'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத்தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் TNTJ உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தனர். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கிவிட்டது. சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது.
நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக் குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுவிட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதை விட இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ம் தேதியன்று சென்னையிலும் மதுரையிலும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அந்தத் தீர்ப்பை ஆட்சேபனை செய்யும் வகையில் ஆர்ப்பரித்து எழ தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நியாயம் வெற்றி பெற வல்ல இறைவன் துணை செய்வானாக!
கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.
ஜனவரி 27 போராட்டம் – எழுப்பப்பட வேண்டிய கோஷங்கள்!
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
போராட்டம் இது போராட்டம்!
அநியாயத் தீர்ப்பை எதிர்த்து
தட்டிக் கேட்கும் போராட்டம்!
ஐயோ ஐயோ ஹைகோர்ட்டு
அலகாபாத்து ஹைகோர்ட்டு
உலகமெல்லாம் கைக்கோர்த்து
காரி உமிழுது உனைப் பார்த்து!
இடித்தவனுக்கு இரு பங்கு
இழந்தவனுக்கு ஒரு பங்கு
நியாயம்தானா? நியாயம் தானா?
பாபர் மஸ்ஜித் மையப் பகுதியில்
ராமர் பிறந்தார் என்றாயே!
உன் பாட்டன் பிறந்த இடம் என்று
சொல்ல உனக்குத் திராணி உண்டா?
ராமர் ஆலயம் இருந்த இடத்தை
பாபர் இடித்தார் என்றாயே!
ஆலயம் இடித்த இடத்தினிலே
மசூதி கட்டினார் என்றாயே!
ராமர் ஆலயம் இருந்த இடத்தில்
என்ன ஆலயம் இருந்தது என்று
சொல்வாயா நீ சொல்வாயா?
எந்த ஆலயத்தை இடித்து விட்டு
ராமர் கோவில் எழுந்தது என்று
சொல்வாயா நீ சொல்வாயா?
ராமர் பிறந்த இடம் என்றால்
ராமருக்கு சொந்தம் என்றால்
நாங்கள் பிறந்த ஆஸ்பத்திரி
எங்களுக்கு என்பாயா?
இப்படி தீர்ப்பு சொல்வாயா?
பாபர் வாழ்ந்த காலத்திலே
ராமர் கோவில் இருந்ததில்லை!
சர்வபள்ளி கோபாலும்
சொன்னாரே! சொன்னாரே!
இல்லாத கோவிலை
இடித்து விட்டான் என்றாயே!
அயோத்தி மாநகர் தனில்
ஈராயிரம் ஆண்டுக்கு முன்னர்
மனித இனம் வாழ்ந்ததில்லை!
அகழ்வாராய்ச்சி சொன்னதுவே!
அகழ்வாராய்ச்சி அறிவிப்பை
குப்பைக் கூடையில் எறிந்தாயே!
அப்பத்தை பங்கு போட்ட
குரங்குகளின் தீர்ப்பு என்று
மூன்று குரங்குகளின் தீர்ப்பு என்று
பர்ஹானும் சொன்னாரே!
நாக்கைப் பிடுங்கிச் செத்தாயா?
குரங்குகளின் குதர்க்கத் தீர்ப்பை
வரவேற்கச் சொன்னாரே!
கருணாநிதி சொன்னாரே!
ஜெயலலிதா சொன்னாரே!
ராகுல் காந்தி சொன்னாரே!
உன் அப்பன் வீட்டுச் சொத்து என்றால்
வரவேற்பு கொடுப்பாயா?
உன் கட்சியின் சொத்து என்றால்
வரவேற்று நீ மகிழ்வாயா?
கட்டுச் சோற்றில் பெருச்சாளி!
கறுப்புக் கோட்டில் கருங்காளி!
நல்ல ஆட்டுக் கூட்டத்திலே
குள்ள நரிகள் புகுந்ததுவே!
