எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிராமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள் என்பதால், ஸாதிகா அக்கா அவர்கள் இந்த தொடர் பதிவைத் தொடங்கி பல ஊர்களைப் பற்றி அறியும் வாய்ப்பை நமக்குத் தந்துள்ளார்கள். இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த அருமை அக்கா ஸாதிகா அவர்களுக்கு என் நன்றிகள்!
'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, பணிபுரிந்த காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.
இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான காரைக்கால், அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.
இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன.
மேலும் இந்த காரைக்கால் மாநகரம், சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரமும்கூட. தமிழகத்தில் எண்ணூர் துறைமுகம் போல, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் எண்ணூர் துறைமுக வளர்ச்சிப் பணிகளை அரசுக்கு சொந்தமான நிறுவனமும், காரைக்கால் துறைமுகப் பணிகளை தனியார் நிறுவனமும் நடத்துகின்றன. இந்த இரண்டு பெரிய துறைமுகங்களின் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காரைக்கால் துறைமுகமே மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட ஃபிரெஞ்ச் யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குள் அடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாமல் பொருளாதாரம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் பெரிய அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாகவும் உள்ளது. இங்கு ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், பால் பண்ணைகள், நூற்பாலை(ஸ்பின்னிங் மில்), சோப் ஃபேக்ட்ரிகள், ஸ்டீல் ஃபேக்ட்ரி, டைல்ஸ் தொழிற்சாலைகள், எண்ணெய் மில்கள், பால் பண்ணைகள், மரவாடிகள், க்ரில் தயாரிப்பு பட்டறைகள் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் செய்யும் ஃபேக்ட்ரிகள் போன்றவையும் உள்ளன. மேலும் பழங்கால தொழில் முறைகளான மண் பாண்டங்கள் செய்தல், பனை ஓலைப் பெட்டிகள் முடைதல், கருங்கல் உரல்கள்/அம்மி/குடக்கல் செய்தல், மூங்கில் கூடைகள்/முறங்கள் செய்தல், இடியப்ப உரல் செய்தல் போன்ற ஏராளமான தொழில்களும், ஊதுபத்தி செய்வது, ஒயர் கூடைகள் பின்னுதல், வத்தல்கள், ஊறுகாய்கள், கடலை மிட்டாய் தயாரிப்பு, மெழுகுவர்த்தி செய்வது போன்ற குடிசைத் தொழில்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. தமிழகத்தைவிட பாண்டிச்சேரி மாநிலத்தில் வரி விகிதம் குறைவு என்பதால் வாகனங்கள், எலக்ட்ரிக்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்காக காரைக்காலைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் சற்று தூரமுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கூட மக்கள் காரைக்காலுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
மேலும் காரைக்கால் மீன் வர்த்தகத்திலும் சிறந்து விளங்குகின்றது. 'ராஞ்சி' என்று சொல்லப்படும் பெரிய மோட்டார் படகுகளில் சென்று பொடி மீன்களில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் விற்பனையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கும், கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவையல்லாமல் சிறு சிறு படகுகளில் சென்று பிடித்து வரும் கரைவலை மீன்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி! சூரிய உதயத்திற்கு முன்பாகவே கடற்கரைச் சென்று காத்திருந்தால் மணக்க, மணக்க துள்ளும் கரைவலை மீன்களை வாங்கி வரலாம்:)
காரைக்கால் பீச்சில் குழந்தைகள் விளையாட பலவித விளையாட்டுகளோடு கூடிய 'பார்க்'கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இதமாக வருடிக் கொடுக்கும் கடல் காற்றை குழந்தைகளின் விளையாட்டுகளோடு ரசித்தபடி சுவாசிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் கடல் இல்லாத பக்கத்து ஊர் மக்களும் 'காரைக்கால் கடற்கரை'க்கு விரும்பி வந்த வண்ணம் இருப்பார்கள்.
ஞாயிற்றுக் கிழமை என்றால் அங்கு திருவிழாக் கூட்டம்தான் :) சின்ன மெரீனா பீச் போன்று ஐஸ்கிரீம் வண்டிகள், சுண்டல்/நிலக்கடலை வண்டிகள், நடமாடும் 'பஜ்ஜி/பானி பூரி ஸ்டால்'கள், பஞ்சு மிட்டாய்/முறுக்கு விற்பனை, மாங்காய் சீவல்கள், அந்தந்த சீசன் நேரங்களில் சோளம், பனங்கிழங்கு, அன்னாசி, பலாப்பழம் என எல்லா விற்பனைகளும் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை என அத்தனையும் அங்கு உண்டு! அத்துடன் காற்றோட்டமான உணவகமும் உள்ளது. காரைக்கால் பீச்சுக்கு போகும்போது மணி பர்ஸ் கொஞ்சம் கனமாக இருந்தால் நன்றாக எஞ்சாய் பண்ணலாம் :)
மக்களின் பாதுகாப்புக்காக கடற்கரை போலீஸ் நிலையம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எப்படி தடுத்து நிறுத்தி பிடிப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் அவ்வப்போது அங்கு நடத்தப்பட்டு வருகிறது.
சுனாமியில் மறைந்தவர்களின் நினைவாக அங்குள்ள கலங்கரை விளக்கின் (லைட் ஹவுஸ்) பக்கத்தில் ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கம் கான்கிரீட் வீடுகளும் கட்டிக் கொடுத்துள்ளது.
சுனாமி நடந்த பிறகு மயான பூமி போல் காட்சியளித்த காரைக்கால் கடற்கரை, அரசின் துரிதமான பணிகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் புதுப் பொலிவடைந்துள்ளது பாராட்டப்படவேண்டிய ஒன்று! ஏனெனில் மக்களின் பொழுது போக்கு இடமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பூங்காக்களோ, வேறு எதுவும் இல்லாத நிலையில் இந்த பீச்தான் காரை மக்களின் சிறந்த பொழுது போக்குமிடம். இங்கு ஓடிக் கொண்டிருக்கும் அரசாலாற்றில் 'மிதக்கும் உணவகம்' (Floating Restaurant) உள்ளது. 'போட்டிங்' போய்க் கொண்டே, சுகமான காற்றோட்டத்தில் சாப்பிடலாம்.
'வந்தாரை வாழவைக்கும் சிங்காரக் காரைக்கால்' :) என்று பெருமையாக சொல்லப்படும் இந்த காரை மாநகரத்தில், இங்குள்ள வாழ்வியல் வசதிகளை விரும்பும் வெளியூர் மக்கள் அதிகமாக குடியேறி வருகின்றனர். பல நிலைகளிலும் வளர்ச்சியடைந்து வரும் காரைக்காலில் தற்போது அதிகரித்து 'நகர்'களே இதற்கு போதுமான சான்று. காரைக்காலில் உருவாகியுள்ள நகர்கள், கிட்டத்தட்ட 50 க்கும் மேல் இருப்பதாக கூறுகிறார்கள்! வெளியூர் மக்களின் குடியேற்றத்தினால் கவனிப்பாரற்றுக் கிடந்த சாதாரண இடங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக உருவெடுத்துள்ளதால், மனைகளின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. பிள்ளைகளின் படிப்பிற்காகவும் மக்கள் இங்கு வந்து குடியேறுகின்றனர்.
மேலும் இங்கு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், I.T.I., வேளாண் கல்லூரி, N.I.T, கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று ஏகப்பட்ட கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் நிறைந்துள்ளன.
காரைக்காலிலுள்ள முக்கிய கல்விக் கூடங்களின் பட்டியல்:
இவையல்லாமல் இஸ்லாமிய மார்க்கக் கல்வியை பெண்கள் உள்ளூரிலேயே பயின்றுக் கொள்ளும் வசதிக்காக சுமார் 20 வருட காலம் இயங்கி வரும் 'ஜாமிஆ புஷ்ரா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி'யும், திருக்குர்ஆன் மனனம் செய்யும் இதர பள்ளிகளும் உள்ளன. மேலும் காரைக்கால் மக்களில் கணிசமான தொகையினர் ஃபிரெஞ்ச் குடியுரிமைப் பெற்றிருப்பதால் இங்கு ஃபிரெஞ்ச் ஸ்கூல்களும், பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்கள் (adults) ஃபிரெஞ்ச் பயில்வதற்காக 'Alliance Française' என்ற ஒரு கல்விக் கூடமும் உள்ளது. இதுதான் நாங்கள் ஃப்ரெஞ்ச் கற்றுக் கொள்ள உதவிய :) 'Alliance Française'
சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற அரசு சார்ந்த விழாக்களும் மற்ற கலை நிகழ்ச்சிகளும் கலெக்டர் அலுவகத்திற்கு எதிரே அமைந்துள்ள 'கோர்னமால் திடல்' என்று சொல்லப்படும் திடலில்தான் நடக்கும்.
காரைக்காலுக்கு அமைச்சர்கள், தொழிலதிபர்கள், தணிக்கையாளர்கள் வந்துச் செல்ல நாள்தோறுமோ அல்லது சில நாட்கள் இடைவெளியிலோ இங்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து தொடர்ந்து இருந்து வருவதால், அரசின் தொழிற் சாலைகளிலும் தனியாருக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகளிலும் அரசு அனுமதி பெற்ற ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் சர்வதேச விமான நிலையம் அமைக்க 600 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விமான நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்து வந்த காரைக்கால் - நாகூர் இடையேயுள்ள ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நிறைவுப்பெற்று 28-03-2011 அன்று மாலை ரயில் இஞ்சின் வெள்ளோட்டம் விடப்பட்டது.
