சந்தோஷம் :) உங்களுடைய நற்பணிகளும் தொடர வல்ல இறைவன் உதவி செய்வானாக! நீங்களும் துஆ செய்யுங்கள். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
@ RAZIN ABDUL RAHMAN...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//அவர்கள் முகத்திரையை பர்தா என சொல்லிவிட்டனர்.அது ஒருவகையில்,முஸ்லீம்களை மனதளவில் பலகீனப்படுத்த அவர்கள் செய்த உக்தியாக இருக்கலாம்//
எனக்குத் தெரிந்தவரை அப்படியில்லை சகோ. ஒவ்வொரு விதமான ஹிஜாபுக்கும் ஒவ்வொரு பெயரைப் பயன்படுத்துகிறார்கள். அதில் முகம் முழுக்க(கண்கள் உட்பட) மூடும் முறையை 'புர்கா' என்கிறார்கள். (மேலே படத்தைப் பாருங்கள்). ஆனா நமக்கு 'புர்கா' என்பது 'ஹிஜாப்' என்று பழக்கப்பட்டுவிட்டதால் அவர்களின் செய்தி குழப்பிவிட்டது.
//மேலும் தங்களின் தெளிவான விளக்கமும்,கராரான பதிலும் மிகுந்த திருப்தியை தரக்கூடியதாக இருக்கிறது// அல்ஹம்துலில்லாஹ்!
//தாங்கள் ஃப்ரான்ஸில் இருப்பதாக நம்புகிறேன்..// ஆமா சகோ :) இருப்பது ஃபிரான்ஸில்தான்.
//இஸ்லாம் நிபந்திக்காத ஒன்றை சட்டம் என கட்டாயப்படுத்தும் கூட்டத்தினர் இதை பெருத்த சேதமாக உணர்வார்கள்// அல்லாஹ் காப்பாற்றணும்!
//நபி(ஸல்)அவர்களே கட்டாயப்படுத்தாத ஒன்றை நிர்பந்திக்க இவர்கள் யார்??? அவர்கள் தெளிவது எப்போது..//
நியாயமான கேள்வி. அல்லாஹ்வும் ரசூலும் கட்டாயப்படுத்தாத ஒன்றைக் கட்டாயமாக்க யாருக்கும் அதிகாரமில்லை. மக்கள் தெளிவு பெறட்டும், இன்ஷா அல்லாஹ்! தங்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றி சகோ.
@ தமிழ்வாசி - Prakash...
ReplyDelete//உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: செவ்வாய் பெண்கள் சரமாக!//
அறிமுகத்திற்கும் தங்களின் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சகோ :)
@ Aashiq Ahamed...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//பிரான்சின் மக்கள் தொகையில் பத்து-பனிரெண்டு சதவிதத்தனர் முஸ்லிம்கள். இவர்களில் சுமார் ஐநூறு பேர் மட்டுமே நிகாப் அணிவதாக உளவுத்துறை தெரிவித்தது. வெகு வெகு சொற்பமான அளவில் உள்ள ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கியது ஏனோ?//
நான் 2000 பேர் என்று படித்தேன். எண்ணிக்கை எத்தனையாக இருக்கட்டும். நீங்கள் சொல்வதுபோல் ஐநூறு பேரையும் அனுமதிப்பதால் அதே முகத்திரை அணிந்து திருட்டு, குழந்தைக் கடத்தல், வயதுப் பெண்களைக் கடத்தி செல்லுதல், கொலை, வங்கிக் கொள்ளைகள் போன்றவைகளைச் செய்யும் சமூக விரோதிகளை எவ்வளவு கேமரா வைத்தாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அநியாயங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால்தான் அதன் வலி புரியும் சகோ. நீங்கள் சொல்வதுபோல் எண்ணிக்கை வெகு வெகு சொற்பமேயானாலும் ஃபிரான்ஸைப் பொறுத்தவரை அதனால் வரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.
//ஆக, இதில் ஏதோ உள்ளர்த்தம் உள்ளதாகவே தெரிகின்றது. கென்சா என்ற சகோதரி நிகாப் அணிந்து போராட்டம் நடத்தியதற்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்//
அதன் உள்நோக்கத்தை அல்லாஹ் மிக அறிந்தவன்! சர்கோஸி சரியானவர், ஃபிரான்ஸ் கொள்கைகள் சரியானவை என்று சொல்ல வரவில்லை. முகத்திரைக்காக கொண்டுவந்த சட்டமும், சொல்லும் காரணங்களும் நியாயமானவை. இஸ்லாத்திற்கு எதிரானவையும் அல்ல! அப்படியிருக்க அவர்கள் செய்யும் போராட்டம் அர்த்தமில்லாதது. ஒரு சகோதரி மட்டுமில்லை, 50 பேர் கைது செய்யப்பட்டார்கள். மார்க்கம் கட்டாயமாக்கிய ஒன்றில் அவர்கள் கை வைத்திருந்தால் அந்த 50 பேருக்கு பதில் ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டிருப்போம், என்னையும் சேர்த்தே!
//-------
ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்;
-------
இந்த வாக்கியம் சில சகோதரிகளை சங்கடப்படுத்தும்//
"முகத்தை பெண்கள் மறைத்தே ஆகவேண்டும்" என்பது 'தவறான புரிதல்' இல்லை என்றால்தானே சங்கடப்படவேண்டும் சகோ? நிச்சயமாக அது "கட்டாயம்" என்பது தவறான புரிதலே எனும்போது, அதை தவறென்று சுட்டிக்காட்டாமல் வேறு எப்படி சொல்ல முடியும் சொல்லுங்கள்? தர்காவுக்கு சென்று அங்கு கையேந்துவது தவறான புரிதலால்தான் என்று சொன்னால், 'அதனால் சில சகோதரிகளோ, சகோதரர்களோ சங்கடப்படுவார்கள், சொல்லாதீர்கள்' என்று தடுப்பீர்களா சகோ? தவறை தவறென்று சொல்லாவிட்டால் சரியான மார்க்கத்தை நமக்கு தந்த இறைவன் கோபப்படமாட்டானா? நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதுதானே இஸ்லாம்? இங்கு "கட்டாயம்" என்ற தவறான புரிதல் ஒரு தீமை! 'கட்டாயமில்லை; மறைப்பதில் தவறுமில்லை; அது விருப்பத்தின் அடைப்படையில் உள்ளது' என்று சொல்லவேண்டியது நம் கடமை!
(ஒரே பதிலாக இட்டால் நீளமான கருத்து, accept பண்ண முடியாது என்று எரர் மெஸ்ஸேஜ் வருகிறது. அதனால் இரண்டாக பிரித்து கொடுத்துள்ளேன். அடுத்த பதிலையும் இதன் தொடர்ச்சியாக படித்துக் கொள்ளுங்கள் சகோ.)
@ Aashiq Ahamed...
ReplyDelete(உங்களுக்கான பதிலின் தொடர்ச்சி)
ஒரு சட்டத்தைத் தவறாக புரிந்துக் கொள்வதில் 3 வகையுள்ளது.
1)காலம் காலமாக அவர்களுக்கு சொல்லப்பட்டு வந்ததை குர்ஆன், ஹதீஸ் வழியில் சரிதானா என்று பார்க்காமல் இருப்பதால்.
2)அவர்களுக்கு முன் எடுத்து வைக்கப்படும் ஆதாரங்கள் தெளிவான முறையில் ஆராயப்படாமலோ, அல்லது அவை பலகீனமான ஆதாரங்களாகவோ இருக்கும். அதை சரியென்று நம்பி அதன்படி புரிந்து வைத்திருப்பார்கள்.
3)தானோ தன்னைச் சேர்ந்தவர்களோ வெறுக்கக்கூடிய ஒரு தனி நபரோ அல்லது இயக்கமோ எடுத்து வைக்கும் சட்டங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியாகவே இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்காததால் அதை மறுப்பதற்காகவே தவறான புரிதலில் நீடிப்பது.
இவைதான் கண்கூடாக நடந்துக் கொண்டிருக்கிறது சகோ.
//இதனை செவியுற்ற அந்த பெண்களின் ஒரு பகுதியினர் தங்கள் ஆடைகளின் ஒரு பகுதியை கிழித்து தங்கள் முகங்களை மூடி கொண்டனர். வேறு சிலரோ தங்கள் தலைமுடிகளை மறைத்து கொண்டனர்//
"தங்கள் முகங்களை" என்பதற்கு அங்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவும் தவறான புரிதலில் உள்ளதுதான். இதுபற்றி இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுத இருக்கிறேன் சகோ. அப்போது தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
//பெண்கள் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாக வேறு சில ஹதீஸ்களில் இருந்தும் அறிகின்றோம். நிச்சயமாக நாயகம்(ஸல்) அவர்கள் இதனை போதிக்கவில்லை. ஆனால் அதே நேரம் அதனை கண்டிக்கவும் இல்லை//
இதைத்தானே நாம் கேட்கிறோம் சகோ? :) நபி(ஸல்)அவர்கள் போதிக்காதது, அவர்கள் கண்டிக்கவும் செய்யாதது, எப்படி கட்டாயமாகும்? அவரவர் விருப்பம், அவ்வளவே!
//அவர்களுக்கு ஊக்கமாய் இருப்பது சகாபிய பெண்மணிகள் தான். இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றை அவர்கள் செய்யவில்லை. அவர்களின் நிலையிலிருந்து இதனை புரிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்//
நிகாபை அணியவும் செய்யலாம், அணியாமலும் இருக்கலாம் என்ற சரியான சட்டத்தைப் புரிந்து வைத்துள்ளவர்களுக்கு ஊக்கமாய் இருப்பதும் அதே ஸஹாபிய பெண்மணிகள்தான் சகோ :) ஏனெனில் இரண்டு விதமாகவும் ஸஹாபியப் பெண்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்கள்.
//நிகாபிற்கு தடை விதித்ததின் மூலம் பிரான்ஸ் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது//
ஃபிரான்ஸின் மற்ற தடைகள், அனுமதிகள் என்ற ஆய்வுக்குள் செல்லாமல், முகத்திரை தடையைப் பொறுத்தவரை அது தவறே இல்லை சகோ. (மேலே சொன்ன காரணங்களைப் படித்திருப்பீர்கள்). ஆனால் நாளை முழு ஹிஜாபுக்கும் கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கலாம்! அப்போது அதைக் கண்டிக்கவும், அதற்கு கட்டுப்படாமல் இருக்கவும் இன்ஷா அல்லாஹ் துணிவோம்! அதற்காக 'முகத்திரைத் தடை' தவறு என்பதை(சொந்த அபிப்பிராயமாக அல்லாமல்) 'இஸ்லாத்தின் அடிப்படையில்' ஒப்புக்கொள்ள முடியாது சகோ.
//நிகாப் அணியும் சகோதரிகளை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்// அணியாதவர்களையும் சேர்த்தே இன்ஷா அல்லாஹ் இறைவன் பாதுகாப்பான் :)
இதில் நான் கூறியுள்ளவை எதிர்வாதத்திற்காக அல்ல. இது விவாதக் களமும் அல்ல :) தங்களின் கருத்துக்கு ஒரு விளக்க பதில், அவ்வளவே! எனவே கருத்துப் பரிமாற்றங்கள் தவறல்ல என்று எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் :) மேலும் சொல்லவேண்டிய கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்கள், வரவேற்கிறேன். தங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோ.
@ அந்நியன் 2...
ReplyDelete//அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.
ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை//
சரியான கருத்து சகோ.
//இஸ்லாத்தை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்திட விட முடியாது. கேடு கெட்ட சில இஸ்லாமிய எதிர்ப்பு பதிவர்கள் இடும் கருத்துக்களால் நமக்கு ஒன்றும் ஏற்ப்படப் போவது இல்லை//
நிச்சயமா சகோ, நாம் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நம் தரப்பு விளக்கத்தை அவர்களுக்கு பொதுவில் புரியவைக்க வேண்டும். அதனால்தான் இந்த இடுகையின் கடைசி பாரா :) தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.
@ S.Menaga...
ReplyDelete//மிகத் தெளிவாக எழுதி விளக்கியிருக்கீங்க,பகிர்வுக்கு நன்றி அஸ்மா!//
நமக்கு சம்மந்தமில்லை என்று போகாமல் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி மேனகா :)
அன்பு சகோதரி அஸ்மா அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
-------நான் 2000 பேர் என்று படித்தேன். ----
In France, where there is an inflamed debate on the matter right now, the first investigation carried out by the police last year found that there were 367 women in France who wore burka or Niqab – 0.015% of the population. This was so low that the secret service was told to count again, and came up with a figure of 2,000; http://www.guardian.co.uk/commentisfree/andrewbrown/2010/mar/10/religion-islam
தவறு என்னுடையது தான். அப்டேட் ஆன தகவல் தெரியாமல் இருந்து விட்டேன்.
------
நீங்கள் சொல்வதுபோல் ஐநூறு பேரையும் அனுமதிப்பதால் அதே முகத்திரை அணிந்து திருட்டு, குழந்தைக் கடத்தல், வயதுப் பெண்களைக் கடத்தி செல்லுதல், கொலை, வங்கிக் கொள்ளைகள் போன்றவைகளைச் செய்யும் சமூக விரோதிகளை எவ்வளவு கேமரா வைத்தாலும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அநியாயங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால்தான் அதன் வலி புரியும் சகோ. நீங்கள் சொல்வதுபோல் எண்ணிக்கை வெகு வெகு சொற்பமேயானாலும் ஃபிரான்ஸைப் பொறுத்தவரை அதனால் வரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.
------
முகத்திரைக்கும், முகமூடிக்கும் வித்தியாசங்கள் உண்டு. எத்தனை பெண்கள் முகத்திரை அணிந்து நீங்கள் மேலே கூறியது போன்ற குற்றங்களை செய்திருக்கின்றனர் என்று பிரான்சு நாட்டு காவல் துறையின் புள்ளி விவரங்கள் ஏதாவது இருக்கின்றதா சகோதரி?
முகத்திரையை தடை செய்த பிரான்ஸ், சமூகத்துக்கு குந்தகம் விளைவிக்கும் மற்ற தவறான பழக்கங்களை தடை செய்யவில்லையே? (இதற்குள் நான் செல்ல வேண்டாம்)
சரி, பாதுகாப்பை காரணம் காட்டி அவர்கள் முகத்திரையை தடை செய்தார்களா சகோதரி? அப்படி இருந்தால் அது நிச்சயம் பரிசீலிக்கபட வேண்டியது.
ஆனால் பிபிசி சொல்கின்றது,
The French government says the face-covering veil undermines the basic standards required for living in a shared society and also relegates its wearers to an inferior status incompatible with French notions of equality.
http://www.bbc.co.uk/news/world-europe-13031397
ஆக, பிரஞ்சு அரசாங்கம் கூறுவது பாதுகாப்பு காரணங்களை அல்ல.
----
ReplyDeleteஅதன் உள்நோக்கத்தை அல்லாஹ் மிக அறிந்தவன்!
-----
நிச்சயமாக. ஆனால் ஊடகங்களில் வந்த காரணம், முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தால் வோட்டுகளை அள்ளலாம் என்று சர்கோசி கணக்கிடுவதால் தான் என்று கூறுகின்றன.
What is more open to question, he says, is whether an out-and-out legal ban is necessary when, on most estimates, only 2,000-or-so women in France actually wear the niqab or burka. Critics of French President Nicolas Sarkozy say it suits him to play up the Muslim question because he is an unpopular president in need of an easy vote-winner.
http://www.bbc.co.uk/news/world-europe-13031397
---
முகத்திரைக்காக கொண்டுவந்த சட்டமும், சொல்லும் காரணங்களும் நியாயமானவை.
----
எங்கு சென்றால் அந்த சட்டத்தை நான் முழுமையாக படிக்கலாம்? நிகாப் அணிந்தவர்களை inferior என்று எண்ணுகின்றது பிரஞ்சு அரசாங்கம். இதில் உங்களுக்கு உடன்பாடா சகோதரி? இது நியாயமான காரணமா சகோதரி?
----
அதை தவறென்று சுட்டிக்காட்டாமல் வேறு எப்படி சொல்ல முடியும் சொல்லுங்கள்? தர்காவுக்கு சென்று அங்கு கையேந்துவது தவறான புரிதலால்தான் என்று சொன்னால், 'அதனால் சில சகோதரிகளோ, சகோதரர்களோ சங்கடப்படுவார்கள், சொல்லாதீர்கள்' என்று தடுப்பீர்களா சகோ? தவறை தவறென்று சொல்லாவிட்டால் சரியான மார்க்கத்தை நமக்கு தந்த இறைவன் கோபப்படமாட்டானா? நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதுதானே இஸ்லாம்?
-----
என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நிகாப் என்பது அவசியமில்லை என்பதை அந்த சகோதரிகள் நன்றாக உணர்ந்தே உள்ளனர் என்று தான் கூறினேன் (நீங்கள் இதற்கு எதிர்மாறாக கூறியிருந்தீர்கள்). மேலும், நிகாப் அணிபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இஸ்லாத்தை தழுவிய பெண்கள். நன்கு ஆராய்ந்து இஸ்லாமை தழுவும் இவர்கள், நிகாப் அவசியமில்லை என்பதை அறியாமலா இருப்பர்?
The most fascinating figure of all, though, came from the Danish researchers, who actually interviewed some of the covered women. Most were young, or at least under forty, and half of them were white converts.
http://www.guardian.co.uk/commentisfree/andrewbrown/2010/mar/10/religion-islam
ஒரு சகோதரியுடம் நான் போய் "நிகாப் அவசியமில்லை' என்று சொல்கின்றேன். அவர் கூறுகின்றார் "எனக்கு தெரியும். அதே நேரம் இதனை நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. நான் என் பாதுகாப்புக்காக அணிகின்ரேன். இது எனக்கும் இறைவனுக்குமான ஒன்று" என்று கூறினால் நான் என்ன முடியும்? அவரை அப்படி அணிய வேண்டாமென்று கட்டாயப்படுத்தினால் இறைவன் முன்னால் நான் குற்றவாளியாக நிற்பேன் அல்லவா?
-----
ReplyDeleteதங்கள் முகங்களை" என்பதற்கு அங்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுவும் தவறான புரிதலில் உள்ளதுதான். இதுபற்றி இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுத இருக்கிறேன் சகோ. அப்போது தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
-----
தவறு என்றால் திருத்தி கொள்ள தயாராகவே இருக்கின்றேன் சகோதரி. இன்ஷா அல்லாஹ் எழுதுங்கள்.
----
ஃபிரான்ஸின் மற்ற தடைகள், அனுமதிகள் என்ற ஆய்வுக்குள் செல்லாமல், முகத்திரை தடையைப் பொறுத்தவரை அது தவறே இல்லை சகோ. (மேலே சொன்ன காரணங்களைப் படித்திருப்பீர்கள்).
----
நான் மேலே கூறியவற்றை ஒருமுறை பரிசீலனை செய்யவும்.
----
இதில் நான் கூறியுள்ளவை எதிர்வாதத்திற்காக அல்ல. இது விவாதக் களமும் அல்ல :) தங்களின் கருத்துக்கு ஒரு விளக்க பதில், அவ்வளவே! எனவே கருத்துப் பரிமாற்றங்கள் தவறல்ல என்று எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் :) மேலும் சொல்லவேண்டிய கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்கள், வரவேற்கிறேன்
----
தங்களின் இந்த கருத்தை மதித்தே இந்த மறுமொழியை பதிக்கின்றேன் சகோதரி.
என்னை பொருத்தவரை, பிரான்ஸ் இந்த விசயத்தில் நடந்து கொண்ட விதம் துரதிஷ்டவசமானது. யாரையோ திருப்திபடுத்த எடுத்த வித்தை. அவ்வளவே...
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ்...
ReplyDeleteநல்ல விளக்கமான பதிவு.
***வாஞ்ஜுர்***
..........
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
===>1. இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
===>2.
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
===>3.
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
===>4.
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
===>5.
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
.......
@ bose...
ReplyDeleteசகோதரர் அவர்களுக்கு,
தோழி அன்னு அவர்கள் உங்களுக்கு தந்த பதில் போதுமானது என்று நினைக்கிறேன். இதுவரை அவர்களின் பதிலைப் பார்க்காமல் இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
ReplyDeleteDear sister Asma,
Jazakkalah kheir for sharing this with us. Nice article, i love niqab !
----
"ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை", i'm not really agreed with you in this !
Some days ago i heard that a headmaster prohibits a mother to go into a school for wearing hijab.
----
"சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும்...", he's not the only one who has a bad view on ISLAM, the most famous is Marine LE PEN.
We can guess that she hates ISLAM in a debate on secularism, wich was broadcast on french TV(france 2) in february 2011...
----
But if we go in the past of the france, we can see that before girls was allowed to wear hijab at school [...]
So first they banned the wearing of hijab at school, Now they banned the niqab/sittar... What will happen tomorrow ?! I think the next would be the jilbeb, after the hijab, unfortunately... But i don't hope it !!!
----
Personally, i used to wear the niqab only in INDIA... I only feel more protection from ALLAH(swt), ALHAMDULLILAH... That's why i want to live there...
Today in France, we can only wear niqab in suburbs... If we get fine because of the niqab, we have to send it to this association :
Association "Toucha pas à ma Constitution"
15 rue de la paix
94200 Choissy-Le-Roi
France
They will pay it... beacuse they support niqabis, ALHAMDULLILAH...
Please forward this address to all sister who wear the niqab(if you know some of them).
----
Please, read my article about niqab :
http://abi-shameena.blogspot.com/2010/10/why-have-they-banned-wearing-of-niqab.html
http://abi-shameena.blogspot.com/2011/03/why-do-i-love-niqab-why-too-many-women.html
And also watch this short movie movie of 15min, in french with english subtitles :
http://www.youtube.com/watch?v=HBFaHuqhNW8&sns=fb
----
In human rights, it saud that we free of expression...
Sisters who express they freedom by wearing the niqab are frowned...
But people who don't preserve they modesty are really free...
Should we pay to preserve our modesty ?!
Should we stop following some rule of the sunnah to be free in france ?!
Hope that the french government will understand it, as soon as possible, INSHA'ALLAH...
Your sister,
M.Shameena
@ ஹைதர் அலி...
ReplyDelete//ஹைதர் அலி said...
Anonymous
//இஸ்லாமிய மதத்தின் மூளை சலவையில் ஊறிவர்கள் சொல்லும் பதிலே இங்கேயும் சொல்லப்பட்டுள்ளது.//
அப்புடியா? அப்புடியா?
//பிரான்ஸ் நாடு சிறந்த மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மனித பண்பு நிறைந்த நாடு//
மறுபடிக்கும் அப்புடியா?//
'அப்புடியா?' என்ற ஒரு வார்த்தையிலேயே பலநூறு பதில்கள் நிறைந்திருக்கு சகோ :)))) அவர்கள் புரிந்துக் கொண்டால் சரிதான்.
//அப்புடிப்பட்ட சிறந்த பண்பாடு உள்ள நீங்க சொந்த பெருல வந்த என்னணே ஒங்கள யாரும் அடிச்சுருவாங்களா?//
அதுதான் எனக்கும் புரியல சகோ. என்ன செய்ய.. சில அனானி கமெண்ட்களை நாகரிகம் கருதியும், தேவையில்லாத கருத்து மோதல்களைத் தவிர்க்கவும் வெளியிடாமல் டெலிட் பண்ண வேண்டியுள்ளது. அறிமுகப்படுத்தாமல் அனானியாக வருவது ஒரு திறமை என்று நினைத்துக் கொண்டார்கள். அது கோழைத்தனம் என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. தாங்கள் பொறுப்புணர்வோடு அவர்களுக்கு பதில் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.
@ Abu Nadeem...
ReplyDelete//தெளிவான பதிவு//
வருகைக்கு நன்றி சகோ.
@ Thalika...
ReplyDelete//இதில் பலருக்கும் ஒரு வித குழப்பமும் ,கோபமும் ஒரு பக்க சந்தோஷமும் கொண்டாட்டமும் தேவையே இல்லாமல் இருந்து வந்தது..உங்கள் பகிர்வால் பலருக்கும் விளக்கம் கிடைத்திருக்கும்//
அல்ஹம்துலில்லாஹ்! குழப்பங்கள் எப்போதுமே தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும். நமக்கு தெரிந்த விபரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதைப் பகிர்ந்துக் கொள்வதால் அந்த குழப்பம் தீரும் என்றிருந்தால், நம் முயற்சி கொஞ்சமேயானாலும் அதற்கும் நன்மையுண்டு, இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ருபீனா.
@ அன்னு...
ReplyDeleteசகோ. Bose க்கு பல உதாரணங்களோடு தக்க பதில் தந்ததற்கு மிக்க நன்றி அனிஷா :)(ஜஸாகல்லாஹு ஹைர்)
@ Aashiq Ahamed...
ReplyDelete//முகத்திரைக்கும், முகமூடிக்கும் வித்தியாசங்கள் உண்டு//
வித்தியாசம் இல்லையென்று சொல்லவில்லை. அதேசமயம் 'முக அடையாளத்தைக் காண முடியாது' என்ற இரண்டுக்கும் உள்ள தன்மை ஒன்றுதான் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. பாதுகாப்பு கருதி முகத்திரையை மட்டும் தடை செய்யவில்லை. முகமூடியும் கூட தடைதான்.
//எத்தனை பெண்கள் முகத்திரை அணிந்து நீங்கள் மேலே கூறியது போன்ற குற்றங்களை செய்திருக்கின்றனர் என்று பிரான்சு நாட்டு காவல் துறையின் புள்ளி விவரங்கள் ஏதாவது இருக்கின்றதா சகோதரி?//
அஸ்தஃபிருல்லாஹ்! முகத்திரை அணிந்த இஸ்லாமிய பெண்கள் மேலே கூறியது போன்ற குற்றங்களை செய்திருக்கின்றனர் என்று நான் கூறவில்லை சகோ. நன்றாக படித்துப் பாருங்கள். 'அவர்களைப் போல் முகத்திரை அணிந்த நிலையில்' அந்த குற்றங்கள் நடக்கும்போது, குற்றவாளிகளை இனம் காண முடியவில்லை என்ற நிதர்சனமான உண்மையைதான் கூறினேன். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள் பரவலாக நடந்தாலும் ஒன்றை மட்டும் கூறுகிறேன்.
(சமீபத்தில்) ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் கூட ஆகாத, பிறந்து இரண்டே நாள் ஆன பச்சிளம் குழந்தையை, தாய் சற்று நகர்ந்த சமயம் பார்த்து முகத்திரை அணிந்த ஒரு பெண் தூக்கிச் செல்கிறாள். இங்கு மாலை ஏழு மணிக்கு மேல் டிஸ்சார்ஜ் தரமாட்டார்கள். டிஸ்சார்ஜ் இல்லாத அந்த நேரத்தில் குழந்தையோடு ஒரு பெண் செல்வது செக்யூரிட்டி கேமராவில் பார்க்கப்பட்டு உடனே அவர்கள் பின் தொடர்ந்து செல்ல, அதே நேரத்தில் பெற்ற தாயும் பதறிப்போய் ஓடிவந்து குழந்தைக் காணாத செய்தியைச் சொல்ல, வேகமான/உடனடியான முயற்சியால் அவள் பிடிக்கப்படுகிறாள். விசாரித்துப் பார்த்ததில் அவள் இஸ்லாமிய பெண் அல்ல! ஆஃப்ரிக்க நாட்டைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண். உடனே பிடிபட்டதால் தாய்க்கு குழந்தை கிடைத்தது. 2 நிமிஷங்கள் தாமதமாக பார்த்திருந்தாலும் அந்த சம்பவம் கேமராவில் பதியப்பட்டிருக்குமே தவிர, முகத்திரையுடன் சென்ற குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் முடியாது; குழந்தையும் மீட்கப்பட்டிருக்காது.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், அந்த குழந்தையும் தாயும் இஸ்லாமியர்கள்! அதனால்தான் முகத்திரை அணிந்து வந்தால், தூக்கி செல்வது பெற்ற தாய் என்று பார்ப்பவர்கள் ஏமாறுவார்கள் என்ற தைரியம் அந்த கடத்தல்காரிக்கு! இதற்கு என்ன சொல்வீர்கள் சகோ?
ஆக, இஸ்லாமியர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களைதான் குறிப்பிட்டிருந்தேன்; நிகாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் செய்கிறார்கள் என்று கூறவில்லை; அதுபோல் இறைவன் உதவியால் இதுவரை நடந்ததும் இல்லை.
//ஆக, பிரஞ்சு அரசாங்கம் கூறுவது பாதுகாப்பு காரணங்களை அல்ல//
எனக்குத் தெரிந்து கூறப்பட்டுள்ள காரணம் 'பாதுகாப்பு' என்பதுதான். ஒரு செய்தியில் 'முகத்திரை என்பதும், சீக்கியர்களின் தலைப்பாகையும் மத அடையாளங்களுக்கான ஆடைகள், அதனாலும்தான் தடை செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது தனிப்பட்ட ஒரு நபரின் பேட்டியாக இருந்ததாக ஞாபகம். எனக்குத் தெரிந்து அரசாங்க அறிவிப்பில் அப்படியில்லை.
@ Aashiq Ahamed...
ReplyDelete//எங்கு சென்றால் அந்த சட்டத்தை நான் முழுமையாக படிக்கலாம்?//
இந்த செய்திகளை நான் படித்தது ஃப்ரெஞ்ச் தளங்களில். நீங்கள் விரும்பினால் அந்த லிங்க் தருகிறேன். கேட்டது இங்குள்ள டிவி சேனல்களில்.
//நிகாப் அணிந்தவர்களை inferior என்று எண்ணுகின்றது பிரஞ்சு அரசாங்கம். இதில் உங்களுக்கு உடன்பாடா சகோதரி? இது நியாயமான காரணமா சகோதரி?//
நாம் இந்த தலைப்பில் பேசுவது 'முகத்திரை தடை சட்டத்தில் உள்ள உண்மைகளையும், அதற்கு கூறும் காரணத்தின் நியாயங்களையும்' தான் சகோ. மற்றபடி அவர்களின் உண்மையான எண்ணங்களைப் பற்றி ஆராயவும் இல்லை, அந்த எண்ணங்களுக்கு கொடி பிடிக்கவுமில்லை. எப்படியோ அவர்கள் எண்ணித் தொலையட்டும். ஆனால் 'அதில் உங்களுக்கு உடன்பாடா' என்று நீங்கள் கேட்டதுதான் வருத்தமாக உள்ளது. ஏனெனில் பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்துள்ள உரிமைகளை (இறைவன் உதவியால்) அறிந்து வைத்துள்ளேன். சொந்த ஊரில் இதுவரை நிகாப் இல்லாமல் வெளியில் சென்றதில்லை. என்னுடைய விருப்பத்தை அங்கு செயல்படுத்தும் நான் எப்படி அதற்கு உடன்பட முடியும்?
//என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நிகாப் என்பது அவசியமில்லை என்பதை அந்த சகோதரிகள் நன்றாக உணர்ந்தே உள்ளனர் என்று தான் கூறினேன். (நீங்கள் இதற்கு எதிர்மாறாக கூறியிருந்தீர்கள்)//
நான் அவர்களை நன்கு புரிந்துதான் சகோ கூறியிருந்தேன். மீண்டும் விளக்குகிறேன். "நிகாப் என்பது அவசியமில்லை என்பதை அந்த சகோதரிகள் நன்றாக உணர்ந்தே உள்ளனர்" என்ற உங்களுடைய யூகம் தவறானது சகோ. பள்ளிக்கு தொழ செல்லும்போது நிகாப் அணியாத எத்தனையோ பெண்கள் இருந்தாலும், என்னிடம் ஓரளவு பழகியவர்கள் 'நீங்கள் நிகாப் அணியாமல் இருப்பது ஹராம்' என்று ஃபத்வா கொடுப்பார்கள். அப்போதைக்கு எவ்வளவு தூரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சொன்னாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அந்தளவுக்குதான் அவர்களின் புரிதல் உள்ளதே தவிர நீங்கள் சொன்ன நிலையில் அவர்கள் கிடையாது. அல்லாஹ்வும், ரசூலும் ஹலாலாக்கியதை ஹராமாக்கி ஃபத்வா கொடுக்க இவர்கள் யார்? இப்போது சொல்லுங்கள் நான் எதிர்மாறாக கூறியிருந்தேனா, அவர்களின் தவறான கொள்கையைக் கூறியிருந்தேனா?
@ Aashiq Ahamed...
ReplyDelete//நன்கு ஆராய்ந்து இஸ்லாமை தழுவும் இவர்கள், நிகாப் அவசியமில்லை என்பதை அறியாமலா இருப்பர்?//
கண்டிப்பாக இல்லை சகோ. அதிகமதிகமான பேர் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்து, அதை விரும்பியவுடனே இஸ்லாத்திற்கு வருகிறார்களே தவிர நீங்கள் சொல்வதுபோல் சட்டங்களை அலசி, ஆராயும்வரை காத்திருந்து வரவில்லை. வந்த பிறகு யாருடன் அவர்கள் இருப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்களின் வழியில் தொடர்கிறார்கள். உதாரணமாக, இஸ்லாமியர்களாக இருந்துக் கொண்டே இஸ்லாத்தை சரியாக விளங்காமல் இருக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் மூலம் வந்தவர்கள் அதே இணை வைக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். இங்கு தர்காக்கள் இல்லாவிட்டாலும் தட்டு, தகடு, தாயத்து, பேய்/பிசாசு ஓட்டுதல், மௌலிது, பில்லி/சூனியம் நீக்குவது போன்ற அனைத்து முஸீபத்துகளையும் நோட்டீஸ் அடித்து, விளம்பரப்படுத்தி செய்பவர்கள் உண்டு. புதிதாக வந்து அவர்களோடு சேரக்கூடியவர்கள் அதுபோலவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இதைப் போலவே 'நிகாப் கட்டாயம்' என்பதாக புரிந்து வைத்திருப்பவர்களோடு அவர்களுக்கு அதிக பழக்கம் இருந்தால் அதையேதான் அவர்கள் நம்புகிறார்கள். இன்னும் நிறைய உதாரணங்கள் உள்ளன. அப்படியிருக்க " நிகாப் அவசியமில்லை என்பதை அறியாமலா இருப்பர்?" என்ற உங்கள் கேள்வியும் உங்கள் யூகத்தில் தோன்றியதாகதான் இருக்கிறது சகோ.
//அவரை அப்படி அணிய வேண்டாமென்று கட்டாயப்படுத்தினால் இறைவன் முன்னால் நான் குற்றவாளியாக நிற்பேன் அல்லவா?//
"நிகாப் அவசியமில்லை" என்று நீங்கள் ஒருவரிடம் சொல்வது தவறில்லை. ஆனால் அதையே அணிய வேண்டாமென்று நீங்கள் கட்டாயப்படுத்துவதில் யார் மீதும் உங்களுக்கு உரிமை இல்லை. ஏனெனில் நீங்கள் ஒரு தனிப்பட்ட நபர். அதேசமயம் ஒரு அரசாங்கம் (அது இஸ்லாமிய அரசாங்கமோ வேறு எந்த அரசாங்கமோ) பாதுகாப்பு காரணங்களைக் கூறி அந்த கட்டளையை இட்டால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை இறைவன் குற்றம் பிடிக்கமாட்டான். புரிந்துக் கொள்ளுங்கள் சகோ.
//தவறு என்றால் திருத்தி கொள்ள தயாராகவே இருக்கின்றேன் சகோதரி. இன்ஷா அல்லாஹ் எழுதுங்கள்//
அல்ஹம்துலில்லாஹ்! இந்த வரிகளில் நீங்கள் கூறியுள்ளது, நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டிய இஸ்லாம் சொல்லும் நற்பண்புகளில் ஒன்று சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா)
//தங்களின் இந்த கருத்தை மதித்தே இந்த மறுமொழியை பதிக்கின்றேன் சகோதரி// நன்றி சகோ.
//என்னை பொருத்தவரை, பிரான்ஸ் இந்த விசயத்தில் நடந்து கொண்ட விதம் துரதிஷ்டவசமானது. யாரையோ திருப்திபடுத்த எடுத்த வித்தை. அவ்வளவே...//
சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சியாளன் அந்த அல்லாஹ்தஆலா! அதனால் அதைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஆனால் கொண்டு வந்த சட்டத்தினால் இஸ்லாத்திற்கோ அதை நாம் பின்பற்றுவதற்கோ எந்த பாதிப்பும் எள்ளளவும் இல்லை. அதைச் சொல்வதே இந்தக் கட்டுரையின் முதன்மையான நோக்கம்! தங்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி சகோ.
Thank you for the explanation. I beleive every one has thier right to religious freedom. I could not understand it when i read in news as to how they can do away with this rule. Your posts clarified it.
ReplyDelete@ Anonymous...
ReplyDelete//Saudia has declared itself as Islamic country...
இஸ்லாமிய மதத்தின் மூளை சலவையில் ஊறிவர்கள் சொல்லும் பதிலே இங்கேயும் சொல்லப்பட்டுள்ளது//
சொல்லக்கூடிய பதிலின் உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளாத, இஸ்லாத்திற்கு எதிரான கருத்தில் மூளைச் சலவை செய்யப்பட்ட உங்களைப் போன்றவர்களைப் புரிய வைப்பது கஷ்டம்தான் அனானி.
//பிரான்ஸ் நாடு சிறந்த மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால் மனித பண்பு நிறைந்த நாடு இஸ்லாம் பிரான்ஸ் இரு துருவங்கள்//
அது சரி, அது சரி, ரொம்ம்ம்.....ம்ப சரியா சொல்லிட்டீங்களே(?)! எந்த மதம் சிறந்த மதம் என்ற விவாதம் இங்கு நடக்கவில்லை. அது வீணானதும் கூட. ஏனெனில் இஸ்லாம் என்பது மதமல்ல; நேரிய மார்க்கம்! ஆனா பண்பு நிறைந்த(?) நாட்டில் நடக்கும் கேடுகெட்ட கலாச்சாரத்தைதான் அணுதினம் பார்த்துக் கொண்டிருக்கோமே, எங்களுக்கு தெரியாதா என்ன..? அதனால் 'இஸ்லாம் பிரான்ஸ் இரு துருவங்கள்' என்பதில் சந்தேகமேயில்லை அனானி. அடுத்த முறை ஒளிந்துக் கொண்டு கோழையாக பேசாமல் சரியான முகம் காட்டி பேசுங்கள்!
@ ***வாஞ்ஜுர்***...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ்...
நல்ல விளக்கமான பதிவு//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி சகோ.
@ ஏம்.ஷமீனா...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//"ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை", i'm not really agreed with you in this !
Some days ago i heard that a headmaster prohibits a mother to go into a school for wearing hijab//
ஷமீனா, ஒரு ஸ்கூலின் ஹெட்மாஸ்டர் ஹிஜாபுடன் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்பதால் "ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை" என்ற உண்மை நிலையை நீங்கள் மறுக்கிறீர்கள். அவர் ஒரு raciste (இனவெறி, மதவெறி) கொண்டவராக இருக்கலாம். ஏன், அவர் தடுத்துவிட்டார் என்பதால் ஃபிரான்ஸில் எங்குமே நாம் ஹிஜாப் அணியாமல்தான் செல்கிறோமா? இல்லையே? ஆக தனிப்பட்ட ஒருவர் சொல்வதெல்லாம் நாட்டின் சட்டமாக ஆகிவிடாது சகோதரி. நான் சொன்னது ஃபிரான்ஸின் சட்டத்தைதான்! இனி அதுபோன்ற ஒரு சட்டத்தை அரசாங்கமே கொண்டு வந்தால் அப்போது நம் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்!
//"சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும்...", he's not the only one who has a bad view on ISLAM, the most famous is Marine LE PEN.
We can guess that she hates ISLAM in a debate on secularism, wich was broadcast on french TV(france 2) in february 2011...//
LE PEN உடைய ஆட்சியாக இருந்தால் அவரைக் குறிப்பிட்டிருக்கலாம். சர்கோஸி கொண்டுவந்த சட்டத்தைப் பற்றிய தலைப்பில் LE PEN போன்றவர்களைப் பேசுவது பொருத்தமற்றது என்றுதான் குறிப்பிடவில்லை.
//So first they banned the wearing of hijab at school, Now they banned the niqab/sittar... What will happen tomorrow ?!//
ஸ்கூல் உள்ளே மாணவிகளுக்கு ஹிஜாபைத் தடை செய்தார்கள் என்பது உண்மைதான். அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் பணம் செலவானலும் பரவாயில்லை என்று இஸ்லாமிக் ஸ்கூலில் தங்கள் பிள்ளைகளை மாற்றினார்கள். எப்படியும் வாழலாம் என்ற எண்ணமுடையவர்கள் 'எங்கள் பிள்ளையை அதுபோல் ஸ்கூலுக்கு நாங்கள் அனுப்பினால் உங்களுக்கென்ன? ஸ்கூல் உள்ளேதானே போடக்கூடாது' என்று சொல்லிக் கொண்டே தொடர்ந்து அனுப்புகிறார்கள். சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் சேர்ந்து கோரிக்கை முன்வராதபோது, பாதிக்கப்படாத மற்றவர்கள் அதற்காக முயற்சி எடுக்க முடியாமல் இந்நிலை நீடிப்பது வேதனையான விஷயமே! ஆனால் நிகாப் அப்படியல்ல. அது இஸ்லாத்தில் சலுகை தரப்பட்ட ஒன்று. So போராட வேண்டிய அவசியமில்லை.
@ ஏம்.ஷமீனா...
ReplyDelete//If we get fine because of the niqab, we have to send it to this association :
Association "Toucha pas à ma Constitution"//
//They will pay it... beacuse they support niqabis, ALHAMDULLILAH...//
"Touche pas à ma Constitution" அமைப்பை செய்திகளில் நானும் பார்த்தேன். அதன் நிறுவனர் 'Rachid Nekkaz' அரசியல் லாபத்திற்காக (உள்நோக்கம், அல்லாஹ் அஃலம்) இதை அறிவித்திருப்பதாக இஸ்லாமிய மக்களே உறுதி செய்தாலும், நான் கேட்பது 2 விஷயம்:
1. நபி(ஸல்)அவர்களால் வலியுறுத்தப்பட்ட 'தாடி' என்ற சுன்னத்தைப் பேணாத இவர், வலியுறுத்தப்படாத நிகாபுக்கு சப்போர்ட் பண்ணி, தேவையே இல்லாமல் ஒரு அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்? 2012 ல் வரவிருக்கும் அரசியல் போட்டியில் தன்னை முன்னிறுத்த அல்லவா?
2. அவர் இந்த அபராதத் தொகையை ஏற்றுக்கொள்வது ஃபிரெஞ்ச் அரசாங்கத்திற்கு ஒரு வருமானம் என்பதைத் தவிர, அதன் மூலம் இந்த தடைக்கு என்ன தீர்வு காணப் போகிறார்?
