குளிர் பிரதேசமான இங்கு(ஃபிரான்ஸில்), கோடை காலம்தான் "வசந்த காலம்" என போற்றப்படும். வசந்தமான அந்த கோடை காலத்தில் நான்கைந்து மாதங்களாக வீட்டைச்சுற்றி முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள், குளிர்காலத்தின் வருகையால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளன. குளிர் காற்றிலும், பனிப் பொழிவிலும் வாடி, வதங்கி இறக்கும் முன் மாநகராட்சி ஆட்களே முன்கூட்டி வந்து அவற்றையெல்லாம் பிடுங்கிவிடுவார்கள். (கருணைக் கொலையோ, என்னவோ..?) அதனால் அவர்களை நாம் முந்திக் கொள்வோம் என்று நம் கேமராவுக்குள் அந்த மலர்களைக் குடியேற்றி, இணையத்தில் வாழவைக்க எடுத்த முயற்சி இது :)
இறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்! அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!! அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!! இவற்றில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வகைகளும் இருக்கலாம். நீங்கள் பார்க்காதவைகளும் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :) நீங்களும் பாருங்கள்!
சரம் சரமாக பூத்துள்ள அழகிய வண்ண மலர்! ஒவ்வொரு சரத்திலும் பல பூக்கள் இருப்பதுபோல் தெரிந்தாலும் ஒரு முழு சரமும் ஒரே ஒரு பூவாம்!
இதில் ஒரு செடியில் ஒரே ஒரு பூதான் இருப்பதுபோன்று தோற்றமளிக்கும். ஆனால் ஒரு செடிக்கு இருக்கும் ஒரே ஒரு காம்பிலிருந்து பல காம்புகள் பிரிந்து பல பூக்கள் கூட்டமாக சேர்ந்தே மலரக் கூடியவை! இதில் 3 அடுக்குகள் உள்ளன. மேலே உள்ளவை இன்னும் மலராத மொட்டுக்கள். அதற்கு கீழே இருப்பவை இன்று மலர்ந்தவை. அடிப்பக்கம் இருப்பவை முதலில் மலர்ந்த பூக்கள். இந்த 3 வது அடுக்கின் இதழ்கள் மறுநாள் கொட்டுவதும், நடுவில் (மேலே) உள்ள மொட்டுகள் மலர்வதும் ஒன்றாய் நடப்பதால் எல்லாப் பூக்களும் சேர்ந்து எப்போதுமே முழு பூவாக காட்சியளிக்கும்!
இதுவும் அதேபோன்று ஒரே தண்டில் பூக்கும் மலர்கள்தான் என்றாலும் சற்று வித்தியாசமானவை! ஒவ்வொரு பூவும் சற்று இடைவெளிவிட்டு ஒன்றன் மேல் ஒன்றாக மலர்ந்துக் கொண்டே வரும் அழகே அழகு! உருண்டை வடிவமான அதன் மொட்டில் ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு குழல்கள் உள்ளன. அதிலிருந்து இதழ்கள் மெல்ல வெளியாகும்போது அதன் மேற்புறமாக இன்னொரு புதிய மொட்டு உருவாகிறது. ஏற்கனவே இதழ்கள் வெளியான மொட்டுக்களின் இதழ்கள் முழுமையான பூவாக மலர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன! (அதாவது 'பேத்தி'க்கு செகண்ட் ஃப்ளோர், 'மகளு'க்கு பர்ஸ்ட் ஃப்ளோர், 'பாட்டி'க்கு க்ரவுண்ட் ஃப்ளோர் :)) பாட்டிதான் இங்கு கம்பீரமா இருக்காங்க) அதற்கு முந்திய நாள் மலர்ந்த முழுமலர்களின் இதழ்கள் ஒவ்வொன்றாக கொட்டத் தொடங்கிவிடும். (அதாங்க.. பல்லு போன பூட்டி :)))
வண்ண வண்ண பஞ்சு போன்ற பூக்கள்!
இவை நம்மூர் சூரியகாந்தி போன்றே, ஆனால் நடுவிலுள்ள மகரந்தம் மட்டும் தேன்கூட்டைக் கவிழ்த்த மாதிரி அழகு! அதேபோல் சிவந்த சூரிய காந்தியும் அழகு!
இவற்றின் மலர்களும் அதிசயமே! காம்பின் ஒரு பக்கமாக மட்டும் பூத்திருக்கும் இந்த மலர்களைப் பார்க்கும்போது காற்று ஒரே பக்கமாக அடிப்பதுபோல் தோன்றும் :) இவை என்றுமே மொட்டுக்களைப்போல் மூடியே இருக்கும். மேலுள்ள புதிய மலர்கள் செந்நிறத்திலும், அதற்கு முந்திய மலர்கள் கொஞ்சமாக செந்நிறமும் மீதிக்கு மஞ்சள் நிறம் கலந்தும், அதற்கும் முந்தியவை வெளிர் மஞ்சளிலும், முதலாவதாக பூத்த மலர் (வெளுத்து) வெண்மையாகவும் இருக்கும். இதையும் ரசிக்காமல் விட முடியுமா? :)
இவற்றிற்கு நாணம் அதிகம் :-) மொட்டாக இருந்தாலும் மலர்ந்தாலும் கீழ்நோக்கிய பார்வைக் கொண்டவை :)
நம்மூர் செவ்வந்திப்பூ இனம்.
இவங்க செவ்வந்திப்பூவின் சொந்தங்களாம் :)
இவங்களும் அவங்களுக்கு ஏதோ ஒரு உறவு முறையாம் :)
கூட்டமான (சிவந்த) இலைகளுக்கிடையே கொஞ்சூண்டு கிடைத்த இடத்திலிருந்து ஒரு தண்டு வளர்ந்து, அதைப் பிடித்துக் கொண்டு குட்டிக் குட்டியாக பூத்துள்ள பழுப்புநிறப் பூக்கள்! மொட்டுக்கள் மட்டும் வைலட் நிறத்தில்!
தனித்து நின்றாலும் அழகில் குறைவில்லாத ரோஜாக்கள்!
ஸ்ஸ்ஸ்.. கொஞ்சம் மூச்சு வாங்குது.. :) :) மீதியின் படத்தை மட்டும் பார்த்துட்டு, கடைசியா இலைகளையும் கொஞ்சம் பாருங்க!
"நாங்களும் பல வண்ணங்களில்/வகைகளில் இருக்கிறோம். எங்களையும் அப்படியே கொஞ்சம் க்ளிக் பண்ணுங்க"ன்னு இலைகள் எல்லாம் சொன்ன மாதிரி இருந்துச்சு.. அதான் அவற்றையும் க்ளிக்கியாச்சு :)
எங்கள் இறைவா..! உன்னுடைய ஆற்றல்கள் அளவிட முடியாதவை! எங்களுக்காகவே படைத்துக் கொடுத்துள்ள உன் படைப்பினங்கள் எண்ணி முடிக்க இயலாதவை! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..!
இறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்! அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!! அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!! இவற்றில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வகைகளும் இருக்கலாம். நீங்கள் பார்க்காதவைகளும் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :) நீங்களும் பாருங்கள்!
சரம் சரமாக பூத்துள்ள அழகிய வண்ண மலர்! ஒவ்வொரு சரத்திலும் பல பூக்கள் இருப்பதுபோல் தெரிந்தாலும் ஒரு முழு சரமும் ஒரே ஒரு பூவாம்!
நாங்கலாம் ஒரு தாய் மக்க :) |
இதுவும் அதேபோன்று ஒரே தண்டில் பூக்கும் மலர்கள்தான் என்றாலும் சற்று வித்தியாசமானவை! ஒவ்வொரு பூவும் சற்று இடைவெளிவிட்டு ஒன்றன் மேல் ஒன்றாக மலர்ந்துக் கொண்டே வரும் அழகே அழகு! உருண்டை வடிவமான அதன் மொட்டில் ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு குழல்கள் உள்ளன. அதிலிருந்து இதழ்கள் மெல்ல வெளியாகும்போது அதன் மேற்புறமாக இன்னொரு புதிய மொட்டு உருவாகிறது. ஏற்கனவே இதழ்கள் வெளியான மொட்டுக்களின் இதழ்கள் முழுமையான பூவாக மலர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன! (அதாவது 'பேத்தி'க்கு செகண்ட் ஃப்ளோர், 'மகளு'க்கு பர்ஸ்ட் ஃப்ளோர், 'பாட்டி'க்கு க்ரவுண்ட் ஃப்ளோர் :)) பாட்டிதான் இங்கு கம்பீரமா இருக்காங்க) அதற்கு முந்திய நாள் மலர்ந்த முழுமலர்களின் இதழ்கள் ஒவ்வொன்றாக கொட்டத் தொடங்கிவிடும். (அதாங்க.. பல்லு போன பூட்டி :)))
வண்ண வண்ண பஞ்சு போன்ற பூக்கள்!
இவை நம்மூர் சூரியகாந்தி போன்றே, ஆனால் நடுவிலுள்ள மகரந்தம் மட்டும் தேன்கூட்டைக் கவிழ்த்த மாதிரி அழகு! அதேபோல் சிவந்த சூரிய காந்தியும் அழகு!
இவற்றின் மலர்களும் அதிசயமே! காம்பின் ஒரு பக்கமாக மட்டும் பூத்திருக்கும் இந்த மலர்களைப் பார்க்கும்போது காற்று ஒரே பக்கமாக அடிப்பதுபோல் தோன்றும் :) இவை என்றுமே மொட்டுக்களைப்போல் மூடியே இருக்கும். மேலுள்ள புதிய மலர்கள் செந்நிறத்திலும், அதற்கு முந்திய மலர்கள் கொஞ்சமாக செந்நிறமும் மீதிக்கு மஞ்சள் நிறம் கலந்தும், அதற்கும் முந்தியவை வெளிர் மஞ்சளிலும், முதலாவதாக பூத்த மலர் (வெளுத்து) வெண்மையாகவும் இருக்கும். இதையும் ரசிக்காமல் விட முடியுமா? :)
இவற்றிற்கு நாணம் அதிகம் :-) மொட்டாக இருந்தாலும் மலர்ந்தாலும் கீழ்நோக்கிய பார்வைக் கொண்டவை :)
நாங்களும் மலர்களே! |
நம்மூர் செவ்வந்திப்பூ இனம்.
இவங்க செவ்வந்திப்பூவின் சொந்தங்களாம் :)
இவங்களும் அவங்களுக்கு ஏதோ ஒரு உறவு முறையாம் :)
கூட்டமான (சிவந்த) இலைகளுக்கிடையே கொஞ்சூண்டு கிடைத்த இடத்திலிருந்து ஒரு தண்டு வளர்ந்து, அதைப் பிடித்துக் கொண்டு குட்டிக் குட்டியாக பூத்துள்ள பழுப்புநிறப் பூக்கள்! மொட்டுக்கள் மட்டும் வைலட் நிறத்தில்!
தனித்து நின்றாலும் அழகில் குறைவில்லாத ரோஜாக்கள்!
ஸ்ஸ்ஸ்.. கொஞ்சம் மூச்சு வாங்குது.. :) :) மீதியின் படத்தை மட்டும் பார்த்துட்டு, கடைசியா இலைகளையும் கொஞ்சம் பாருங்க!
"நாங்களும் பல வண்ணங்களில்/வகைகளில் இருக்கிறோம். எங்களையும் அப்படியே கொஞ்சம் க்ளிக் பண்ணுங்க"ன்னு இலைகள் எல்லாம் சொன்ன மாதிரி இருந்துச்சு.. அதான் அவற்றையும் க்ளிக்கியாச்சு :)
எங்கள் இறைவா..! உன்னுடைய ஆற்றல்கள் அளவிட முடியாதவை! எங்களுக்காகவே படைத்துக் கொடுத்துள்ள உன் படைப்பினங்கள் எண்ணி முடிக்க இயலாதவை! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅஸ்மா
26 படங்களில் எதை சொல்ல.... எதைவிட...... எல்லாமே அழகு......
சூப்பர்
எக்ஸ்ரா லார்ட்ஜ் பண்ணா க்ளியார்டிட்டி கிடைக்க மாட்டேங்குதே எனக்கு....... ஆனா இதுல நல்லா இருக்கு
எல்லாப் பூக்களுமே அழகா இருக்கு அஸ்மா! நல்லா வர்ணணையும் செய்திருக்கீங்க!:) இலைகளும் அருமையா இருக்கு.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஇறைவன் படைப்பின் மகத்துவத்தை அறிய வுதவும் எண்ணற்ற வழிகளில் ஒன்று படைப்பினங்களில் உள்ள நுணுக்கங்களை ரசிப்பது. படங்கள் அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்.
கூடவே...
பேத்தி-மகள்-பாட்டி-பல்லு போன பூட்டி- போன்ற உவமான விளக்கங்களும் அருமை.
இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :)
ReplyDeleteநீங்கள் ரசித்தவைகளை அனைவரையும் ரசிக்க வச்சிருக்கீங்க.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
ReplyDeleteமரணத்தை எதிர்நோக்கியுள்ள இந்த மலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். :( :( :(
படைப்பினங்களைப் பார்த்து படைத்தவனை நினைவு கூற வைக்கிறது இந்த பதிவு.
பகிர்வுக்கு நன்றி சகோதரி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஇறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்!
அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!!
அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!!
எங்கள் இறைவா..! உன்னுடைய ஆற்றல்கள் அளவிட முடியாதவை! எங்களுக்காகவே படைத்துக் கொடுத்துள்ள உன் படைப்பினங்கள் எண்ணி முடிக்க இயலாதவை! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..!
நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள் சகோ.அஸ்மா. என்றாலும் மலர்கள் அனைத்தும் என் மனதை இலேசாக வந்து தழுவுவது உண்மையல்லாவா!
பேத்தி-மகள்-பாட்டி? ஐந்தடுக்கு அல்லவா இருக்கிறது. அட அண்டர்கிரவுண்ட் பூட்டிக்கா?
சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள் அஸ்மா.
அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
ReplyDeleteமாஷாஅல்லாஹ்....
படங்கள் அருமை.
ஹை! பூ! ம்.
ReplyDeleteபூக்கள் என்றால் எல்லாமே அழகுதான்.
அந்த 'பேத்தி-மகள்-பாட்டி'... அதுதானே ட்ரை ப்ளவர் டெகரேஷனில் குச்சியும் பந்தும் குச்சியும் பந்துமாக நீளமாக வைப்பது!!
சிவப்பு ஆமணக்கு காய் இப்போதான் பார்க்கிறேன். திரும்பவும் வந்து மெதுவாகப் பார்க்க வேண்டும். எல்லாமே அழகு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
@ ஆமினா...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//அஸ்மா
26 படங்களில் எதை சொல்ல.... எதைவிட...... எல்லாமே அழகு......
சூப்பர்// நன்றி ஆமினா :)
//எக்ஸ்ரா லார்ட்ஜ் பண்ணா க்ளியார்டிட்டி கிடைக்க மாட்டேங்குதே எனக்கு....... ஆனா இதுல நல்லா இருக்கு//
உங்க ப்ளாக்கின் ஃபோட்டோ பிரச்சனை ஒருவேளை டெம்ப்ளேட்டில் உள்ள பிரச்சனையாக இருக்குமா ஆமினா? தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டுப் பாருங்களேம்பா. என் ப்ளாக்கில் தற்போதைக்கு உள்ள ஒரு பிரச்சனை, மேலே கொடுத்திருக்கும் லிங்குகளில் "டிப்ஸ்" என்பதை க்ளிக் செய்து உள்ளே செல்ல முடியவில்லை. அதனால் அந்தப் பகுதியில் இன்னும் எந்த போஸ்ட்டும் பதியவில்லை. அதை சால்வ் பண்ணிய பிறகுதான் டிப்ஸ்கள் கொடுக்கவேண்டும் என்றிருக்கிறேன், இன்ஷா அல்லாஹ் :)
@ Mahi...
ReplyDelete//எல்லாப் பூக்களுமே அழகா இருக்கு அஸ்மா! நல்லா வர்ணணையும் செய்திருக்கீங்க!:) இலைகளும் அருமையா இருக்கு//
கருத்துக்களுக்கு நன்றி மஹி! மஞ்சள் பூவைப் பார்த்தபோது உங்கள் ஞாபகம்தான் வந்தது :)
@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இறைவன் படைப்பின் மகத்துவத்தை அறிய வுதவும் எண்ணற்ற வழிகளில் ஒன்று படைப்பினங்களில் உள்ள நுணுக்கங்களை ரசிப்பது// நிச்சயமா சகோ!
//படங்கள் அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்// அல்ஹம்துலில்லாஹ்.. :)
//கூடவே...
பேத்தி-மகள்-பாட்டி-பல்லு போன பூட்டி- போன்ற உவமான விளக்கங்களும் அருமை//
:)) சும்மா விளக்கத்துக்காக.. :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
@ Lakshmi...
ReplyDelete//நீங்கள் ரசித்தவைகளை அனைவரையும் ரசிக்க வச்சிருக்கீங்க//
அப்படீன்னா இறைவனின் அழகிய படைப்புகளுக்கு நீங்களும் ரசிகைதான்னு சொல்லுங்க :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லஷ்மிமா :)
@ Abdul Basith...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் சகோ!
//மரணத்தை எதிர்நோக்கியுள்ள இந்த மலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். :( :( :(// :(
//படைப்பினங்களைப் பார்த்து படைத்தவனை நினைவு கூற வைக்கிறது இந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி சகோதரி!//
சந்தோஷம்.. கருத்துக்கு நன்றி சகோ!
@ மு.ஜபருல்லாஹ்...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள் சகோ.அஸ்மா//
அதை சொல்வதற்காகதான் சகோ இந்தப் பதிவு :))
//என்றாலும் மலர்கள் அனைத்தும் என் மனதை இலேசாக வந்து தழுவுவது உண்மையல்லாவா!// :):)
//பேத்தி-மகள்-பாட்டி? ஐந்தடுக்கு அல்லவா இருக்கிறது. அட அண்டர்கிரவுண்ட் பூட்டிக்கா?
சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள் அஸ்மா//
பூட்டிகளின் அப்பார்ட்மெண்ட்தான் :)) அதில் (ஐந்துக்கும்) அதிகமா கூட இருக்கும் சகோ. ஆனா அழகா இருக்காது. அதான் அதை விட்டுட்டேன் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
@ ஆயிஷா அபுல்...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் தோழி!
//மாஷாஅல்லாஹ்....
படங்கள் அருமை//
அல்ஹம்துலில்லாஹ்.. நன்றி ஆயிஷா :)
@ இமா...
ReplyDelete//ஹை! பூ! ம்.
பூக்கள் என்றால் எல்லாமே அழகுதான்//
பூக்களோடு ரொம்ப நெருங்கியவங்களாச்சே இமா நீங்க..! ;) நிச்சயமா 'பூ' என்றாலே அழகுதான்!
//அந்த 'பேத்தி-மகள்-பாட்டி'... அதுதானே ட்ரை ப்ளவர் டெகரேஷனில் குச்சியும் பந்தும் குச்சியும் பந்துமாக நீளமாக வைப்பது!!//
அப்படியா..? எந்த டெகரேஷனிலும் 'ப்ரெஷ் ஃப்ளவர்ஸ்' பயன்படுத்திய ஞாபகமில்லாததால் எனக்கு அதுபற்றி தெரியல இமா :)
//சிவப்பு ஆமணக்கு காய் இப்போதான் பார்க்கிறேன்//
நானும் இப்போதான் புதுசா பார்த்தேன் :)
//திரும்பவும் வந்து மெதுவாகப் பார்க்க வேண்டும். எல்லாமே அழகு//
பொறுமையா வந்து பாருங்க இமா. இந்த நிலையிலும் இப்போ நீங்க வந்ததே பெரிய விஷயம். உடல்நலனையும் பார்த்துக்கோங்க. ரொம்ப நன்றி இமா :)
என்ன அழகழகான பூக்கள். பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல.. இறைவன் படைப்பில் வாவ்!. நன்றி ஒரு இனிய பகிர்வுக்கு.
ReplyDelete@ Starjan ( ஸ்டார்ஜன் )...
ReplyDelete//என்ன அழகழகான பூக்கள். பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல.. இறைவன் படைப்பில் வாவ்!. நன்றி ஒரு இனிய பகிர்வுக்கு//
பார்த்துக்கிட்டே இருக்கதான் இணையத்துக்குள் கொண்டு வந்தாச்சு சகோ :) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteநேரமிருக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html
உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteநேரமிருக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html
அழகான மலர்கள்..
ReplyDeleteஎங்கள் இறைவா..! உன்னுடைய ஆற்றல்கள் அளவிட முடியாதவை! எங்களுக்காகவே படைத்துக் கொடுத்துள்ள உன் படைப்பினங்கள் எண்ணி முடிக்க இயலாதவை! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..!
ReplyDeleteஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே நாங்கள் அழகென்று..
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
YA ALLAH!DHUNYAVIL INDHA AZHAGAI PARKAIYIL KANNU KULIRGIRADHEY!MARUMAIYIL YENDHA KANNUM PARKADHA SORKA AZHAGAI NINAIKAIYIL YEN ULLAM YENGUKIRADHEY!DHUNYAVIL IDHAI ANUBAVITHA NAMMAI SORKATHILUM ARUL PURIVANAGA!ASMA AKKA THANKS FOR YOUR LOVELY RASANAI!
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்//
அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி தோழி :)
@ அமைதிச்சாரல்...
ReplyDelete//அழகான மலர்கள்..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
@ இராஜராஜேஸ்வரி...
ReplyDelete//எங்கள் இறைவா..! உன்னுடைய ஆற்றல்கள் அளவிட முடியாதவை! எங்களுக்காகவே படைத்துக் கொடுத்துள்ள உன் படைப்பினங்கள் எண்ணி முடிக்க இயலாதவை! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே நாங்கள் அழகென்று..
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//
அழகான பூக்களைக் கண்டு அழகான கருத்திட்டமைக்கும் வருகைக்கும் நன்றி :)
@ Rahila Masthan...
ReplyDelete//YA ALLAH!DHUNYAVIL INDHA AZHAGAI PARKAIYIL KANNU KULIRGIRADHEY!MARUMAIYIL YENDHA KANNUM PARKADHA SORKA AZHAGAI NINAIKAIYIL YEN ULLAM YENGUKIRADHEY!DHUNYAVIL IDHAI ANUBAVITHA NAMMAI SORKATHILUM ARUL PURIVANAGA!ASMA AKKA THANKS FOR YOUR LOVELY RASANAI!//
எந்தக் கண்ணும் பார்த்திராத சுவனச்சோலை யாருடைய கற்பனைக்கும் எட்டாததும்கூட, சுப்ஹானல்லாஹ்! மறுமையில் அந்த பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்க வல்ல நாயன் துணை செய்வானாக! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கை ராஹிலா :)