தேவையான பொருட்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 600 கிராம்
கன்டன்ஸ்டு (சுகர்) மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
கன்டன்ஸ்டு (நான் சுகர்) - மில்க் 50 மில்லி
பசுநெய் - 3 டீஸ்பூன்
சீனி - (சுமார்) 150 மில்லி
முந்திரிப் பருப்பு - 2 பிடி
தேங்காய்த் துருவல் - 2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சன்னமாக துருவிக் கொள்ளவும்.
அத்துடன் தேங்காய்த் துருவல், (உடைத்த) முந்திரிப் பருப்பு, பசுநெய், சீனி, உப்பு மற்றும் மில்க் வகைகளைச் சேர்க்கவும்.
நன்கு புரட்டிய பிறகு நெய் தடவிய தட்டில் கொட்டி(1) பரத்தவும்(2).
ஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து (ஃபோர்க் அல்லது கத்தி கொண்டு) வெந்துவிட்டதை உறுதிசெய்துக் கொள்ளவும்.
சற்று ஆறியவுடன் துண்டுகள் போடவும். விரும்பிய நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
பிற்ச்சேர்க்கை:-
இந்த சமையல் குறிப்பு ஜலீலா அக்கா நடத்தும் 'பேச்சுலர் சமையல் போட்டி'க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரவள்ளிக் கிழங்கு பற்றிய சில குறிப்புகள்:
* மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது முழுமையாக வேகவைத்த பிறகே சாப்பிடவேண்டும்.
* மரவள்ளிக் கிழங்கில் கேன்சரைத் தடுத்து, அழிக்கும் வேதிப் பொருள் உள்ளதாக அனுபவப் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
* சர்க்கரை நோயாளிகள் மரவள்ளிக் கிழங்கினைத் தவிர்ப்பது நல்லது என்றும் சொல்கிறார்கள்.
* மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில மோசமான பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு?)
* கோடைக்காலத்தில் இந்தக் கிழங்கு வகைகள் அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால் அப்போது குறைவாக சாப்பிட்டுக் கொண்டு, குளிர்காலத்தில் சாதாரணமாக சாப்பிடலாம் என்பதும் ஒரு தகவல்.
(கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளலாம்.)
மரவள்ளளிக்கிழங்கில் இப்படிக்கூட டேஸ்டான இனிப்பு செய்யலாமா?பகிர்தலுக்கு மிக்க நன்றி அஸ்மா.
ReplyDelete@ ஸாதிகா
Delete//மரவள்ளளிக்கிழங்கில் இப்படிக்கூட டேஸ்டான இனிப்பு செய்யலாமா?//
இதுபோல் செய்தால் முழுசா ஒருநாள்கூட தட்டில் இருக்காது :) அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.
இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன.
ReplyDeleteகொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது.
குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. குழந்தைகள் கொழு கொழு என்று வர இந்தகிழங்கை கொடுக்கலாம்
ஆள்வள்ளி
கப்பை
மரச்சீனி
இந்த பெயர்களும் இதற்குறியனவையே
@ ஸாதிகா
Delete//இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன.
கொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது//
தகவல்களுக்கு நன்றி ஸாதிகா அக்கா.
//குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. குழந்தைகள் கொழு கொழு என்று வர இந்தகிழங்கை கொடுக்கலாம்//
அப்படீன்னா ஏற்கனவே கொழு கொழுவென்று வளர்ந்த 50 வயது குழந்தைகளுக்கு.....? :)))
//ஆள்வள்ளி
கப்பை
மரச்சீனி
இந்த பெயர்களும் இதற்குறியனவையே//
'கப்பைக் கிழங்கு' என்ற பெயரும் இதற்கு சொல்வார்கள்தான். நீங்கள் சொன்னதும்தான் ஞாபகம் வருது ஸாதிகா அக்கா :)
உங்க செய்முறை வித்தியாசமா இருக்கு,நாங்க கிழங்கை துருவி வேகவைத்து மற்ற பொருட்களை சேர்ப்போம்.நல்லாயிருக்கு அஸ்மா!!
ReplyDelete@ S.Menaga
Delete//உங்க செய்முறை வித்தியாசமா இருக்கு,நாங்க கிழங்கை துருவி வேகவைத்து மற்ற பொருட்களை சேர்ப்போம்//
கிழங்கை வேகவைத்த பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்தால் மறுநாள் வைக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படிதானே?
//நல்லாயிருக்கு அஸ்மா!!//
நன்றி மேனகா :)
நல்லாருக்கும் போல இருக்கே!
ReplyDelete@ சென்னை பித்தன்
Delete//நல்லாருக்கும் போல இருக்கே!//
நிச்சயமா நல்லா இருக்கும், வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்க. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா :)
அருமையா செய்திருக்கீங்க அஸ்மா.. சாப்பிட சுவையா இருக்கும்.
ReplyDelete//
ReplyDelete(கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளலாம்.)//
அப்ப தகவல் தெரியாதவங்க பின்னூட்டம் இட கூடாதா ஹி...ஹி...ஹி...
ரொம்ப நாள் கழிச்சு பாதையில் பயணிக்கிறீங்க... (இது மீள்பதிவு இல்லதானே ;-)... தொடரட்டும் உங்கள் சேவை
இந்த குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு. செய்து பாக்குறேன் அஸ்மா
வாழ்த்துக்கள்
@ ஆமினா
Delete//அப்ப தகவல் தெரியாதவங்க பின்னூட்டம் இட கூடாதா ஹி...ஹி...ஹி...//
ஆமினா வீணா வம்புக்கு வர்ற மாதிரி தெரியுது :)))
//ரொம்ப நாள் கழிச்சு பாதையில் பயணிக்கிறீங்க... (இது மீள்பதிவு இல்லதானே ;-)... தொடரட்டும் உங்கள் சேவை//
மீள்பதிவு சேவையா தொடரணும்?? :) இந்தியாவைப் போல இங்கே கரண்ட் கட் ஆவதில்லை, கொசு கடிப்பதுமில்லை. நிம்மதியா தூங்கி, நிம்மதியா எழுந்திருக்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்). அதனால டென்ஷன் இல்லாம, பொறுமையாதான் ஒவ்வொரு பதிவா போடுவோம் ஆமினா :) அதற்குள் அவசியத் தேவைக்கருதி பல மீள்பதிவுகள் வந்துக்கொண்டுதான் இருக்கும் ;))))
//இந்த குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு. செய்து பாக்குறேன் அஸ்மா//
கண்டிப்பா செய்து பாருங்க. வருகைக்கு நன்றி ஆமினா.
தாளிச்சது, அவிச்சது, கிழங்கு கறி, மற்றும் சிப்ஸ்தான் தெரியும். இனிப்பும் செய்ய முடியும்ன்னு காமிச்ச இனிப்பான பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete@ அமைதிச்சாரல்
Delete//தாளிச்சது, அவிச்சது, கிழங்கு கறி, மற்றும் சிப்ஸ்தான் தெரியும். இனிப்பும் செய்ய முடியும்ன்னு காமிச்ச இனிப்பான பகிர்வுக்கு நன்றி//
கொஞ்சமா இனிப்பு கொடுத்து மாவாக அரைத்து தோசைக் கல்லில் ஊற்றியும் செய்வார்கள். ஆனா இதேபோல் அவித்த அடைதான் டேஸ்ட்டில் பெஸ்ட் :) வருகைக்கு நன்றிமா.
அருமையாக இருக்கு.
ReplyDelete@ Asiya Omar
Delete//அருமையாக இருக்கு//
நன்றி ஆசியாக்கா :)
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
ReplyDeleteவித்யாசமான இனிப்பு இது வரை கேள்விப்பட்டதில்லை சகோ.
//ஸ்டீமரில் வைத்து நன்கு வேக வைக்கவும்.//
ஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:-))
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Delete//ஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:-))//
சிறந்த கேள்வி :-))
@ Ayushabegum
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.
//வித்யாசமான இனிப்பு இது வரை கேள்விப்பட்டதில்லை சகோ//
உங்களுக்கு இது புதிய அறிமுகமா? அப்படீன்னா உடனே செய்துப் பார்த்து சொல்லுங்க சகோதரி :)
//ஸ்டீமர் இல்லையே அங்க வந்து வாங்கிக்கவா..:))//
ஸ்டீமர் என்ன.. அத்துடன் ஒரு ட்ரே மரவள்ளிக் கிழங்கு அடையும் சேர்த்து கேட்டாலும் தருவதற்கு ரெடி :-) ஆனா ஒரு கண்டிஷன்! நீங்க சொன்னதுபோல் இங்க வந்து வாங்கணும் :)) வருகைக்கு நன்றிமா.
மரவல்லி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிச்சது, இது வித்தியாசமாக இருக்கு
ReplyDelete, சூப்ப்ர் அஸ்மா
நான் துருவியதை வேகவைத்து விட்டு , பிறகு பிரஷா எல்லாத்தையும் போட்டு உருண்டைகளாக பிடித்துடுவேன்,
@ Jaleela Kamal
Delete//சூப்ப்ர் அஸ்மா
நான் துருவியதை வேகவைத்து விட்டு , பிறகு பிரஷா எல்லாத்தையும் போட்டு உருண்டைகளாக பிடித்துடுவேன்//
இந்த மெதடில் செய்வது ஒரே வேலையா சுலபமா முடிந்துவிடும் ஜலீலாக்கா. டேஸ்ட்டும் கூட! இதேபோல ஒருநாள் செய்து பாருங்க.
நன்றி ஜலீலாக்கா.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteரஹ்மத் ரஹ்மத்ன்னு ஒரு புள்ள இருக்காகே அவுகளுக்கு ஆன்லைனில் சமையல் கலை வகுப்பு எடுக்க முடியுமா? பீஸ் கேட்கபிடாது
@ ஹைதர் அலி
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//ரஹ்மத் ரஹ்மத்ன்னு ஒரு புள்ள இருக்காகே அவுகளுக்கு ஆன்லைனில் சமையல் கலை வகுப்பு எடுக்க முடியுமா? பீஸ் கேட்கபிடாது//
ஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டோக்களோடு கொடுத்திருக்கிறோமே, இதுவே ஆன்லைன் சமையற்கலை வகுப்புதான் சகோ :) ஸ்பெஷல் க்ளாஸ் தேவைன்னாலும்கூட தோழி ரஹ்மத்துக்கு நிச்சயமா பீஸ் கேட்க மாட்டோம், வரச்சொல்லுங்க :)
நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஉலவு திரட்டியில் நான் இதை இணைத்து விட்டேன் சகோ
@ ஹைதர் அலி
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம்.
//உலவு திரட்டியில் நான் இதை இணைத்து விட்டேன் சகோ//
மிக்க நன்றி சகோ. (ஜஸாகல்லாஹ் ஹைரா) உலவில் என் ஐடிதான் வேலை செய்வதில்லை :( என்ன பிரச்சனையென்று பார்க்கணும்.
அஸ்ஸலாமு அழைக்கும்...,
ReplyDeleteசஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத்துத்தகவல்களும் மிக அருமை. இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள் .
JAMAL
GLOBAL ADVOCATES
DUBAI - U A E
அஸ்ஸலாமு அழைக்கும்...,
ReplyDeleteசஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத்துத்தகவல்களும் மிக அருமை. இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள் .
JAMAL
GLOBAL ADVOCATES
DUBAI - U A E
@ JAMALGLOBAL
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம்.
//சஹோதரி அஸ்மா - உங்களுடைய பதிவை அவ்வப்போது படிப்பதுண்டு, அனைத்துத்தகவல்களும் மிக அருமை//
அல்ஹம்துலில்லாஹ்! உங்களின் வருகைகளுக்கு நன்றி சகோ. ஜஸாகல்லாஹ் ஹைரா.
//இன்ஷா அல்லாஹ் இன்னும் அதிகப்படியான தகவல்கள் முயற்சி செய்யுங்கள்//
இன்ஷா அல்லாஹ் எழுதவேண்டியவை (லிஸ்ட்டில்) நிறையவே உள்ளன. துஆ செய்யுங்க சகோ.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
ReplyDeleteஆஹா ..அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருக்கு.
செய்து பார்க்கணும். இன்ஷா அல்லாஹ் ...
@ ஆயிஷா அபுல்.
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//ஆஹா ..அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருக்கு.
செய்து பார்க்கணும். இன்ஷா அல்லாஹ் ...//
இன்ஷா அல்லாஹ் செய்துபார்த்து சொல்லுங்க ஆயிஷா. வருகைக்கு நன்றிமா :)
வித்தியாசமான சமையல் ! செய்து பார்க்க சொல்வோம் ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
Delete//வித்தியாசமான சமையல் ! செய்து பார்க்க சொல்வோம் ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !//
செய்து பார்க்க சொல்லுங்கள் சகோ. வருகைக்கு நன்றி.
அஸ்மா அக்கா,
ReplyDeleteஅறுசுவையில் உங்களது லெமன் ரைஸ் செய்து பார்க்க விருப்பம்.பாசுமதி அரிசி - அரை படி என்று கொடுத்திருக்கீங்க.
அரைபடி என்பது எவ்வளவு மில்லி?
நன்றி.
@ latha
Delete//அறுசுவையில் உங்களது லெமன் ரைஸ் செய்து பார்க்க விருப்பம்.பாசுமதி அரிசி - அரை படி என்று கொடுத்திருக்கீங்க.
அரைபடி என்பது எவ்வளவு மில்லி?//
அரைபடின்னா 500 மில்லி. 1 படி = 1 லிட்டர்பா :) செய்து பார்த்து சொல்லுங்க. இங்கும் அடிக்கடி வந்து போங்க. வருகைக்கு நன்றிமா.
பதிலளித்ததற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஇன்று உங்கள் லெமன் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி.
அறுசுவையிலும் பின்னூட்டம் அளித்துவிட்டேன்
@ latha
Delete//இன்று உங்கள் லெமன் ரைஸ் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.சுவையான குறிப்புக்கு நன்றி.
அறுசுவையிலும் பின்னூட்டம் அளித்துவிட்டேன்//
லெமன் ரைஸ் செய்துப்பார்த்து, இரண்டு இடங்களிலும் சலிக்காமல் வந்து நன்றியுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி லதா :)
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா
ReplyDeleteமரவள்ளி கிழங்கில் இவ்வளவு அழகா ஸ்வீட்டா..எனக்கு இந்த கிழங்கு ரொம்ப பிரியம் புட்டு அவித்த் சாப்பிட ரொம்ப இஷ்டம்..இனி இப்படியும் செய்துடுவோம்
@ தளிகா
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் தளிகா.
//மரவள்ளி கிழங்கில் இவ்வளவு அழகா ஸ்வீட்டா..//
யெஸ்..மா... :-) அல்வாகூட செய்யலாம் இந்தக் கிழங்கில்!
//எனக்கு இந்த கிழங்கு ரொம்ப பிரியம் புட்டு அவித்த் சாப்பிட ரொம்ப இஷ்டம்..இனி இப்படியும் செய்துடுவோம்//
இதுபோல் செய்துப் பார்த்துவிட்டு இங்க வந்து மறக்காம சொல்லிடணும் ஆமா..:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தளி.
மிக பணிவாக அறிய தருகிறேன் இக் கூற்று முற்றிலும் உண்மை * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில மோசமான பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு?இது மரணத்தை விளைவிக்கும் மற்றும் தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் மரவள்ளி கிழங்கோ அல்லது அதனால் செய்த எப் பொருளையும் உண்ண வேண்டாம் இது இரண்டும் உடலில் கலப்பதால் நஞ்சு பதார்த்தமாக மாறுகின்றது.இது மரணத்தை விளைவிக்கும் இந்த இரு பொருளையும் சாபிட்டு என்ன நடக்கும் என்று அறியாதோர் இறந்துள்ளனர் என்பதை அறிய தருகிறேன்.
Deleteஅன்பான வாசகர்களே * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில மோசமான பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்.
ReplyDeleteஅன்பான வாசகர்களே * மரவள்ளிக் கிழங்கைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது அதனுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சில மோசமான பாதிப்புகளை உண்டாக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இது சரியான தகவல்தானா எனத் தெரியவில்லை. (இத சாப்பிடும்போது தேவையில்லாம ஏன் இஞ்சிய வேற சேர்த்துக்கிட்டு இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்.
ReplyDelete//இக் கூற்று முற்றிலும் உண்மை மரணத்தை விளைவிக்கும்.தேநீருடன் இஞ்சி கலந்து குடிப்பவர்கள் அல்லது குடித்த பின்பு அதனோடு மரவள்ளி கிழங்கை சாப்பிட வேண்டாம்.இரண்டும் சேர்ந்து உடலினுள் நச்சு தன்மையை உருவாக்கும்.மிக பணிவாக அறிய தருகிறேன்//
Deleteதகவலுக்கு நன்றி சகோ harris sivasthy. நானும் கேள்விப்பட்டதால்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன். அது சரியான தகவலாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஏனெனில் மரவள்ளிக்கிழங்கு வாயு நிறைந்த பொருள். இஞ்சி கடுமையான வாயுவையும் கலைக்கும் தன்மைக் கொண்டது! எனவே இரண்டும் சேர்ந்தால் மாறுபட்ட இருவேறு விளைவுகளால் ஒருவேளை தீங்கு ஏற்படலாம். coco cola வும், mentos ம் சேர்த்து சாப்பிட்டால் ஏற்படும் விளைவு மாதிரி. ஆனால் மரவள்ளிக் கிழங்கு உடம்புக்கு ரொம்ப நல்லது. அதை சாப்பிடும் அன்று எதிலும் இஞ்சி சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
இன்னும் உறுதியான தகவல் கிடைத்தால் இங்கு வந்து தெரிவிக்கலாம்.
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி சகோ. பதிவர்களுக்கான உங்களின் இத்தகைய சேவைக்கு பாராட்டுக்கள் :)
Deletehttp://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.
தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா :) ஜஸாகல்லாஹ் ஹைரா.
Delete