அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 22 February 2011

கேரட் அல்வா



மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கேரட் அல்வா சுவையும் சத்தும் நிறைந்தது. குழந்தைகளுக்கு அடிக்கடி செய்துக் கொடுக்கலாம். விருந்துகளில் பிரியாணி, நெய் சோறு வைக்கும்போது (பச்சடி போன்று) பக்க உணவாகவும் இதை வைப்பார்கள்.


தேவையான பொருட்கள்:

கேரட் - 300 கிராம்
பட்டர் - 200 கிராம்
கன்டன்ஸ்டு மில்க் - சுமார் 50 மில்லி
சீனி - 300 கிராம்
சுகர் இல்லாத கன்டன்ஸ்டு மில்க் - 1 டின் 
உருக்கிய பசு நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 பின்ச்





செய்முறை:


கேரட்டை தோல் சுரண்டி கழுவிய பிறகு பொடிதாக‌ துருவிக் கொள்ளவும்.





வாணலியில் துருவிய கேரட்டையும் பாதி பட்டர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.





கேரட் நன்கு வதங்கிய பிறகு சீனியைச் சேர்த்து கிண்டவும்.





சீனி உருகி சேர்ந்து வரும்போது மீதியுள்ள பட்டரைச் சேர்த்து தீயாமல் கிண்ட‌வும். (விரும்பினால் முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்)




இப்போது சுகர் இல்லாத கன்டஸ்டு மில்க் சேர்த்து, வற்றும்வரை மெதுவாக கிண்டவும்.



எல்லாம் ஒன்று சேந்தவுடன் கன்டஸ்டு மில்க் ஊற்றி கிளற‌வும்.




இப்போது வாணலியில் ஒட்டாமல் திரண்டுவரும் பதம்வரை கிண்டவும்.




பதமாக திரண்டு வந்தபிறகு உருக்கிய பசுநெய் சேர்த்து கிளற‌வும்.




மிகவும் சுவையான கேரட் அல்வா தயார்!



குறிப்பு:‍- 


- கன்டஸ்டு மில்க் சேர்த்த பிறகும் இனிப்பு சுவை கூடுதலாக தேவைப்பட்டால் உங்கள் தேவைக்கு சீனியோ அல்லது கன்டஸ்டு மில்க்கோ சேர்த்துக் கொள்ளவும்.

- முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம். முந்திரிப் பருப்பு இல்லாமலும் செய்யலாம்.

பிற்ச்சேர்க்கை:- இந்த குறிப்பு "என் இனிய இல்லம்"-'பார்ட்டி ஸ்நாக்ஸ்' சமையல் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



23 comments:

  1. ஸலாம் சகோ..
    நல்ல ஸ்வீட்..அத நல்லாவே ரிச்சா பண்ணீருக்கீங்க..

    பாக்கவே நல்லா இருக்கு..படங்களும் அருமை..

    வாழ்த்துக்கள்ஸ்

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  2. @ H.ரஜின் அப்துல் ரஹ்மான்...

    //ஸலாம் சகோ.. நல்ல ஸ்வீட்..அத நல்லாவே ரிச்சா பண்ணீருக்கீங்க..பாக்கவே நல்லா இருக்கு..படங்களும் அருமை.. வாழ்த்துக்கள்ஸ்//

    ஸலாம் சகோ. உங்கள் 'வாழ்த்துக்கள்ஸ்' க்கு :-) ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை.

    ReplyDelete
  4. கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
    படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மா

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,ம்ம்ம்... யம்மி யம்மி ஸ்வீட்டோடு வந்திருக்கீங்க.... பார்க்கும் போதே சூப்பராக இருக்கு.நான் நெய்யை ஊற்றி செய்வேன்.கண்டன்ஸ்ட் மில்க் எப்பவாவது சேர்ப்பேன்.
    இனிப்பில்லாத கண்டன்ஸ்ட் மில்க் சேர்ப்பதும்,பட்டரசேர்ப்பதும்,எனக்கு புதிது....
    நல்ல மஸ்தான அல்வாவை பரிமாறியிருக்கீங்க...
    ஹூம்... பக்கத்தில் இருந்தால் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்திருக்கலாம்.
    வாழ்த்துக்கள் அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  6. செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்வதில் தான் உங்க தனித்திறமையே..அந்த ஹேர் க்லிப் எனக்கொன்னு கிடைக்குமா;-)..மாஷா அல்லாஹ் ரொம்ப அருமை

    ReplyDelete
  7. @ asiya omar...

    //ரொம்ப ரிச்சான கேரட் அல்வா.அருமை//

    நன்றி ஆசியாக்கா :)

    ReplyDelete
  8. @ Jaleela Kamal...

    //கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
    படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மா//

    நன்றி ஜலீலாக்கா :) நீங்களும் இதே முறையில்தான் செய்வீங்களா?

    ReplyDelete
  9. @ apsara-illam...

    வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!

    //இனிப்பில்லாத கண்டன்ஸ்ட் மில்க் சேர்ப்பதும்,பட்டரசேர்ப்பதும்,எனக்கு புதிது....//

    பட்டருக்கு பதில் கரூர் நெய் போன்றும் சேர்க்கலாம். ஆனால் டால்டா மட்டும் சேர்க்கக் கூடாது.

    //ஹூம்... பக்கத்தில் இருந்தால் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்திருக்கலாம்.
    வாழ்த்துக்கள் அஸ்மா...//

    ஒரு வாய் என்ன.. முடிந்தவரை சாப்பிட்டு அப்படியே பார்சலும் பண்ணிட்டு போகலாம் :)) நன்றி அப்சரா.

    ReplyDelete
  10. @ தளிகா...

    //செய்வதை ரொம்பவே நீட்டா தெளிவாக செய்வதில் தான் உங்க தனித்திறமையே..//

    அப்படீங்கிறீங்க....? :))) நீங்க சொன்னா அப்போ சரியாதான் இருக்கும் ருபீ :‍-)

    //அந்த ஹேர் க்லிப் எனக்கொன்னு கிடைக்குமா;-)..மாஷா அல்லாஹ் ரொம்ப அருமை//

    நிச்சயமா! உங்களுக்கு இல்லாததா..? வேணும்னு ரீமா ஒரு வார்த்தை சொல்லட்டும் உடனே ரெடி பண்ணிடுறேன் :‍‍-) நன்றி தளிகா!

    ReplyDelete
  11. ஆஹா..அருமையாக இருக்கு..இப்படி படத்தினை காட்டி ஆசையினை கிளப்பிவிட்டிங்க...

    எப்பொழுதுமே சக்கரை அல்லது கண்டன்ஸ்டு மிக்ல் ஏதாவது ஒன்று தான் சேர்த்து செய்து இருக்கின்றேன்..இரண்டுமே சேர்த்து செய்து கலக்கிட்டிங்க..

    உங்களுடைய கரட் துறுவல் மெஷின் அருமை...அழகாக துறுகி கொடுத்து இருக்கின்றது...

    ReplyDelete
  12. @ GEETHA ACHAL...

    //ஆஹா..அருமையாக இருக்கு..இப்படி படத்தினை காட்டி ஆசையினை கிளப்பிவிட்டிங்க...// :)))

    //எப்பொழுதுமே சக்கரை அல்லது கண்டன்ஸ்டு மிக்ல் ஏதாவது ஒன்று தான் சேர்த்து செய்து இருக்கின்றேன்..இரண்டுமே சேர்த்து செய்து கலக்கிட்டிங்க..// இரண்டும் சேர்க்கும்போது சீனியின் அளவு குறையும்; சுவை கூடும்! அதனால்தான் :)

    //உங்களுடைய கரட் துறுவல் மெஷின் அருமை...அழகாக துறுகி கொடுத்து இருக்கின்றது...// ஆமா கீதாச்சல், ரொம்ப யூஸ்ஃபுல்! வருகைக்கு நன்றிபா.

    ReplyDelete
  13. காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்க

    ReplyDelete
  14. @ S.Menaga...

    //காரட் அல்வா சூப்பரா இருக்கு...எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்க//

    நீங்க கேட்டு இல்லாமலா மேனகா? :-) வருகைக்கு நன்றிபா!

    ReplyDelete
  15. @ இலா...

    //Looks very yummy :))//

    தேங்க்ஸ் இலா :) வருகைக்கும் ஒரு தேங்க்ஸ்!

    ReplyDelete
  16. //கேரட் ஹல்வா எங்க வீட்டு பேவரிட் அடிக்கடி விஷேசங்களுக்கு அடிக்கடி செய்வது,
    படஙக்ள் பளிச்சின்னு இருக்கு அஸ்மா//

    நன்றி ஜலீலாக்கா :) நீங்களும் இதே முறையில்தான் செய்வீங்களா?//

    பேச்சிலர்களை நினைச்சா பாவமா தெரியல...இப்படியா ஜொள்ளுவிட வைக்கிறது...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  17. @ ஜெய்லானி ...

    //பேச்சிலர்களை நினைச்சா பாவமா தெரியல...இப்படியா ஜொள்ளுவிட வைக்கிறது...!! அவ்வ்வ்வ்வ்வ்வ் :‍))//

    இதெல்லாம் பேச்சுலர்களின் மேடங்கள் அவசர தந்தி மூலமா எங்களுக்கு கொடுத்த ஆர்டர்! :-) இப்பவாச்சும் ஃபேமிலி அப்பார்ட்மெண்ட் தேடுவீங்கள்ல..? :)))

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரி அவர்களுக்கு

    சமைப்பதில் பெரிய ஸ்பேஷலிஸ்ட் என்பது உங்கள் பதிவில் செய்முறை விளக்கத்தில் தெரிகிறது

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  19. @ ஹைதர் அலி...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //சமைப்பதில் பெரிய ஸ்பேஷலிஸ்ட் என்பது உங்கள் பதிவில் செய்முறை விளக்கத்தில் தெரிகிறது//

    அப்படியும் இருக்குமோ..? :-) அல்ஹம்துலில்லாஹ், வாழ்த்துக்களுக்கு சந்தோஷம் :) நன்றி சகோ.

    ReplyDelete
  20. கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்டோ? அழகா படங்களுடன் விளக்கி இருக்கீங்க.

    ReplyDelete
  21. @ Lakshmi...

    //கேரட் அல்வா பிடிக்காதவங்களும் உண்டோ? அழகா படங்களுடன் விளக்கி இருக்கீங்க//

    உங்களுக்கும் ஃபேவரைட்தானா..? :‍) சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மிமா! :)

    ReplyDelete
  22. மிக தெளிவான படங்கள்.. ஹல்வா பார்க்கும் பொழுதே சுண்டி இழுக்கிறது.. thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you:-))

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை