ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விடுமுறையை கழிக்க தீவுக்கு நேற்று உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் அருகே பெரியப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ் ஆலிம். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியப் பட்டிணம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லைத் தீவிற்கு சுற்றுலா செல்ல தயாராகினர். இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியப் பட்டினத்தைச் சேர்ந்த ஐயூப் கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லைத் தீவிற்கு கிளம்பினர். ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூப் கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ. தூரத்தில் நிலை தடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூப் கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இப்னு மகள் நதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரக்கத்(37), ஹமீதா நிஷா(38), பெரியப் பட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி ஃபிர்தவ்ஸ் பானு(40), மகன் அப்துல் வஹாப்(12), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மக்ஃபு(16), சதக்கத்துல்லா மனைவி ஹலிமத்(45), சாகுல் ஹமீது மகள் முஸ்ஃபிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), மனைவி ஃபர்சானா(35) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நாஜியா(18), ரஹீமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி. பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.
விபத்து நடந்தது எப்படி?
பெரியப் பட்டிணம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன. முல்லைத் தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும். விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும் லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்" செய்ய தவறியதாலும் படகு கவிழ்ந்தது.
அதிகாரிகளின் அலட்சியம்
மன்னார் வளைகுடா தீவுகளில் முறையான கண்காணிப்பு இல்லை. வனத்துறை, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, கடலோர காவல் படை, மரைன் போலீஸ், கடற்படை, மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு ரோந்து மேற்கொள்ள படகுகள் தரப்பட்டும், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை. தடை செய்யப்பட்ட தீவுக்கு சுற்றுலா செல்லும் அளவில், அவர்களின் கண்காணிப்பு பணி இருந்தது. ஒவ்வொரு முறை இதை சுட்டிக் காட்டும்போதும், அதைப் பற்றி யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்று இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம்.
ஜி.பி.எஸ். கருவி கொடுத்த "க்ளூ"
சம்பவத்திற்கு படகில் சென்ற டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோருக்கு படகின் இரண்டு பலகைகள் மட்டுமே தென்பட்டது. சம்பவ இடத்தை அறிய, மீட்புக் குழுவினர் பொருத்திய மிதவைகள் உதவின. படகின் ஜி.பி.எஸ்., கருவி மூலம் படகு ஆழப்பகுதியில் சென்று மூழ்கியது தெரிய வந்தது.கடலில் மூழ்கிய படகை கடலோர காவல்படை கப்பல் மூலம் கயிறு கட்டி இழுத்தபோது, படகு கடலுக்குள்ளேயே உடைந்து சேதமடைந்தது. படகை மீட்கும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, கடற்படையின் ஹெலிகாப்டர், கடலோர காவல் படையின் வலை தேடல் போன்றவற்றை பார்வையிட்ட அதிகாரிகள், சிறிது நேரத்திற்கு பின் கரை திரும்பினர்.
கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்" என்றார்.
எஸ்.பி. பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்" என்றார்.
விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்" என்றான்.
காணாமல் போன பெண்களைத் தேடி மீனவர்கள் பயணம்
நேற்று கடலில் நடந்த படகு விபத்தில் கீழக்கரையை சேர்ந்த கலீல் (11), அப்துல் வஹாப் (12) ஆகிய இரண்டு சகோதரர்கள், பரமக்குடியை சேர்ந்த தாய், மகள் ஆகியோர்களின் உடல்களை நேற்று இரவு சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
பலியான பெரியப் பட்டிணத்தைச் சேர்ந்தவர்களில் இருவரை தவிர மற்றவர்கள் உடல்கள் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற குத்தூஸ் ஆலிம் மனைவி சலிமா பீவி உடலை இன்று காலை 7.30 மணிக்கு அடக்கம் செய்தனர். அதன் பின் மற்றொரு பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.
கடலில் பயணம் செய்தவர்களில் பெரியப் பட்டிணத்தை சேர்ந்த ஹாஜா மகள் ரஹீமா(14), சீனி முகம்மது மகள் நாஜியா(16) ஆகியோர்கள் காணாமல் போய் விட்டனர். அவர்களின் நிலைக் குறித்து அறிய பெரியப் பட்டிணத்தைச் சேர்ந்த சங்கு குளி மீனவர்கள் ஏராளமானோர் ஆறு படகுகளில் இன்று காலை ஏழு மணிக்கு கடலுக்கு புறப்பட்டனர். இந்த இருவரில் நாஜியா ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜீனியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
source: dinamalar
நாம் பெறவேண்டிய படிப்பினைகள்:
- செல்வதற்கு தடை செய்யப்பட்ட இடங்களுக்கு மீறிச் செல்வது,
- தடை செய்யப்படாத இடங்களாக இருந்தாலும், அந்தந்த இடங்களுக்கு தகுந்த பாதுகாப்பின்றி செல்வது,
- பழுதடைந்த வாகனத்தில் செல்வது,
- இரவு நேரப் பிரயாணங்களைத் தேர்ந்தெடுப்பது,
- வாகனத்தின் கொள்ளளவுக்கும் தாண்டி ஆட்களை ஏற்றி செல்வது,
- அதிவேகங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்வது,
- விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுவது
- மலிவான வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை அலட்சியப்படுத்துவது
போன்றவை பெரும் உயிர்ச் சேதங்களையும், தீராத சோகங்களையும் தரக்கூடியவை என்பதை நம்முடைய ஒவ்வொரு பிரயாணத்திலும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் கேள்விப்படும் ஒவ்வொரு விபத்துகளையும் நமக்கு இறைவன் கொடுக்கும் முன் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும். விபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் பரப்பவேண்டும்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சுவனப்பேற்றை அடையவும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக! நாம் அனைவரும் அவர்களுக்காக பிரார்த்திப்போம். இதைத் தவிர நாம் வேறெதுவும் செய்ய இயலவில்லை! :((
Monday, 27 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
மனைதினை பதற்ச்செய்த நிகழ்வு அஸ்மா இது.சிரியவர்கள்தான் இந்த டெரர் பிக்னிக்கில் ஈடு பட்டு இளம் கன்று பயம் அறியாது என்று நடந்து கொள்கின்றார்கள் என்றால் எல்லாம் அறிந்த பெரியவர்களும் ஈடுபட்டு இப்பொழுது ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டதுதான் வேதனை.
ReplyDelete'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
ReplyDeleteவருத்தமான செய்தி தான்.
யா அல்லாஹ்! இதென்ன கொடுமை.என்ன சொல்வதென்று தெரியலை.
ReplyDelete'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்.
ReplyDeleteநடந்த சம்பவங்களும் மனித உயிரிழப்புகளும் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,தடை செய்யப் பட்ட தீவிற்கு நாம் சென்றது முதல் குற்றம்,தகுதி இல்லாத படகில் ஏறியது இரண்டாவது குற்றம்,தற்காப்பு ஆடைகள் இல்லாதது மூன்றாவது குற்றம்,அளவிற்கு அதிகமா ஆட்களை ஏற்றியது நான்காவது குற்றம்,இப்படி பல தவறுகளை நம்ம பக்கத்தில் வைத்துக் கொண்டு ஐயோ அம்மா என்று கூக்கரிப்பதால் போன உயிர்களும் இழந்த நஷ்ட்டங்களும் இந்த உலகத்திற்கு திரும்பி வந்திடாது.
வலியில்லாமல் வாழ்க்கை இல்லை அந்த வாழ்க்கையை தகுந்த முறையில் அமைத்துக் கொள்வதற்குத்தான் இறைவன் நமக்கு ஆறறிவை தந்துள்ளான்.
ஏன் நாம் அதை யோசிப்பது இல்லை ?
கொடுமை..தம் கண் முன்னாள் தம்மை ஈன்ற அருமை தாய் தத்தளித்து,தம் ரெண்டு கன்னுகளையும் மேல் நோக்கி சொருகி,என் அன்பு மகனே,என் முத்துச் செல்வமே,என் இதயத்தின் அனைத்து துடிப்பிற்கும் சொந்தக்காரனே,அம்மா உன்னை விட்டு செல்கின்றேனே என் மகராசனே... என்று வாயில் சொல்ல முடியாத நிலையில் மனதில் நினைத்துக் கொண்டு மாண்டு போனாயே...நான் எங்கே போவேன் ? எப்படி வாழ்வேன் ? என்று ஏங்குதே மனம்.
சிற்றார் சிறுவர்களும் உற்றார் உறவினர்களும் நொடி பொழுதில் மாண்டாலும் வற்றாத கண்ணீரோடு தவிக்கிறதே ஆள் இல்லாத குடும்பம்.
இந்தக் கொடுமையினை எங்கு போய் சொல்வது ?
ஆனந்த கூத்தாடி,அழிவு தீவை பார்க்க ஓடி,கண்டது எனன சொர்க்கமா ? இல்லை மரணம்தானே !
குழந்தை செல்வங்களும்,படிக்கும் பருவங்களும் பச்சை தண்ணீரில், மிச்ச மீதி இல்லாமல் கரைந்து விட்டீரே,கனவு கண்ட பெற்றோரும் காவியம் படைக்க மகள் வருவாள்,படிப்பு முடிந்து மனம் செய்து, மகளின் மகளை கொஞ்சுவதற்கு தொட்டிலும் வாங்கியாச்சு தொட்டிலை ஆட்டிவிட ஒரு உயிரும் இல்லையே.
அத்தா,அம்மா,அக்காள்,தங்கை,தம்பி,மச்சான்,மச்சி,மாமன்,மனைவி,மகள்,மகன்,கணவன் என்று அனைத்து உறவுகளையும் கொண்டு சென்று விட்டதே எங்கே அந்த குத்தூசின் குடும்பம் ?
மிக அருமையாக தொகுத்து விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் சகோ......
வருத்தமான செய்திங்க..
ReplyDeleteஇன்னா லில்லாஹி...
ReplyDeleteசம்பவத்தை மட்டும் கூறாமல், நம் தவறுகளையும் சுட்டிக் காட்டியது நல்லது. எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்.
ReplyDeleteநடந்த சம்பவங்களும் மனித உயிரிழப்புகளும் என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது,தடை செய்யப் பட்ட தீவிற்கு நாம் சென்றது முதல் குற்றம்,தகுதி இல்லாத படகில் ஏறியது இரண்டாவது குற்றம்,தற்காப்பு ஆடைகள் இல்லாதது மூன்றாவது குற்றம்,அளவிற்கு அதிகமா ஆட்களை ஏற்றியது நான்காவது குற்றம்,இப்படி பல தவறுகளை நம்ம பக்கத்தில் வைத்துக் கொண்டு ஐயோ அம்மா என்று கூக்கரிப்பதால் போன உயிர்களும் இழந்த நஷ்ட்டங்களும் இந்த உலகத்திற்கு திரும்பி வந்திடாது.
வலியில்லாமல் வாழ்க்கை இல்லை அந்த வாழ்க்கையை தகுந்த முறையில் அமைத்துக் கொள்வதற்குத்தான் இறைவன் நமக்கு ஆறறிவை தந்துள்ளான்.
ஏன் நாம் அதை யோசிப்பது இல்லை ?
கொடுமை..தம் கண் முன்னாள் தம்மை ஈன்ற அருமை தாய் தத்தளித்து,தம் ரெண்டு கன்னுகளையும் மேல் நோக்கி சொருகி,என் அன்பு மகனே,என் முத்துச் செல்வமே,என் இதயத்தின் அனைத்து துடிப்பிற்கும் சொந்தக்காரனே,அம்மா உன்னை விட்டு செல்கின்றேனே என் மகராசனே... என்று வாயில் சொல்ல முடியாத நிலையில் மனதில் நினைத்துக் கொண்டு மாண்டு போனாயே...நான் எங்கே போவேன் ? எப்படி வாழ்வேன் ? என்று ஏங்குதே மனம்.
சிற்றார் சிறுவர்களும் உற்றார் உறவினர்களும் நொடி பொழுதில் மாண்டாலும் வற்றாத கண்ணீரோடு தவிக்கிறதே ஆள் இல்லாத குடும்பம்.
இந்தக் கொடுமையினை எங்கு போய் சொல்வது ?
ஆனந்த கூத்தாடி,அழிவு தீவை பார்க்க ஓடி,கண்டது எனன சொர்க்கமா ? இல்லை மரணம்தானே !
குழந்தை செல்வங்களும்,படிக்கும் பருவங்களும் பச்சை தண்ணீரில், மிச்ச மீதி இல்லாமல் கரைந்து விட்டீரே,கனவு கண்ட பெற்றோரும் காவியம் படைக்க மகள் வருவாள்,படிப்பு முடிந்து மனம் செய்து, மகளின் மகளை கொஞ்சுவதற்கு தொட்டிலும் வாங்கியாச்சு தொட்டிலை ஆட்டிவிட ஒரு உயிரும் இல்லையே.
அத்தா,அம்மா,அக்காள்,தங்கை,தம்பி,மச்சான்,மச்சி,மாமன்,மனைவி,மகள்,மகன்,கணவன் என்று அனைத்து உறவுகளையும் கொண்டு சென்று விட்டதே எங்கே அந்த குத்தூசின் குடும்பம் ?
மிக அருமையாக தொகுத்து விளக்கம் அளித்ததற்கு நன்றிகள் சகோ......
இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்.
ReplyDeleteபடித்தவுடன் மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது.
@ ஸாதிகா...
ReplyDelete//மனைதினை பதற்ச்செய்த நிகழ்வு அஸ்மா இது.சிரியவர்கள்தான் இந்த டெரர் பிக்னிக்கில் ஈடு பட்டு இளம் கன்று பயம் அறியாது என்று நடந்து கொள்கின்றார்கள் என்றால் எல்லாம் அறிந்த பெரியவர்களும் ஈடுபட்டு இப்பொழுது ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டதுதான் வேதனை//
இந்த நிலை ஏற்படும் என்று யாரும் தெரிந்தே செய்யாவிட்டாலும், சந்தோஷத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பாதுகாப்பை மறந்துவிடுகிறோம். எல்லாமே முடிந்த பின்... இறைவனின் நாட்டம் அப்படி என்று சொல்ல மட்டுமே செய்கிறோம் ஸாதிகா அக்கா :(( இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் கேரளாவில் கூட நடந்தன. அனைவரும் கண்டிப்பாக படிப்பினை பெறவேண்டும்!
@ ராஜவம்சம்...
ReplyDelete//'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
வருத்தமான செய்தி தான்//
ரொம்ப வருத்தமாகதான் உள்ளது சகோ. அவர்களுக்காக துஆ செய்வோம்!
@ asiya omar...
ReplyDelete//யா அல்லாஹ்! இதென்ன கொடுமை.என்ன சொல்வதென்று தெரியலை//
அதிர்ச்சியில் நமக்கே இப்படி இருக்கிறதென்றால், நம்மைவிட பல மடங்கு துயரில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு இறைவன்தான் பொறுமையைக் கொடுக்கணும், ஆசியாக்கா!
@ FARHAN...
ReplyDelete//'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'//
இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மனைவரையும் இறைவன் காப்பாற்றுவானாக!
@ பதிவுலகில் பாபு...
ReplyDelete//வருத்தமான செய்திங்க..//
நிச்சயமா சகோ!
@ ஹுஸைனம்மா...
ReplyDelete//இன்னா லில்லாஹி...
சம்பவத்தை மட்டும் கூறாமல், நம் தவறுகளையும் சுட்டிக் காட்டியது நல்லது. எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்//
ஆமா ஹுஸைனம்மா, நாமதான் தற்காப்பாக இருக்கணும்! அதற்கு மேல்தான் இறைவன் மீது தவக்கல் வைக்கணும்.
@ அந்நியன் 2...
ReplyDelete//இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்.
... போன உயிர்களும் இழந்த நஷ்ட்டங்களும் இந்த உலகத்திற்கு திரும்பி வந்திடாது//
:((
//கொடுமை..தம் கண் முன்னாள் தம்மை ஈன்ற அருமை தாய் தத்தளித்து,தம் ரெண்டு கன்னுகளையும் மேல் நோக்கி சொருகி,என் அன்பு மகனே,என் முத்துச் செல்வமே,என் இதயத்தின் அனைத்து துடிப்பிற்கும் சொந்தக்காரனே,அம்மா உன்னை விட்டு செல்கின்றேனே என் மகராசனே... என்று வாயில் சொல்ல முடியாத நிலையில் மனதில் நினைத்துக் கொண்டு மாண்டு போனாயே....//
மாண்ட அந்த ஒவ்வொரு உயிரும் அந்த நேரம் என்ன நினைத்திருக்குமோ... சுப்ஹானல்லாஹ்! உங்களின் வரிகள் வருத்தத்தோடு கண்ணீரையும் வரவழைக்கிறது சகோ :((
@ இளம் தூயவன்...
ReplyDelete//இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்.
படித்தவுடன் மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது//
இறைவன் போதுமானவன்! துஆ செய்வோம் சகோ.
இன்னா லில்லாஹி....
ReplyDeleteமனதை பாரமாக்கிய விஷயம்
ஸலாம் சகோ அஸ்மா.இந்த செய்தியை பார்த்ததும்,கண்களில் நீர் நிரம்பித்தான் போனது.
ReplyDeleteநேற்று இருந்த ஒரு குடும்பமே இன்று இல்லை..
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரது உறவினர்களுக்கும்,அவர்களில் உயிர்தப்பியவர்களுக்கும்,மன அமைதியை தர போதுமானவன்.
எவ்வித பாதுகாப்பும் இன்றி,பெண்களும் பிஞ்சுகளும்,இத்தகைய பயணங்களில் ஈடுபடுவது,எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்திவிடுகிறது..
இது தாங்கள் சொல்வதுபோல் நமக்கெல்லாம் ஒரு பாடமாகவும்,அல்லாஹ்வின் எச்சரிக்கையாகவும் இருக்கிறது..
சுற்றுலா,கொண்டாட்டங்களில்,உற்சாகம்,ஆர்வமிகுதியால்,பிறக்கும் அசட்டுத்தனமான் துணிவு இத்தனை கோரமான விளைவை கொடுத்துவிடுகிறது..
எனவே இது போன்ற நேரங்களில் பொருமையும்,விவேகமுமே,பாதுகாப்பை தரும்.
அனைவருக்கும் பயனுள்ள பதிவு..
அன்புடன்
ரஜின்
நெஞ்சு கணக்கிறது..
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//இன்னா லில்லாஹி....
மனதை பாரமாக்கிய விஷயம்//
உங்க ஊர்க்காரங்க கூட 2 பேர் அதில் போயிட்டாங்க ஆமினா! என்னோடு மதரஸாவில் படித்த ஒரு பெண்ணும் அதில் போனதாக கேள்விப்பட்டு, யோசித்து யோசித்து பார்க்கிறேன், முகம் நினைவில் வரவில்லை. பெயர் மட்டும் பழகிய பெயராக உள்ளது. யாராக இருந்தாலும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவன வாழ்வைக் கொடுக்கட்டும்!
@ RAZIN ABDUL RAHMAN...
ReplyDelete//ஸலாம் சகோ அஸ்மா.இந்த செய்தியை பார்த்ததும்,கண்களில் நீர் நிரம்பித்தான் போனது.
நேற்று இருந்த ஒரு குடும்பமே இன்று இல்லை..
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரது உறவினர்களுக்கும்,அவர்களில் உயிர்தப்பியவர்களுக்கும்,மன அமைதியை தர போதுமானவன்//
ஸலாம் சகோ. அல்லாஹ் போதுமானவன்!
//எவ்வித பாதுகாப்பும் இன்றி,பெண்களும் பிஞ்சுகளும்,இத்தகைய பயணங்களில் ஈடுபடுவது,எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்திவிடுகிறது..
இது தாங்கள் சொல்வதுபோல் நமக்கெல்லாம் ஒரு பாடமாகவும்,அல்லாஹ்வின் எச்சரிக்கையாகவும் இருக்கிறது..
சுற்றுலா,கொண்டாட்டங்களில்,உற்சாகம்,ஆர்வமிகுதியால்,பிறக்கும் அசட்டுத்தனமான் துணிவு இத்தனை கோரமான விளைவை கொடுத்துவிடுகிறது..//
இறைவன் நம்மனைவரையும் காப்பானாக!
@ ஆதிரா...
ReplyDelete//நெஞ்சு கணக்கிறது..//
உண்மைதான் ஆதிரா! இதுபோன்ற கோர விபத்துகளைப் பார்த்தால், அதே நினைவாகவே இருக்கும் :(
இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மனசு வலிக்குது
யாஅல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக
@ ஹைதர் அலி...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//யாஅல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக//
அல்லாஹுத்தஆலா நம்முடைய துஆக்களை ஏற்று அவர்களுக்கு மறுமையின் நல்வாழ்வை அளிப்பானாக!
மிகவும் கவலைக்குறிய சம்பவம்.
ReplyDeleteகொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா வந்த மாதிரியே சந்தோஷத்தோடு வீட்டுக்கு போயிருக்கலாமே! ஒருத்தராவது யோசிச்சிருக்கலாம். ம்ச்.
ReplyDeleteஉங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிகவும் கவலைக்குறிய சம்பவம்.
//நாம் பெறவேண்டிய படிப்பினைகள்://--அவசியம் அவ்வப்போது நினைவுகூறிக்கொள்ளத்தக்க வேண்டிய படிப்பினைகள். நன்றி.
அருட்பேராற்றலின் கருணையினால்
ReplyDeleteதங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
ReplyDeleteஇந்த செய்தியை படித்ததும் எனது சிறு வயது நினைவும் வருகிறது . உடைந்து பாதி மூழ்கிப்போன கப்பலை பார்க்க சுமார் 5 படகுகள் முழுக்க குடும்பங்கள் ((அன்று பிள்ளையார் சதுர்த்தி)) போனதில் 4 படகுகள் அங்கேயே முழ்கி விட்டது . இன்னொன்னு ஓடவில்லை .இதில் கொடுமை மீன் பிடி வலையில் அவர்களே மாட்டிக்கொண்டதுதான் . 200க்கும் அதிகம்
இப்போது உள்ள செல்போன் தொழில் நுட்பம் அப்போது இல்லை கரைக்கு நீந்தி வந்து தகவல் கொடுத்து பிறகு காப்பாற்ற போய் யாருமே உயிருடன் கிடைக்க வில்லை.
அப்போது சொன்ன காரனங்கள் இப்போது நீங்க குறிப்பிடு இருக்கும் அதே காரணங்கள்தான் ..
ஆனால் இதிலிருந்து யாரும் படிப்பினை பெற்றமாதிரி தெரியவில்லை :-( ஸ்கூல் பின் பகுதி ஆறு கடல் சேறும் இடத்தல் அமைத்திருந்த்தால் இதை நேரில் ( பினங்களை) பார்த்து விட்டு தூங்காத இரவுகள் அதிகம் .
இப்போது உங்கள் செய்தி அதே நினைவை உண்டாக்கி விட்டது..இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அஸ்மா,படித்துவிட்டு கண்ணீர்
வந்து விட்டது. அல்லாஹ் ஏன் இந்த
சோதனை.
//இந்த விபத்தில் இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சுவனப்பேற்றை அடையவும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார்கள் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக! நாம் அனைவரும் அவர்களுக்காக பிரார்த்திப்போம். இதைத் தவிர நாம் வேறெதுவும் செய்ய இயலவில்லை!//
அருமை சகோதர சகோதரிகள், தோழிகள் தயவு செய்து மன்னிக்கவும். 4 நாட்களாக கண் திறக்க முடியாத, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாத கடுமையான வைரல் ஃபீவரில் கஷ்டப்படுகிறேன். உங்களுக்காக இன்ஃபார்ம் பண்ண வந்தேன். இறைவன் நாடினால் விரைவில் வந்து, தனித்தனியாக பதில் தருகிறேன். அதுவரை உங்கள் பிரார்த்தனைகளை எதிர்ப்பார்த்தவளாய்...
ReplyDeleteஅஸ்மா, உங்களுக்கு அல்லாஹ்
ReplyDeleteநற்சுகத்தை தருவானாக!
அய்யயோ அஸ்மா...உடம்பை நல்லா பாத்துக்கங்க.... விரைவில் குணமடைய துஆ செய்கிறோம்.
