அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 30 March 2013

ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!


பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.

கேட்டால் 'எல்லாம் ஒரு ஜாலிக்குதானே...? ஏமாறிய யாருமே வருத்தப்பட்டதில்லையே..!' என்பார்கள். ஆனால், தான்மட்டும் மற்றவர்களிடம் அன்றைய தினம் இப்படி ஏமாறும்போது 'ஆ.. நாம் ஏமாறுவதால் முட்டாளாக்கப்படுகிறோமே, அடுத்த முறை ஏமாறக்கூடாது' என்று உஷாராக இருப்பார்கள். ஆக, மற்றவர்களிடம் நாம் ஏமாறும்போது மட்டும் அதை நம் மனம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

"April Fool's Day" என்று சொல்லப்படும் இந்த‌ 'முட்டாள்கள் தினம்' தொடங்கியதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் கூறப்பட்டாலும் இதை தொடங்கி வைத்தவர்கள் ஃபிரான்ஸ் நாட்டு சீதேவிகள்தான்! அப்படியே இது ஐரோப்பா முழுவதும் பரவி, பிறகு அமெரிக்கா, மற்ற நாடுகள் என்று பரவிவிட்டது. ஃபிரான்ஸில் இந்த நாளை "Poisson d’avril" (ஏப்ரல் மீன்) என்று சொல்வார்கள். காகித மீன் செய்து, யாரை கேலி செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் கவனிக்காமல் இருக்கும்போது முதுகில் ஒட்டிவிட்டு எல்லோருமாக கூடி, அவர்களை "ஏப்ரல் மீன்" என்று அழைத்து கேலி செய்வார்கள்.


கடிதக் கவரின் மேல் "அவசரம்" என்று எழுதி, உள்ளே "இன்று ஏப்ரல் ஃபூல் தினம். முட்டாள்! அது வேறு யாருமில்லை, நீதான்" என்று எழுதி அனுப்புவார்கள். கல்வியும் அறிவும் முன்னேறிய இன்றைய உலகில் இதுபோன்ற பிற்போக்கு சிந்தனைக் கொண்ட கொண்டாட்டங்களைக் கூட சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்கின்ற‌ அவல நிலையைதான் நாம் காணமுடிகிறது. இந்த ஏப்ரல் ஃபூல் கொண்டாட்டத்தினால் நாம் அடையும் லாபம் என்ன? அர்த்தமில்லாத அற்ப சந்தோஷத்தை தவிர எதுவுமில்லை!

அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் முட்டாள்களின் தினமான இந்த‌ ஏப்ரல் ஃபூல் நோய் பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், ஒரே தெருக் குழந்தைகள், அண்டை வீட்டர்கள் என்று அனைத்து தரப்பினரிடமும் பரவியுள்ளது. நம்ம ஊர் பக்கமெல்லாம் அதிர்ச்சி வைத்தியம்தான் அன்று! நீட்டாக ட்ரஸ் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வருபவர்கள் மீது இங்க் தெளிப்பது ஒருபுறம் என்றால் 'அய்யோ.. உன் கால்கிட்ட‌ தேள் வருது', 'உன் இன்னொரு காதின் கம்மல் எங்கே?', 'நம்ம அரசலாற்றில் பஸ் கவிழ்ந்து விட்டது தெரியுமா?' 'பக்கத்து தெருவுல குடிசை பத்திக்கிச்சு, ஓடுங்க‌'- இப்படியான அதிர்ச்சி தரும் செய்திகளைப் பொய்யாக‌ சொல்லும்போது ஓங்கி ஒரு அறை விடலாமா என்றுதான் தோன்றும். இன்னும் விட்டால் சுனாமியையும், பூகம்பத்தையும்கூட இவர்கள் விளையாட்டாய் சொல்லி ஏமாற்றத் தயங்க‌ மாட்டார்கள்!

தன் மகனைக் கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு பயணம் அனுப்பிய கணவன் இல்லாத, மகனின் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பியுள்ள‌ ஒரு தாயிடம் 'இன்னும் ஒரு வாரத்தில் உன் மகன் ஒன்வேயில் வரப் போகிறானாம்' என்று சொல்லி, ஏப்ரல் 1 க்காக சொன்ன பொய் அது என்று தெரிந்த பிறகும் அந்த தாய் நீண்ட நாட்கள் நெஞ்சு வலியாலும், பிறகு பிரஷ்ஷராலும் கஷ்டப்பட்ட அநியாயமும், நெருங்கியவர்கள் இறந்துவிட்டதாக ஏப்ரல் ஃபூல் அன்று பொய் ஃபோன் போட்டு ஏமாற்றியதில் மயக்கமாகி விழுந்து, எமெர்ஜென்ஸிக்கு தூக்கிப் போன‌ கொடுமையும்கூட நடந்துள்ளது இந்த ஏப்ரல் 1 ல்! ஹ்ம்... என்ன சொல்ல இவர்களை!

பொய் சொல்லும் இத்தகைய‌ கலாச்சாரத்தையும், ஏமாற்றுவதையும், ஏளனம் செய்வதையும் இஸ்லாம் கொஞ்சமும் அனுமதிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார்; இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.
                     அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி); நூல்:புகாரி(6094)

அறிந்துக் கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக்குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

அபூபக்ரா(ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே, அறிவியுங்கள்!" என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்" என்று கூறினார்கள். சாய்ந்துக் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)" என்று திரும்பத் திரும்பக் கூறினார்கள். 
                                  நூற்கள்: புகாரி (5976), முஸ்லிம் (126)


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. 
                      நூற்கள்: முஸ்லிம் (147), திர்மிதீ (1236)

அருமை சகோதர, சகோதரிகளே! 'அன்றைய‌ ஜாலியான‌ பொழுதுக்காக‌ ஏப்ரல் ஃபூலில் அப்படி செய்வ‌தால் என்ன வந்துவிடப் போகின்றது?' 'வருஷத்தில் ஒருநாள் அதுபோன்று கேலி, கிண்டல் பண்ணி ஜாலி அனுபவிப்பது ஒரு சந்தோஷம்தானே?' என்று நினைப்பவர்கள் இப்படியொரு ஜாலி தேவைதானா? சரிதானா? என்று நிதானமாக சிந்தித்துக் கொள்ளுங்கள். ஆனால் விளையாட்டுக்கும், ஜாலிக்கும் என்று நாம் காரணங்களைக் கூறிக்கொண்டாலும் சரி, அடுத்தவர்களை ஏமாற்ற முனையும்போது தன்னை திறமையான‌வர்களாகவும், புத்திசாலியாகவும் கற்பனைச் செய்துக் கொண்டு தன்னிடம் ஏமாறியவ‌ர்களை ஏளனமாக கேலி செய்தாலும் சரி, ஒவ்வொரு மனிதனின் தன்மானத்திற்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கச் சொல்லும் இஸ்லாத்தை, அறிவார்ந்த செயல்களுக்கு மாற்றமான அத்தனை மூடப் பழக்கங்க‌ளையும் தூக்கி வீசுமாறு அறிவுறுத்தும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் இந்த ஏப்ரல் ஃபூலில் ஈடுபடக்கூடாது.

எனவே ஏப்ரல் ஃபூல் என்னும் பெயரில் பொய் சொல்வது, பொய்ச் சத்தியம் செய்வது, பொய் சாட்சி கூறுவது, ஏளனம்/கேலி செய்வது, ஏமாற்றுவது, ஏமாந்தவர்கள் முட்டாள் என்று இழிவாகக் கருதுவது போன்ற இழி செயல்களில் ஈடுபடாமல், நாம் ஒவ்வொருவரும் இஸ்லாம் கூறும் அறிவுரைகளின் தனித்துவத்தை கட்டிக்காத்து, இஸ்லாம் என்பது நாகரிகமாக‌ வாழவைக்கும் ஒரு வழிகாட்டி(மார்க்கம்) என்பதை இவ்வுலகுக்கு எடுத்துச் சொல்லும் நன்மக்களாக வாழ்வோமாக!

