அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts
Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts

Tuesday, 6 December 2011

பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு! ("டிசம்பர் 6")

பிரச்சினை உருவான விதம்



1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

Monday, 9 May 2011

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்ற வருடம் செப்டம்பர் 30ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி/ராமஜென்ம பூமி நிலப் பிரச்சனையில், நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கும் மற்ற இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் வழங்கவேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (திங்கள் கிழமை) காலை விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முதல் கட்டமாக இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Tuesday, 8 February 2011

சென்னை போராட்டக் காட்சிகள் (முழு வீடியோ)



அலகாபாத் உயர் (அ)நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 ந்தேதி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சிகள்:

Thursday, 27 January 2011

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!

'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை 11 மணிக்கு சென்னையில், 'சென்ட்ரல் மெமோரியல் ஹால்' அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


மதுரை ஆர்ப்பாட்டம்

Tuesday, 25 January 2011

தமிழகம் தழுவிய மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்!



'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத்தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் TNTJ உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தனர். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கிவிட்டது. சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது.

Wednesday, 20 October 2010

சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 2)


சன் நியூஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம். இந்த விவாதம் இஸ்லாமிய‌ பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட‌வேண்டியது.

பங்கேற்பு:- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன்.

நெறியாளுகை: திரு. வீரபாண்டியன்.

"அநீதி இழைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அமைதி காக்கிறார்கள். அதற்காக இஸ்லாமிய சகோதர‌ர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும்." - சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன்.



முதல் பாகத்தை பார்ப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

நீதியும் நேர்மையும் மனித நேயமும் கொண்ட மனிதர்கள் நமக்கு தெரியாமலே எத்தனையோ பேர்! அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் என்பதை இந்த சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சியினைப் பார்த்து நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போராடும் வழக்கறிஞர் திரு. ஜி. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, 18 October 2010

இந்திய நீதி மன்றங்களில்...



இந்திய நீதிமன்றங்களில் மைனாரிட்டி குடிமக்களுக்கு சரியான நீதி...?

-   சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி.முத்து கிருஷ்ணன் அவர்களின் உரை கீழே காண்க:




                                                                  




                                                       

Monday, 11 October 2010

சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 1)





சன் நியூஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி. இந்த விவாதம் முஸ்லிம் பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




பங்கேற்பு:-  மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன்


நெறியாளுகை: திரு. வீரபாண்டியன்.

        



Monday, 4 October 2010

நியாயமான சில பார்வைகள்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பைப் பற்றி "இது நீதியற்ற தீர்ப்பு" என உலக அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,  அவற்றிலிருந்து உங்கள் பார்வைக்காக சில:

"இந்த தீர்ப்பு அரசியல் தனமானது; நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது."
- முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள்

                                                

                                                                                                        
                                                                                                                   **********************


"பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.


450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக் கூடப் புரியும்.


இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.


பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.


இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது."


- திருமாவளவன்                                  
                                       **********************


"அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது. மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக் கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமைக் கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது." 



- Early India என்ற‌ புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர், முன்னணி ஆங்கில நாளேடான THE HINDU வில்
                                                                                                              *********************
                                                                                                        
"ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது!(?)

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது."



- முதலமைச்சர் கருணாநிதி 


                                  **********************




"அயோத்தி தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நமது நாடு மத நம்பிக்கையை விட, சட்டம் மற்றும் அரசியல் சட்டத்தால்தான் ஆளப்படுகிறது. ஆனால் அயோத்தி தீர்ப்போ, சட்டம் மற்றும் ஆதாரங்களைவிட, மத நம்பிக்கைக்கே முன்னுரிமைக் கொடுத்து அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கோ, அரசியல் சட்டத்துக்கோ, ஏன் நீதித்துறைக்கோ கூட நல்ல அறிகுறி அல்ல. இத்தீர்ப்பால், முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லப் போவதாக அறிந்தேன். அங்காவது மத நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல், சட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன். "

-   முலாயம்சிங் யாதவ்
                                      **********************

"உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, வருங்கால‌த்திற்கு மோசமான ஒரு முன் உதாரணத்தை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு இந்திய மதச் சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதை முறையாக விசாரிக்க வேண்டும்." 

-   மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் 

                                                            

                                   **********************


"உயர்நீதி மன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது. எந்த வாதியும் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிடுவார்கள். இங்கு இப்போதைக்குள்ள கேள்வி, உயர் நீதி மன்றம் ஒரு தவறான அடிப்படையை உருவாக்கியுள்ளதா என்பதே! இது (இந்த தீர்ப்பு ) மிகவும் ஒரு தலைப்பட்சமானது. இந்த சொத்து யாருக்கு சொந்தம் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். ‘இந்த கேள்விக்கு எங்களால் (உயர் நீதிமன்றம்) பதில் சொல்ல இயலாது. ஆகவே பிரித்துக்க் கொள்ளுங்கள்’ என்று சொல்லப்படக்கூடாது. யாருக்கு இடம் சொந்தம் என்பது தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்”




-  பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான்



Friday, 1 October 2010

இதுவெல்லாம் ஒரு தீர்ப்பு..?!


பொதுவாக ஒரு நீதிமன்றம் இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஏனெனில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக இருந்தன. ஆனால் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு சவாலாக இருந்த இந்த வழக்கில், வரலாற்று உண்மைகளையும் ஆதாரங்களையும் குழி தோண்டிப் புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

ஆம்!சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் இரண்டு பங்கை இந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலகாபாத் லக்னோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, நேர்மையான இந்து சகோதர சகோதரிகளையே வியக்க வைத்துள்ளது! உணர்ச்சிப் பூர்வமான பிரச்னைக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவேண்டிய நீதிமன்றங்களிலும் இப்படியெல்லாம் ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு எழுதப்பட முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்தத் தீர்ப்பு எந்த சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்படவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், சட்டப்படி இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான் ஒரு நீதிமன்றத்தின் பணியாக இருக்கவேண்டுமே தவிர, சட்டங்களை அப்பட்டமாக மீறி அநீதியான முறையில் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றமும் தேவையில்லை... தீர்ப்பும் தேவையில்லையே...! பங்காளிகளாக இல்லாத இருவருடைய‌ ஒரு சொத்து குறித்து வழக்கு வந்தால், ஆக்ரமித்தவனுக்கு இரண்டும் ஆக்ரமிக்கப்பட்டவனுக்கு ஒன்றும் என்று தீர்ப்பு அளிப்பதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து நிச்சயம் இதை விட சிறப்பானதாகவே இருக்கும்! அப்படியென்றால் நீதிமன்றங்கள் எதற்கு...?? ASI சர்வே செய்வதற்காக‌ கோடிக்கணக்கான ரூபாய்களை எதற்காக செலவிட வேண்டும்? இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும்? நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றால், அது சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கக் கூடாது என்பதுதான், நியாய உணர்வு கொண்ட அனைத்து மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருந்தது!

சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த இந்த அநீதிக்கு எத்தனையோ நேர்மையான எழுத்தாளர்கள் இருந்தும் ஏனோ யாரும் இதுபற்றி மூச்சுவிட மறந்து விட்டார்கள்! ஆனால், இதுவே மற்ற மத மக்களுக்கு இதுபோன்ற அநீதி நடந்தாலும் நிச்சயமாக நாம் தட்டிக்கேட்கவோ அல்லது அதுபற்றி குரல் கொடுக்கவோ செய்வோம். ஏனெனில் மதமோ மார்க்கமோ நமக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நீதி, நேர்மையை அப்போதுதான் நாம் உண்மையிலேயே கடைப்பிடித்தவர்களாவோம்!

அதுபோல் சில நியாய உள்ளங்களைத் தவிர‌ எல்லா அரசியல்வாதிகளும் 'இது நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு' என்று பாராட்ட மட்டும் வாய் திறக்கிறார்கள். அரசியல்வாதிகள் அப்படிதான், போகட்டும்! ஆனால் இது சரியான தீர்ப்புதான் என்று சொல்லும் எந்த நடுநிலையாளர்களும் அவரவர்கள் தங்கள் வீட்டை இடித்துக் கொடுத்துவிட்டு, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தன‌க்கென்று வாங்கிக்கொள்வார்களா என்று நெஞ்சில் கைவைத்து சிந்தித்துக் கொள்ளட்டும்!


தீர்ப்பு சொல்லப்பட்ட அன்று இங்கு CNN செய்தி பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆஃப்ரிக்க பெண்மணி கேட்ட ('இதுவெல்லாம் ஒரு தீர்ப்பா?' என்றகேள்வியை தான் இந்த இடுகைக்கு தலைப்பாக கொடுத்துள்ளேன். அதற்கு பிறகு அந்த பெண்மணி இந்திய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் காரித் துப்பாத குறையாக, "முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழக்கு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது பகிரங்கமாக‌ இடிக்கப்பட்டதை, 'இப்படியும் ஒரு கையாளாகாத நீதிமன்றமா? இப்படியும் ஒரு கோழைத்தனமான அரசாங்கமா?' என்று உலகமே கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைச் சொல்லி அங்குள்ள சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது மதச்சார்பற்ற நாடு என்று இந்தியா தன்னை சொல்லிக்கொள்ள தகுதியற்றது என்பதை நிரூபித்துவிட்டது" என்று அந்தப் பெண்மணி சொன்னதும், கூடியிருந்த மற்ற நாட்டுக்கார மக்களும் அதை ஆமோதித்ததும் (உண்மை அதுதான் என்றாலும்) நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது :(  

எப்படியோ ஒன்றை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாக சொல்லிவிட்ட அந்த நீதிமன்றத்தை வேறு வழியில்லாமல் பாராட்டியே(?!) ஆகவேண்டும். அதாவது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் ஒரு விருப்பம், அது சட்ட விரோதமாக இருந்தாலும் அது நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். அதே சமயம், சிறுபான்மை மக்களின் சட்டப்படியான உரிமைகள் எதுவாக‌ இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பவில்லை என்று தெரிந்தால், அது சட்ட விரோதமானதாக முடிவுசெய்து தீர்ப்பளிக்க‌ப்படும் என்ற செய்தி இப்போது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றங்களுக்கு அலைந்து பல ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடத்தி, கடைசியில் இதுபோன்று அநியாயமான‌ ஒரு டுபாக்கூர் தீர்ப்புதான் கிடைக்கும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு, நீதிமன்றங்கள் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையையும் சிறுபான்மை மக்கள் இதன் மூலம் இழந்து விட்டனர். இன்னும் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கவேண்டிய மேல் முறையீடு ஒன்றுதான் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக‌ எஞ்சி நிற்கிறது. அங்காவது நேர்மையான, தூரநோக்கு கொண்ட நீதிபதிகள் இல்லாமலா போய்விடுவார்கள்? பொறுத்திருந்து அதையும் பார்ப்போமே!

நல்லவேளை, பிரச்னைக்குரிய இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி மூன்று தரப்பினர் தொடர்ந்த வழக்கில் முப்பது பேர் வழக்குத் தொடர்ந்திருந்தால், சுமூகத்திற்கும் சமரசத்திற்கும் வழி வகுக்கிறோம் என்று முப்பது கூறுகளாக போட்டு ஆளுக்கொரு பங்கு வழங்கி தீர்ப்பு சொல்லியிருப்பார்கள்!!

Thursday, 30 September 2010

இன்னும் சில மணித் துளிகளே...!


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஹைகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது. உத்தரப்பிரதேச கோர்ட்டுகளில் கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குச் சொந்தம் என்று இரு தரப்பினருமே ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்து, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பிரச்ச‌னைக்குரிய இடத்திலுள்ள ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு நடந்திருக்கிறது நம் தாய் திருநாட்டில்! 450 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள், ஏராளமான அப்பாவி மனித உயிர்கள் என பல கோர சம்பவங்கள் கடந்த 60 ஆண்டுகளில் நம் நாட்டில் நடைபெற்றுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு இறுதிக் கட்ட விசாரணை தொடங்கி நடந்தது. கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றன. தீர்ப்பை எப்போது அறிவிப்பது என்பது குறித்து கடந்த 2 மாதமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது. பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு இன்று இந்த வழக்கில் வர இருக்கும் தீர்ப்பை வழங்கும் 3 நீதிபதிகள் இந்த பிரச்சனையில் எத்தகைய தீர்வு காண்பார்கள்? என்ற எதிர்பார்ப்பே எல்லோரது மனதிலும் எதிரொலித்தபடி உள்ளது.

3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ்.யூ.சிபகத்துல்லாஹ் கான், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். அலிகாரில் சிவில் வக்கீலாக பணியாற்றி நீதிபதியான இவர், மிக மிக பொறுமைசாலி. ஆனால் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருப்பவர் என்று பெயர் எடுத்தவர்.

நீதிபதி சுதீர் அகர்வால் மீரட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். வரி தொடர்பான வழக்குகளில் சிறப்பு பெற்றவர். உத்தரப்பிரதேச மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

நீதிபதி டி.வி.சர்மா நாளை (அக்டோபர்-1) ஓய்வுபெற உள்ளார். உத்தரப்பிரதேச பாராளுமன்ற விவகார முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் அலகாபாத் ஹைகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு போய் சேரும் என்பது இவர்கள் 3 பேரின் கையில்தான் உள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்க உள்ளதால் 3 நீதிபதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களோடு 200 அதிரடிப்படை வீரர்களும் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்படும்போது கோர்ட்டு வளாகம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடங்கள் மீது போலீசார் ஹெலிகாப்டரில் பறந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தீர்ப்பை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து வழிகளும் மூடி “சீல்” வைக் கப்பட்டுள்ளது.தீர்ப்பு சமயத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக லக்னோவில் பெரிய போலீஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. லக்னோ நகரம் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் ஏற்பட்டால் அது பற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ ஹெல்ப் -லைன்களை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். லக்னோ நகரில் உள்ள மதுக்கடைகள், பட்டாசு விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன.

லக்னோ கோர்ட்டு வளாகத்தின் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை வளாகத்தின் 21-வது எண் கோர்ட்டு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோர்ட்டு வளாகத்துக்குள் இன்று (வியாழன்) காலை முதலே யாரும் அனுமதிக்கப்படவில்லை. தீர்ப்பை கேட்க பொதுமக்கள் யாரும் கூட்டமாக திரண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு கோர்ட்டுக்குள் செல்ல அயோத்தி வழக்கின் வாதி, பிரதிவாதி, மற்றும் வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், கோர்ட்டு வளாகத்துக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.


செய்தி சேகரிக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் லக்னோவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனி இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. 3 நீதிபதிகளும் தீர்ப்பு கூறி முடித்ததும், அந்த விபரங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும். அதன் பிறகே அயோத்தி தீர்ப்பு வெளி உலகுக்குத் தெரிய வரும்.


இன்று பிற்பகல் தீர்ப்பு வாசிக்கப்படும்போது கோர்ட்டு வளாகத்துக்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அது போல தீர்ப்பு முழுமையாக வெளியாகும் வரை யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவையற்ற வதந்தி கிளம்புவதைத் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோர்ட்டு வளாகத்தில் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு சமயத்தில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அலகாபாத், லக்னோ, அயோத்தியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. (பத்திரிக்கைச் செய்திகள்)

சர்ச்சைக்குரிய பகுதியில் பல்வேறு விஷயங்களில் இழுபறி நிலவுகிறது. குறிப்பாக 7 விஷயங்களில் இரு தரப்பினரும் தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள். அந்த 7 விஷயங்கள் :-

1. சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தாரா?
2. சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி இருந்ததா?
3. சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கட்டிடத்தை யார், எப்போது கட்டினார்கள்?
4. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா?
5. சர்ச்சைக்குரிய பகுதியில் 1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி இரவு ராமர் சிலையை அத்து மீறி நுழைந்து வைத்து பிரதிஷ்டை செய்தார்களா?
6. சர்ச்சைக்குரிய இடத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு கால வரம்பு ஏதேனும் உள்ளதா?
7. சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி நிலை என்னவாக இருக்க வேண்டும்?

இந்த 7 கேள்விகளுக்கும் இன்று பிற்பகல் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விடை ஒரு நிரந்தர தீர்வாக இருக்கலாம் என்று இரு தரப்பினருமே ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில்....,

முழுக்க முழுக்க நமக்கு சொந்தமான, நாம் வசிக்கும் நம் வீடு அடுத்த வீட்டுக்காரனால் இடிக்கப்பட்டு அது நமக்கா, இடித்தவனுக்கா என்ற தீர்ப்புக்காக இரண்டு தலைமுறைகள் செல்லுமளவு பல வருடங்கள் கோர்ட்டில் விசாரணையை இழுத்தடித்து, இடித்தவனுக்குரிய தண்டனையும் கொடுக்கப்படாமல், அந்த தீர்ப்பு தனக்கு பாதகமாக அமையும் பட்சத்தில், எந்த ஒரு மனிதனும் ஆதங்கப்படவே செய்வான். ஆனால் அதுபோன்ற அநியாயமாக பாதிக்கப்படும் சூழல்களில் தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அந்த சூழலில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும்? நம்முடைய வீர தீரத்தைக் காட்டுகிறோம் என்று ஆவேசப்படுவதா? அமைதிக் காத்து யாருக்கும் தீங்கு விளைவிக்காத‌ அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்வதா? என்றால், அமைதியும் பொறுமையுமே எந்த நிலையிலும் நம்மை மனிதத் தன்மையிலிருந்து பிறழாமல் காக்கும் என்பதைதான் நாம் அனைவரும் மனதில் உறுதியாக பதிய வைத்துக் கொள்ளவேண்டும்.

