அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 15 August 2010

என்று மாறுமோ இந்த இழிநிலை...?


அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தை இஸ்லாமிய மக்கள் மிகுந்த ஆவலுடனும் பயபக்தியுடனும் வரவேற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம் சமுதாயத்தின் இன்னொரு சாரார் தமது எஜமானிக்கு விசுவாசமாக நடந்துக் கொண்டிருக்கின்ற அவல நிலையை பாருங்கள்!

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வண்ணமும் தங்களுக்காக‌ நன்மைகளை கொள்ளையடிக்கும் அமல்களை அதிகப்படுத்திக் கொண்டு, தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் விதமாகவும் ரமலானை வரவேற்காமல், அரசியல் சாக்கடைக்குள் சங்கமமான இந்த மனிதர்கள் ரமலானை எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் படங்களோடு வரவேற்கும் பரிதாப நிலையை கீழேயுள்ள‌ இந்தப் படம் சித்தரிக்கிறது. ரமலானின் புனிதத்தை உணர்ந்த, ஈமானுள்ள எந்த முஸ்லிமும் இதுபோல் செய்யமாட்டர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்புத்தியையும் நேர்வழியையும் கொடுத்து, நம்மையும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்து பாதுகாப்பானாக!
(மெயிலில் வந்த‌ தகவலிலிருந்து தொகுத்து வழங்க‌ப்பட்டுள்ளது)


(படத்தின் மீது க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கவும்)

10 comments:

 1. இவர்களுக்காக பிரார்தனை செய்வதைவிட வேறு வழி இல்லை.

  ReplyDelete
 2. இவர்களை என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இவர்களுடைய எண்ணங்கள்
  அனைத்தும் தவறான வழியில் சென்று கொண்டு உள்ளது. இந்த ரமளானுடைய மாதத்தில்
  படைத்த இறைவனை மறந்து செயல்படும் இவர்கள் ,பெயரும் புகழும் தான் வாழ்க்கை
  என்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த உலகம் நிரந்தரம் இல்லை என்பதை மறந்து
  விடுகின்றார்கள்.

  ReplyDelete
 3. @ ராஜவம்சம்,

  நேரில் இது போன்றவற்றை காணும் வாய்ப்பு கிடைப்பவர்கள் நபிவழிப்படி நேரடியாக தடுக்கவேண்டும். கண்டிப்பாக துஆவும் செய்வோம்!

  ReplyDelete
 4. @ இளம் தூயவன்,

  //படைத்த இறைவனை மறந்து செயல்படும் இவர்கள் ,பெயரும் புகழும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இந்த உலகம் நிரந்தரம் இல்லை என்பதை மறந்து விடுகின்றார்கள்.//

  அவர்களின் இந்த நிலைக்கு முதல் காரணம்...? மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான்! இதுபோன்றவர்கள் திருந்துவதற்கு நாமும் இயன்றவரை முயற்சிக்கவேண்டும், இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete
 5. அல்லாஹ் அக்பர்....!!! அல்லாஹ் இவர்களை நல்வலி படுதுவனாக....

  ReplyDelete
 6. //அல்லாஹ் இவர்களை நல்வலி படுதுவனாக....// இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி பரக்கத்.

  ReplyDelete
 7. நபிகள் பிறந்த மண்ணில் இப்படியும் ஒருக் கூட்டமா ?

  பழங்குடியினரைப் பேசுறதில் அர்த்தம் இல்லை, ஏன் என்றால் அவர்கள் பின் பற்றிய கலாச்சாரம் அப்படி.

  இந்த மூடர்களை என்ன செய்வது ???

  இதற்க்கு பெயர்தான் அறியாமையோ ?

  இல்லை தலை வெளியே தெரியட்டும் என்பதற்காகவா ?

  சவுதி அரேபியா அரசுக்கு தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.

  முளையிலேயே கிள்ளி போடவேண்டிய நஞ்சு செடிகள் இவர்கள்.

  அரசருக்குப் பிறகு அம்மாவின் ஆட்ச்சிதான் என்று சொன்னாலும் வியப்பில்லை.

  ReplyDelete
 8. @ Mohamed Ayoub K...

  //இதற்க்கு பெயர்தான் அறியாமையோ ?

  இல்லை தலை வெளியே தெரியட்டும் என்பதற்காகவா ?

  சவுதி அரேபியா அரசுக்கு தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.//

  எதையாவது ஒன்றை வைத்து தனக்கு பெயரும் புகழும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் மக்கள் இவர்கள். மார்க்கம் இவர்களிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லப்படாததே முக்கிய காரணம். சவூதி அரசின் கவன‌த்துக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  ReplyDelete
 9. நமக்காகவும் இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனை இறைஞ்சுவோம்.

  ReplyDelete
 10. @ ஒ.நூருல் அமீன்...

  //நமக்காகவும் இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனை இறைஞ்சுவோம்//

  இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக!
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை