அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 29 August 2011

பட்டர் பிஸ்கட்சுவையும் மணமும் கொண்ட‌ இந்த பட்டர் பிஸ்கட்டை மாலை நேர ஸ்நேக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விசேஷ காலங்களில் செய்யப்படும் பலகாரங்களில் ஒன்றாகவும் செய்யலாம். வெளியூர் செல்லும்போதுகூட இதை செய்து எடுத்துச்செல்ல‌லாம்.தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 5 கப்
சோளமாவு - ¾ கப்
நெய் - 2 கப்
சீனி - 1½ கப்
உப்பு - 2 பின்ச்

செய்முறை:
1. முதலில் நெய்யுடன் உப்பையும், சீனியையும் சேர்த்து நன்கு கரைக்கவும். பொடி பண்ணிய சீனியாக(ஐஸிங் சுகர்) இருந்தால் சுலபமாக கரைந்துவிடும்.

2. சீனி கரைந்த பிறகு சோளமாவு சேர்த்து கலக்கவும்.

3. இப்போது மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து,

4. பாத்திரத்தில் ஒட்டாதளவு பதம் வரும்வரை பிசைந்து வைக்க‌வும்.

1. சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி 2 சப்பாத்தி கனத்தில் தட்டவும். [என் செல்ல மகன் (நஃபீஸ்)ன் கோரிக்கைக்காக ஒரு கொசுறு தகவல் :) இந்த பட்டர் பிஸ்கட்கள் முழுவதையும் தான் மட்டுமே செய்து தருவதாக சொல்லி, தாயாருக்காக‌ தட்டிக் கொடுத்தது மகனார்தான் :)]

2. பேக்கிங் தட்டில் சிறிது நெய்யும் மைதாவும் கலந்து தடவி, தட்டிய வில்லைகளை கொஞ்சமாக இடைவெளி விட்டு அடுக்கி, 350 டிகிரி F ல் ப்ரிஹீட் செய்த ஓவனில் வைத்து பேக் செய்யவும்.

3. சுமார் 15, 20 நிமிடங்கள் கழித்து (சரியான பதத்தில் வந்தவுடன்) வெளியே எடுக்கவும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான பட்டர் பிஸ்கட்! செய்து பார்த்து சொல்லுங்கள்.

குறிப்பு:

* ஒவ்வொரு ஓவனிலும் ஒவ்வொரு விதமான அளவுகளில் டெம்பரேச்சர் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால், முதன் முதலில் பிஸ்கட் செய்யும்போது தீய்ந்து போகாமல் கவனமாக பார்க்கவும். (ஓவனின் தன்மைக்கேற்ப டெம்பரேச்சரையும், டைமையும் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளவும்.)

* பதம் வந்தவுடனே ஓவனை அணைத்தாலும், வெளியில் எடுக்காமல் வைத்திருந்தால் கருகிவிடும்.

* சோளமாவு சேர்ப்பதால் சோடாப்போ, பேக்கிங் பவுடரோ தேவைப்படாது.

* இதில் எஸென்ஸ் சேர்க்காவிட்டால்தான் பெயருக்கேற்றபடி பட்டரின் நறுமணம் மாறாமல் அருமையாக இருக்கும் :)

17 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா

  சென்னையில் எல்லா டீ கடைகளில் பாட்டிலில் வைத்திருக்கும் இந்த பட்டர் பிஸ்கேட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  நானும் செய்து இருக்கேன், ஆனால் பேக்கிங் பவுடருக்கு பதில் சோளமாவு சேர்த்துள்ளது, புதுமையாக இருக்கு.

  ரொம்ப அருமை
  உங்கள் செல்ல மகனுக்கு வாழ்த்துக்கள், என் பெயரை சொல்லு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுங்க...

  ReplyDelete
 2. ரொம்ப சுவையான குறிப்புக்கு நன்றி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும்
  இந்த ஸ்னாக்ஸ் ஐட்டம்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
  அருமையான பகிர்வுக்கு நன்றி.
  பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. Assalamu alaikum!Asathal Asma AKKa ,deenilum,theenilum asaththuringaley!

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி

  செய்முறை விளக்கம் அருமை.செய்து பார்க்கணும். செல்ல மகனுக்கு {நஃபீஸ்} சலாமும், வாழ்த்துக்களும்.

  உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.என் பிளாக்கிலும் வாழ்த்து சொல்லி உள்ளேன்.

  அங்கே பெருநாள் எப்போ ?

  ReplyDelete
 6. @ Jaleela Kamal...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் ஜலீலாக்கா!

  //நானும் செய்து இருக்கேன், ஆனால் பேக்கிங் பவுடருக்கு பதில் சோளமாவு சேர்த்துள்ளது, புதுமையாக இருக்கு//

  இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்க ஜலீலாக்கா.

  //ரொம்ப அருமை
  உங்கள் செல்ல மகனுக்கு வாழ்த்துக்கள், என் பெயரை சொல்லு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுங்க...//

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஜலீலாக்கா. அவரிடமும் நீங்க சொன்னதாக சொல்லியாச்சு :) நீங்களே கொடுத்தாதான் சாக்லேட் ரொம்ப பிடிக்குமாம் ;) நன்றி ஜலீலாக்கா.

  ReplyDelete
 7. @ Lakshmi...

  //ரொம்ப சுவையான குறிப்புக்கு நன்றி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும்
  இந்த ஸ்னாக்ஸ் ஐட்டம்//

  ஆமா லஷ்மிம்மா.. எல்லோருக்குமே ரொம்ப பிடிப்பதால் செய்து வைத்த இரண்டொரு நாட்களிலேயே காலியாகிடும் :)) கருத்துக்கு நன்றி லஷ்மிம்மா.

  ReplyDelete
 8. @ அந்நியன் 2...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

  //அருமையான பகிர்வுக்கு நன்றி.
  பெருநாள் வாழ்த்துக்கள்//

  நன்றி சகோ. உங்களுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. @ kalifa...

  //Assalamu alaikum!Asathal Asma AKKa ,deenilum,theenilum asaththuringaley!//

  வ‌அலைக்குமுஸ்ஸலாம்! வாங்க தங்கச்சி :)) இத்தனை நாளா சைலண்ட் ரீடரா இருந்துட்டு முதன்முதலா வருகை தந்தது சந்தோஷம் & நன்றி :) இனிமே பார்த்துவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடாம, ஃபோனில் சொல்லிக்கலாம்னு அலட்சியப்படுத்தாம :), வந்ததுக்கு உங்க பொன்னான கருத்துக்களைக் கொஞ்சம் சொல்லிட்டு போங்க :-))

  ReplyDelete
 10. @ ஆயிஷா அபுல்...

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் தோழி

  //செய்முறை விளக்கம் அருமை.செய்து பார்க்கணும். செல்ல மகனுக்கு {நஃபீஸ்} சலாமும், வாழ்த்துக்களும்//

  நன்றி ஆயிஷா. இன்ஷா அல்லாஹ் செய்து பாருங்க. ந‌ஃபீஸுக்கு உங்க சலாம் சொன்னதற்கு, "அந்த மாமிக்கு நான் 'வ‌அலைக்குமுஸ்ஸலாம்'னு சொன்னேன்னு சொல்லிடுங்க" என்றார் :))

  //உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள்//

  அதுபோல் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தின‌ருக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இங்கே (செவ்வாய்) இன்றுதான் பெருநாள் :)

  ReplyDelete
 11. இறைவன் நாடினால் சந்திப்பேன்..

  ReplyDelete
 12. @ Jaleela Kamal...

  //இறைவன் நாடினால் சந்திப்பேன்..//

  இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ஜலீலாக்கா :))

  ReplyDelete
 13. அஸ் ஸலாமு அலைக்கும் அஸ்மா....

  அப்பாஅடா..... பயங்கர இடைவேளைக்கு அப்புறம் இப்பொதான் உங்க தளத்துக்கே வர்றேன்... எந்த காரணமுமில்லை தாமதத்திற்கு...உங்களுக்கு தெரிந்ததுதான்.... :(

  சரி, சோள மாவு இல்லாவிட்டால் என்ன சேர்ப்பது??

  ReplyDelete
 14. @ அன்னு...

  வஅலைக்குமுஸ்ஸலாம் அனிஷா

  //பயங்கர இடைவேளைக்கு அப்புறம் இப்பொதான் உங்க தளத்துக்கே வர்றேன்...//

  பரவாயில்ல, வந்ததே சந்தோஷம் :) நன்றி அனிஷா.

  //சரி, சோள மாவு இல்லாவிட்டால் என்ன சேர்ப்பது??//

  சோள மாவு இல்லாவிட்டால் மைதாவை 1/2 கப் கூட்டி, பேக்கிங் பவுடர் 3/4 ஸ்பூன் சேர்க்கவேண்டும்.

  ReplyDelete
 15. அஸ் ஸலாமு அலைக்கும் அஸ்மா,

  அல்ஹம்துலில்லாஹ் பல தினங்களாக முயற்சித்தும் இது செய்ய நேரமே கிட்டாமல் போயிற்று. நேரமிருந்தால் ஏதேனும் ஒரு பொருள் குறையும். அல்ஹம்துலில்லாஹ் இன்று இதை செய்தேன். மிக மிக மிக மென்மையாக வந்தது. வாயில் போட்டதும் கரைவது போல. ஆனால் 1 1/2 கப் நெய்யும் மீதம் ஆலிவ் ஆயிலும், 3 கப் முழு கோதுமை மாவும் 2 கப் மைதாவும் சேர்த்து செய்தேன். அதனால் உதிரும் வாய்ப்பு அதிகம் என்றாலும், சுவை அலாதி. பகிர்ந்தமைக்கு நன்றி,

  வஸ் ஸலாம்.

  ReplyDelete
 16. @ அன்னு

  வ‌அலைக்குமுஸ்ஸலாம் அனிஷா!

  //அல்ஹம்துலில்லாஹ் இன்று இதை செய்தேன். மிக மிக மிக மென்மையாக வந்தது. வாயில் போட்டதும் கரைவது போல//

  அப்படியா.. நல்லா வந்தவரை சந்தோஷமே! :) செய்துபார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அன்னு.

  ReplyDelete
 17. இந்த பிஸ்கட்டை செய்வதது சுலபம் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன் நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!