உலகம் முழுவதும் நாள்தோறும் எண்ணற்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நாம் வசிக்கும் பகுதியில், அல்லது நமது நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்போது அது மிகவும் மனதில் கவலையை ஏற்படுத்துகிறது. கடையநல்லூரில் நாங்கள் வசிக்கும் பகுதி இக்பால் நகர். எங்கள் தெருவைச் சார்ந்த சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் (வயது 36), சகோதரர் முகம்மது இக்பால் அவர்களின் மனைவி. சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் அவர்கள் மதிய உணவு சமைப்பதற்காக மீன் வாங்கி வைத்துவிட்டு, தனது ஆறு வயது மகன் முகம்மது அத்தீக்கை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்று வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Sunday, 13 March 2016
உள்ளத்தை உருக்கும் துயரச் சம்பவம்! பாடம் பெறுவோமா?
உலகம் முழுவதும் நாள்தோறும் எண்ணற்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நாம் வசிக்கும் பகுதியில், அல்லது நமது நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்போது அது மிகவும் மனதில் கவலையை ஏற்படுத்துகிறது. கடையநல்லூரில் நாங்கள் வசிக்கும் பகுதி இக்பால் நகர். எங்கள் தெருவைச் சார்ந்த சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் (வயது 36), சகோதரர் முகம்மது இக்பால் அவர்களின் மனைவி. சகோதரி ஃபாத்திமா ஃபர்வின் அவர்கள் மதிய உணவு சமைப்பதற்காக மீன் வாங்கி வைத்துவிட்டு, தனது ஆறு வயது மகன் முகம்மது அத்தீக்கை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வந்துவிடுவோம் என்று வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
Thursday, 31 December 2015
இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு..!
ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது,
அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு
காட்டாமல் இருப்பது, போரில் வீரமரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான
பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு?
எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது.
Saturday, 30 March 2013
ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!
பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.
Saturday, 13 October 2012
ஹஜ்ஜும் உம்ராவும் பூரணமடைவது எப்போது?
இஸ்லாமிய மாதங்களில் உள்ள நான்கு புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதிக் கடமையாம் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வாக்கு போன்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாமனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றுகூட இருக்கிறார்கள்! அப்படிப்பட்ட அற்புதமான ஒரு உலகமகா மாநாடாக திகழக்கூடிய 'ஹஜ்'ஜிலே இறைவன் வகுத்துள்ள சட்டங்களை, அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலே மட்டுமே நிறைவேற்றும்போதுதான் அதன் முழுமையான பலன்களை நாம் அடைந்துக்கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்!
Friday, 5 October 2012
"முஹம்மத்" - யார் இவர்?
முன்குறிப்பு: தமிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்...
"... மேலும் வாசிக்க" இங்கே க்ளிக் பண்ணவும்.
Labels:
சமூகம்,
நபி(ஸல்) அவர்கள்,
விழிப்புணர்வு
Wednesday, 25 April 2012
முஸ்லிம்களின் கவனத்திற்கு ……! (சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு )
இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களைத் தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
Wednesday, 11 April 2012
தொடரும் எச்சரிக்கைகள்!
தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து 'சுனாமி'யாக பெயர் சூட்டப்படுகிறது. பல லட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா? இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?
Monday, 13 February 2012
'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!
வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!
Thursday, 9 February 2012
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"! (மீள்பதிவு)
நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை
(நேசம் இணைய தளம் மற்றும் யுடான்ஸ் தளம் இணைந்து வழங்கும் கட்டுரைப் போட்டிக்காக இந்தக் கட்டுரை மறுபதிவு செய்யப்படுகிறது. இந்த மறுபதிப்பானது போட்டியின் நிபந்தனைக்குட்பட்டு இருப்பதால் முந்திய பதிவைவிட சுருக்கப்பட்டுள்ளது. கூடுதல் விளக்கத்துடன் பார்க்க விரும்புவோர் பழைய பதிவைப் பார்க்கவும்.)
Saturday, 24 December 2011
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!
இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
Thursday, 30 June 2011
'மிஃராஜ்' இரவும் பித்அத்களும்
நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததற்கு பிறகு, அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த மாபெரும் ஒரு அற்புதமான விண்ணுலகப் பயணம்தான் 'மிஃராஜ்' என்பதாகும். இதைப்பற்றி வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளை விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்! அதற்கு முன்பாக, இந்த மிஃராஜ் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் வணக்கங்கள் 'பித்அத்' என்னும் வழிகேடுகளின் பட்டியலில் உள்ளவைதானா, அல்லது அதற்கு குர்ஆன் - ஹதீஸ்களில் எதுவும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.
Saturday, 14 May 2011
மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நமக்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.
Sunday, 20 February 2011
ஃபாஸ்ட் ஃபுட் உணவினால் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம்!
அவரசகால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் அவசர பழக்க வழக்கங்களை பெரும்பாலும் பின்பற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறை குழந்தைகளையும் கூட ஆபத்தான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. இந்த உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். நவீன வரவான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்க வழக்கத்தால் உடல்நலன் மிக விரைவில் பாதிக்கப்பட்டுவிடுகிறது.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Wednesday, 2 February 2011
Friday, 21 January 2011
பெட்ரோல் விலையுயர்வு குறித்த சிறப்பு ஆய்வுக் கட்டுரை!
இலவசப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பெட்ரோல்/டீசல் விலை உயர்வில் கவனம் செலுத்தாமல் இருப்பதே, எல்லா விலைவாசி உயர்வுக்கும் மிக முக்கிய காரணமாகும்! இதற்கு மத்திய அரசுக்கு மட்டுமில்லாமல் மாநில அரசுக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை TNTJ இணைய தளத்தில் மக்களின் விழிப்புணர்வுக்காக 'அபூ நபீலா' அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட அருமையான ஒரு கட்டுரையாகும்! உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்!
பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்!
Thursday, 16 December 2010
3G செல்ஃபோன் கோபுரங்களால் புற்றுநோய் ஆபத்து! புதிய ஆய்வில் தகவல்
மக்களின் தேவைகள் அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்புகளும் பெருகி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த வகையில் விஞ்ஞானத்தை வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம் எந்த மக்களுக்காக அந்த கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகின்றனவோ, அதே மக்களை முதுகுப் புறத்திலிருந்து தாக்கும் எதிரியாக அதன் பின்விளைவுகளும் அமைந்து விடுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அச்சமும் வருத்தமும் நம்மை ஆட்கொள்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சக்தி மிகுந்த 3G செல்ஃபோன் டவர்கள்! இன்னும் இரண்டு வருடங்களில் சுமார் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் இந்த 3G செல்ஃபோன் டவர்களால் இருக்கிறது என்றால், அதைக் கேட்டுவிட்டு அலட்சியப் படுத்திவிட முடியுமா? அதனால்தான் இந்தப் பதிவு.
கணிசமான மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் என்ன? பக்க விளைவு இல்லாத முறையில் அமைக்கவும் பயன்படுத்தவும், இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எந்த ஐடியாவும் தோன்றவில்லையா? இதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கத்தின் அக்கறை உள்ளதா? .... இப்படியே கேள்விக் கணைகள் நம்மை துளைக்கிறதே தவிர, அதற்கான விடைகள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்து, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அந்த டவர்கள் அமைப்பதை விடுத்து, எவ்வளவு எல்லைத் தாண்டி அமைத்தால் மக்களுக்கு அதன் பாதிப்பு இருக்காதோ அவ்வளவு தூரமான இடங்களில் அவற்றை அமைத்துக் கொள்வதே பாதுகாப்பானது என்று தோன்றுகிறது. இது எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. ஆனால் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே நம்மை பயமுறுத்திக் கொண்டு ஆங்காங்கே நிற்கின்றன அந்த உயிர்க் கொல்லிகள் :( கீழுள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். இவற்றை அறிந்த மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். மக்களின் எதிர்ப்பை மேலிடத்திற்கு கொண்டு செல்வதற்கான சரியான வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள். உங்களின் மேலான ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.
"3ஜி செல்போன் கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும்" என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது செல்போன்களின் பயன்பாடு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன்படத்தக்கதாக உள்ளது. செல்போன்களின் தேவை அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது.
தொலைபேசி துறையில் 2ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த செல்போன் தற்போது 3ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக சக்தி வாய்ந்த செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 4 லட்சத்து 40 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 25 சதவீதம் செல்போன் கோபுரங்கள் மூலம் "3ஜி" தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை பல நகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவற்றில் உள்ள சிக்னல்கள் "2ஜி"ஐ விட 2 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.
அவற்றில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் புற்றுநோய் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்கக்கூடியது என கருதப்படுகிறது. மூளை புற்றுநோய், தலைவலி, ஞாபகமறதி, புற்றுநோய் கட்டி, தசை மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
"3ஜி" செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒலிக்கதிர் குழந்தைகள் மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் அதிக அளவில் தாக்கக்கூடியது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் புற்றுநோய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நோய்களால் பாதக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.