அலஹாபாத்து ஹைகோர்ட்டே! அலஹாபாத்து ஹைகோர்ட்டே!
காவி தீவிரவாதிகளோடு
கைக் கோர்த்தது சரிதானா?
சட்டத்துக்கு எதிராக
சதி செய்தது முறைதானா?
ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
அநியாயத்தை ஏற்க மாட்டோம்!
பேடிகள் வழங்கிய கேடி தீர்ப்பை
ஒருக்காலும் ஏற்க மாட்டோம்!
தீர்ப்பு வழங்கும் முன்னரே
உளவுத் துறைக்குத் தெரியுது!
உள்துறைக்கும் தெரியுது!
கள்ளத்தனமாய் காவிக் கூட்டம்
அத்தனைக்கும் தெரியுது!
நடந்தது என்ன? நடந்தது என்ன?
விசாரணை நடத்து! விசாரணை நடத்து!
அகர்வால், சர்மா, கான் என்று
அழியா நினைவுச் சின்னங்கள்
அழுகிப்போன ஹைகோர்ட்டுக்கு
இழிவு சேர்க்கும் கோட்சேகள்!
கருப்பு கோட்டுக்குப் பின்னாலே
ஒளிந்துக் கொள்ள எண்ணாதே!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
நீதி வழங்கு! நியாயம் வழங்கு!
தானே வழக்கை எடுத்துக் கொண்டு
உடனடியாக நீதி வழங்கு!
அயோத்தி வழக்கில் ஹைகோர்ட் தீர்ப்பு
நீதித் துறையின் பயங்கரவாதம்!
நமது நாட்டு காஷ்மீரில்
உரிமை கோருது பாகிஸ்தான்!
பங்குப் போட்டுக் கொடுப்பாயா?
பள்ளம் தோண்டி பார்ப்பாயா?
பறித்திடு! பறித்திடு!
பதவியைப் பறித்திடு!
பதவி பறிக்க நடவடிக்கை
பாராளுமன்றமே எடுத்திடு!
வெளியிடு! வெளியிடு!
சொத்துக் கணக்கை வெளியிடு!
காவி தீவிர கும்பலோடு
உனது தொடர்பை வெளியிடு!
அலகாபாத்து ஹைகோர்ட்டு
அழுகிப்போன ஹைக்கோர்ட்டு!
உச்ச நீதி மன்றமே
உரக்கச் சொன்ன தீர்ப்பிது!
வெட்கங்கெட்ட கானே!
விவஸ்தை கெட்ட கானே!
காவியுடன் கைக் கோர்க்க
கண்ட பலன் சொல்வாயா?
வெட்கக் கேடு வெட்கக் கேடு!
நீதித்துறைக்கே வெட்கக் கேடு!
சர்மாவும் அகர்வாலும்
இந்தியாவின் சாபக்கேடு!
அழிந்துப் போ இழிந்து போ!
அநியாயமே ஒழிந்து போ!
தோண்டிப் பார்த்து முடிவெடுத்தால்
நாடு முழுவதும் புதைக் குழியே!
நிலுவையில் உள்ள வழக்கில் எல்லாம்
இப்படி தீர்ப்புச் சொல்வாயா?
உன் அப்பன் பாட்டன் சொத்தா இருந்தால்
பங்குப் போட்டுத் தருவாயா?
இனிய இந்திய தேசத்தை
இரத்தக் களரி ஆக்காதே!
ஆட்சிக்காக ஆசைப்பட்டு
சர்ச்சைகளைக் கிளப்பாதே!
தீர்ப்பு எழுதச் சொன்னோமா?
கதை எழுதச் சொன்னோமா?
காவிக் கும்பல் சொன்னதையே
வாந்தி எடுக்கச் சொன்னோமா?
ஆவனங்கள் தந்தோமே!
பார்த்தாயா நீ பார்த்தாயா?
ஆதாரங்கள் தந்தோமே!
படித்தாயா நீ படித்தாயா?
அடுக்கடுக்காய் வாதங்கள்
எடுத்து பல சொன்னோமே!
கேட்டாயா நீ கேட்டாயா?
போதையில் நீ இருந்தாயா?
பேதலித்துப் போனாயா?
குலையுதே குறையுதே!
நம்பிக்கை குறையுதே!
நீதித் துறையின் மீது இருந்த
நன்மதிப்பு குலையுதே!
பஞ்சாபில் காலிஸ்தான்
காஸ்மீரில் பாகிஸ்தான்
வடகிழக்கில் மாவோயிஸ்ட்
ஆந்திராவில் நக்ஸலைட்
மும்பாயில் தாக்கரே
குஜராத்தில் மோடிக் கும்பல்
இந்தியா முழுவதும் பரிவாரம்
இரத்த வெறிப் பிடித்தவர்கள்
இத்தனை பேர் போதாதா?
உத்திரப் பிரதேச ஹைக்கோர்ட்டும்
கைக் கோர்ப்பது தேவைதானா?
விடமாட்டோம் விடமாட்டோம்!
பள்ளி வாசலை விடமாட்டோம்!
பள்ளி வாசல் நிலத்திலே
கை வைக்க விடமாட்டோம்!
எல்லை உண்டு எல்லை உண்டு!
பொறுமைக்கும் எல்லை உண்டு!
பொறுமையாக இருப்பதாலே
கோழை என்று எண்ணாதே!
தயாரா? தயாரா?
எங்கள் பள்ளிகளைப் பாதுகாக்க
பாதுகாப்புப் படையமைத்து
பாதுக்காக்க தயாரா?
கோழைகளல்ல! கோழைகளல்ல!
'பத்ரு'ப் போரை கண்ட நாங்கள்
நாட்டுக்காக அமைதிக் காத்தால்
அதற்குப் பெயர் கோழைத்தனமா?
எங்கள் உரிமையை நிலைநாட்ட
சாகத் துணியும் சமுதாயமடா!
எவனடா? எவனடா?
பள்ளிவாசலில் கைவைக்க
துணிந்தவன் எவனடா?
பள்ளி வாசலைப் பாதுகாக்க
எங்கள் உயிரை விடவும் தயாரடா!
Source: TNTJ.net
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete//ஜனவரி 27 போராட்டம் – எழுப்பப்பட வேண்டிய கோஷங்கள்!//--அதிரடி சரவெடி...! பலமுறை படிக்க வைத்தது.
//...ஆகவே இருதரப்பு வாத பிரதி வாதங்களின் அடிப்படையிலும், சாட்சிகள் விசாரணைகள் குறுக்கு விசாரணைகள் அடிப்படையிலும், ஆதாரங்கள் ஆவணங்கள் அடிப்படையிலும்... வழக்கை தீர விசாரித்து ஆலோசித்ததன் அடிப்படையிலும்...
இந்தியன் பீனல் கோட் (அல்லது)
இந்தியன் கிரிமினல் கோட் (அல்லது)
இந்தியன் சிவில் ப்ரோசிஜர் கோட் -இன் .... இன்ன சட்டம் இன்ன பிரிவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்றும்/நிரபராதி என்றும், குற்றத்திற்கு இன்ன விதியின் படி இன்ன தண்டனை என்றும் ....//
----இப்படி சொன்னாக்க இதுக்கு பேர்தாங்க "சட்டப்படி தீர்ப்பு"ன்னு பெரியவங்க சொல்வாக.
ஆனா, பெரும்பாண்மை மக்கள் விருப்பப்படின்னோ...
அந்த மதத்து நம்பிக்கை படின்னோ...
இந்த மத தலைவர் சொல்றபடின்னோ...
நீதிபதியாகிய நான் விரும்புற படின்னோ...
"அவங்க பயங்கரவாதிங்கலே, அவங்களுக்கு எதிரா தீர்ப்ப சொன்னா அப்பாலே அப்பாவிமக்க உங்களுக்குத்தாம்லே அவங்களால ஆபத்துலே..!அந்த நல்லெண்ணத்துனாலேதாம்லே நாட்டாம தீர்ப்ப இப்படி மாத்தி சொல்லுதோம்லே..."
இதெல்லாம் இந்திய அரசியல் சாசன சட்டப்படியான தீர்ப்பு இல்லை அல்லவா?
அப்பாவி மக்களை அநியாயமா கொல்றது பயங்கரவாதம். அதேபோல் நீதியை அநியாயமா கொல்றதும் பயங்கரவாதம்தான்.
அப்படீன்னா இது... இந்தியாவிலேயே முதன்முறையாக "கருப்பு பயங்கரவாத்துக்கு" எதிரான நீதிக்கான நியாயத்துக்கான அநீதி இழைக்கப்பட்ட மக்களின் போராட்டம்தான். ஆதரிப்போம்.
@ முஹம்மத் ஆஷிக்
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//அதிரடி சரவெடி...! பலமுறை படிக்க வைத்தது//
மாஷா அல்லாஹ், காயங்களும் தழும்புகளும் வார்த்தைகளாக மாறியுள்ளன!
//...ஆகவே இருதரப்பு வாத பிரதி வாதங்களின் அடிப்படையிலும், சாட்சிகள் விசாரணைகள் குறுக்கு விசாரணைகள் அடிப்படையிலும், ஆதாரங்கள் ஆவணங்கள் அடிப்படையிலும்... குற்றத்திற்கு இன்ன விதியின் படி இன்ன தண்டனை என்றும் .... இப்படி சொன்னாக்க இதுக்கு பேர்தாங்க "சட்டப்படி தீர்ப்பு"ன்னு பெரியவங்க சொல்வாக//
நாலாங்கிளாஸ் படிச்ச நமக்கு தெரியுது. சட்டத்த படிச்சவங்க அத இப்போ கிழிச்சிட்டு உட்கார்ந்திருக்காங்க... காலம் மாறிப் போச்சு :( ஆனா அதுவே தொடர் கதையாக விடக்கூடாது, இன்ஷா அல்லாஹ்!
//ஆனா, பெரும்பாண்மை மக்கள் விருப்பப்படின்னோ...
அந்த மதத்து நம்பிக்கை படின்னோ...
இந்த மத தலைவர் சொல்றபடின்னோ...
நீதிபதியாகிய நான் விரும்புற படின்னோ...
"அவங்க பயங்கரவாதிங்கலே, அவங்களுக்கு எதிரா தீர்ப்ப சொன்னா அப்பாலே அப்பாவிமக்க உங்களுக்குத்தாம்லே அவங்களால ஆபத்துலே..!//
நிச்சயமா!
//இதெல்லாம் இந்திய அரசியல் சாசன சட்டப்படியான தீர்ப்பு இல்லை அல்லவா?
அப்பாவி மக்களை அநியாயமா கொல்றது பயங்கரவாதம். அதேபோல் நீதியை அநியாயமா கொல்றதும் பயங்கரவாதம்தான்//
ரைட்டு... :)
//அப்படீன்னா இது... இந்தியாவிலேயே முதன்முறையாக "கருப்பு பயங்கரவாத்துக்கு" எதிரான நீதிக்கான நியாயத்துக்கான அநீதி இழைக்கப்பட்ட மக்களின் போராட்டம்தான். ஆதரிப்போம்//
ஆதரவுக்கும் நல்லதொரு கமெண்ட்டுக்கும் நன்றி சகோ.
//"அவங்க பயங்கரவாதிங்கலே, அவங்களுக்கு எதிரா தீர்ப்ப சொன்னா அப்பாலே அப்பாவிமக்க உங்களுக்குத்தாம்லே அவங்களால ஆபத்துலே..!அந்த நல்லெண்ணத்துனாலேதாம்லே நாட்டாம தீர்ப்ப இப்படி மாத்தி சொல்லுதோம்லே..."//
ReplyDeleteஇந்த தீர்ப்பினால் நமக்கு நஷ்டமோ இல்லையோ... அவர்களுக்கு, அவர்களுடைய பயங்கரவாத்திற்கு இது ஒரு சாட்டையடி... துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிக் கொள்ளுதல் நல்லது என்று நாம் மட்டுமல்ல... நீதிமன்றமே ஒதுங்கிச் சென்றது அவர்களுக்கு அவமானமே...
நம் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் கண்டிப்பாக பதில் சொல்ல முடியாது. இனியாவது பயங்கரவாத்திற்கு அடிபணியாமல் நீதிக்குக் கட்டுப்பட்ட தீர்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
அஸ்மா.. உங்கள் வலைப்பூவிற்கு வந்து பதிவுகளைப் பார்த்துவிட்டு பின் வந்து பின்னூட்டமிடுவோம் என்று அடுத்த நாள் பார்த்தால் புது பதிவு வந்திருக்கும்... இப்படியே 2,3 பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியவில்லை.. நல்ல நல்ல பதிவுகள்... வாழ்த்துக்கள்....
@ enrenrum16...
ReplyDelete//நம் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் கண்டிப்பாக பதில் சொல்ல முடியாது//
எந்த பதிலும் சொல்வதைவிட அலகாபாத் தீர்ப்பை குப்பையில் வீசிவிட்டு சட்டப்படி தீர்ப்பு சொல்லட்டுமே! அதுவே நாம் எதிர்ப்பார்க்கும் நல்ல பதில் இன்ஷா அல்லாஹ். இந்தப் பேரணி & ஆர்ப்பாட்டத்திற்கு இறைவன் வெற்றிக் கொடுக்க துஆ செய்யுங்க பானு!
//இனியாவது பயங்கரவாத்திற்கு அடிபணியாமல் நீதிக்குக் கட்டுப்பட்ட தீர்ப்புகளுக்கு வழிவகுக்கும்//
சட்டம் படித்த அவர்கள் இனி புத்தி படிக்கட்டும், இன்ஷா அல்லாஹ்!
//அஸ்மா.. உங்கள் வலைப்பூவிற்கு வந்து பதிவுகளைப் பார்த்துவிட்டு பின் வந்து பின்னூட்டமிடுவோம் என்று அடுத்த நாள் பார்த்தால் புது பதிவு வந்திருக்கும்... இப்படியே 2,3 பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியவில்லை.. நல்ல நல்ல பதிவுகள்... வாழ்த்துக்கள்....//
எத்தனை நாட்களுக்கு முன்னால் உள்ள பதிவாக இருந்தாலும் உங்களுக்கு முடியும்போது நீங்கள் பின்னூட்டமிடுங்க பானு! கண்டிப்பா பதில் சொல்வேன், இன்ஷா அல்லாஹ் :) அதுபோன்ற பின்னூட்டங்கள் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தொடர்ந்து எழுத துஆ செய்யுங்கள். ரொம்ப நன்றி பானு!
அஸ்மா, எனக்கு இதுபற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் “எழுப்பப்படவேண்டிய கோஷங்கள்” என்பதில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்... உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கு.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஉண்மை வெல்லும், இறைவன் உதவியோடு இந்த போராட்டம் அமைதியான முறையில் வெற்றி காண வல்ல இறைவனிடம் தூவா செய்கிறேன்.
@ athira...
ReplyDelete//அஸ்மா, எனக்கு இதுபற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் “எழுப்பப்படவேண்டிய கோஷங்கள்” என்பதில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்... உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கு//
கண்டும் காணாமல் போகக்கூடிய சிலரின் மத்தியில் உங்களின் கருத்து மிகவும் சந்தோஷமாக உள்ளது அதிரா! உங்கள் நியாயப் பூர்வமான எண்ணங்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் இறைவன் பலன் கொடுக்கட்டும் என்று உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். ரொம்ப நன்றி அதிரா!
@ இளம் தூயவன்...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும்,
உண்மை வெல்லும், இறைவன் உதவியோடு இந்த போராட்டம் அமைதியான முறையில் வெற்றி காண வல்ல இறைவனிடம் தூவா செய்கிறேன்//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//உண்மை வெல்லும்// இன்ஷா அல்லாஹ்!
//இறைவன் உதவியோடு இந்த போராட்டம் அமைதியான முறையில் வெற்றி காண வல்ல இறைவனிடம் தூவா செய்கிறேன்//
இறைவன் நம்மனைவரின் துஆக்களையும் ஏற்று, பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கு மாபெரும் வெற்றியைக் கொடுப்பானாக! நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோதர சகோதரிகளின் துஆ வை இறைவன் பொருந்தி
கொண்டான் போராட்டம் பெரும் ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது
போராட்டத்திற்கு மதுரைக்கு சென்றிருந்த எனது ஊர்
சகோதரர்களிடம் இப்போது தான் தொலைபேசியில் பேசினேன் அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய இயக்கம் என்ற போர்வையில் இருக்கின்ற சில துரோகிகள் கூட்டத்தை நோக்கி கல் எறிந்ததால் சிறு சலசலப்பு எற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டதாக சகோதரர்கள் கூறினார்கள்
அஸ்மா,
ReplyDeleteஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மதுல்லாஹ்,
போராட்டத்தை வெற்றிபெற வைக்க அல்லாஹ் உதவி செய்வானாக. கோஷங்கள் எல்லாம் நன்றாக இருந்தடு எனினும் எல்லா வரிகளிலும் உடன்பாடில்லை. க்ஹைர்.
மெயில் அனுப்பியது கிடைத்ததா??உங்கள் பதில் மெயில் வரவில்லையே?உடம்புக்கு இப்ப பரவாயில்லையா??
@ ஹைதர் அலி...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதர சகோதரிகளின் துஆ வை இறைவன் பொருந்தி
கொண்டான் போராட்டம் பெரும் ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... ரொம்ப சந்தோஷம். சென்னையிலும் நல்லவிதமாக முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
//இஸ்லாமிய இயக்கம் என்ற போர்வையில் இருக்கின்ற சில துரோகிகள் கூட்டத்தை நோக்கி கல் எறிந்ததால் சிறு சலசலப்பு எற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டதாக சகோதரர்கள் கூறினார்கள்//
பரந்த ஒரு சமுதாயக் கண்ணோட்டமில்லாமல், 'இயக்கம்' என்ற பார்வையில் மட்டும் பார்க்கும் அறிவீனர்களுக்கு இறைவன் நல்ல புத்தியைக் கொடுப்பானாக! தகவலுக்கு ரொம்ப நன்றி சகோ.
@ அன்னு...
ReplyDelete//அஸ்மா,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்,
போராட்டத்தை வெற்றிபெற வைக்க அல்லாஹ் உதவி செய்வானாக. கோஷங்கள் எல்லாம் நன்றாக இருந்தடு எனினும் எல்லா வரிகளிலும் உடன்பாடில்லை. க்ஹைர்//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... அல்ஹம்துலில்லாஹ், நல்லபடி முடிந்து எல்லா மக்களும் அவரவர் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் அன்னு.
//மெயில் அனுப்பியது கிடைத்ததா??உங்கள் பதில் மெயில் வரவில்லையே?உடம்புக்கு இப்ப பரவாயில்லையா??//
ஒரு முறை மெயில் அனுப்பியிருந்தீர்கள், நானும் பதில் போட்டேனே அன்னு? மீண்டும் செக் பண்ணிப் பாருங்களேன். அல்ஹம்துலில்லாஹ் உடல்நலம் இப்போ பரவாயில்லை, நன்றி அன்னு.