நாகூரிலிருந்து சென்னை, எர்ணாகுளம் மற்றும் பல ஊர்களுக்கும் செல்லும் வழித் தடங்களும் இனி காரைக்காலிலிருந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளன. காரை மக்களின் வசதி கருதி அதன் நேர அட்டவணையை கீழே கொடுத்துள்ளேன் :) மற்றவர்களுக்கும் கூட இது பயன்படலாம். இந்த இரயில் நீட்டிப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று புதிய கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுடன் காரைக்காலில் இருந்து பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்வதற்கு அகல ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொசுறு தகவல்கள்:
o தினமும் காலை 5.55 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் பண்பலை வானொலி நிலையம் காரைக்காலில் இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடங்கப்பட்ட பண்பலை ஒலிபரப்புகளில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது காரைக்கால் பண்பலை ஒலிபரப்புதான்! நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் எல்லா கிராமங்களிலும் இதன் ஒலிபரப்பை ரசிக்கலாம்.
o வேளாண் விளைப் பொருட்களையும், கைத்தறி துணி வகைகளையும் மலிவு விலையில் மக்களுக்கு அளிக்கும் 'பாப்ஸ்கோ' மற்றும் 'பாசிக்' போன்ற பாண்டிச்சேரி அரசு நடத்தும் நிறுவனங்களும் இங்குள்ளன.
o இங்குள்ள மீன் மார்க்கெட்டில் காலை/மாலை இரண்டு நேரங்களில் மீன்கள், நண்டு, இறால், கனவாய் அனைத்தும் ஃபிரஷ்ஷாக கொண்டு வரப்படுகின்றன. அந்த மார்க்கெட்டை ஒட்டியே காய்கறி மார்க்கெட்டும் உள்ளது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் சந்தையும் நடத்தப்படுகிறது. இவையல்லாமல் மார்க்கெட்டுக்கு சென்று வாங்கும் உணவுப் பொருட்களில் காய்கறிகள், பழங்கள், மீன்கள், கீரை வகைகள், இளநீர் மற்றும் சீசன் உணவுப் பொருட்களான மாம்பழம், பலாப்பழம், அன்னாசி, சோளம், இலந்தைப் பழம், நிலக்கடலை, பனங்கிழங்கு, விலாம்பழம் போன்றவையும் (சமீப காலமாக அரசாங்கம் தடை விதித்துள்ள) கொக்கு, மடையான், உள்ளான் போன்ற பறவைகளும் தெருக்கள்தோறும் விற்பனைக்கு வந்துவிடும். பனை நுங்கு மட்டும் தேடிச்சென்று வாங்கவேண்டும். இளநீரும் சில நேரங்களில் தெருக்களுக்கு வராது. ஆனால் ரோட்டோரக் கடைகளுக்குச் சென்றால் தினமும் வாங்கலாம்.
o காரைக்காலில் தெருக்களின் அமைப்பு சீராக இருக்கும். கழிவுநீர் வெளியேற்றமும் சரியான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். 'காரைக்கால் ரோட்டப் பாரு, காதர் சுல்தான் வீட்டப் பாரு' என்று பழங்காலம் தொட்டு ஒரு உவமொழிக் கூறுவார்கள் :) நீங்களும் அந்த ரோட்டைப் பாருங்கள் இதோ:
o காதர் சுல்தான் வீடு என்பது வழவழப்புக்காகவும், கூடுதல் உறுதிக்காகவும் சிமெண்ட்டில் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து கட்டியதாக சொல்வார்கள். வீடு முழுவதும் உயர்ந்த சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஓரங்களில் பூ வேலைகள் செய்யப்பட்ட (முகம் பார்க்கும்) கண்ணாடியால் சீலிங் அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வாசல் நிலைகள் எல்லாம் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். முன்பெல்லாம் வெளியூரிலிருந்து வரும் மக்கள் இந்த வீட்டையும் பார்த்துச் செல்வார்களாம். [அதன் படம் கிடைத்தவுடன் இணைக்கப்படும் :)]
o ஒரு காலத்தில் இருந்த ரிக்க்ஷா சவாரிகள் வெகுவாகக் குறைந்து/மறைந்து தொட்டதுக்கெல்லாம் ஆட்டோதான் இங்கு அழைக்கப்படும். ஒரு ஃபோன் போட்டால் வீட்டு வாசலுக்கு வருவதற்கு நிறைய 'கேப்ஸ்'கள் இங்குள்ளன.
o டச்சுக்காரர்கள் கட்டிய டேனிஷ் கோட்டை காரைக்காலுக்கு அருகிலுள்ள தரங்கம்பாடியில் (காரைக்காலிலிருந்து 13 கி.மீ) உள்ளது.
o காரைக்கால் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழக்கூடிய ஒரு நகரம் எனலாம். இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் கணிசமான அளவிலும் கிறிஸ்தவர்கள் குறைந்த அளவிலும் சகோதர வாஞ்சையுடன் வாழ்கின்றனர்.
o காரைக்கால் மெயின் ஏரியாவில் மட்டும் சுமார் 15 பள்ளிவாசல்களாவது இருக்கும். அதில் எல்லோருக்கும் மிகவும் அறிமுகமான (எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள) 'பெரியப் பள்ளி' இதுதான்:
o முன்பெல்லாம் இங்குள்ள இஸ்லாமிய மக்களின் திருமண சம்பந்தங்கள் உள்ளூரிலேயும், மிஞ்சி போனால் நாகூர், T.R. பட்டிணம், நாகை, திட்டச்சேரி என (மிக அருகில்) சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் நடந்து வந்தன. சில வருடங்களாக தூரத்து ஊர்களிலும் சம்பந்த உறவுகள் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் தாய்வீட்டிலோ அல்லது சொந்த ஊரிலேயே தனிக் குடித்தனமாகவோ இருப்பார்களே தவிர, மாமியார் வீட்டிற்கு விருந்தாளிகளாக மட்டுமே சென்று வருவார்கள். அதனாலோ என்னவோ இங்கே மாமியார்/மருமகள் பிரச்சனைகள் மிகவும் அரிது :)
o இங்கு எல்லோர் வீட்டு இஸ்லாமியத் திருமணங்களுக்கும் பெண்கள் ஒவ்வொரு வீடாகச்சென்று பெண்களுக்கு அழைப்பு வைப்பார்கள். குறுகிய காலத்தில் ஏற்பாடாகும் திருமணமாகவோ, எல்லா வீடுகளுக்கும் செல்ல இயலாத நிலையிலோ உள்ளவர்கள் பெண்களுக்கென தனி பத்திரிக்கை அனுப்பினால் போதும். ஆண்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே நேரில் சென்று முதலில் (பத்திரிக்கை வைக்காமல்) அழைப்பு வைப்பார்கள். அப்படி அழைப்பு சொல்லிவிட்டு வந்த பிறகு சொந்தங்களுக்கும், எல்லோர் வீட்டு ஆண்களுக்கும் சேர்த்து பத்திரிக்கை வைப்பது இவ்வளவு பெரிய ஊருக்கும் தனியாக ஒரே ஒரு ஆள்தான்! அவரைப் பற்றி சிறுகுறிப்பு இங்கு சொல்லியாகவேண்டும் :)
o இங்கு ஆடம்பரமில்லாமல், சீர்திருத்தமான முறையில், பெண் வீட்டில் எதையும் பெறாமல் நபிவழிப்படி திருமணங்கள் நடந்தாலும், அப்படிப்பட்ட திருமணங்கள் சுமார் 30% அல்லது 40% என்றுதான் சொல்லமுடியும். மற்றபடி பகட்டான பந்தல்களோடும்/ அலங்கார விளக்குகளோடும் நடக்கக்கூடிய ஆடம்பர திருமணங்களும், கணவன் வீட்டாரால் கட்டாயப்படுத்தப்பட்டு வரதட்சணை வாங்கி முடிக்கும் திருமணங்களும் நடந்த வண்ணமே உள்ளன :( அப்படிப்பட்ட திருமணங்களில் பத்திரிக்கை அடிக்கும் செலவு மட்டும் கணவன் வீட்டார்கள் ஏற்றுக் கொண்டு (?), அவர்களுக்கான விருந்து செலவுகளை பெண் வீட்டாரே செய்யவேண்டும். (இந்த அநியாயம் எப்போ ஒழியுமோ தெரியல!)
o எந்த முறை திருமணமாக இருந்தாலும் (கல்யாண மண்டபத்தில் நடக்காத திருமணத்திற்கு) 'பண்டாரிகள்' (சமையல்காரர்கள்) வைத்து பெரும்பாலும் தெருவிலேயே சாப்பாடு (பிரியாணி) சமைக்கப்படும். எல்லோர் வீட்டிலும் பிரியாணி என்பதால் (பழையபடி) நெய் சோறுக்கு மக்களின் விருப்பம் திரும்பியுள்ளது. முன்பு 'சஹன்' என்று சொல்லப்படும் பெரிய தட்டில் 4 பேர் சேர்ந்து உண்ணும் வழக்கம் இருந்தது. இப்போது மிக சில இடங்களிலே தவிர பெரும்பாலும் தனித்தனி தட்டுகளிலேதான் திருமண விருந்துகள் பரிமாறப்படுகிறது.
o அழைப்புக் கொடுத்து வீட்டில் நடத்தப்படும் விருந்துகள் அல்லாமல் ஏதாவது மற்ற தேவைகளை முன்னிட்டோ, நேர்ச்சை/வேண்டுதல் அல்லது இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டோ சாப்பாடு தயாரித்து ஏழைகளுக்கும், வேண்டிய மற்ற வீடுகளுக்கும் கொடுத்தனுப்ப பனை ஓலையினால் நேர்த்தியாக செய்யப்பட்ட ('குறப்பெட்டி' என்று சொல்லப்படும்) பெட்டிகளில் 'பொட்டி சோறு' அனுப்புவார்கள். அதில் சூடான நெய் சோற்றினைப் போட்டு, அதன் மேல் தால்ச்சாவும், 'தனி கறி (or) களரி கறி' என்று சொல்லப்படும் கறி குழம்பும் ஊற்றிக் கொடுத்தால் பனை ஓலையின் வாசனையுடன் கூடிய அதன் மணமே தனி மணம்தான் :) அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஃப்ளைட் ஏறி ஃபிரான்சுக்கு வந்த ஓலைப் பெட்டியில் நாங்கள் போட்ட 'பொட்டி சோறு' இது :)
எங்கள் காரைக்காலைப் பற்றிச் சொல்ல இன்னும் எவ்வளவோ உள்ளன. அவ்வளவையும் எழுதினால் இந்த தொடர் பதிவை பல பகுதிகளாக கொடுக்க வேண்டிவரும் :) என்று அஞ்சி இத்துடன் நிறைவு செய்துக் கொள்கிறேன்.
இந்த தொடர் பதிவை எழுத,
1. குறை ஒன்றுமில்லை வலைப்பூ, லஷ்மி அம்மா அவர்களையும்,
2. ஜெய்லானி வலைப்பூ, சகோ. ஜெய்லானி அவர்களையும்,
3. பூங்கதிர் தேசம் வலைப்பூ, தோழி சந்தனா அவர்களையும்,
4. முஹம்மத் ஆஷிக் 'citizen of world' வலைப்பூ, சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களையும்,
5. குட்டி சுவர்க்கம் வலைப்பூ, தோழி ஆமினா அவர்களையும் அழைக்கிறேன். (உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தால் எழுதுங்கள்)
படங்கள்: இணையத்திலிருந்து [பொட்டி சோறைத் தவிர :)]
'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, பணிபுரிந்த காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.
இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான காரைக்கால், அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.
இங்கு ஆறும் கடலும் சந்திக்கும் இரண்டு முகத்துவாரங்கள் இருப்பதால் காரைக்காலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆறுகளே காரைக்காலையும் அதன் கிராமங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளன.
மேலும் இந்த காரைக்கால் மாநகரம், சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரமும்கூட. தமிழகத்தில் எண்ணூர் துறைமுகம் போல, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் எண்ணூர் துறைமுக வளர்ச்சிப் பணிகளை அரசுக்கு சொந்தமான நிறுவனமும், காரைக்கால் துறைமுகப் பணிகளை தனியார் நிறுவனமும் நடத்துகின்றன. இந்த இரண்டு பெரிய துறைமுகங்களின் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காரைக்கால் துறைமுகமே மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்கோ கப்பல்
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட ஃபிரெஞ்ச் யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குள் அடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாமல் பொருளாதாரம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளிலும் பெரிய அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாகவும் உள்ளது. இங்கு ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், பால் பண்ணைகள், நூற்பாலை(ஸ்பின்னிங் மில்), சோப் ஃபேக்ட்ரிகள், ஸ்டீல் ஃபேக்ட்ரி, டைல்ஸ் தொழிற்சாலைகள், எண்ணெய் மில்கள், பால் பண்ணைகள், மரவாடிகள், க்ரில் தயாரிப்பு பட்டறைகள் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் செய்யும் ஃபேக்ட்ரிகள் போன்றவையும் உள்ளன. மேலும் பழங்கால தொழில் முறைகளான மண் பாண்டங்கள் செய்தல், பனை ஓலைப் பெட்டிகள் முடைதல், கருங்கல் உரல்கள்/அம்மி/குடக்கல் செய்தல், மூங்கில் கூடைகள்/முறங்கள் செய்தல், இடியப்ப உரல் செய்தல் போன்ற ஏராளமான தொழில்களும், ஊதுபத்தி செய்வது, ஒயர் கூடைகள் பின்னுதல், வத்தல்கள், ஊறுகாய்கள், கடலை மிட்டாய் தயாரிப்பு, மெழுகுவர்த்தி செய்வது போன்ற குடிசைத் தொழில்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. தமிழகத்தைவிட பாண்டிச்சேரி மாநிலத்தில் வரி விகிதம் குறைவு என்பதால் வாகனங்கள், எலக்ட்ரிக்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் பல பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்காக காரைக்காலைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் சற்று தூரமுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கூட மக்கள் காரைக்காலுக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
மேலும் காரைக்கால் மீன் வர்த்தகத்திலும் சிறந்து விளங்குகின்றது. 'ராஞ்சி' என்று சொல்லப்படும் பெரிய மோட்டார் படகுகளில் சென்று பொடி மீன்களில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் விற்பனையையும் தாண்டி, தமிழ்நாட்டின் மற்ற ஊர்களுக்கும், கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவையல்லாமல் சிறு சிறு படகுகளில் சென்று பிடித்து வரும் கரைவலை மீன்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி! சூரிய உதயத்திற்கு முன்பாகவே கடற்கரைச் சென்று காத்திருந்தால் மணக்க, மணக்க துள்ளும் கரைவலை மீன்களை வாங்கி வரலாம்:)
ஞாயிற்றுக் கிழமை என்றால் அங்கு திருவிழாக் கூட்டம்தான் :) சின்ன மெரீனா பீச் போன்று ஐஸ்கிரீம் வண்டிகள், சுண்டல்/நிலக்கடலை வண்டிகள், நடமாடும் 'பஜ்ஜி/பானி பூரி ஸ்டால்'கள், பஞ்சு மிட்டாய்/முறுக்கு விற்பனை, மாங்காய் சீவல்கள், அந்தந்த சீசன் நேரங்களில் சோளம், பனங்கிழங்கு, அன்னாசி, பலாப்பழம் என எல்லா விற்பனைகளும் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை என அத்தனையும் அங்கு உண்டு! அத்துடன் காற்றோட்டமான உணவகமும் உள்ளது. காரைக்கால் பீச்சுக்கு போகும்போது மணி பர்ஸ் கொஞ்சம் கனமாக இருந்தால் நன்றாக எஞ்சாய் பண்ணலாம் :)
காரைக்கால் பீச் ரெஸ்டாரண்ட்
மக்களின் பாதுகாப்புக்காக கடற்கரை போலீஸ் நிலையம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எப்படி தடுத்து நிறுத்தி பிடிப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் அவ்வப்போது அங்கு நடத்தப்பட்டு வருகிறது.
2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமிக்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் கடலோரங்களிலுள்ள மணற்பரப்புகளில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்குமேல் அங்கு இருக்க விரும்புபவர்கள், ஊரிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் சுமார் 2 கி.மீ. தூரம் நீளமுள்ள ரோட்டின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் நாற்காலிகளில் அமர்ந்து காற்று வாங்கிக் கொள்ளலாம்.
கதிரவன் உதயமாகும் காலை நேரத்தில் காரைக்கால் பீச் ரோடு
சுனாமியில் மறைந்தவர்களின் நினைவாக அங்குள்ள கலங்கரை விளக்கின் (லைட் ஹவுஸ்) பக்கத்தில் ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு அரசாங்கம் கான்கிரீட் வீடுகளும் கட்டிக் கொடுத்துள்ளது.
லைட் ஹவுஸ் |
காரைக்கால் பீச்சிலுள்ள சுனாமி மெமோரியல் |
சுனாமி (நிவாரண) வீடுகள் |
ஆற்றோட்டத்தின் மேல் காற்றோட்டமான 'மிதக்கும் உணவகம்' |
மேலும் இங்கு மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், I.T.I., வேளாண் கல்லூரி, N.I.T, கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று ஏகப்பட்ட கலை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகள் நிறைந்துள்ளன.
VMMC மருத்துவக் கல்லூரி |
காரைக்காலிலுள்ள முக்கிய கல்விக் கூடங்களின் பட்டியல்:
List of Educational Institutions in Karaikal:
1. National Institute of Technology (NIT), Karaikal.
2. Pondicherry University, Karaikal.
3. Vinayaga Mission Medical college, Karaikal.
4. Perunthalaivar Kamarjar Institute of Engineering and Technology (PKIET), Karaikal.
5. Pandit Jawaharlal Nehru College of Agriculture & Research Institute (PAJANCOA & RI ), Karaikal.
6. Bharaithiar College of Engineering and Technology, Karaikal.
7. RVS College of Engineering and Technology, Karaikal.
8. Aringar Anna Govt. Arts College, Karaikal.
9. Avvaiyar Govt. Arts College, Karaikal.
10. RVS Arts and Science College, Kalikuppam, Karaikal.
11. Karaikal college of Education, Karaikal.
12. Karaikal Govt. Polytechnic, Karaikal.
13. Govt. I.T.I For Women Karaikal.
14. Govt. I.T.I For Men Karaikal.
15. Jawahar Navodhaya Vidyalaya, Karaikal.
16. Kendriya Vidyalaya, Karaikal.
17. St. Mary's higher secondary school, Karaikal.
18. Nirmala Rani higher secondary school, Karaikal.
19. Thandhai Perriyar Govt. higher secondary school, Karaikal.
20. Annai Theresa Govt. Girls higher secondary school, Karaikal.
21. Murugathal Achi Govt. Girls higher secondary school, Karaikal.
22. Govt. higher secondary school, T.R. Pattinam, Karaikal.
23. Govt. higher secondary school, Thenur, Karaikal.
24. Govt. higher secondary school, Niravy, Karaikal.
25. Govt. higher secondary school, Nedungadu, Karaikal.
26. Govt. higher secondary school, Kottucherry, Karaikal.
27. Swami Vivekananda higher secondary school, Ambagarathur, Karaikal.
28. Govindasamy Pillai high school, Karaikal.
29. Govt. French school, Karaikal.
30. Govt. high school, Karaikalmedu, Karaikal.
31. Crescent high school, Ambagaratur, Karaikal.
32. Don Bosco high school, Nedungadu, Karaikal.
33. Govt. high school, Sethur, Karaikal.
34. Govt. high school, Poovam, Karaikal.
35. Govt. high school, Kottucherry, Karaikal.
36. Govt. high school, Thalatheru, Karaikal.
37. Govt. Girls high school, Thalatheru, Karaikal.
38. Govt. high school, T.R. Pattinam, Karaikal.
39. Govt. Girls high school, T.R. Pattinam, Karaikal.
40. Govt. high school, Kurumbakaram, Karaikal.
41. Govt. high school, Vizhithiyur, Karaikal.
42. Govt. high school, Akkaraivattam, Karaikal.
43. K.M.K.Kannaiya Pillai Memorial School, Karaikal.
44. M.E.S high school, Karaikal.
45. Servite high school, Kottucherry, Karaikal.
46. ONGC public school, Karaikal.
47. SRVS national school, Karaikal.
48. Cavery school, Karaikal.
49. St.Joseph French cluny, Karaikal.
50. Good Shepherd English School, Melakasakudi, Karaikal.
51. Iqra Nursery & Primary School, Karaikal.
52. Alliance Française de Karikal.
53. Aiyas CBSE School, Karaikal.
(thanks to Wikipedia)
1. National Institute of Technology (NIT), Karaikal.
2. Pondicherry University, Karaikal.
3. Vinayaga Mission Medical college, Karaikal.
4. Perunthalaivar Kamarjar Institute of Engineering and Technology (PKIET), Karaikal.
5. Pandit Jawaharlal Nehru College of Agriculture & Research Institute (PAJANCOA & RI ), Karaikal.
6. Bharaithiar College of Engineering and Technology, Karaikal.
7. RVS College of Engineering and Technology, Karaikal.
8. Aringar Anna Govt. Arts College, Karaikal.
9. Avvaiyar Govt. Arts College, Karaikal.
10. RVS Arts and Science College, Kalikuppam, Karaikal.
11. Karaikal college of Education, Karaikal.
12. Karaikal Govt. Polytechnic, Karaikal.
13. Govt. I.T.I For Women Karaikal.
14. Govt. I.T.I For Men Karaikal.
15. Jawahar Navodhaya Vidyalaya, Karaikal.
16. Kendriya Vidyalaya, Karaikal.
17. St. Mary's higher secondary school, Karaikal.
18. Nirmala Rani higher secondary school, Karaikal.
19. Thandhai Perriyar Govt. higher secondary school, Karaikal.
20. Annai Theresa Govt. Girls higher secondary school, Karaikal.
21. Murugathal Achi Govt. Girls higher secondary school, Karaikal.
22. Govt. higher secondary school, T.R. Pattinam, Karaikal.
23. Govt. higher secondary school, Thenur, Karaikal.
24. Govt. higher secondary school, Niravy, Karaikal.
25. Govt. higher secondary school, Nedungadu, Karaikal.
26. Govt. higher secondary school, Kottucherry, Karaikal.
27. Swami Vivekananda higher secondary school, Ambagarathur, Karaikal.
28. Govindasamy Pillai high school, Karaikal.
29. Govt. French school, Karaikal.
30. Govt. high school, Karaikalmedu, Karaikal.
31. Crescent high school, Ambagaratur, Karaikal.
32. Don Bosco high school, Nedungadu, Karaikal.
33. Govt. high school, Sethur, Karaikal.
34. Govt. high school, Poovam, Karaikal.
35. Govt. high school, Kottucherry, Karaikal.
36. Govt. high school, Thalatheru, Karaikal.
37. Govt. Girls high school, Thalatheru, Karaikal.
38. Govt. high school, T.R. Pattinam, Karaikal.
39. Govt. Girls high school, T.R. Pattinam, Karaikal.
40. Govt. high school, Kurumbakaram, Karaikal.
41. Govt. high school, Vizhithiyur, Karaikal.
42. Govt. high school, Akkaraivattam, Karaikal.
43. K.M.K.Kannaiya Pillai Memorial School, Karaikal.
44. M.E.S high school, Karaikal.
45. Servite high school, Kottucherry, Karaikal.
46. ONGC public school, Karaikal.
47. SRVS national school, Karaikal.
48. Cavery school, Karaikal.
49. St.Joseph French cluny, Karaikal.
50. Good Shepherd English School, Melakasakudi, Karaikal.
51. Iqra Nursery & Primary School, Karaikal.
52. Alliance Française de Karikal.
53. Aiyas CBSE School, Karaikal.
(thanks to Wikipedia)
இவையல்லாமல் இஸ்லாமிய மார்க்கக் கல்வியை பெண்கள் உள்ளூரிலேயே பயின்றுக் கொள்ளும் வசதிக்காக சுமார் 20 வருட காலம் இயங்கி வரும் 'ஜாமிஆ புஷ்ரா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி'யும், திருக்குர்ஆன் மனனம் செய்யும் இதர பள்ளிகளும் உள்ளன. மேலும் காரைக்கால் மக்களில் கணிசமான தொகையினர் ஃபிரெஞ்ச் குடியுரிமைப் பெற்றிருப்பதால் இங்கு ஃபிரெஞ்ச் ஸ்கூல்களும், பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்கள் (adults) ஃபிரெஞ்ச் பயில்வதற்காக 'Alliance Française' என்ற ஒரு கல்விக் கூடமும் உள்ளது. இதுதான் நாங்கள் ஃப்ரெஞ்ச் கற்றுக் கொள்ள உதவிய :) 'Alliance Française'
சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற அரசு சார்ந்த விழாக்களும் மற்ற கலை நிகழ்ச்சிகளும் கலெக்டர் அலுவகத்திற்கு எதிரே அமைந்துள்ள 'கோர்னமால் திடல்' என்று சொல்லப்படும் திடலில்தான் நடக்கும்.
கலெக்டர் ஆஃபிஸ்
'கோர்னமால்' திடலிலுள்ள போராட்ட வீரர்கள் நினைவு
காரைக்காலுக்கு அமைச்சர்கள், தொழிலதிபர்கள், தணிக்கையாளர்கள் வந்துச் செல்ல நாள்தோறுமோ அல்லது சில நாட்கள் இடைவெளியிலோ இங்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து தொடர்ந்து இருந்து வருவதால், அரசின் தொழிற் சாலைகளிலும் தனியாருக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகளிலும் அரசு அனுமதி பெற்ற ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் சர்வதேச விமான நிலையம் அமைக்க 600 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விமான நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்து வந்த காரைக்கால் - நாகூர் இடையேயுள்ள ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நிறைவுப்பெற்று 28-03-2011 அன்று மாலை ரயில் இஞ்சின் வெள்ளோட்டம் விடப்பட்டது.
நாகூரிலிருந்து சென்னை, எர்ணாகுளம் மற்றும் பல ஊர்களுக்கும் செல்லும் வழித் தடங்களும் இனி காரைக்காலிலிருந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளன. காரை மக்களின் வசதி கருதி அதன் நேர அட்டவணையை கீழே கொடுத்துள்ளேன் :) மற்றவர்களுக்கும் கூட இது பயன்படலாம். இந்த இரயில் நீட்டிப்புக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று புதிய கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் இரயில் (16175), மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து 9.20 மணிக்கு புறப்படும் இந்த இரயில் காலை 10 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16176), அன்று இரவு 8 மணிக்கு நாகூரை வந்தடையும். பின்னர், அங்கிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த இரயில் நீட்டிப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் - நாகூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு இரயிலும் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16866) மறுநாள் காலை 11.45 மணிக்கு நாகூரை வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து 11.50 மணிக்கு புறப்படும் இரயில் மதியம் 12.20 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16865), அன்று மாலை 4.25 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில், மறுநாள் அதிகாலை 3.25 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது.
நன்றி கூகுள்
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16176), அன்று இரவு 8 மணிக்கு நாகூரை வந்தடையும். பின்னர், அங்கிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த இரயில் நீட்டிப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் - நாகூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் விரைவு இரயிலும் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16866) மறுநாள் காலை 11.45 மணிக்கு நாகூரை வந்தடைகிறது. பின்னர், அங்கிருந்து 11.50 மணிக்கு புறப்படும் இரயில் மதியம் 12.20 மணிக்கு காரைக்காலை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், காரைக்காலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த இரயில் (16865), அன்று மாலை 4.25 மணிக்கு நாகூரை சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் இந்த இரயில், மறுநாள் அதிகாலை 3.25 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைகிறது.
நன்றி கூகுள்
இந்தப் பணிகளுடன் காரைக்காலில் இருந்து பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்வதற்கு அகல ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொசுறு தகவல்கள்:
o தினமும் காலை 5.55 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் பண்பலை வானொலி நிலையம் காரைக்காலில் இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடங்கப்பட்ட பண்பலை ஒலிபரப்புகளில் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான நேயர்களின் அமோக ஆதரவைப் பெற்றது காரைக்கால் பண்பலை ஒலிபரப்புதான்! நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் எல்லா கிராமங்களிலும் இதன் ஒலிபரப்பை ரசிக்கலாம்.
o வேளாண் விளைப் பொருட்களையும், கைத்தறி துணி வகைகளையும் மலிவு விலையில் மக்களுக்கு அளிக்கும் 'பாப்ஸ்கோ' மற்றும் 'பாசிக்' போன்ற பாண்டிச்சேரி அரசு நடத்தும் நிறுவனங்களும் இங்குள்ளன.
o இங்குள்ள மீன் மார்க்கெட்டில் காலை/மாலை இரண்டு நேரங்களில் மீன்கள், நண்டு, இறால், கனவாய் அனைத்தும் ஃபிரஷ்ஷாக கொண்டு வரப்படுகின்றன. அந்த மார்க்கெட்டை ஒட்டியே காய்கறி மார்க்கெட்டும் உள்ளது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் சந்தையும் நடத்தப்படுகிறது. இவையல்லாமல் மார்க்கெட்டுக்கு சென்று வாங்கும் உணவுப் பொருட்களில் காய்கறிகள், பழங்கள், மீன்கள், கீரை வகைகள், இளநீர் மற்றும் சீசன் உணவுப் பொருட்களான மாம்பழம், பலாப்பழம், அன்னாசி, சோளம், இலந்தைப் பழம், நிலக்கடலை, பனங்கிழங்கு, விலாம்பழம் போன்றவையும் (சமீப காலமாக அரசாங்கம் தடை விதித்துள்ள) கொக்கு, மடையான், உள்ளான் போன்ற பறவைகளும் தெருக்கள்தோறும் விற்பனைக்கு வந்துவிடும். பனை நுங்கு மட்டும் தேடிச்சென்று வாங்கவேண்டும். இளநீரும் சில நேரங்களில் தெருக்களுக்கு வராது. ஆனால் ரோட்டோரக் கடைகளுக்குச் சென்றால் தினமும் வாங்கலாம்.
o காரைக்காலில் தெருக்களின் அமைப்பு சீராக இருக்கும். கழிவுநீர் வெளியேற்றமும் சரியான முறையில் அமைக்கப்பட்டிருக்கும். 'காரைக்கால் ரோட்டப் பாரு, காதர் சுல்தான் வீட்டப் பாரு' என்று பழங்காலம் தொட்டு ஒரு உவமொழிக் கூறுவார்கள் :) நீங்களும் அந்த ரோட்டைப் பாருங்கள் இதோ:
o காதர் சுல்தான் வீடு என்பது வழவழப்புக்காகவும், கூடுதல் உறுதிக்காகவும் சிமெண்ட்டில் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து கட்டியதாக சொல்வார்கள். வீடு முழுவதும் உயர்ந்த சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஓரங்களில் பூ வேலைகள் செய்யப்பட்ட (முகம் பார்க்கும்) கண்ணாடியால் சீலிங் அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வாசல் நிலைகள் எல்லாம் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். முன்பெல்லாம் வெளியூரிலிருந்து வரும் மக்கள் இந்த வீட்டையும் பார்த்துச் செல்வார்களாம். [அதன் படம் கிடைத்தவுடன் இணைக்கப்படும் :)]
o ஒரு காலத்தில் இருந்த ரிக்க்ஷா சவாரிகள் வெகுவாகக் குறைந்து/மறைந்து தொட்டதுக்கெல்லாம் ஆட்டோதான் இங்கு அழைக்கப்படும். ஒரு ஃபோன் போட்டால் வீட்டு வாசலுக்கு வருவதற்கு நிறைய 'கேப்ஸ்'கள் இங்குள்ளன.
o காரைக்கால் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழக்கூடிய ஒரு நகரம் எனலாம். இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் கணிசமான அளவிலும் கிறிஸ்தவர்கள் குறைந்த அளவிலும் சகோதர வாஞ்சையுடன் வாழ்கின்றனர்.
o காரைக்கால் மெயின் ஏரியாவில் மட்டும் சுமார் 15 பள்ளிவாசல்களாவது இருக்கும். அதில் எல்லோருக்கும் மிகவும் அறிமுகமான (எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள) 'பெரியப் பள்ளி' இதுதான்:
o முன்பெல்லாம் இங்குள்ள இஸ்லாமிய மக்களின் திருமண சம்பந்தங்கள் உள்ளூரிலேயும், மிஞ்சி போனால் நாகூர், T.R. பட்டிணம், நாகை, திட்டச்சேரி என (மிக அருகில்) சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் நடந்து வந்தன. சில வருடங்களாக தூரத்து ஊர்களிலும் சம்பந்த உறவுகள் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் தாய்வீட்டிலோ அல்லது சொந்த ஊரிலேயே தனிக் குடித்தனமாகவோ இருப்பார்களே தவிர, மாமியார் வீட்டிற்கு விருந்தாளிகளாக மட்டுமே சென்று வருவார்கள். அதனாலோ என்னவோ இங்கே மாமியார்/மருமகள் பிரச்சனைகள் மிகவும் அரிது :)
o இங்கு எல்லோர் வீட்டு இஸ்லாமியத் திருமணங்களுக்கும் பெண்கள் ஒவ்வொரு வீடாகச்சென்று பெண்களுக்கு அழைப்பு வைப்பார்கள். குறுகிய காலத்தில் ஏற்பாடாகும் திருமணமாகவோ, எல்லா வீடுகளுக்கும் செல்ல இயலாத நிலையிலோ உள்ளவர்கள் பெண்களுக்கென தனி பத்திரிக்கை அனுப்பினால் போதும். ஆண்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே நேரில் சென்று முதலில் (பத்திரிக்கை வைக்காமல்) அழைப்பு வைப்பார்கள். அப்படி அழைப்பு சொல்லிவிட்டு வந்த பிறகு சொந்தங்களுக்கும், எல்லோர் வீட்டு ஆண்களுக்கும் சேர்த்து பத்திரிக்கை வைப்பது இவ்வளவு பெரிய ஊருக்கும் தனியாக ஒரே ஒரு ஆள்தான்! அவரைப் பற்றி சிறுகுறிப்பு இங்கு சொல்லியாகவேண்டும் :)
அவருடைய பெயருக்கு முன்பு 'ரோக்கா' என்று சொன்னால் எல்லோருக்கும் உடனே தெரிந்துவிடுமளவுக்கு அனைவருக்கும் அறிமுகம். ('ரோக்கா'ன்னா பத்திரிக்கை). கிட்டத்தட்ட 35, 40 வருடங்களாக அவர் பத்திரிக்கை வைக்கும் தொழில் செய்தாலும் அந்த 'ரோக்காக்கார பாய்' யை அடிச்சுக்க ஊரில் யாருமில்லை. அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலுள்ள ஆண்களின் பெயரும், வீட்டு மருமகன்களின் பெயர்கள் உட்பட அவருக்கு அத்துப்படி! யார் யார் வீட்டுக்கு பத்திரிக்கை என்று சொல்லிவிட்டால் அவரே அத்தனை பெயரையும் அழகாக எழுதி தந்துவிடுவார். வெளிநாட்டிலிருந்து யாரும் வகேஷனில் வந்திருந்தாலும் அவர்களின் பெயர் விடுபடாமல் இருக்க, 'இன்னார் ஊருக்கு வந்துள்ளார்' என நமக்கு உடனே நினைவூட்டுவார்! பத்திரிக்கையே இல்லாமல் 'இன்ன வீட்டில், இன்ன விசேஷம், இன்னாருக்கு அழைப்பு கொடுத்தார்கள்' என வாயால் சொல்லியனுப்பும் செய்திகளையும் (பல வீட்டு தகவல்களை ஒரே சமயத்தில் கூட) சொல்லும் திறனை இறைவன் அவருக்கு கொடுத்துள்ளான். சில நேரங்களில் (பெண்கள் நேரில் சென்று அழைப்பு கொடுக்க முடியாமல்) பெண்களுக்கு வைக்கப்படும் பத்திரிக்கைகளுக்கு (பெண்களின் பெயர் மட்டும் அவருக்கு தெரியாததால்) நாம் பெயர் சொல்ல சொல்ல அவர் எழுதி, எடுத்துச்செல்வார். அவர் மூலமாகவே காரைக்கால் இஸ்லாமிய மக்கள் பத்திரிக்கை அனுப்புவார்கள். நம்முடைய தேவை சமயங்களில் அவருக்கு உடல் சுகவீனம் என்றால் கை முறிந்ததுபோல இருக்கும். அவர் செய்வது ஒரு தொழில் என்பதைவிட ஒரு சேவை என்றே சொல்லலாம்!
இறைவன் அவருக்கு உடல் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக!
இறைவன் அவருக்கு உடல் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக!
o இங்கு ஆடம்பரமில்லாமல், சீர்திருத்தமான முறையில், பெண் வீட்டில் எதையும் பெறாமல் நபிவழிப்படி திருமணங்கள் நடந்தாலும், அப்படிப்பட்ட திருமணங்கள் சுமார் 30% அல்லது 40% என்றுதான் சொல்லமுடியும். மற்றபடி பகட்டான பந்தல்களோடும்/ அலங்கார விளக்குகளோடும் நடக்கக்கூடிய ஆடம்பர திருமணங்களும், கணவன் வீட்டாரால் கட்டாயப்படுத்தப்பட்டு வரதட்சணை வாங்கி முடிக்கும் திருமணங்களும் நடந்த வண்ணமே உள்ளன :( அப்படிப்பட்ட திருமணங்களில் பத்திரிக்கை அடிக்கும் செலவு மட்டும் கணவன் வீட்டார்கள் ஏற்றுக் கொண்டு (?), அவர்களுக்கான விருந்து செலவுகளை பெண் வீட்டாரே செய்யவேண்டும். (இந்த அநியாயம் எப்போ ஒழியுமோ தெரியல!)
o எந்த முறை திருமணமாக இருந்தாலும் (கல்யாண மண்டபத்தில் நடக்காத திருமணத்திற்கு) 'பண்டாரிகள்' (சமையல்காரர்கள்) வைத்து பெரும்பாலும் தெருவிலேயே சாப்பாடு (பிரியாணி) சமைக்கப்படும். எல்லோர் வீட்டிலும் பிரியாணி என்பதால் (பழையபடி) நெய் சோறுக்கு மக்களின் விருப்பம் திரும்பியுள்ளது. முன்பு 'சஹன்' என்று சொல்லப்படும் பெரிய தட்டில் 4 பேர் சேர்ந்து உண்ணும் வழக்கம் இருந்தது. இப்போது மிக சில இடங்களிலே தவிர பெரும்பாலும் தனித்தனி தட்டுகளிலேதான் திருமண விருந்துகள் பரிமாறப்படுகிறது.
o அழைப்புக் கொடுத்து வீட்டில் நடத்தப்படும் விருந்துகள் அல்லாமல் ஏதாவது மற்ற தேவைகளை முன்னிட்டோ, நேர்ச்சை/வேண்டுதல் அல்லது இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டோ சாப்பாடு தயாரித்து ஏழைகளுக்கும், வேண்டிய மற்ற வீடுகளுக்கும் கொடுத்தனுப்ப பனை ஓலையினால் நேர்த்தியாக செய்யப்பட்ட ('குறப்பெட்டி' என்று சொல்லப்படும்) பெட்டிகளில் 'பொட்டி சோறு' அனுப்புவார்கள். அதில் சூடான நெய் சோற்றினைப் போட்டு, அதன் மேல் தால்ச்சாவும், 'தனி கறி (or) களரி கறி' என்று சொல்லப்படும் கறி குழம்பும் ஊற்றிக் கொடுத்தால் பனை ஓலையின் வாசனையுடன் கூடிய அதன் மணமே தனி மணம்தான் :) அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஃப்ளைட் ஏறி ஃபிரான்சுக்கு வந்த ஓலைப் பெட்டியில் நாங்கள் போட்ட 'பொட்டி சோறு' இது :)
o காரைக்காலில் வித விதமான உணவுகள் கிடைக்கும் ரெஸ்டாரண்ட்களும், சிறிய அளவிலான உணவு விடுதிகளும், சூப் கடைகள், மாலை நேர உணவகங்கள் போன்றவையும் நிறைந்துள்ளன. ஆங்காங்கே 'வாடா' கடைகளும், போண்டா/பஜ்ஜி மற்றும் பானி பூரி/மசால் பூரி ஸ்டால்களும் உண்டு. டெலிஃபோனில் உணவுகளை ஆர்டர் பண்ணினால் டோர் டெலிவரி பண்ணப்படும் வசதியும் உள்ளன.
o இங்கு தரமான 'பேக்கரி'களும், 'ஸ்வீட் ஸ்டால்'களும் உள்ளன. 'காரைக்கால் அல்வா' வகைகளை வெளியூர் மக்கள்கூட விரும்பி வாங்கிச் செல்வார்கள். 'பால் கோவா' மாதிரி 'பட்டர் கோவா'வும் இங்கே ஃபேமஸ்.