ReplyDeleteமுதல்ல உடல் நிலையை பாருங்க ..இன்ஷா அல்லாஹ் என்னுடைய துவாவும் ...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.
ReplyDeleteநிறைய நாள் கழித்து இந்த வலைப்பக்கம் வந்தேன். இப்படி ஒரு சொக பதிவை எதிர்பார்க்கவில்லை.
சுப்ஹானல்லாஹ்... அவசரத்தில் செய்யும் முடிவுகள், அலட்சியம் எல்லாம் எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை மீண்டும் இந்த செய்தி உறுதி செய்கிறது. கவனம் மட்டுமே முக்கிய தேவை எல்லாவற்றிலும்.
க்ஹைர், அல்லாஹ் அனைவருக்கும் ஆறுதலையும், அவர்களின் பொறுமைக்கு தகுந்த கூலியையும் தருவானாக.
உடமபு இப்பொழுது சுகமா? சரிவர கவனித்துக் கொள்ளவும்.
வ ஸலாம்.
@ vanathy...
ReplyDelete//மிகவும் கவலைக்குறிய சம்பவம்//
ஆமா வானதி :( இனியாவது மக்கள் கவனமாக இருக்கணும்!
@ asiya omar...
ReplyDelete//உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்//
இப்போதான் ஆஸியாக்கா கொஞ்சம் தெளிந்து எழுந்து உட்கார்ந்திருக்கேன் :) இன்ஷா அல்லாஹ் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அழைப்புக்கு நன்றி ஆஸியாக்கா!
@ enrenrum16...
ReplyDelete//கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா வந்த மாதிரியே சந்தோஷத்தோடு வீட்டுக்கு போயிருக்கலாமே! ஒருத்தராவது யோசிச்சிருக்கலாம். ம்ச்//
விதி மதியை வென்றுவிட்டது பானு! வேறு என்ன சொல்லமுடியும்? :(
@ இனியவன்...
ReplyDelete//உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் கொண்டாடுவதில்லை சகோ. வருகைக்கு நன்றி சகோ!
@ முஹம்மத் ஆஷிக்...
ReplyDelete//இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிகவும் கவலைக்குறிய சம்பவம்.
//நாம் பெறவேண்டிய படிப்பினைகள்://--அவசியம் அவ்வப்போது நினைவுகூறிக்கொள்ளத்தக்க வேண்டிய படிப்பினைகள். நன்றி//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... சிறிய பிரயாணமாக இருந்தாலும் அவ்வப்போது நாம் மற்றவருக்கு சொல்லி அனுப்புவோம். அதைதான் எல்லோருக்கும் பயன்படட்டுமே என்று இங்கும் பகிர்ந்துக் கொண்டேன் சகோ!
@ ஹைஷ்126...
ReplyDelete//அருட்பேராற்றலின் கருணையினால்
தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்//
நன்றி சகோ!
@ ஜெய்லானி...
ReplyDelete//இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்'
இந்த செய்தியை படித்ததும் எனது சிறு வயது நினைவும் வருகிறது . உடைந்து பாதி மூழ்கிப்போன கப்பலை பார்க்க சுமார் 5 படகுகள் முழுக்க குடும்பங்கள் ((அன்று பிள்ளையார் சதுர்த்தி)) போனதில் 4 படகுகள் அங்கேயே முழ்கி விட்டது . இன்னொன்னு ஓடவில்லை .இதில் கொடுமை மீன் பிடி வலையில் அவர்களே மாட்டிக்கொண்டதுதான் . 200க்கும் அதிகம்//
வலையிலேயே மாட்டியா?! அடப்பாவமே...!
//அப்போது சொன்ன காரனங்கள் இப்போது நீங்க குறிப்பிடு இருக்கும் அதே காரணங்கள்தான் ..
ஆனால் இதிலிருந்து யாரும் படிப்பினை பெற்றமாதிரி தெரியவில்லை :-( ஸ்கூல் பின் பகுதி ஆறு கடல் சேறும் இடத்தல் அமைத்திருந்த்தால் இதை நேரில் ( பினங்களை) பார்த்து விட்டு தூங்காத இரவுகள் அதிகம் .
இப்போது உங்கள் செய்தி அதே நினைவை உண்டாக்கி விட்டது..//
நீங்கள் சொல்வது மாதிரி மக்கள் இன்னும் படிப்பினை பெறவில்லை :( டூரில் மக்கள் காட்டும் ஆர்வம், அதன் பாதுகாப்பில் காட்டுவதில்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது சகோ!
@ ஆயிஷா அபுல்...
ReplyDelete//இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அஸ்மா,படித்துவிட்டு கண்ணீர்
வந்து விட்டது. அல்லாஹ் ஏன் இந்த
சோதனை//
இந்த சோதனையைத் தாங்கும் மனநிலையை அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் கொடுக்கட்டும். மரணித்தவர்களுக்காகவும் துஆ செய்வோம்!
@ ஆயிஷா அபுல்...
ReplyDelete//அஸ்மா, உங்களுக்கு அல்லாஹ்
நற்சுகத்தை தருவானாக!//
இன்றுதான் அல்லாஹ் உதவியால் ஓரளவு தெம்பு வந்து எழுந்திருக்கேன் ஆயிஷா. தங்களின் பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி தோழி!
@ enrenrum16...
ReplyDelete//அய்யயோ அஸ்மா...உடம்பை நல்லா பாத்துக்கங்க.... விரைவில் குணமடைய துஆ செய்கிறோம்//
இன்னும் முழுமையா நலமாகவில்லை பானு! தங்களின் துஆவுக்கு ரொம்ப நன்றி தோழி!
@ ஜெய்லானி...
ReplyDelete//முதல்ல உடல் நிலையை பாருங்க ..இன்ஷா அல்லாஹ் என்னுடைய துவாவும் ...//
இப்போ ஓரளவு பரவாயில்லை, அல்ஹம்துலில்லாஹ். தங்களின் துஆவும் கிடைத்தமைக்கு சந்தோஷம், ரொம்ப நன்றி சகோ!
@ அன்னு...
ReplyDelete//சுப்ஹானல்லாஹ்... அவசரத்தில் செய்யும் முடிவுகள், அலட்சியம் எல்லாம் எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை மீண்டும் இந்த செய்தி உறுதி செய்கிறது. கவனம் மட்டுமே முக்கிய தேவை எல்லாவற்றிலும்.
க்ஹைர், அல்லாஹ் அனைவருக்கும் ஆறுதலையும், அவர்களின் பொறுமைக்கு தகுந்த கூலியையும் தருவானாக//
இன்ஷா அல்லாஹ்!
//உடமபு இப்பொழுது சுகமா? சரிவர கவனித்துக் கொள்ளவும்//
இப்போ கொஞ்சம் பரவாயில்லை அன்னு. முழுமையா குணமடைய துஆ செய்யுங்கள்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteமிகவும் கொடுமையான சம்பவம்.இதுவரை என் காதுக்கு இந்த செய்தி எட்டவில்லை அஸ்மா....
யாராக இருந்தாலும் மவுத்தை நல்லவிதமாய் கொடுக்கணும்னு அல்லாஹ் விடம் நான் அதிகம் கேட்கும் துஆ....
இந்த கொடுமையெல்லாம் யாருக்கும் வரக்கூடாது.....
(அல்லாஹ் அக்பர்..)இது மற்றவர்களுக்கு பாடமாய் அமையும்.
இது போன்ற விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு தந்தமைக்கு நன்றி சகோதரி....
அன்புடன்,அப்சரா.
@ அப்சரா...
ReplyDelete//இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மிகவும் கொடுமையான சம்பவம்.இதுவரை என் காதுக்கு இந்த செய்தி எட்டவில்லை அஸ்மா....
யாராக இருந்தாலும் மவுத்தை நல்லவிதமாய் கொடுக்கணும்னு அல்லாஹ் விடம் நான் அதிகம் கேட்கும் துஆ....
இந்த கொடுமையெல்லாம் யாருக்கும் வரக்கூடாது.....//
கண்டிப்பா அப்படிதான் துஆ செய்யணும். அல்லாஹ் நம்மனைவரையும் இதுபோன்ற கோர விபத்துகளிலிருந்து பாதுகாக்கட்டும்!