ஸ்டார் ஒயர் கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 4)

முதல் பாகத்தைக் காண 
இரண்டாவது பாகத்தைக் காண
மூன்றாவது பாகத்தைக் காண


ஸ்டார் ஒயர் கூடை பின்னும் முறைகள் முழுவதும் முதல் 3 பாகங்களில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலே கொடுத்திருக்கும் இணைப்புகளை க்ளிக் பண்ணிப் பார்க்கவும். இப்போது கூடைக்கான 'கைப்பிடி' பின்னும் முறையை இந்த 4 ஆவது பாகத்திலே காணலாம்! இதில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாகவும் பொறுமையாகவும் படிக்கவும். அதற்கு மேலும் புரியாதவர்கள் தாராளமாக பின்னூட்டத்தில் கேட்கலாம் :)


 ஸ்டெப் A:

5¾ மீட்டர் அளவுக்கு 2 மஞ்சள் ஒயர்களையும், அதே அளவுக்கு புளூ ஒயர் ஒன்றையும் வெட்டி எடுத்து, 3 ஒயர்களையும் அதன் பள்ளமான பகுதிகள் ஒன்றோடு ஒன்று படியும்படி (மஞ்சள், புளூ, மஞ்சள் என்று வருவதுபோல்) அடுக்கிக் கொண்டு, சமபாதியாக மடக்கி, கூடையின் மேல் புறமாகவுள்ள‌ புளூ கலர் சதுரத்தின் கீழ் முனையில் சோவிகளின் இடையே சொருகவும்.

 ஸ்டெப் B: 

இப்போது இடப்புறம் 3 ஒயர்களும், வலப்பக்கம் 3 ஒயர்களுமாக 6 ஒயர்கள் போல தெரியும். உள்பகுதியிலுள்ள முதல் 2 மஞ்சள் ஒயர்களில் (படத்தில் காட்டியுள்ளபடி) இடது பக்க ஒயரை முதலிலும், வலது பக்க ஒயரை அதன்மேல் இரண்டாவதுமாக வைத்து பிடித்துக் கொள்ள‌வும்.

♔ ஸ்டெப் C:

அடுத்து அதன்மேல் இடது பக்கமுள்ள புளூ ஒயரை வலது பக்கமாகவும், வலது பக்கமுள்ள புளூ ஒயரை இடது பக்கமாகவும் கொண்டு வரவும். (இவ்வாறு ஒவ்வொரு முறை பின்னும்போதும் இடது பக்கமும் வலது பக்கமும் வரக்கூடிய ஒயர்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டே வரவேண்டும். இல்லாவிட்டால் பின்னல் பிரிந்துவிடும்.)

♔ ஸ்டெப் D:

இந்த மூன்றாவது பின்னல் சற்று வித்தியாசப்படும். அதாவது முந்திய பின்னல்களில் 4 ஒயர்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக பின்னியதுபோல் அல்லாமல், 5 வது ஒயரை மட்டும் (இடமிருந்து வலமாக படத்தில் காட்டியுள்ளதுபோல்) மேல்பக்கம் கொண்டு வந்து, வலப்பக்கமுள்ள 6 வது ஒயரை (வலப்பக்கமுள்ள) 3 ஒயர்களுக்கும் கீழாக (வலமிருந்து இடமாக) கொண்டு வரவும். ஸ்டெப் B யில் காட்டியுள்ள 2 வது ஒயர்தான் இப்போது இடப்பக்கத்தின் மேலே உள்ள மஞ்சள் ஒயர் ஆகும்.
 ஸ்டெப் A:

இடப்பக்கமிருக்கும் 2 வது (மஞ்சள்) ஒயரை அடிப்பக்கமாக வலப்பக்கம் கொண்டுவந்து, நடுவிலுள்ள மஞ்சள் ஒயர் மீது வைத்து, மீண்டும் இடப்பக்கத்திற்கு இழுக்கவும்.

♔ ஸ்டெப் B: 

அதேபோல் வல‌ப்பக்கமிருக்கும் 1 வது (மஞ்சள்) ஒயரை அடிப்பக்கமாக இடப்பக்கம் கொண்டுவந்து, நடுவிலுள்ள மஞ்சள் ஒயர் மீது வைத்து, மீண்டும் வலப்பக்கத்திற்கு இழுக்கவும்.புரிதலுக்காக மீண்டும் அதே ஸ்டெப்ஸ் வேறு படங்களுடன்

 ஸ்டெப் A & B:

இப்போது இடப்பக்கம் இருக்கும் புளூ ஒயர் 4 வது ஒயர்,  வல‌ப்பக்கம் இருக்கும் புளூ ஒயர் 3 வது ஒயர் ஆகும். முந்திய ஸ்டெப்பில் சொன்னதுபோல் இட‌ப்பக்க ஒயரை அடிப்பக்கமாக கொண்டு வந்து வளைத்து மீண்டும் இட‌ப்பக்கமாகவும், வலப்பக்க ஒயரை அடிப்பக்கமாக கொண்டு வந்து வளைத்து மீண்டும் வல‌ப்பக்கமாகவும் பின்னவும்.
♔ ஸ்டெப் A:

இப்படியே ஒயர் முழுதும் பின்னி முடித்து கடைசியாக சுமார் 7, 8 இன்ச் அளவுக்கு மட்டும் பின்னாமல் விடவும்.

♔ ஸ்டெப் B:

பின்னாமல் விட்ட ஒயர்களின் மீதியை மும்மூன்று ஒயர்களாக பிரித்து (படத்தில் காட்டியுள்ளபடி) பின்னல் பிரிந்துவிடாமல் முதலில் ஒரு முடிச்சு போடவும். (இந்த முடிச்சை கடைசிவரை அவிழ்க்கக் கூடாது). அதன் மேல் இன்னொரு முடிச்சும் போடவும். இரண்டாவது போடக்கூடிய இந்த முடிச்சை (கடைசியாக) கூடையுடன் இணைக்கும்போது அவிழ்த்து விடவேண்டும்.
♔ ஸ்டெப் A:

12 இன்ச் அளவுள்ள ஒயர் ஒன்றை வெட்டி எடுத்துக்கொண்டு, பின்னிய பிடியை கூடை மீது இடப்பக்கமாக 7 - வது சோவி வரை வளைத்து, வெட்டி வைத்துள்ள அந்த துண்டு ஒயரை (இடப்பக்க வளைவில்) அதன் மீது சொருகி....

♔ ஸ்டெப் B:

உள்பக்கமாக இறுக்கி ஒரு முடிச்சு போட்டு, இரண்டு பக்கமும் வரக்கூடிய ஒயரை பக்கத்திலுள்ள 4, 5 சோவிகளில் சொருகி மீதியை வெட்டவும். (ஸ்டெப் B யின் படத்தைப் பார்க்கவும்.)
♔ ஸ்டெப் A:

வளைத்த பிடியை இப்போது பிடி ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் கொண்டு வந்து, அதேபோல் இன்னொரு துண்டு ஒயரைக் கொண்டு சொருகி, (ஸ்டெப் C யில் காட்டியுள்ளபடி இந்த முடிச்சுக்குள் மீண்டும் ஒயரை சொருகுவதற்காக‌) மீண்டும் அவிழ்க்கும் வண்ணம் இறுக்காமல் மெதுவாக முடிச்சுப் போட்டு வைக்கவும்.

♔ ஸ்டெப் B:

இப்போது பிடியை வலது பக்கமாக 7 - வது சோவி வரை வளைத்து நடுவிற்கு கொண்டு வந்து, வெட்டி வைத்துள்ள இன்னொரு துண்டு ஒயரை (வல‌ப்பக்க வளைவில்) அதன் மீது சொருகி உள்பக்கமாக இறுக்கி ஒரு முடிச்சு போட்டு, முன் சொன்னதுபோல் இரண்டு பக்கமும் வரக்கூடிய ஒயரை பக்கத்திலுள்ள 4, 5 சோவிகளில் சொருகி மீதியை வெட்டவும்.

♔ ஸ்டெப் C:

அடுத்து அந்த பிடியை கீழேயுள்ள மஞ்சள்நிற சதுர‌த்திற்கு மீது கீழ்நோக்கி வளைத்து நடுவிற்கு கொண்டு வந்து, கீழே நம்பர் 1 என்று குறியிட்டு காட்டியுள்ள இடத்தில் ஒரு துண்டு ஒயர் கொண்டு முடிச்சு போட்டுவிட்டு, இறுக்காமல் மெதுவாக போட்டு வைத்த நடு (நம்பர் 2) முடிச்சை லூஸ் பண்ணியெடுத்து, இப்போது வளைத்த பிடியையும் சேர்த்து அந்த துண்டு ஒயரை மீண்டும் சொருகி உள்பக்கமாக இறுக்கி முடிச்சு போட்டு, இரண்டு பக்கங்களிலுமுள்ள சோவிகளில் ஒயரை சொருகி மீதியை வெட்டவும்.