அவற்றின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகளில் வெளிப்படும். இந்த தகவலை மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ்குமார் தெரிவித்துள்ளார். இவர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "3ஜி" செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் சில மீட்டர் தூரத்தில் வசிக்கும் மக்கள் இதன் விளைவை கட்டாயம் சந்தித்தே தீருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வறிக்கையின் தகவல் தொலைபேசி துறைக்கு இம்மாத இறுதியில் அனுப்பப்பட்டு தேவையான சீரமைப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, "3ஜி" செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல் பெல்ஜியம், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு குழந்தைகள் செல்போன்களை உபயோகிப்பது குறைக்கப்பட்டுள்ளது.
(thanks:maalaimalar)
.
Friday, 17 September 2010
சென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி
சென்னை அண்ணாநகர் பொன்னி காலனியை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது மனைவிக்கு ஐ.சி. ஐ.சி.ஐ. பாங்கில் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் ரூ.53 ஆயிரத்துக்கு விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருப்பதாக “ஸ்டேட் மெண்ட்” வந்தது.
ஆனால் அனந்தராமன் குடும்பத்தினர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். துணை கமிஷனர் பன்னீர்செல்வம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது திருட்டுதனமாக கிரிடிட் கார்டு மூலம் விமான டிக்கெட் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கிரிடிட் கார்டை கொடுத்து பெட்ரோல் போடும்போது அங்குள்ள ஊழியர்கள் கார்டை தேய்க்கும்போது இன்னொரு மிஷினான “ஸ்கிம்மர்” என்ற மிஷினிலும் கிராஸ் செய்து மற்றொரு கார்டில் உள்ள விவரங்களை பதிய வைத்து விடுகின்றனர். பின்னர் அதை கம்ப்யூட்டரில் சொருகி அதில் உள்ள விவரங்களை வைத்து போலி கிரிடிட் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர்.
இந்த மோசடியில் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த வினோத்குமார், இலங்கை நிமல்ராஜ், சென்னை அருண்குமார், எழிலரசன், தீனதயாளன், திருச்சி அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் உள்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள் கிரிடிட் கார்டு தயாரித்து பெங்களூர், மும்பை போன்ற ஊர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்ணாநகர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஜஸ்டின் என்பவர் “ஸ்கிம்மர்” மிஷின் மூலம் கிரிடிட் கார்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து போலி கார்டு தயாரிக்க மூல காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மிஷினை வழங்க மூலகாரணமாக இருந்த பெங்களூரை சேர்ந்த ஏ.கே.சிங் என்பவரை பிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்தனர். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் போலீசார் என் கவுண்டரில் அவனை சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனது கூட்டாளிகளும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.
இந்த கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி கிரிடிட் கார்டு மூலம் அடுத்தவர் பாங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கார், லேப்- டாப், கம்ப்யூட்டர், ஆடம்பர பொருட்களுடன் இவர்கள் வலம் வந்ததும் தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 5 வருடமாக இந்த கும்பல் போலி கிரிடிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் கிரிடிட் கார்டை கடைக்காரர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள். மிஷினை தந்ததும் அதில் நாம் “ஸ்கிராச்” செய்யனும்.
இவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 5 வருடமாக இந்த கும்பல் போலி கிரிடிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் கிரிடிட் கார்டை கடைக்காரர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள். மிஷினை தந்ததும் அதில் நாம் “ஸ்கிராச்” செய்யனும்.
ஆனால் இங்கு நாம் கிரிடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுக்கிறோம். அதை சிலர் தவறாக பயன்படுத்தி போலி கார்டை தயாரித்து விடுகிறார்கள். எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கூடுதல் கமிஷனர்கள் ரவி, ஷகில் அக்தர், இணை கமிஷனர் தாமரைகண்ணன் உடன் இருந்தனர்.
இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய திருமங்கலம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, திருமங்கலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோரை கமிஷனர் வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினார்.
நன்றி: மாலை மலர்
Sunday, 5 September 2010
கழுத்தையும் நெரிக்கும் கசகசா!

ஜூனியர் விகடனில் வெளிவந்த தகவல் உங்களுக்காக:
பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!
'மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு? சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர்.தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.
அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம்.
இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!
சென்னை செய்த எச்சரிக்கை!
முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!
இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே,மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.
கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும்,துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.
சிக்கன், மட்டன், சிறை!
கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.
மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள்: 'கீட்டமைன்'
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது.அதுதான் - கீட்டமைன் (ketamine).
சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது.அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10லட்ச ரூபாய்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால்,ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.
உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது.இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்!
சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு,மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம்.
உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள்.
அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள்.கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான்.
சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.
ஸ்டார் பார், குளிர்பான கிக்!
இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.
உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.
இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது...
அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது,அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி'செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
(நன்றி: ஜூனியர் விகடன்)
Subscribe to:
Posts (Atom)