45 comments:

 1. இப்படியான அதிர்ச்சி தரும் செய்திகளைப் பொய்யாக‌ சொல்லும்போது ஓங்கி ஒரு அறை விடலாமா என்றுதான் தோன்றும்.
  ஆதாரம் இல்லாத வதந்திகளை அவர் சொன்னார்,இவர் சொன்னார் என்று சொல்பவர்களையும் பார்க்கும்போது எனக்கும் இப்படிதான் தோன்றும்.
  சரியாக நேரத்தில் அறிவுரை சாட்டையை விளாசியிருக்கிறீர்கள் ச்கோதரி.வாழ்த்துக்கள்!
  எமது வலைதள்த்திலும் பதிவிட அனும்திப்பீர்கள் என்று ந்ம்புகிறேன்.நன்றி

  ReplyDelete
 2. @ Anonymous...

  //nice post// நன்றி சகோ. அடுத்த முறை பெயருடன் கமெண்ட் கொடுங்க ப்ளீஸ்!

  ReplyDelete
 3. @ மு.ஜபருல்லாஹ்...

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  //எமது வலைதள்த்திலும் பதிவிட அனும்திப்பீர்கள் என்று ந்ம்புகிறேன்.நன்றி//

  தாராளமா உங்கள் வலைதளத்தில் பதிவிடுங்கள் சகோ. நல்ல விஷயங்கள் எப்படி போய் மக்களிடம் சேர்ந்தாலும் சந்தோஷமே! :) நன்றி சகோ.

  ReplyDelete
 4. //நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. //

  கண்டிப்பாக அஸ்மா. இன்னும் சொல்லப்போனால் சின்ன சின்ன பொய்களால் சந்தோஷத்தை தருகிறோம், பெறுகிறோம் என்ற நிலை மிகப்பெரும் மலையாய் நம் முன் மறுமையில் வரப்போவதை யாரும் சீக்கிரம் உணர்வதில்லை. இந்த சிறு பாவமே கடைசியில் மனிதனுக்கு சுவர்க்கத்திலிருந்து தடை செய்து விடும் என்பது எவ்வளவு உண்மை. அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக. ஆமீன். ஸும்ம ஆமீன்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஏப்ரல்-1, இன்று எமா'ற்'றுபவர்களே முட்டாள்கள்..! 'ஏமாற்றுவோரின் தினம்'தான் இன்று..! அதாவது... முட்டாள்கள் தினம்..!

  இஸ்லாமிய பார்வையில்...
  அருமையான பதிவு...
  அவசியமான நேரத்தில்...

  இதுபோன்ற தங்களின் அயராத பணி தொடரட்டும் இன்ஷாஅல்லாஹ்..!

  ReplyDelete
 6. அல் குரான் ல் இருந்து எடுத்து சொன்ன ஹதிஸ்கள் நன்று.. சின்ன விஷயத்துக்கு கூஉட பொய் சொல்வதை தவிர்ப்பது நலம்

  ReplyDelete
 7. இன்ஷா அல்லாஹ்.. ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த இடங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  ReplyDelete
 8. தெளிவான விளக்கங்கள்.. நல்ல பகிர்வு அஸ்மா.

  ReplyDelete
 9. ம்.. இப்படிச் சிலர் சீரியஸான விஷயங்களில் பொய்சொல்லி நகைக்கும்போது, பின்விளைவுகளை ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை என்று தோன்றும். எதில்தான் விளையாடுவது என்று இல்லை?

  இதேபோலத்தான், சிலர் மற்றவர்களின் உருவத்தையோ, இயல்பாக அமைந்த குறைகளையோ கிண்டல் செய்வார்கள். கேட்டால், என் நண்பன், தவறாக நினைக்கமாட்டான்/ள், அவரும் ரசிக்கவே செய்வார் என்று சால்ஜாப்பு சொல்வார்கள். வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் வேதனை நிச்சய்மாக இருக்கும்தானே?

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
  உண்மைக்கு ஒரு கால்தான் ..அது நொண்டிக் கொண்டுதான் வரும்.ஆனால் பொய்க்கு ஆயிரம் கால் .ரொம்பவும் வேகமா ஓடும்.. ஆனால் கடைசி வரை தெம்பாக நிற்பது உண்மைதான்.

  பொய் சொல்பவருக்குதான் நிறைய ஞாபகசக்தி வேனும் .

  அருமையான பதிவு , தெளிவான கருத்து :-)

  ReplyDelete
  Replies
  1. @ ஜெய்லானி

   வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

   //உண்மைக்கு ஒரு கால்தான் ..அது நொண்டிக் கொண்டுதான் வரும்.ஆனால் பொய்க்கு ஆயிரம் கால் .ரொம்பவும் வேகமா ஓடும்.. ஆனால் கடைசி வரை தெம்பாக நிற்பது உண்மைதான்//

   நல்ல உவமையா இருக்குதே இது.. :) அதற்குதான் பிடிவாதக்காரர்களை 'ஒற்றைக் காலில்' நிற்கிறாங்க என்பார்களோ? 'உண்மை'போல் உறுதியாக இருப்பதால் :‍‍)

   "நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்!" (அல்குர்ஆன் 17:8)

   //பொய் சொல்பவருக்குதான் நிறைய ஞாபகசக்தி வேனும்//

   ஆமா சகோ, உண்மையான வார்த்தை :‍-) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 11. சகோதரி அஸ்மா அவர்களுக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அல்ஹம்துலில்லாஹ்...அருமையாக சொன்னீர்கள்.

  ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்! என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

  அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
  ஆதாரம்: அபூதாவூத்.

  சுபானல்லாஹ்...பொய் பேசுவது நரகத்தில் தள்ளும் செயல் என்பதை உணர்ந்து அதிலிருந்து நம்மை காத்து கொள்வோமாக..ஆமீன்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 12. @ அன்னு...

  //இன்னும் சொல்லப்போனால் சின்ன சின்ன பொய்களால் சந்தோஷத்தை தருகிறோம், பெறுகிறோம் என்ற நிலை மிகப்பெரும் மலையாய் நம் முன் மறுமையில் வரப்போவதை யாரும் சீக்கிரம் உணர்வதில்லை//

  எல்லோருக்கும் இந்த விழிப்புணர்வைக் கொடுக்க அல்லாஹ்தஆலா உதவி செய்யட்டும்! நன்றி அனிஷா.

  ReplyDelete
 13. @ முஹம்மத் ஆஷிக்...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //ஏப்ரல்-1, இன்று எமா'ற்'றுபவர்களே முட்டாள்கள்..! 'ஏமாற்றுவோரின் தினம்'தான் இன்று..! அதாவது... முட்டாள்கள் தினம்..!//

  சரியான வார்த்தை சகோ. //அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம்..// என்று அதற்காகதான் குறிப்பிட்டிருந்தேன். தங்களின் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 14. @ சிநேகிதி...

  //சின்ன விஷயத்துக்கு கூஉட பொய் சொல்வதை தவிர்ப்பது நலம்//

  நிச்சயமா! தவிர்ப்பது நலம் என்பதைவிட தவிர்த்தாகவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. நன்றி ஃபாயிஜா!

  ReplyDelete
 15. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  //இன்ஷா அல்லாஹ்.. ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த இடங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்//

  வாங்க சகோ. ஊர் சென்ற பிறகும் இங்கு வருகைத் தருவதற்கு மிக்க நன்றி, சந்தோஷம் :) இன்ஷா அல்லாஹ் தெரிந்தால் கண்டிப்பா சொல்கிறேன் சகோ. அல்லாஹ் போதுமானவன்!

  ReplyDelete
 16. @ ஹுஸைனம்மா...

  //வெளியே சிரித்தாலும், உள்ளுக்குள் வேதனை நிச்சய்மாக இருக்கும்தானே?//

  அந்த கஷ்டம் அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும். இயற்கையான குறைகளை கிண்டல் செய்ப‌வர்கள் தான் பாதிக்கப்படும்போதுதான் அந்த வலியை உணர்வார்கள். தங்களின் கருத்துக்கு நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 17. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  //நல்ல பகிர்வு அஸ்மா// வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 18. @ Aashiq Ahamed...

  வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  அல்ஹம்துலில்லாஹ், தங்களின் வருகைக்கும் அழகான நபிமொழியுடன் கூடிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 19. வணக்கம் சகோ
  மிக அருமையான பதிவு
  அடுத்தவரின் ஏமாற்றத்தில் மகிழ்ச்சி கொள்ளும் தனம் அரக்க தனம். இதற்கென்று ஒரு நாள் வேறு.
  சரியான நேரத்தில் சரியான சாட்டையடி பதிவு.

  ஆனால், இதற்கெல்லாம் குரானோ ஹதீஸோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை சகோ மனிதாபிமானம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும்

  ReplyDelete
  Replies
  1. @ kari kalan

   //வணக்கம் சகோ//

   உங்கள் மீது ஏக‌ இறைவனின் சாந்தி நிலவட்டுமாக!

   //மிக அருமையான பதிவு
   அடுத்தவரின் ஏமாற்றத்தில் மகிழ்ச்சி கொள்ளும் தனம் அரக்க தனம். இதற்கென்று ஒரு நாள் வேறு.
   சரியான நேரத்தில் சரியான சாட்டையடி பதிவு//

   நன்றி சகோ. இன்னும் இதில் நீடிப்பவர்கள் சிந்தித்து இந்தக் கலாச்சாரத்திலிருந்து தங்களை திருத்திக்கொண்டால் சந்தோஷமே!

   //ஆனால், இதற்கெல்லாம் குரானோ ஹதீஸோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை சகோ மனிதாபிமானம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும்//

   மனிதாபிமானத்தோடு வாழக்கூடிய நல்ல மனிதர்களே அந்த மனிதாபிமானத்தையும் தாண்டி ஒருநாளைய ஜாலிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் கொண்டாடும் நாள்தானே இது என தங்களை நியாயப்படுத்திக் கொண்டு இத்தகைய கேலிகளில் ஈடுபடும்போது, அவர்களுக்கு இஸ்லாம் வகுத்துள்ள வரம்புகளை தெரிய வைக்கவேண்டியது அவசியமாகிப் போகிறது சகோ. அதனால்தான் மற்ற விஷயங்கள் பொதுவாக சொல்லப்பட்டாலும், இஸ்லாமிய மக்கள் கண்டிப்பாக தவிர்த்தே ஆகவேண்டும் என்பதற்காக கடைசியாக குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இங்கே! அவர்களுக்கென பிரத்யேகமாக சொல்லப்பட்ட கீழுள்ள இந்த வரிகளையும் பாருங்கள்.

   //ஒவ்வொரு மனிதனின் தன்மானத்திற்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கச் சொல்லும் இஸ்லாத்தை, அறிவார்ந்த செயல்களுக்கு மாற்றமான அத்தனை மூடப் பழக்கங்க‌ளையும் தூக்கி வீசுமாறு அறிவுறுத்தும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் இந்த ஏப்ரல் ஃபூலில் ஈடுபடக்கூடாது//

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 20. அடுத்தவரின் ஏமாற்றத்தில் மகிழ்ச்சி கொள்ளும் தனம் அரக்க தனம். இதற்கென்று ஒரு நாள் வேறு.
  சரியான நேரத்தில் சரியான சாட்டையடி பதிவு.

  ReplyDelete
  Replies
  1. @ சுவனப்பிரியன்

   //அடுத்தவரின் ஏமாற்றத்தில் மகிழ்ச்சி கொள்ளும் தனம் அரக்க தனம். இதற்கென்று ஒரு நாள் வேறு.
   சரியான நேரத்தில் சரியான சாட்டையடி பதிவு//

   தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 21. இளம் வயதில் இந்த முட்டாள்களின் தினத்தில் முட்டாள்தனம்மாக நடந்து கொண்டதை நினைத்து மனம் வருந்துகிறது .இந்த நிலை நமது சந்ததிகளுக்கு ஏற்ப்படாமலிருக்க தங்களின் இந்த விழிப்புணர்வு மிக்க பதிவு உபயோகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. @ Barari

   //இளம் வயதில் இந்த முட்டாள்களின் தினத்தில் முட்டாள்தனம்மாக நடந்து கொண்டதை நினைத்து மனம் வருந்துகிறது//

   உண்மைதான் சகோ. நமக்கு விழிப்புணர்வு கிடைக்காமல், அறியாமையில் இருந்தபோது வயது வித்தியாசமின்றி ஏப்ரல் 1 ல் இவ்வாறு பொய்யுடன் கேலி செய்ததற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். மனம் வருந்தியும், இனி இதுபோல் செய்யமாட்டோம் என்று உறுதியுடனும் கேட்கும் பாவமன்னிப்பை கருணையுள்ள இறைவன் நிச்சயம் மன்னிப்பான் (இன்ஷா அல்லாஹ்).

   //இந்த நிலை நமது சந்ததிகளுக்கு ஏற்படாமலிருக்க தங்களின் இந்த விழிப்புணர்வு மிக்க பதிவு உபயோகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி//

   நம் சந்ததிகளுக்கு இந்த (ஏப்ரல் ஃபூல்) ஏமாற்று/பொய்க் கலாச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாமல் போகட்டும், இன்ஷா அல்லாஹ்! தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
  அற்ப சந்தோஷத்துக்காக பிறரை ஏமாற்றுபவர்களே உலகின் No.1 முட்டாள்கள் .

  ReplyDelete
  Replies
  1. @ முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்

   வ‌ அலைக்குமுஸ்ஸலாம் சகோ,

   //அற்ப சந்தோஷத்துக்காக பிறரை ஏமாற்றுபவர்களே உலகின் No.1 முட்டாள்கள்//

   தங்களின் காரமான கருத்துக்கும் :) வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 23. சரியான நேரத்தில் சரியாக மீள்பதிவு செய்துள்ளீர்கள். நன்றி சகோ.!

  ReplyDelete
  Replies
  1. @ Abdul Basith

   //சரியான நேரத்தில் சரியாக மீள்பதிவு செய்துள்ளீர்கள். நன்றி சகோ.!//

   அந்தந்த நேரத்திற்குரியதை நினைவூட்டவே மீள்பதிவு. ஆனால் அதுவே சில நேரங்களில் மறந்தும் போய்விடுகிறது :) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  எல்லாம் விளையாட்டுக்கென பிறரை ஏமாற்றி அதில் மனம் புளாங்காதிகம் அடையும் இச்செயலுக்கு அங்கீகாரம் கொடுக்கும் தினமாக ஏப்ரல் ஒண்ணை கொண்டாடுவது எவ்வளவு முட்டாள் தனமாக செயல்!

  அதே நகைப்பும் ஏமாற்றும் பிறிதொரு நாளில் ஏற்படுத்தினால் நமக்கு ஏற்படும் கோபத்திற்கு அளவே இல்லை...

  ஆக, ,
  முட்டாளாக
  முட்டாளக்க
  ஓர் நாளை வருடந்தோறும் தேர்ந்தெடுத்திருப்பது தான் வேதனையானது


  ஜஸாகல்லாஹ் கைரன்
  சிறாப்பானதொரு பதிவிற்கு

  ReplyDelete
  Replies
  1. @ G u l a m

   வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்

   //எல்லாம் விளையாட்டுக்கென பிறரை ஏமாற்றி அதில் மனம் புளாங்காதிகம் அடையும் இச்செயலுக்கு அங்கீகாரம் கொடுக்கும் தினமாக ஏப்ரல் ஒண்ணை கொண்டாடுவது எவ்வளவு முட்டாள் தனமாக செயல்!//

   இதற்கு சப்போர்ட் பண்ணும் அனைவருக்கும் இது புரியணும் சகோ.

   //ஜஸாகல்லாஹ் கைரன்
   சிறாப்பானதொரு பதிவிற்கு//

   கருத்துக்கும் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் சகோ.

   Delete
 25. Replies
  1. @ MoneySaver

   //மிக அருமையான பதிவு//

   தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 26. disgusting

  but i didn,t like this post.

  Rashid

  ReplyDelete
  Replies
  1. @ Rashid

   //disgusting

   but i didn,t like this post//

   "ஏப்ரல் 1" கலாச்சாரம் சரியானது என்கிறீர்களா, சரியில்லை என்கிறீர்களா? அது "disgusting" என்றால், உங்களின் அந்த கருத்தோடு இணைந்த விஷயங்கள்தான் இந்தப் பதிவில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. பிறகு எதற்கு இந்த போஸ்ட் பிடிக்கலன்னு வேறு? நீங்கள் காரணத்தோடு சொன்னால் அதில் நியாயம் உள்ளதா எனப் பார்க்கலாம். 'கரெக்ட்தான்... ஆனா இல்ல...' ன்னு உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்களே சகோ?

   Delete
 27. sister,
  பிற்போக்குத்தனத்தை பற்றி நீங்கள் எழுதுவது தான் "april fool" என்று தோன்றுகிறது (இஸ்லாத்தில் இல்லாத பிற்போக்குத்தனமா ?)

  ReplyDelete
  Replies
  1. @ Anonymous

   //sister,
   பிற்போக்குத்தனத்தை பற்றி நீங்கள் எழுதுவது தான் "april fool" என்று தோன்றுகிறது (இஸ்லாத்தில் இல்லாத பிற்போக்குத்தனமா ?)//

   இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் புரிந்துக் கொண்டது அல்லது உங்களுக்கு புரிய வைக்கப்பட்டது அவ்வளவுதான்! அல்லது 'எல்லோரும் சொல்கிறார்கள், நாமும் அப்படியே சொல்வோமே' என்று நீங்கள் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.

   போகிற போக்கில் "இஸ்லாத்தில் இல்லாத பிற்போக்குத்தனமா?" என்று கேட்டுவிட்டு போவதைவிட, இஸ்லாம் மார்க்கத்தில் நீங்கள் கண்ட பிற்போக்குத்தனங்களின் பட்டியலையும் இங்கே நீங்கள் தந்தால், அதற்கான பதில்களை உண்மையின் வெளிச்சத்தில் தர நாங்கள் தயாராய் இருக்கிறோம்.

   வருகைக்கு நன்றி சகோ அனானி. மீண்டும் இங்கு வந்து உங்களின் அந்தப் பட்டியலைத் தரும்போது உங்கள் பெயருடன் வ‌ரலாமே? காத்திருக்கிறோம்.

   Delete
 28. சலாம் சகோ அஸ்மா,

  நல்ல பதிவு. நேற்று கூட என்னை ஏமாற்ற சிலர் முயன்றார்கள், சும்மா சின்ன சின்ன விசயங்களில், பெரிய பாதிப்புகள் ஒன்றும் இல்லை.
  இருந்தாலும் இதெல்லாம் தேவை இல்லாதது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

  ReplyDelete
  Replies
  1. @ சிராஜ்

   சலாம் சகோ.

   //இதெல்லாம் தேவை இல்லாதது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை//

   தேவையில்லாதது மட்டுமல்ல, தவிர்க்கப்படவேண்டிய தவறு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
  இது போன்ற நிளையான விழிப்புணர்வு ஏற்படுத்துபவை
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம்.

   //இது போன்ற நிளையான விழிப்புணர்வு ஏற்படுத்துபவை
   பகிர்வுக்கு நன்றி//

   வருகைக்கும் க‌ருத்துக்கும் நன்றி சகோ.

   Delete
 30. அல்லாஹ்
  இதுபோன்ற தீயசெயல்களை விட்டும் நம்மையும் நம் சந்ததிகளையும் பாதுகாப்பானாக!ஆமீன்

  வஸ்ஸலாம்

  ReplyDelete
 31. அல்லாஹ்
  நம்மையும் நம் சந்ததிகளையும் இதுபோன்ற தீய செயல்களைவிட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்
  வஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. //அல்லாஹ்
   நம்மையும் நம் சந்ததிகளையும் இதுபோன்ற தீய செயல்களைவிட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்
   வஸ்ஸலாம்//

   நிச்சயம் பாதுகாப்பு தேடவேண்டியவைகளில் ஒன்று இதுவும்! வருகைக்கும் க‌ருத்துக்கும் நன்றி சகோ. வஸ்ஸலாம்.

   Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!