காரைக்கால் அல்வா வகைகள்
o ஜவுளிக் கடைகளும், ஜுவல்லரிகளும் இங்கு பெருகி வருகின்றன.
இந்த தொடர் பதிவை எழுத,
1. குறை ஒன்றுமில்லை வலைப்பூ, லஷ்மி அம்மா அவர்களையும்,
2. ஜெய்லானி வலைப்பூ, சகோ. ஜெய்லானி அவர்களையும்,
3. பூங்கதிர் தேசம் வலைப்பூ, தோழி சந்தனா அவர்களையும்,
4. முஹம்மத் ஆஷிக் 'citizen of world' வலைப்பூ, சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களையும்,
5. குட்டி சுவர்க்கம் வலைப்பூ, தோழி ஆமினா அவர்களையும் அழைக்கிறேன். (உங்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தால் எழுதுங்கள்)
ஆஹா ஏராளமான செய்திகளோடு சூப்பரா பகிர்ந்திருக்கீங்க அஸ்மா.....நானும் நிறைய தெரிந்துக்கொண்டேன்,நன்றி!!
ReplyDeletesuper asma,very interesting..
ReplyDeleteஏ...யப்பா... எவ்ளோகாணம் எழுதிருக்கீங்க!!
ReplyDeleteமேப் எல்லாம் போட்டு டீடெய்லா எழுதின ஆரம்பப் பத்திகளைப் படிக்கும்போது, ஹிஸ்டரி-ஜ்யாக்ரஃபி புத்தகம் படிக்கிற எஃபெக்ட் வருது!! லொகேஷன் முதற்கொண்டு தொழிற்சாலைகள் வரை எல்லா விவரங்களையும் கவர் பண்ணி இருக்கிற இந்தப் பதிவை, காரைக்கால் சுற்றுலாத் துறை பயன்படுத்திக்கலாம்!! அவ்வளவு அருமையான விவரிப்பு.
ஆனா, ஒரு சந்தேகம்: அது ஏன் பிச்சுப் போட்ட மாதிரி, மூணு இடங்களில் (மாநிலங்களில்) இருக்கு பாண்டிச்சேரி?? நிர்வாகம் செய்வது சிரமம்தான் இல்லையா?
அப்புறம், பொட்டிச் சோறு - ஓலைப் பெட்டியில், குழம்புகளை ஊற்றினால், வெளியே வழிந்துவிடாதா?
நன்றி அஸ்மா/இத்தனை அருமையாக படங்களுடன் விரிவான பதிவுக்கு.நிறைய ஊர்களைப்பற்றி தெரிந்து கொண்ட்தில் நிறைவாக உள்ளது.
ReplyDeleteகிட்டத்தட்ட நேரிலேயே அழைத்து சென்று ஊரை சுற்றிக்காட்டியதினைப் போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.
பொட்டி சோறு வித்தியாசமாக உள்ளது.களறிகறியும் தாளிச்சவும் ஓலைப்பெட்டியின் பச்சை மணத்துடன் கலந்து வாசனை ..ஆஹ்ஹா..
ரொம்பவும் பொருமையா அழகா ஒரு குழந்தைக்கு சொல்லுற மாதிரி A to Z சொல்லி இருக்கீங்க . சூப்பர் .
ReplyDeleteபாண்டிச்சேரியில இருக்கிற Alliance Française ல் கம்யூட்டர் கற்றுக்கொள்ள போய் அங்குள்ள அரை குறை டிரஸ் போட்ட ஸ்டாஃபை கண்டு படிப்பே வேனாமுன்னு எஸ்கேப்பானது தனி கதை ( அங்கே இப்போ எப்படின்னு தெரியல ) :-)
என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க . இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவிடுகிறேன் :-)
அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் சூப்பர் அஸ்மா. எவ்ளோ பெரிய பதிவு, ஊரை அழகாகச் சொல்லிட்டீங்க...
ReplyDeleteகாதைக் கொண்டுவாங்கோ... எங்களிற்குக் கிட்டத்தான் உங்கட ஊர்(இலங்கைக்கு).
மீன்ன்ன்ன்ன்ன்ன்ன், இளநீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
@ S.Menaga...
ReplyDelete//ஆஹா ஏராளமான செய்திகளோடு சூப்பரா பகிர்ந்திருக்கீங்க அஸ்மா.....நானும் நிறைய தெரிந்துக்கொண்டேன்,நன்றி!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா!
@ asiya omar...
ReplyDelete//ssuper asma,very interesting..//
வாங்க ஆசியாக்கா. கருத்துக்கு நன்றி!
@ ஹுஸைனம்மா...
ReplyDelete//ஏ...யப்பா... எவ்ளோகாணம் எழுதிருக்கீங்க!!//
போச்சு போங்க, கண்ணு போட்டீங்கல்ல..? :))
//மேப் எல்லாம் போட்டு டீடெய்லா எழுதின ஆரம்பப் பத்திகளைப் படிக்கும்போது, ஹிஸ்டரி-ஜ்யாக்ரஃபி புத்தகம் படிக்கிற எஃபெக்ட் வருது!!//
இதுல ஹிஸ்டரியைக் குறைச்சிட்டேன், ஏன்னா ஹிஸ்ட்ரி அவ்வளவா எனக்கு பிடிக்காது :)) ஜ்யாக்ரஃபி ரொம்ப பிடிக்கும், அதான் அதை மட்டும் ஓரளவு டச் பண்ணியிருக்கேன் ;)
//லொகேஷன் முதற்கொண்டு தொழிற்சாலைகள் வரை எல்லா விவரங்களையும் கவர் பண்ணி இருக்கிற இந்தப் பதிவை, காரைக்கால் சுற்றுலாத் துறை பயன்படுத்திக்கலாம்!! அவ்வளவு அருமையான விவரிப்பு//
நன்றி ஹுஸைனம்மா :) சுற்றுலாத் துறைக்கும் ஏதோ நம்மால் முடிஞ்ச உதவியா இருந்துட்டு போகட்டுமே..! :)) இதை முடிக்கும்போது 'இன்னும் சொல்லலாமே' என்றுதான் தோன்றியது ஹுஸைனம்மா. படிப்பவர்களுக்கு கஷ்டமாப் போகக் கூடாதுன்னுதான் முடிச்சிட்டேன் :)
//ஆனா, ஒரு சந்தேகம்: அது ஏன் பிச்சுப் போட்ட மாதிரி, மூணு இடங்களில் (மாநிலங்களில்) இருக்கு பாண்டிச்சேரி?? நிர்வாகம் செய்வது சிரமம்தான் இல்லையா?//
மூணு இடங்கள் அல்ல ஹுஸைனம்மா, நான்கு இடங்கள். ஃபிரெஞ்ச்காரனுக்கு அப்படிதான் நாலு பக்கத்தில் 4 இடங்கள் பிச்சுப் போட்ட மாதிரி :) கிடைத்துள்ளது. மீதியைதான் இங்கிலீஷ்காரன் பிடிச்சிட்டானே?
எல்லா இடங்களையும்போல் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இந்த 4 இடங்களிலும் உள்ள ஒவ்வொரு துறைகளுக்கும் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகம் செம்மையாகதான் நடந்து வருகிறது ஹுஸைனம்மா.
//அப்புறம், பொட்டிச் சோறு - ஓலைப் பெட்டியில், குழம்புகளை ஊற்றினால், வெளியே வழிந்துவிடாதா?//
நல்ல கேள்வி :)) ஓலையை நெருக்கமாக பின்னியிருப்பாங்கபா. அதனால் வெளியே வராது. வாங்கும்போதும் நெருக்கமாக உள்ளதான்னு பார்த்து வாங்கணும் :) சோற்றின் மீது குழம்பு ஊற்றும்போது பெரும்பாலும் அது சோற்றுக்குள்தான் இறங்கும். விளக்கம் போதுமா? :) இல்லாட்டா வெளியே வழியாமல் நிக்கிற அந்த பொட்டி சோறு படத்தையும் இன்னொரு முறை பாருங்க :)
நன்றி ஹுஸைனம்மா!
@ ஸாதிகா...
ReplyDelete//நன்றி அஸ்மா/இத்தனை அருமையாக படங்களுடன் விரிவான பதிவுக்கு.நிறைய ஊர்களைப்பற்றி தெரிந்து கொண்ட்தில் நிறைவாக உள்ளது//
ஆமா ஸாதிகா அக்கா. ஒவ்வொரு ஊரைப்பற்றிய பதிவுகளையும் பார்க்கும்போது, இங்கே இவ்வளவு விஷயங்கள் இருக்கான்னு ஆச்சரியமாகவும், புதுமையாவும் இருக்கு. இதற்கு திறப்பு விழா பண்ணிய உங்களுக்குதான் நன்றி ஸாதிகா அக்கா :)
//கிட்டத்தட்ட நேரிலேயே அழைத்து சென்று ஊரை சுற்றிக்காட்டியதினைப் போன்றதொரு பிரம்மையை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு//
அப்படியா.. :)? இன்ஷா அல்லாஹ் ஒருநாள் நேரிலேயே சுற்றிக் காட்டிடுவோம் :))
//பொட்டி சோறு வித்தியாசமாக உள்ளது.களறிகறியும் தாளிச்சவும் ஓலைப்பெட்டியின் பச்சை மணத்துடன் கலந்து வாசனை ..ஆஹ்ஹா..//
அதே... அதேதான் ஸாதிகா அக்கா! அந்த ஓலைப் பெட்டியின் பச்சை மணம்தான் அனைவரையும் கவரும் ;) முன்பு காயவைத்த வாழை இலையில் செய்யப்பட்ட 'தொன்னை' என்று சொல்லப்படும் சிறிய ஒரு கப்பில் ஆளுக்கு ஒன்று என கையில் கொடுப்பார்கள். ஆனால் அதில் வெறும் நெய்சோறு மட்டும்தான் :) இப்போது அது மறைந்துவிட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா.
@ ஜெய்லானி...
ReplyDelete//ரொம்பவும் பொருமையா அழகா ஒரு குழந்தைக்கு சொல்லுற மாதிரி A to Z சொல்லி இருக்கீங்க . சூப்பர் //
நன்றி ஜெய்லானி சகோ :)
//பாண்டிச்சேரியில இருக்கிற Alliance Française ல் கம்யூட்டர் கற்றுக்கொள்ள போய் அங்குள்ள அரை குறை டிரஸ் போட்ட ஸ்டாஃபை கண்டு படிப்பே வேனாமுன்னு எஸ்கேப்பானது தனி கதை ( அங்கே இப்போ எப்படின்னு தெரியல ) :)//
காரைக்கால் Alliance Française ல் அப்படியில்லை சகோ.
//என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க . இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவிடுகிறேன் :)//
இன்ஷா அல்லாஹ் எழுதுங்க. நன்றி சகோ.
@ athira...
ReplyDelete//அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் சூப்பர் அஸ்மா. எவ்ளோ பெரிய பதிவு, ஊரை அழகாகச் சொல்லிட்டீங்க...//
நன்றி அதிரா :)
//காதைக் கொண்டுவாங்கோ... எங்களிற்குக் கிட்டத்தான் உங்கட ஊர்(இலங்கைக்கு).//
கிட்டதான், ஆனால் வந்ததுதான் இல்ல. நீங்களாச்சும் வாங்க அதிரா :)
//மீன்ன்ன்ன்ன்ன்ன்ன், இளநீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//
ம்.. பார்த்து.. பார்த்து.. வயித்த வலிக்கப் போவுது.. :)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteஅஸ்மா நலமா?
உங்க ஊர பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். எவ்ளவு விஷயங்கள்??? அவங்க ஊர் பத்தி சொல்லணூம்னா சும்மாவா?????
சிரமம்லாம் இல்ல தோழி. இனி பொழப்பே ப்ளாக் எழுதுறது தான் :) ஊர்னா ஊர் பத்தி மட்டும் தான் எழுதணூமா? இல்ல மாவட்டம் பத்தி எழுதணுமா? அத மட்டும் சொல்லுங்க. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
@ ஆமினா...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....
//அஸ்மா நலமா?
உங்க ஊர பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். எவ்ளவு விஷயங்கள்??? அவங்க ஊர் பத்தி சொல்லணூம்னா சும்மாவா?????//
அல்ஹம்துலில்லாஹ், நலம்தான் ஆமினா. நீங்க நலமா? சொல்ல சொல்ல நிறைய விஷயங்கள் விளைந்துக் கொண்டே இருக்கிறது அமுத சுரபி மாதிரி :) இந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் இருந்திருந்தால் படங்கள் இன்னும் அருமையா கொடுத்திருக்கலாம்.
//சிரமம்லாம் இல்ல தோழி. இனி பொழப்பே ப்ளாக் எழுதுறது தான் :)//
அப்படீன்னா எழுதுங்கபா. நன்றி ஆமினா :)
//ஊர்னா ஊர் பத்தி மட்டும் தான் எழுதணூமா? இல்ல மாவட்டம் பத்தி எழுதணுமா? அத மட்டும் சொல்லுங்க//
மாவட்டம் பற்றி ஒரு அறிமுகத்துக்காக வேண்டுமானால் லேசா டச் பண்ணுங்க. ஆனா முக்கியமா உங்க ஊரைப் பற்றிதான் எழுதணும் ஆமினா. இன்ஷா அல்லாஹ் எழுதுங்க.
உங்க மெயில் ஐடி தேடிட்டிருந்தேன். என் ஐடிக்கு மெயில் பண்றீங்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete'தொடர்பதிவு' என்றால், 'தொடரும் போட்டு படிக்கும் பதிவாக' ஆகிவிட்டது. ரெண்டு தடவை வந்து படித்து முடித்து இருக்கிறேன்.
'ஊர்க்கதை' என்றால் மணிக்கணக்காய் பேசுவோம்... ம்ம்ம்... எழுதவும் செய்வோம் என... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நீளம் மட்டுமல்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தகவல்கள்..! புகைப்படங்கள்..! இதில் பதிவுக்குள்ளேயே தனிப்பதிவாக மூன்று 'உள்பெட்டித்தகவல் பதிவுகள்' வேறு..!
மாஷாஅல்லாஹ். கலக்கிட்டீங்க சகோ.அஸ்மா.
மெசபடோமிய, சிந்து, நைல் நதி நாகரிங்களைக்கூட இவ்வளவு டீடெய்லாக நான் படித்ததில்லை.
"காரைக்கால்-அரசலாற்று நாகரிகம்" --'அஸ்கிபீடியா'..!
அடடா..! இந்த தொடர் பதிவு Assignment/Project இல் என்னையும் சேர்த்து விட்டுட்டீங்களா..?
:)
இறைநாடினால், இந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஏதோ... அதற்குண்டான தேவையான புகைப்படங்கள் தகவல்கள் எல்லாம் திரட்டிய பிறகுதான் என்னால் எழுத முடியும்... சகோ.அஸ்மா.
அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும். ஓகே..?
@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//'தொடர்பதிவு' என்றால், 'தொடரும் போட்டு படிக்கும் பதிவாக' ஆகிவிட்டது. ரெண்டு தடவை வந்து படித்து முடித்து இருக்கிறேன்//
:))) சுருக்கி சுருக்கி பார்த்தாலும் அதற்கு மேல் சுருக்கமாக சொல்ல முடியவில்லை, அதான். இரண்டு தடவை படித்தாலும் 'போரிங்'கா எதுவும் இல்லையே..? :)
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நீளம் மட்டுமல்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தகவல்கள்..! புகைப்படங்கள்..! இதில் பதிவுக்குள்ளேயே தனிப்பதிவாக மூன்று 'உள்பெட்டித்தகவல் பதிவுகள்' வேறு..!//
அதையும் பெட்டிக்குள் போடாமல் வெளியில் போட்டிருந்தால் பாதி கூட படிக்கமாட்டீங்கன்னுதான் இந்த ஐடியா :))
//மாஷாஅல்லாஹ். கலக்கிட்டீங்க சகோ.அஸ்மா//
இந்த கொஞ்ச தகவல்கூட(!) எங்க ஊரைப் பத்தி சொல்லலன்னா...? :)
//மெசபடோமிய, சிந்து, நைல் நதி நாகரிங்களைக்கூட இவ்வளவு டீடெய்லாக நான் படித்ததில்லை// :):)
//"காரைக்கால்-அரசலாற்று நாகரிகம்" --'அஸ்கிபீடியா'..!//
நல்லாதான் இருக்கு இந்த 'பீடியா' :) நல்லவேளை.. என் பெயர் 'விஸ்'னு ஆரம்பித்திருந்தா இதற்கு 'விஸ்கிபீடியா'ன்னு வச்சிருப்பீங்களோ..? :)))))
//அதற்கு கொஞ்சம் டைம் வேண்டும். ஓகே..?//
ஓகே.. ஓகே.. அவசரமில்லை சகோ, பொறுமையா எழுதுங்க.
தங்கள் வருகைக்கும் நீ...ண்ண்ண்ட கருத்துக்கும் :) நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசிறுவயதில் உற்வினர்கள் வீட்டிற்கு போகும்போது காரைக்கால் பிரமாண்டமாய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நகரமாக என்மனதில் பதிந்திருந்தது.
குறிப்பாய் எல்லையில் நுழைந்ததும் தெரியும் பள்ளிவாசல்....
வியப்பாக கூட இருக்கும். இப்பதிவை படித்தபின் அந்த வியப்பு இன்னும் பிரம்மாண்ண்ண்ண்ண்ண்ண்டமாய்.......
மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள் சகோதரி.
காரைக்கால்...... விஸ்கிபீடியா
பெயர்பொருத்தம் சூப்பர்.!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஅஸ்மா
தொடர் எழுதியாச்சு. நேரம் கிடைக்கிறப்ப வந்துட்டு போங்க
http://kuttisuvarkkam.blogspot.com/2011/07/blog-post_22.html
@ மு.ஜபருல்லாஹ்...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//சிறுவயதில் உற்வினர்கள் வீட்டிற்கு போகும்போது காரைக்கால் பிரமாண்டமாய் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நகரமாக என்மனதில் பதிந்திருந்தது.
குறிப்பாய் எல்லையில் நுழைந்ததும் தெரியும் பள்ளிவாசல்....
வியப்பாக கூட இருக்கும்//
உண்மையிலேயே இப்போ பெரிய்ய்ய்ய்ய நகரமாக மாறிட்டிருக்கு :)
//இப்பதிவை படித்தபின் அந்த வியப்பு இன்னும் பிரம்மாண்ண்ண்ண்ண்ண்ண்டமாய்.......
மாஷா அல்லாஹ்.வாழ்த்துக்கள் சகோதரி//
பிரம்மாண்ண்ண்ண்ண்ண்டமான கருத்துக்கு நன்றி சகோ :)
//காரைக்கால்...... விஸ்கிபீடியா
பெயர்பொருத்தம் சூப்பர்.!!//
ஓ... அப்படியும் கூட ஒரு பொருத்தம் வருதா...? :))) வரி குறைவா இருந்தா விலையும் கம்மியா இருக்குதுன்னு காரைக்காலை ஒட்டியுள்ள தமிழகத்து 'குடி'மகன்கள் எல்லாம் அதையும்கூட காரைக்காலில் வந்து ஏற்றிக் கொண்டுதான் செல்கிறார்கள். இதற்காக காரைக்காலைச் சுற்றியுள்ள எல்லா எல்லைகளிலும் நுழையும்போது செக்போஸ்ட் இருப்பதுபோல் அதை ஒட்டி ஒயின்ஷாப்பும் கூடவே இருக்கும் :( என்ன செய்ய..?
