Friday, 11 November 2011

ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)

தற்போது எல்லா இஸ்லாமிய இல்லங்களிலும் குர்பானி கறி பகிரப்பட்டு பலவிதமான சமையல்களும் செய்த வண்ணமிருக்கும் இந்த நேரத்தில், பீஃபில் செய்யும் இந்த ரெசிபி உதவியாக இருக்கலாம். இது மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். எந்தவித மசாலா பொடிகளும் கிடையாது. மசாலா வாசனை இல்லாமல் சமைக்க விரும்பும் நேரங்களில்கூட இதுபோன்று செய்யலாம். ரொம்ப சிம்பிளும்கூட!
பெயர்க் காரணம்: ஹகீம் = டாக்டர் (வைத்தியர்). மசாலா இன்றி செய்வதற்கு ஏதோ ஒரு காலத்தில் வைத்தியர்கள் சொல்லித்தந்த முறை என்பதால் இதற்கு 'ஹகீம் பொரியல்' என்ற இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள். அதுபோல் இந்த முறையில் செய்வது 4, 5 நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும் என்பதற்காக‌, காடுகளில் வேட்டையாட செல்பவர்கள் இதுபோன்று எடுத்துச் செல்வார்கள் என்பதால் 'காட்டுக்கறி' என்றும் சொல்வார்கள்.


தேவையான பொருட்கள்:

(எலும்பில்லாத‌) பீஃப் - 400 கிராம்
காய்ந்த மிளகாய் - சுமார் 8
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுமார் 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:பீஃப் துண்டுகளை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு, வினிகர் சேர்த்து, காய்ந்த மிளகாயையும் நறுக்கி அதில் போட்டு பிரட்டி 1/2 மணி நேரம் ஊற‌வைக்க‌வும்.
ஊறிய கறியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிரஷ்ஷர் குக்கரில் போட்டு, (மீடியம் ஹீட்டில்) 3 விசில் வரை வேகவிடவும்.வெந்தவுடன் நன்கு சுருளவிட்டு இறக்கவும். மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஹகீம் பொரியல் (காட்டுக்கறி) ரெடி! மிளகாயுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம், லெமன் ரைஸ் போன்ற அனைத்துக்கும் நல்ல காம்பினேஷன்!

16 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  அஸ்மா இது மாதிரி நானும் செய்வேன்.அறுசுவையிலும் கொடுத்துருக்கிறேன். போன ஹஜ்ஜு பெருநாள் திண்டுக்கலில் கொண்டாடிய போது அங்குள்ளவர்கள் சொல்லி கொடுத்தார்கள். ஆஹா... அதன் எண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசி... கிட்ட தட்ட உப்புகண்டம் மாதிரியே தான் இருக்கும். வெளியூர்க்கு போறவங்களுக்கு செஞ்சு கொடுப்பாங்களாம் அடிக்கடி. யாராவது சென்னைக்கு போறதா இருந்தா இதையும் மத்தினி ஊறுகாயும் (மீன் வித் கடுகு சாஸ்) குடுத்துவிடுவாங்களாம்...

  பகிர்வுக்கு நன்றி பா. பெயர் காரணம் வித்தியாசமா இருக்கு. முன்பு பெயர் தெரியாததால் நா ஈசி உப்புகண்டன்ம்னு பேரு வச்சேன் ஹி...ஹி....ஹி...

  ReplyDelete
 2. குர்பானி கறி வறுவல் என்று இதனை எங்க வீட்டில் காலம் காலமாக செய்து வருகிறோம்,ஆனால் இந்த வினிகர் சேர்த்தது கிடையாது,நான் கூட ஒரு தளத்தில் குறிப்பாக கொடுதிருக்கிறேன்..பார்க்க நாவூறுதே!

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அஸ்மா - உல் ஹுஸ்னா அருமையாக உள்ள‌து. ஆனால் அந்த வீடியோவில் இசையை அவர்கள் தவிர்த்திருக்கலாம். அதுவுமில்லாமல் ஒரு கச்சேரிபோல அதை ஆக்கியிருக்கிறார்கள். வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 4. @ ஆமினா...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //அஸ்மா இது மாதிரி நானும் செய்வேன்.அறுசுவையிலும் கொடுத்துருக்கிறேன். போன ஹஜ்ஜு பெருநாள் திண்டுக்கலில் கொண்டாடிய போது அங்குள்ளவர்கள் சொல்லி கொடுத்தார்கள்//

  அறுசுவைக்கு இப்போதெல்லாம் அதிகமாக வரமுடியாததால் நான் உங்களின் குறிப்பைப் பார்க்க முடியவில்லை ஆமினா. நேரம் கிடைக்கும்போது இன்ஷா அல்லாஹ் பார்க்கிறேன்.

  //ஆஹா... அதன் எண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு ருசி... கிட்ட தட்ட உப்புகண்டம் மாதிரியே தான் இருக்கும்//

  உப்புகண்டம் மாதிரிதான், ஆனால் ஃப்ரெஷ்ஷாக செய்வதால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

  //பெயர் காரணம் வித்தியாசமா இருக்கு. முன்பு பெயர் தெரியாததால் நா ஈசி உப்புகண்டன்ம்னு பேரு வச்சேன் ஹி...ஹி....ஹி...//

  ஈசி உப்புகண்டமா? :) 'திடீர் உப்புகண்டம்', 'ஃப்ரெஷ் உப்புகண்டம்' இப்படிகூட பெயர் வைக்கலாம் போலிருக்கே... நீங்க வச்ச பெயரிலிருந்து இன்னும் இரண்டு பெயர் உருவாக்கிட்டேன் ;))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

  ReplyDelete
 5. @ asiya omar...

  //குர்பானி கறி வறுவல் என்று இதனை எங்க வீட்டில் காலம் காலமாக செய்து வருகிறோம்,ஆனால் இந்த வினிகர் சேர்த்தது கிடையாது//

  சாதாரண நாட்களில் செய்தாலும் அதன் பெயரே 'குர்பானி கறி வறுவல்'தானா? :) வினிகர் சேர்த்து ஊறவைத்தால் நல்ல மிருதுவாக இருக்குமே. அடுத்த முறை சேர்த்து செய்துபாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா.

  குர்பானி கறி காலியான பிறகு பதிவு போட்டு இருக்கீங்களே.ஓகே பரவா இல்லை .

  ஹகீம் போரியல், காட்டுக்கறி பெயர் வித்தியாசமாக இருக்கு. நாங்கள் மிளகாய்த்தூள், உப்பு , இஞ்சி பூண்டு போட்டு விரவி, குக்கரில் எண்ணெயில் வேகவிட்டு, தண்ணி வத்தவிட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுப்போம்.

  நான் வினிகர் யூஸ் பண்ண மாட்டேன் , வினிகர் வேக வைக்க தானே தோழி

  பகிர்வுக்கு நன்றி தோழி .

  ReplyDelete
 7. அஸ்மா இந்த கறி வறுவல் முறையை குர்பானி கறி அதிகமாக இருக்கும் பொழுது மட்டுமே நாங்கள் செய்வதுண்டு,அதனால் தான் அந்த பெயர்.மற்ற நேரம் இந்த முறைப்படி செய்வதில்லை.வெளியூர் கொடுத்து விட்டால் கூட கெடுவதில்லை..

  ReplyDelete
 8. @ ஆயிஷா அபுல்...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா.

  //குர்பானி கறி காலியான பிறகு பதிவு போட்டு இருக்கீங்களே.ஓகே பரவா இல்லை//

  காலியாயிடுச்சா.. :) ஏற்கனவே எடுத்து வைத்த ஃபோட்டோஸ் இருந்தது. திடீர்னு ஞாபகம் வந்ததும் போட்டேன்பா.

  //நான் வினிகர் யூஸ் பண்ண மாட்டேன் , வினிகர் வேக வைக்க தானே தோழி//

  ரைஸ் வினிகர், ஆப்பிள் வினிகர் போன்றவைதான் நாங்களும் யூஸ் பண்ணுவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி .

  ReplyDelete
 9. @ asiya omar...

  //அஸ்மா இந்த கறி வறுவல் முறையை குர்பானி கறி அதிகமாக இருக்கும் பொழுது மட்டுமே நாங்கள் செய்வதுண்டு,அதனால் தான் அந்த பெயர்.மற்ற நேரம் இந்த முறைப்படி செய்வதில்லை//

  ஓ.. அப்படியா..? இந்த முறை ரொம்ப ஃபேவரைட் என்பதால் எங்க மெனுவில் அப்பப்போ இருக்கும் :)

  //வெளியூர் கொடுத்து விட்டால் கூட கெடுவதில்லை..//

  ஆமா ஆசியாக்கா. அதான் நானும் பெய‌ர்க் காரணத்திலேயே குறிப்பிட்டுவிட்டேன் :)

  ReplyDelete
 10. அஸ்மா. குர்பாணி கறி ,க் க்ாய போட்ட கறி என சொல்துண்டு.
  வெளி்யூர்ு கொடுத்து அனுப்பஇப்படி செய் த்அனுப்புவாஅர்கள்.

  ரொம்ப் தெளிவ்ாக போட்டு இருக்கிீங்க

  ReplyDelete
 11. எங்கள் வீட்டில் வேறு முறையில் செய்வார்கள்.. இந்த காட்டு கறி மிகவும் விதியாசமாக இருக்கு...

  ReplyDelete
 12. @ VANJOOR...

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 13. @ Jaleela Kamal...

  //அஸ்மா. குர்பாணி கறி ,க் க்ாய போட்ட கறி என சொல்துண்டு.
  வெளி்யூர்ு கொடுத்து அனுப்பஇப்படி செய் த்அனுப்புவாஅர்கள்.

  ரொம்ப் தெளிவ்ாக போட்டு இருக்கிீங்க//

  ஆமா ஜலீலாக்கா, வெளியூர் பயணங்களுக்கும் ஏற்றதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 14. @ சிநேகிதி...

  //எங்கள் வீட்டில் வேறு முறையில் செய்வார்கள்.. இந்த காட்டு கறி மிகவும் விதியாசமாக இருக்கு...//

  உங்கள் செய்முறையில் மசாலா சேர்ப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியும் செய்வதுண்டுதான். இந்த காட்டுக்கறிக்கு மட்டும் மசாலாவே கிடையாது என்பதுதான் இதன் ஸ்பெஷல் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஜா.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!