தீர்ப்பு எதுவானாலும் அதை நாம் எவ்வாறு அணுகுவது? 

தீர்ப்பு என்றாலே ஒரு வழக்கின் நியாயங்கள் எந்த பக்கம் உள்ளனவோ அந்த ஏதாவது ஒரு பக்கம்தான் சொல்லமுடியும். ஆக, பாபர் மசூதி தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் இந்துக்களுக்கும், இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால் இஸ்லாமியர்களுக்கும் மன வேதனையும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு இன்னும் 50 வருடங்களுக்கு பிறகு வெளியானாலும் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் என்ற‌ இந்திய பாரம்பரியமிக்க இனப் பிரிவினைகளுக்கு பாதகமான சூழலே நிழவும். நம் நாட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து பிரிவினருக்கும் அல்லாஹ்தஆலா மன அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக!                                                                                                                    

நம் இந்திய நாட்டு அனைத்து மத, மார்க்க சகோதர, சகோதரிகளே! தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்கவேண்டும். இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, உயர் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இறுதியானவை அல்ல. ஒரு வழக்கில் உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லமுடியும். ஆகவே, நாளை வழங்கப்படும் தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் இரு தரப்பாரும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்க வேண்டும்.

வன்முறை நெருப்பைத் தூண்டிவிட்டு தங்கள் ஆதாயங்களுக்காக குளிர்காய நினைக்கும் குறுமதியாளர்களின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது. அயோத்'தீ'யை எரிய விடாமல் அனைவரையும் மதித்து, அரவணைத்து செல்லும் பொறுப்பை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையென செய்ய வேண்டும். வதந்திகளையோ, வன்முறை செய்திகளையோ பரப்பாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நாளை மற்றொரு நாளாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றில் கறைபடியும் வகையில் மற்றொரு கறுப்பு நாளாக மாறி விடாமல் இருக்க இந்திய நாட்டின் இறையாண்மையைப் பேணி பாதுகாக்கும் வகையில் அனைவரும் அமைதி காப்போம்!

இஸ்லாமிய பெருமக்களுக்காக தனிப்பட்ட முறையில்:

1) தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கவிருக்கும் நீதிமான்கள் பாபர் மசூதியை இடித்தது முறையல்ல என்று தீர்ப்பளித்து அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உரியது என்று தீர்ப்பளித்தால், நாம் நமக்கு உரிய நியாயமான தீர்ப்பை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ளோம் என்று எண்ணி, அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே) என்று கூறி அமைதி காக்க வேண்டும். ஆரவாரப்படக்கூடாது. இதை மீறி தம்பட்டம் அடித்து ஆரவாரப்பட்டால் நமக்கு எதிர்த் தரப்பினருக்கு மனவேதனை ஏற்படும். மீண்டும் அங்கிருந்து ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். எனவே தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் இறைவனைப் புகழ்ந்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும்.

2) தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக இருந்தால்

பாபர் மசூதிக்கு தீர்ப்பு வழங்கும்போது அது இந்துக்களுக்கு சாதகமாக அமைந்து நமக்கு எதிராக அமைந்துவிட்டால் நாம் ஆத்திரப்படக்கூடாது. ஏனெனில் இஸ்லாமியர்கள் என்றாலே அமைதியை விரும்புபவர்கள் என்றுதான் பொருள். எனவே இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக அமையும் பட்சத்தில் நாம் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தக்க‌ட்ட மேல் முறையீடுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமே தவிர, மற்ற சமுதாயத்திற்கு எந்த சிறு தீங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவிடக்கூடாது!

சிந்திக்கப் படைக்கப்பட்ட சமுதாயமே! இதோ உங்கள் சிந்தனைக்கு சில வசனங்கள்:

‘பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 2:153)


‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (அல்குர்ஆன் 3:200)


‘யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அல்குர்ஆன் 42:43)

பயணிக்கும் பாதை