@ ஆமினா...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//தொடர் எழுதியாச்சு. நேரம் கிடைக்கிறப்ப வந்துட்டு போங்க//
பரவாயில்லையே.. சீக்கிரமா எழுதிட்டீங்க :) நன்றி ஆமினா. நிச்சயம் வந்து பார்க்கிறேன்.
சகோதரி,
ReplyDeleteகாரைக்கால் என்றதும் விரும்பி முழுவதும் படித்தேன். நன்கு விவரமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த "ரோக்கா" முறை, "பண்டாரி" போன்ற வழக்கங்கள் எங்கள் ஊரிலும் உண்டு.
அஃதல்லாமல், காரைக்காலில் நான் ஐந்தாறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். சூழலின் சலனங்களும் சப்தங்களும் செவியில் உறுத்தாத சிறந்த நந்நகரம்.
எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் காரைக்கால்
@ இப்னு ஹம்துன்...
ReplyDelete//சகோதரி,
காரைக்கால் என்றதும் விரும்பி முழுவதும் படித்தேன்// :):)
//இந்த "ரோக்கா" முறை, "பண்டாரி" போன்ற வழக்கங்கள் எங்கள் ஊரிலும் உண்டு//
உங்கள் ஊர் முறையும் கிட்டத்தட்ட (துப்பட்டி முறை உட்பட) எங்கள் ஊர் மாதிரிதான் இருக்கும். அங்குள்ள சில வழக்கங்களும் ஓரளவு தெரியும் சகோ :)
//அஃதல்லாமல், காரைக்காலில் நான் ஐந்தாறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். சூழலின் சலனங்களும் சப்தங்களும் செவியில் உறுத்தாத சிறந்த நந்நகரம்//
ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோ :) இதைதான், "கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான.." என்று கூறியிருக்கிறேன். அதை மேலும் அழகான வார்த்தைகளைக் கொண்டு அலங்கரித்துள்ளீர்கள் :)
//எனக்கு மிகவும் பிடித்தமான ஊர் காரைக்கால்// :):)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
விளக்கம் அருமை அஸ்மா.
ReplyDeleteபனை ஓலையில் இப்படியே பேக் செய்து எடுத்து செல்வீர்களா இப்பதான் பார்க்கிறேன்
ஹல்வா ஸ்ஸ்ஸ்நாவூறுது...
@ Jaleela Kamal...
ReplyDelete//விளக்கம் அருமை அஸ்மா//
நன்றி ஜலீலாக்கா. நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் வந்திருப்பதில் சந்தோஷம்.
//பனை ஓலையில் இப்படியே பேக் செய்து எடுத்து செல்வீர்களா இப்பதான் பார்க்கிறேன்//
இதுபோல் கிட்டத்தட்ட 50 முதல் 500, 1000 என தேவைக்கு தகுந்த மாதிரி இதுபோன்ற பனை ஓலைப் பெட்டியில் 'பொட்டி சோறு' போட்டு, அதை அப்படியே ஒரு கேரி பேகினுள் இறக்கி, ஏழைகள் முதல் சொந்தங்கள், தெருவாசிகள், அறிமுகமானவர்கள் அத்தனை பேருக்கும் கொடுத்தனுப்புவார்கள், ஜலீலாக்கா :) நேர்ச்சை என்றால் ஏழைகளுக்கு மட்டும் பகிர்வார்கள்.
//ஹல்வா ஸ்ஸ்ஸ்நாவூறுது...//
:)) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலாக்கா.
அருமையான நினைவுகள்,நேரில் அலைத்து சென்று விட்டீர்கள் மீண்டும்,வாழ்த்துக்கள்.
ReplyDeleteவஸ்ஸலாம்.
@ Mohamed G...
ReplyDelete//அருமையான நினைவுகள்,நேரில் அலைத்து சென்று விட்டீர்கள் மீண்டும்,வாழ்த்துக்கள்.
வஸ்ஸலாம்//
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. வஸ்ஸலாம் :)
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எப்படி இருக்கீங்க?
ReplyDeleteவீட்டில் அனைவரும் நலமா..?தாங்களுக்கு மெயில் அனுப்பியும் ரிப்ளை இல்லையே... பிஸியா இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சரி அது போகட்டும்.விஷயத்திற்க்கு வருகின்றேன்.தலைப்பை பார்க்கவுமே குஷியாயிட்டேன் அஸ்மா... ஆஹா நமது அருகில் இருக்கும் காரைக்கால் பற்றிய கட்டுரையான்னு.... மிகவும் விளக்கமா,தெரிஞ்சதும் தெரியாத சிலதுமா நிறைய தகவலை அள்ளி தந்திருக்கீங்க...
படங்களின் தொகுப்பும் அருமை.(முக்கியமா பொட்டி சோறு...)வழக்கம்போல் உங்களின் எழுத்துக்கள் மூலம் ஆசத்திட்டீங்க போங்க....
பாராட்டுக்கள் அஸ்மா....
அன்புடன்,
அப்சரா.
@ apsara-illam...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,எப்படி இருக்கீங்க?
வீட்டில் அனைவரும் நலமா..?தாங்களுக்கு மெயில் அனுப்பியும் ரிப்ளை இல்லையே... பிஸியா இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்//
வஅலைக்குமுஸ்ஸலாம் அப்சரா. நாங்கள் நலமே, அல்ஹம்துலில்லாஹ்! உங்களுக்கு மட்டும் என நினைக்கவேண்டாம் அப்சரா. நிறைய மெயில்களுக்கு ரிப்ளை பண்ணாமால் அதேசமயம் மறக்கவும் இல்லாமல் :) பெண்டிங் வைத்துள்ளேன். ரொம்ப ஸாரிமா. இன்ஷா அல்லாஹ் இரண்டொரு நாளில் உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன். சரியா?
//தலைப்பை பார்க்கவுமே குஷியாயிட்டேன் அஸ்மா... ஆஹா நமது அருகில் இருக்கும் காரைக்கால் பற்றிய கட்டுரையான்னு....//
:):):):)
//மிகவும் விளக்கமா,தெரிஞ்சதும் தெரியாத சிலதுமா நிறைய தகவலை அள்ளி தந்திருக்கீங்க...
படங்களின் தொகுப்பும் அருமை//
உண்மையாவா? ;))
//(முக்கியமா பொட்டி சோறு...)//
இதற்கு முன் இணையத்தில் (எனக்கு தெரிந்து) இந்த பொட்டி சோறு பற்றி இல்லை :) நம்ம ஊர் ஸ்பெஷல்னு அதையும் அறிமுகப்படுத்தி வைப்போமேன்னுதான் ;)))))
//வழக்கம்போல் உங்களின் எழுத்துக்கள் மூலம் ஆசத்திட்டீங்க போங்க....
பாராட்டுக்கள் அஸ்மா....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்சரா!
எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!
ReplyDeletehttp://rasekan.blogspot.com/2011/08/blog-post_1720.html
அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடிஞ்சுதுப்பா. என்னே சுறு சுறுப்பு பாத்தீங்களா? நான் பாண்டிச்சேரி வந்திருக்கேன் 30 வர்ஷம் முன்னே. உங்க ஊர் பத்தி படிக்க படிக்க வெகு சுவாரசியம். என்னையும் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கீங்க. உங்க அளவுக்கெல்லாம் கோர்வையா எழுத வராது என்ஸ்டைலில் தெரிந்ததை எழுதரேன்.ஓக்கேவா
ReplyDelete@ ஷர்புதீன்...
ReplyDelete//எங்க ஊரை பத்தி படிக்க வாங்க!//
இன்ஷா அல்லாஹ், நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன் சகோ.
@ Lakshmi...
ReplyDelete//அஸ்மா இப்பதான் உங்கபக்கம் வர முடிஞ்சுதுப்பா. என்னே சுறு சுறுப்பு பாத்தீங்களா?//
:):) வகேஷன் வேற போய் வந்தீங்கள்ல, அதனால் பரவாயில்ல பொறுமையா வந்தாலும் :)
//நான் பாண்டிச்சேரி வந்திருக்கேன் 30 வர்ஷம் முன்னே. உங்க ஊர் பத்தி படிக்க படிக்க வெகு சுவாரசியம்//
காரைக்காலுக்கு வந்ததில்லையோ..? பாண்டிச்சேரியும் தெரு அமைப்பெல்லாம் எங்க ஊர் போலவேதான் இருக்கும். இருந்தாலும் காரைக்காலுக்கு ஒருமுறையாவது வாங்க லஷ்மிம்மா :)
//என்னையும் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கீங்க. உங்க அளவுக்கெல்லாம் கோர்வையா எழுத வராது என்ஸ்டைலில் தெரிந்ததை எழுதரேன்.ஓக்கேவா//
ஓக்கே.. ஓக்கே.. உங்க ஸ்டைலில் எழுதினாவே சுவாரஸ்யமாதான் இருக்கும் :) உங்களுக்கு முடியும்போது பொறுமையா எழுதினா போதும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி லஷ்மிம்மா.
மாஷா அல்லாஹ். நான் ஒருமுறை காரைக்கால் வந்திருக்கிறேன். இவ்வளவு தகவல்கள் ஒரு சேர தந்ததற்கு நன்றி. மீண்டும் காரைக்கால் வர வேண்டும் என்று மனம் எண்ணுகிறது.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் முடிந்தால் விஜ்யம் செய்கிறேன்.
@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)...
ReplyDelete//மாஷா அல்லாஹ். நான் ஒருமுறை காரைக்கால் வந்திருக்கிறேன். இவ்வளவு தகவல்கள் ஒரு சேர தந்ததற்கு நன்றி//
உங்கள் வருகைக்கும் நன்றி சகோ :)
//இன்ஷா அல்லாஹ் முடிந்தால் விஜ்யம் செய்கிறேன்//
இன்ஷா அல்லாஹ்!
i am read your article of my town. it is very nice. sahol from paris 25.08.2012
ReplyDeleteஉடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் சகோ! நீங்களும் காரைக்கால்வாசி & பாரிஸா? சந்தோஷம்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் :)
Delete