//Please forward this address to all sister who wear the niqab(if you know some of them)//
இந்த சட்டத்தை இன்னும் அறியாமல் யாராவது அபராதம் செலுத்தும் நிலை வந்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தெரிவிக்கிறேன், ஷமீனா. ஆனால் 'முகத்தைத் திறந்திருப்பது ஹராம்' என்ற கொள்கையில் வேண்டுமென்றே நீடிப்பவர்களுக்கு துணைப் போவதில் எனக்கு விருப்பமில்லை, மன்னிக்கவும் சகோதரி.
//Please, read my article about niqab//
இன்ஷா அல்லாஹ், பொறுமையாக வந்து படிக்கிறேன் :)
//In human rights, it saud that we free of expression...
Sisters who express they freedom by wearing the niqab are frowned...//
இங்கு மற்றவர்கள் விரும்பி அணியும் ஆடைகள் பல ஒழுக்க சீரழிவுகளை ஏற்படுத்தும், ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஷமீனா. இஸ்லாத்தில் நமக்கு விருப்பம் கொடுக்கப்பட்ட ஒரு ஆடையான 'நிகாப்' அதுபோன்ற சீரழிவுகளை நிச்சயமாக ஏற்படுத்துவதில்லை. இது தெளிவான விஷயம். ஆனால் சமூக விரோதிகள் பலரும் தான்செய்யும் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக அதை பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த நியாயமான காரணத்தைக் குறிப்பிட்ட ஒரு சட்டம், அது இஸ்லாத்தின் சட்டங்களைப் பாதிக்காத வரை, எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கு நாம் கட்டுப்படுவதே இஸ்லாம் கூறும் சிறந்த முறை!
//Should we stop following some rule of the sunnah to be free in france?!//
முகத்தைத் திறந்திருப்பதும் சுன்னத்திற்கு மாற்றமில்லையே? வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி ஷமீனா.
ஒரு சின்ன வேண்டுகோள் :) அடுத்த முறை உங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்ந்துக் கொண்டீர்களானால், நல்ல கருத்துக்கள் நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் சென்றடையும் இன்ஷா அல்லாஹ்.
@ இலா...
ReplyDelete//I could not understand it when i read in news as to how they can do away with this rule. Your posts clarified it//
வாங்க இலா. உங்களுக்கும் தெளிவு கிடைத்தது சந்தோஷம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இலா.
Assalamu Aleykum,
ReplyDeletedear sister Asma,
thanks for your answer,
Sorry but i can't write in tamil, only some words !!!
I can only speak, and read !
I'll answer to your reply in message insha'allah...
Your sister,
M.Shameena
அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் தெளிவான விளக்கங்களுடன் நன் முறையில் சொல்லியிருக்கிங்க.. நன்று
ReplyDelete@ ஏம்.ஷமீனா...
ReplyDelete//Assalamu Aleykum,
dear sister Asma,
thanks for your answer,
Sorry but i can't write in tamil, only some words !!!
I can only speak, and read !//
வ அலைக்குமுஸ்ஸலாம் ஷமீனா! பரவாயில்லமா, தமிழில் எழுதுவீர்கள் என்று நினைத்துதான் சொன்னேன். உங்களுக்கு உதவிக்கு யாராவது இருந்தால் (தமிழ் டைப்பிங்க்கு) முயற்சி செய்து பாருங்கள்.
//I'll answer to your reply in message insha'allah...//
எனக்கு மெயில் பண்ணுவீங்களா?
@ சிநேகிதி...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் மிகவும் தெளிவான விளக்கங்களுடன் நன் முறையில் சொல்லியிருக்கிங்க.. நன்று//
வ அலைக்குமுஸ்ஸலாம் ஃபாயிஜா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அஸ்மா மிகச்சரியான அலசல், அழகான தெளிவான விளக்கம்.இதனால் புரியாதவரக்ளுகு புரிந்திருக்கும்//
ReplyDeleteஅனானிகள் , ஏன் பதுங்கி பதில் அளிக்கனும்,
ஏன் யார் உங்க பெயருடன் யார் என்னன்னு போட்ட
யார் அந்த அனானி என்று தெரிந்து கொள்ளலாமே/
@ Jaleela Kamal...
ReplyDelete//அஸ்மா மிகச்சரியான அலசல், அழகான தெளிவான விளக்கம்.இதனால் புரியாதவரக்ளுகு புரிந்திருக்கும்//
புரிபவர்கள் சரியான முறையில் புரிந்துக் கொண்டால் சரிதான் ஜலீலாக்கா!
//அனானிகள் , ஏன் பதுங்கி பதில் அளிக்கனும்,
ஏன் யார் உங்க பெயருடன் யார் என்னன்னு போட்ட
யார் அந்த அனானி என்று தெரிந்து கொள்ளலாமே//
அதுதான் ஏற்கனவே நீங்க சொன்ன ஐடியாவ செய்து பார்க்கணும்னு இருக்கேன் ஜலீலாக்கா. ஒளிந்துக் கொண்டு பின்னூட்டமிடும் கோழைகளில் சிலர், ஒரு நேரத்தில் ஒரிஜினல் பெயரிலும் இன்னொரு இடத்தில் அனானியாகவும் வருவதும் நடக்கிறது. அதுபோன்ற பின்னூட்டங்களை அலட்சியப்படுத்திவிட்டு, டெலிட் பண்ணி குப்பையில் போட்டாச்சு :) விட்டுப் பிடிப்போம், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஇறையருளால் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.சிந்திக்க வைக்கும் பயன்பாடு மிக்க கட்டுரை. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக மேலதிக பின்னூட்டங்கள் வேறு., எனினும் என்னின் சிறுகருத்துக்களும் இங்கு இணைய சிலவரிகள்,மார்க்க ரீதியாக நிகாப் அணிவதற்கு எந்த ஆதாரமில்லை(?)யென்று அணுகும் அதே வேளையில் அதற்கான எந்த தடையும் மார்க்கத்தில் இல்லை. பொதுவாக., மார்க்கத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதற்கு குர்-ஆன்,சுன்னாவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் அச்செயல் புரிவது கூடும். ஆனால் உலக விசயங்களை பொறுத்தவரை அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் தவிர மற்றவற்றை புரியலாம். இதை அளவுகோலாக கொள்ளும்போதும், மேலும் நம் பெண்கள் (என் சகோதரியும், சகோதரியுமான உங்களையும் சேர்த்தே)..வாழும் கால நிலை சஹாபா பெருமக்கள் வாழும் அக்கால சூழல் போன்றா இருக்கிறது? இல்லை என்பதே தெளிவான உண்மை.ஆக, நிகாப் என்பது மார்க்கம் சொல்லா நிலை தவிர்த்தாலும் உலகரீதியாக பெண்கள் மேலதிக பாதுகாப்பு கருதி அணிவதை தவறேன்று சொல்வதற்கு எவர்களுக்கும் உரிமையில்லையே...
சகோதரி அவர்கள் சொல்வதுப்போல் நாட்டின் சட்ட ஒழுங்கை சீர் செய்ய முகத்திரை அணிவது கூடாதென்றால்.. அங்கு சட்டத்தின் முறைமையே தான் மாற்றி அமைக்க வேண்டுமே தவிர.. அதற்கான ஒரு காரணியாக முகத்திரையே சொல்லக்கூடாது ஏனெனில் முகத்திரை... அவர்கள் மொழியில் முகமுடி அணிந்து மடடுமே ஏனைய எல்லா குற்றங்களும் நடப்பதாக கொண்டால் அதற்கு முகத்திரைக்கான தடை நல்லதொரு வழிமுறையாக அமையும் ஆனால் நிகழ் காலத்தில் அப்படியில்லையே.... அவர்கள் முன் வைக்கும் அனைத்து குற்றங்களும் முகமுடி அணிந்தும், அஃது அணியாமலுமே தானே நடைபெறுகிறது., ஆக முகத்திரை நீக்கம் நம் பார்வையில் குற்றங்களை வேண்டுமானால் குறைக்கலாமே தவிர அவர்கள் எண்ணுவது போல் குற்றங்களை இல்லாமல் ஆக்காது.இன்னும் சற்று உள் நோக்கி சென்றால் நிகாப் அணியாமல் ஹிஜாப் மட்டும் அணிந்தாலும் மேற்கூறும் சட்டத்தை மீண்டும் நியாயப்படுத்தலாம்.ஆம்! தடைச்செய்யபட்ட பொருட்களை எளிதாக மறைத்து எடுத்து செல்ல ஏனைய உடைகளை விட ஹிஜாப் நிலையிலேயே இன்னும் வசதி அதிகம். ஆக பாதுகாப்பு கருதி நாளை ஹிஜாப் மீது குறை கண்டால்...
எப்போதும் தவறுகளுக்கான அடிப்படை தான் ஆராயபட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டுமே தவிர அதற்கான காரணமாக தோன்றுவதெல்லாம் தடைச்செய்ய முற்படுவது சரியான காரணமாகாது...
ஆக, நிகாப் கட்டாயமாக அணிய வேண்டுமென்பது எப்படி தனி மனித உரிமையில் தலையிடுவது போலாகுமோ., அதுப்போல அஃது விரும்பி அணிவதை தடைசெய்வதும் தனி மனித உரிமை மீறல் என்பதே என் எண்ணம்.இங்கு வாதம் புரிவது என் நோக்கமல்ல... சகோதரி என்ற முறையில் என் வார்த்தைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தவ(று)றாக இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்
இறை நாடினால் இனியும் சந்திப்போம்
-ஓர் இறை அடிமை
@ G u l a m...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... அல்ஹம்துலில்லாஹ், நலமே!
மேலே எடுத்து வைக்கப்பட்ட கருத்துக்களும் விளக்கங்களும் இந்த தலைப்பு சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் ஓரளவு போதுமானதாக உள்ளது(அல்ஹம்துலில்லாஹ்). ஆனாலும் அதே கருத்திலேயே உங்களுடைய பின்னூட்டமும் இருப்பதால் மீண்டும் விளக்கம் சொல்லும் நிலையில் தள்ளப்பட்டுள்ளேன். ஹைர், அல்லாஹ் போதுமானவன்!
//என்னின் சிறுகருத்துக்களும் இங்கு இணைய சிலவரிகள்,மார்க்க ரீதியாக நிகாப் அணிவதற்கு எந்த ஆதாரமில்லை(?)யென்று அணுகும் அதே வேளையில் அதற்கான எந்த தடையும் மார்க்கத்தில் இல்லை//
"மார்க்க ரீதியாக நிகாப் அணிவதற்கு எந்த ஆதாரமில்லை"யென்று நான் எங்கு சொல்லியிருந்தேன் சகோ? நிகாப் அணிவது கட்டாயம் என்பதற்குதான் ஆதாரமில்லையென்று சொல்லியிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் எங்காவது நான் சொல்லியிருந்தால், அப்படி சொன்ன இடத்தை தயவுசெய்து சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
//பொதுவாக., மார்க்கத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதற்கு குர்-ஆன்,சுன்னாவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் அச்செயல் புரிவது கூடும்// நிச்சயமா.
//நிகாப் என்பது மார்க்கம் சொல்லா நிலை தவிர்த்தாலும் உலகரீதியாக பெண்கள் மேலதிக பாதுகாப்பு கருதி அணிவதை தவறேன்று சொல்வதற்கு எவர்களுக்கும் உரிமையில்லையே...//
"மேலதிக பாதுகாப்பு கருதி" என்று காரணம் சொல்வதுபோல் அதே "பாதுகாப்பு" கருதிதானே அதை தடையும் செய்கிறார்கள்? ஒரு நாட்டின் பாதுகாப்பை அந்த அரசாங்கம் முடிவு செய்யும்போது அது மார்க்கத்திற்கு இடையூறு வராத நிலையில், அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குதான் நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
//அவர்கள் முன் வைக்கும் அனைத்து குற்றங்களும் முகமுடி அணிந்தும், அஃது அணியாமலுமே தானே நடைபெறுகிறது., ஆக முகத்திரை நீக்கம் நம் பார்வையில் குற்றங்களை வேண்டுமானால் குறைக்கலாமே தவிர அவர்கள் எண்ணுவது போல் குற்றங்களை இல்லாமல் ஆக்காது//
முகத்திரை அணியாமலும் எத்தனையோ மோசமான குற்றங்கள் நடப்பதை இல்லையென்று யாரும் சொல்லவில்லை சகோ. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் குற்றங்களைக் குறைக்கதான் இதுவும் ஒரு வழியாக அவர்கள் மேற்கொள்கிறார்கள். இதில் குறைக்காண எந்த நியாயமும் இல்லை.
//தடைச்செய்யபட்ட பொருட்களை எளிதாக மறைத்து எடுத்து செல்ல ஏனைய உடைகளை விட ஹிஜாப் நிலையிலேயே இன்னும் வசதி அதிகம்//
தடைச் செய்யப்பட்ட பொருட்களை மறைத்து எடுத்துச்செல்ல குளிருக்கு அணிந்து செல்லும் கோட்டு கூடதான் வசதியானது சகோ. ஏன், ஒரு ஷால் கூட போதுமே! ஹிஜாபில் அப்படி முடியாது.
//பாதுகாப்பு கருதி நாளை ஹிஜாப் மீது குறை கண்டால்...//
இதற்கான பதில் இந்த பதிவின் கடைசியில் உள்ளது, பாருங்கள்.
//நிகாப் கட்டாயமாக அணிய வேண்டுமென்பது எப்படி தனி மனித உரிமையில் தலையிடுவது போலாகுமோ., அதுப்போல அஃது விரும்பி அணிவதை தடைசெய்வதும் தனி மனித உரிமை மீறல் என்பதே என் எண்ணம்//
தனி மனித உரிமை மீறல்..? இது தனியே ஒரு தலைப்பில் பேசவேண்டியது சகோ.
//இங்கு வாதம் புரிவது என் நோக்கமல்ல... சகோதரி என்ற முறையில் என் வார்த்தைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தவ(று)றாக இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்...//
உங்கள் கருத்தை நீங்கள் சொன்னீர்கள் சகோ, என் விளக்கத்தை நான் சொன்னேன். அதில் ஆட்சேபணை இருந்தாலும் சொல்லுங்கள். அதற்கு முன் முந்திய பின்னூட்டங்களில் சொல்லப்பட்டவற்றை மீண்டும் படித்துப் பாருங்கள்.
மற்றபடி தவறொன்றுமில்லை :) வருகைக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் நன்றி சகோ.