♔ ஸ்டெப் D:

இது பிடி பின்னும் முறையின் கடைசி ஸ்டெப். நடுவிற்கு கொண்டு வந்த பிடியை இப்போது மேல்நோக்கி வளைத்து, மீண்டும் நடுவிற்கு (ஆரம்பித்த இடத்தில்) கொண்டு வந்து, 5 - வது படம், ஸ்டெப் B யில் சொல்லியிருந்தது போல கைப்பிடி பின்னலின் கடைசியில் இரண்டாவது போட்ட முடிச்சை மட்டும் அவிழ்த்து விட்டு, படத்தில் காட்டியுள்ளபடி 3 + 3 ஒயர்களை சொருகவும்.
♔ ஸ்டெப் A:

6 ஒயர்களை ஒன்றாக சேர்த்து முடிச்சு போடுவதால் உள்ளே பொருட்கள் வைக்கும்போது இடிக்கும் என்பதால், அந்த 3 + 3 ஒயர்களில் முதலில் ஒரு முடிச்சு மட்டும் போட்டுவிட்டு, (படத்தில் காட்டியுள்ளபடி) அவற்றை இரண்டிரண்டாக பிரித்து பக்கவாட்டில் சிறிய முடிச்சுகளாகப் போட்டு சோவிகளில் சொருகவும்.

♔ ஸ்டெப் B:

இப்போது மேல் நோக்கி வந்துள்ள பிடி மட்டும் கூடையுடன் இணையாமல் இருக்கும். அதனால் படத்தில் அம்புக் குறியிட்டு காட்டியுள்ள இரண்டு இடங்களிலும் துண்டு ஒயர் கொண்டு முடிச்சுப் போடவும். இதேபோல் இன்னொரு பக்கமும் பிடி பின்னவும்.
♔ ஸ்டெப் A & B:

மெட்டல் ஃபுட்ஸை (Foots) அடிப்பக்கத்தில் சொருகி, உள்பக்கம் மடக்கவும். பொதுவாக கூடைகளின் அளவுக்கு தகுந்தமாதிரி 4 அல்லது 6 ஃபுட்ஸ்கள்தான் வைப்பார்கள். கூடுதல் சேஃப்டிக்காக நம் விருப்பப்படி மேலும் சில ஃபுட்ஸ்களைக் கூட்டிக் கொள்ளலாம்.
♔ அழகிய ஸ்டார் ஒயர்கூடை ரெடி!


குறிப்பு:‍

 இந்த கூடைக்கான பிடியை பூ வடிவில் வளைக்காமல், சாதாரண கூடைகளுக்கு பின்னுவதுபோலும் போடலாம். கூடையின் அழகைக் கூட்டவே இந்த மாடல் பிடி பின்னுவார்கள்.

♔ நீளமான பிடியாக இருப்பதாலும் பூ வடிவில் வளைத்து, வளைத்து இணைத்திருப்பதாலும் ஆரம்பத்தில் பிடி வளைந்து, நெளிந்து இருப்பதுபோல் தெரியும். அதனால் இரண்டு பக்கமும் பிடிகளைப் பின்னி முடித்த பிறகு, சற்று கனமான பொருளைக் கூடையினுள் வைத்து ஓரிரு நாட்கள் மாட்டி வைத்தால் நேராகிவிடும்.

(முற்றும்)

34 comments

//கருத்து சொல்வதாக இருந்தால்// சொல்லாம போனா எப்பிடி! படம்லாம் பளிச்னு இருக்கு. குறிப்பு தெளிவா இருக்கு. இதுக்கு மேல கூடை பின்னுறதுக்கு யாரும் தெளிவா குறிப்பு கொடுக்க முடியுமான்னு தெரியல. சூப்பர். பாராட்டுக்கள்.

ஒரு தொழில் நுணுக்கத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பதிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

ரொம்ப தெளிவா இருக்கு விளக்கங்கள் படங்களும் நல்லா புரியும்படி இருக்கு. நன்றி

மிகத்தெள்ள தெளிவாக இருக்கு அஸ்மா

கலர் காம்பினேஷன் சூப்பர்

உங்கள் வீட்டு பால் கணியா வீவ் சூப்பரா இருக்கு

இதெல்லாம் என் சிறுவயதில் பின்னி மகிழ்ந்தவை.மீண்டும் ஆசையத்தூண்டி விட்டீர்கள் அஸ்மா.

அஸ்ஸலாமு அலைக்கும் தோழி

தெளிவான விளக்கங்கள்.கூடை மாடல் அருமை.

வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

@ இமா...

///கருத்து சொல்வதாக இருந்தால்// சொல்லாம போனா எப்பிடி! படம்லாம் பளிச்னு இருக்கு. குறிப்பு தெளிவா இருக்கு//

முதல் ஆளா வந்து கருத்து சொன்ன வாத்தியாரம்மாவுக்கு மிக்க நன்றி ;))

//இதுக்கு மேல கூடை பின்னுறதுக்கு யாரும் தெளிவா குறிப்பு கொடுக்க முடியுமான்னு தெரியல. சூப்பர். பாராட்டுக்கள்//

கூடை பின்னும் பின்னும் முறையே நெட்டில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை இமா. அதனால்தான் நாமாவது கொடுப்போமேன்னு கொடுத்தேன். சொல்லிக் கொடுக்கிறோம்... அதையும் தெளிவா சொன்னால்தானே நமக்கும் திருப்தி..? அதான் இவ்வளவு விளக்கம் :) வருகைக்கு நன்றி இமா.

@ ! ❤ பனித்துளி சங்கர் ❤ !...

//ஒரு தொழில் நுணுக்கத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பதிவிட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

@ Lakshmi...

//ரொம்ப தெளிவா இருக்கு விளக்கங்கள் படங்களும் நல்லா புரியும்படி இருக்கு. நன்றி//

தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி லக்ஷ்மிமா :)

@ Jaleela Kamal...

//மிகத்தெள்ள தெளிவாக இருக்கு அஸ்மா

கலர் காம்பினேஷன் சூப்பர்//

நன்றி ஜலீலாக்கா.

//உங்கள் வீட்டு பால் கணியா வீவ் சூப்பரா இருக்கு//

ஆமா ஜலீலாக்கா.. எங்கள் வீட்டு குட்டி பால்கனி :)

@ ஸாதிகா...

//இதெல்லாம் என் சிறுவயதில் பின்னி மகிழ்ந்தவை.மீண்டும் ஆசையத்தூண்டி விட்டீர்கள் அஸ்மா//

எங்களுக்குதான் இந்த ஒயர்கள் இங்கு கிடைப்பதில்லை. நீங்களாவது மாடல் மாடலா பின்னுங்க ஸாதிகா அக்கா :) வருகைக்கு நன்றி.

@ ஆயிஷா அபுல்...

வ‌அலைக்குமுஸ்ஸலாம் ஆயிஷா.

//தெளிவான விளக்கங்கள்.கூடை மாடல் அருமை.

வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழி :)

பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு அஸ்மா .எனக்கு இந்த கைவினை தெரியாது .இப்ப கற்று கொண்டேன் .இந்த ஒயர் எல்லாம் பிரான்சில் வாங்கினதா ,இங்கே லண்டன்ல கிடைச்சா நானும் செய்து பார்ப்பேன் .

மிகவும் தெளிவான விளக்கம்.. ஸ்டார் கூடை ரொம்ப அழகாக இருக்கு..

திரும்பவும் பின்னும் ஆசையை தூண்டி விட்டது உங்கள் பதிவு :-)) சூப்பர் :-))

///ஜெய்லானி said...

திரும்பவும் பின்னும் ஆசையை தூண்டி விட்டது உங்கள் பதிவு :-)) சூப்பர் :-))///

சகோ கூடைலாம் பின்னுவீர்கள் போல
ஒரு கூட பின்னி ஒரு பதிவு போடுங்கள் சகோ.

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

@ angelin...

//பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு அஸ்மா// நன்றி ஏஞ்சலின்.

//எனக்கு இந்த கைவினை தெரியாது .இப்ப கற்று கொண்டேன்//

அப்படீன்னா நீங்க கற்றதையும் எங்களுக்கும் சொல்லிக் கொடுத்துடுங்கபா.. :)

//இந்த ஒயர் எல்லாம் பிரான்சில் வாங்கினதா ,இங்கே லண்டன்ல கிடைச்சா நானும் செய்து பார்ப்பேன்//

ஒயர்கள் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தது, ஃபிரான்ஸில் கிடைக்காது. ஒருவேளை லண்டனில் உள்ள‌ இந்தியன் ஸ்டோர்களில் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பதால், உங்களுக்காக அங்கு விசாரிக்க சொல்லி என் உறவுக்காரர்களிடம் சொல்லியிருக்கேன்பா. கிடைப்பதாக அவர்கள் சொன்னால் உங்களுக்கு தகவல் சொல்கிறேன், சரியா?

@ சிநேகிதி...

//மிகவும் தெளிவான விளக்கம்.. ஸ்டார் கூடை ரொம்ப அழகாக இருக்கு..//

நன்றி ஃபாயிஜா :)

@ ஆயிஷா அபுல்...

///ஜெய்லானி said...

திரும்பவும் பின்னும் ஆசையை தூண்டி விட்டது உங்கள் பதிவு :-)) சூப்பர் :-))///

சகோ கூடைலாம் பின்னுவீர்கள் போல
ஒரு கூட பின்னி ஒரு பதிவு போடுங்கள் சகோ//

ஆமா ஆயிஷா, வேறு ஒரு புதிய மாடலில் சகோவும் கூடை பின்னிக் காட்டினால் நாமும் தெரிஞ்சுக்கலாம். கூடை பின்னுவது ஈசிதான், சொல்லிக் கொடுப்பது கஷ்டமல்லவா.. அதான் எல்லோரும் எஸ்கேப் ஆகுறாங்க‌ :-)

@ Agape Tamil Writer...

//இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை// நன்றி சகோ.

//தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே//

கொஞ்சம் ஓய்வு கிடைத்தவுடன் கண்டிப்பாக நிறுவுகிறேன். ஆலோசனைக்கு நன்றி சகோ.

ihai vida chinna koodaikku enna alavu like 2 3/4mt
,2 1/2 mt,35 cm

@ ஜெய்லானி...

//திரும்பவும் பின்னும் ஆசையை தூண்டி விட்டது உங்கள் பதிவு :-)) சூப்பர் :‍))//

ரொம்ப ஸாரி சகோ. உங்களுக்கு பதில் டைப் பண்ணிவிட்டு எப்படியோ தவறுதலாக பப்ளிஷ் பண்ணாமல் இருந்திருக்கிறேன். இன்றுதான் பார்த்தேன் :) தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

@ hasina ...

//ihai vida chinna koodaikku enna alavu like 2 3/4mt
,2 1/2 mt,35 cm//

ஹஸீனா! நீங்கள் கேட்பது சரியாக புரியவில்லை. அத்துடன் சாதா கூடைக்கு உள்ள அளவு கேட்கிறீர்களா, இதேபோன்று ஸ்டார் கூடைக்கு உள்ள அளவு கேட்கிறீர்களா என்பதையும் சொல்லுங்கள். நீளம், உயரம், அகலம் இவ்வளவு அளவுள்ள கூடை வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்கு எவ்வளவு அளவு ஒயர் வெட்டணும் என்று கேட்டீர்களானால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் சகோ.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ வாழ்த்துக்கள்

"பயணிக்கும் பாதை" தமிழ்மணத்தில் பயணத்தை ஆரம்பித்துவிட்டது..! அல்ஹம்துலில்லாஹ்

@ ஹைதர் அலி...

//சகோ வாழ்த்துக்கள்

"பயணிக்கும் பாதை" தமிழ்மணத்தில் பயணத்தை ஆரம்பித்துவிட்டது..! அல்ஹம்துலில்லாஹ்//

வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ்... நேர்மையான நடவடிக்கைகள் அனைத்தும் சந்தோஷமே :) நன்றி சகோ.

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

@ கூகிள்சிறி .கொம்

//உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே?//

//உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்//

தகவலுக்கு நன்றி. கண்டிப்பாக‌ இணைக்க முயற்சி செய்கிறேன்.

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்

can you share the making methods of nellikkai koodai? This one and biscuit knot are same?

Do you have instructions on nellikoodai?

Vanakkam friend,

Na school padikrapa koodai potruken aana IPA niyabagam ila..ungaloda intha details pathu senjikitu iruken.. Romba azhaga vilakam solirkenga ellathukum.. Na Potts varai corrcta vanthruku... Mikka nandri... Kandipa fulla potu mudichitu share panren.. Ungaloda intha sevaiku en vaazhthukkal..

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்கள் இந்த முயற்சி ரொம்ப சூப்பர் நான் கூடை பிண்ணுவேன் ஆனா நார்மல்தான் தெரியும் பிடி போட மறந்துட்டேன் இதுவும் புரியல இன்ஷாஅல்லா ட்ரை பண்ணி போட்டுடறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
EmoticonEmoticon

.