அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Wednesday, 13 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு!

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிராமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள் என்பதால், ஸாதிகா அக்கா அவர்கள் இந்த தொடர் பதிவைத் தொடங்கி பல ஊர்களைப் பற்றி அறியும் வாய்ப்பை நமக்குத் தந்துள்ளார்கள். இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த அருமை அக்கா ஸாதிகா அவர்களுக்கு என் நன்றிகள்!

'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, பணிபுரிந்த காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான‌ பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.

Sunday, 24 April 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)


முன்னுரை: "பெண் எழுத்து" பற்றிய தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தோழி ஆயிஷா அபுல் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை எழுதி முடித்து நாமும் சிலரை அழைக்கலாமே என்று பதிவர்களைத் தேடியபோதுதான் தோழி அனிஷா(அன்னு)வும் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைக்காமல் அழைத்திருந்தது தெரிந்தது :) அவர்களுக்கும் எனது நன்றிகள்!

Sunday, 10 October 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)




சகோதரர் ஸ்டார்ஜன் அவர்களின் ப்ளாக்கை விசிட் பண்ணியபோது இந்த தொடர் பதிவு கண்ணில் பட்டது. பொது சேவை செய்யக்கூடிய சமூக நல அமைப்புகள் நிறைய இருந்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் உதவி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் எப்போதெல்லாம் இது போன்ற வாய்ப்புகள் நமக்கு கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மனித நேயத்தோடு ஜாதி, ம‌த, இன வேறுபாடின்றி உதவ நாம் முன் வரவேண்டும். அதனால், நல்லது செய்ய நாள் தள்ளக் கூடாதே என்று நானும் அந்த தொடர் பதிவில் கலந்துக் கொண்டு, என்னுடைய ப்ளாக்கிலும் இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இதோ அந்த தொடர் பதிவு:-  


வலையுலக‌ சகோதர, சகோதரிகளே! இது ரொம்ப நல்ல விஷயம். எனவே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க. நிறைய பேருக்கு ரீச் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர் பதிவை தொடரலாம். .



உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்...


உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க பிளீஸ்!!

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேட்க மாட்டேன்.  இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!


-------------------

                                          
டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த, உடைந்த பொருட்களை தருகிறார்கள். உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. கொடுக்கப் போகும் துணிகளை நன்றாக துவைத்து, அயன் செய்து உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள். இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள்.


பயணிக்கும் பாதை