அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 26 July 2010

என் இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்! அளவ‌ற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் மார்க்கத்தை அதன் தூய்மையான‌ வடிவில் அறிந்துக்கொள்ளவும், இஸ்லாம் என்ற பெயரால் பலரும் பலவிதமான கொள்கைகளை மார்க்கமாகவும், தவறான வழிகாட்டுதல்களை அமல்களாகவும் நினைத்து செயல்படுத்தி இறைவனிடத்தில் நஷ்டவாளியாக ஆகிவிடாமல், அல்லாஹ் தந்த குர்ஆனையும், அண்ணல் நபி(ஸல்)அவர்களின் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழும் நன்மக்களாக நம்முடையை வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே, இந்த ப்ளாக் தொடங்கியதன் நோக்கமாகும்! இதில் குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலான சொந்த கட்டுரைகளும், தேவைப்பட்டால் பிற சகோதர, சகோதரிகளின் ஆக்கங்களும், தொகுப்புகளும் அவர்களின் பெயர்களோடு இன்ஷா அல்லாஹ் இடம் பெறும். இதன் மூலம் இஸ்லாமிய மக்கள் அனைவரும் பயன்பெற்று ஈருலகிலும் வெற்றி பெறவும், நாம் செய்யும் இந்த நல்ல த‌ஃவா பணியை வல்ல ரஹ்மான் ஏற்று, நற்கூலி வழங்கவும் பிரார்த்தித்தவளாய் இதை தொடங்குகிறேன். இதில் எதுவும் குறைகள் ஏற்படின், அது முழுக்க என்னைச் சார்ந்ததே! இதில் கிடைக்கும் நிறைகள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வினால் கிடைப்பவையே! அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு:- மாற்றுமத அன்புள்ளங்களும் பயன்பெறும் வகையில் சமையல், கைவினைப் பொருட்கள்,  செய்திகள், மருத்துவம், டிப்ஸ் என்று எக்ஸ்ட்ரா பகுதிகள் விரைவில் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ்!

16 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி.தொடர்ந்து எழுதுங்கள்,நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நிச்சயம் பார்வையிடுவேன்.

    ReplyDelete
  2. வாங்க ஆசியாக்கா, உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. உங்கள் இறைபணி தொடர வாழ்த்தும் உங்கள் சகோதரன்.

    ReplyDelete
    Replies
    1. @ இளம் தூயவன்

      //உங்கள் இறைபணி தொடர வாழ்த்தும் உங்கள் சகோதரன்//

      மன்னிக்கவும் சகோ, இதுவரை கவனிக்காமல் பதில் கொடுக்காமல் இருந்துவிட்டேன். எப்படியோ 2 வருஷத்துக்குள்ளாகவே பார்த்தாச்சு உங்க பின்னூட்டத்தை :) வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

      Delete
  4. வாழ்த்துக்கள் அஸ்மா.

    ReplyDelete
    Replies
    1. @ ஸாதிகா

      //வாழ்த்துக்கள் அஸ்மா//

      மன்னிக்கவும் ஸாதிகா அக்கா. இவ்வளவு நாட்களுக்கு பிறகு இப்போதான் உங்க பின்னூட்டத்தை பார்த்தேன் :( எப்படிதான் உங்கள் பின்னூட்டத்தையும் சகோ இளம் தூயவன் அவர்களின் பின்னூட்டத்தையும் இதுவரை கவனிக்காமல் விட்டேனோ தெரியவில்லை. இப்பவாவது பார்த்தேனே :) வாழ்த்துக்கு நன்றி ஸாதிகா அக்கா.

      Delete
  5. உங்கள் வலைப்பக்க முகப்பில் உள்ளது போல் அல்லாஹ் அல்லாஹ் என ஒவ்வொரு வினாடியும் நம் இதயங்கள் இறைவனை முன்னோக்கட்டும்!.
    நமது பாதை நம் கொள்கை வழியில் முன்னோர்களான நபிமார்கள், ஸஹாபாக்கள், ஸாலிஹீன்கள், ஷுஹதாக்கள் என இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இறைநேசப் பாதையாகட்டும்!.ஆமீன்

    ReplyDelete
  6. வாங்க நூருல் அமீன் நானா, உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள்! குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி, நாம் அனைவரும் மறுமையை நோக்கி செல்லும் பாதையை இறைநேசத்திற்குரியதாக ஆக்கிக்கொள்வோம், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!!... வாழ்த்துக்கள்..!! தொடருங்கள்...தொடர்கிறோம்..

    ReplyDelete
  8. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெய்லானி நானா! சந்தோஷம், தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  9. இன்று தான் கண்டேன் உங்கள் வலைப்பூ.
    உங்கள் கண்காணிப்பில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி.

    //இஸ்லாம் என்ற பெயரால் பலரும் பலவிதமான கொள்கைகளை மார்க்கமாகவும்// இவ்வகையில் நான் தவறினால் தயது செய்து சுட்டிக் காட்டவும்.

    ReplyDelete
  10. @ அரபுத்தமிழன்...

    //இன்று தான் கண்டேன் உங்கள் வலைப்பூ.
    உங்கள் கண்காணிப்பில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி.

    //இஸ்லாம் என்ற பெயரால் பலரும் பலவிதமான கொள்கைகளை மார்க்கமாகவும்// இவ்வகையில் நான் தவறினால் தயது செய்து சுட்டிக் காட்டவும்//

    மார்க்கத்தின் பெயரால் தவறு செய்தால் சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம், இன்ஷா அல்லாஹ்! அதுபோல் நீங்களும் உடனே சுட்டிக்காட்டி எங்களுக்கும் உதவி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் :) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்
    எளிய வடிவமைப்புடன் அனைவருக்கும் பொதுவான இலகுவான ஒரு இணையத்தளம். மேலும் உங்கள் பணி சிறப்பாக செயல்பட இறைவனிடம் துஆ செய்கிறோம்.
    sabina insaaf

    ReplyDelete
    Replies
    1. @ insaaf

      வ‌அலைக்குமுஸ்ஸலாம்.

      //எளிய வடிவமைப்புடன் அனைவருக்கும் பொதுவான இலகுவான ஒரு இணையத்தளம்//

      அல்ஹம்துலில்லாஹ், நன்றி சபீனா :)

      //மேலும் உங்கள் பணி சிறப்பாக செயல்பட இறைவனிடம் துஆ செய்கிறோம்//

      ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  12. அஸ்ஸலாமு அழைக்கும்,
    உங்க சைட் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு! மாஷா அல்லாஹ்!
    Parisa Farveen

    ReplyDelete
    Replies
    1. @ frtj

      வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      //உங்க சைட் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு! மாஷா அல்லாஹ்!//

      அல்ஹம்துலில்லாஹ் :) உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை