அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday 8 February 2011

ஹேர்பின் பூ செய்வது எப்படி?

ஹேர்பின் பூக்கள் பல டிசைன்களில் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன், சைனீஸ் மாடல் ஹேர்பின் பூக்களில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:

ப்ளைன் ஹேர்பின் - 1
சதுர வடிவில் வெட்டிய பிட் துணிகள் - 5 (அளவு 5cm x 5cm)
குண்டூசி - 5
முத்து மணி - 1
குளூ கன்(Glue Gun) 
கத்தரிக்கோல்
ஊசி & நூல்

5cm x 5cm அளவில் வெட்டிய சதுர வடிவ துணியை படத்தில் காட்டியுள்ளபடி குறுக்காக ம‌டிக்கவும்.கையில் பிடித்துள்ள முனை அல்லாமல் உள்ள மற்ற இரண்டு முனைகளையும் இவ்வாறு மடித்து பிடிக்கவும்.இப்போது அப்படியே பின்பக்கம் புரட்டி இரண்டு ப‌க்கம் உள்ள முனைகளை மீண்டும் மடிக்கவும்.மடித்த இரண்டு பாகங்களையும் இவ்வாறு ஒன்று சேர்க்கவும்.
பிரிந்துவிடாதவாறு குண்டூசி குத்தி வைக்கவும். இதேபோல் 5 இதழ்களையும் த‌யார் செய்து வைக்கவும்.இப்போது ஊசி, நூலால் முடிச்சு போட்டு குண்டூசியை எடுத்துவிடவும். (குண்டூசி குத்தாமல் உடனே ஊசி நூல் கொண்டு முடிச்சுப் போட்டும் வைக்கலாம்)அதேபோல் முன் பக்கமும் திருப்பிக்கொண்டு முடிச்சுப் போடவும்.இவ்வாறு எல்லா இதழ்களையும் தயார் பண்ணி வைக்கவும்.
இப்போது முடிச்சுப் போட்ட இடங்களை ஒரே சமமாக‌ வைத்து இவ்வாறு கோர்க்கவும்.முடிச்சுக்கு பக்கத்தில் ஒட்டி (ஆனால் முடிச்சு அவிழ்ந்து விடாமல்) மீதி துணியை வெட்டவும்.நூலின் இரண்டு ப‌க்கங்களையும் சேர்த்து மெதுவாக இறுக்கவும்.
அரைவட்ட வடிவ பூ விருப்பமானால், அந்த வடிவம் வந்தவுடன் முடிச்சுப் போட்டு நூலை வெட்டவும்.இதுபோன்ற வடிவ பூவிற்கு நூலை முழுவதுமாக இறுக்கிய பிறகு நூலை முடிச்சுப் போட்டு, இதழ்களை சரி பண்ணவும்.
பிறகு குளூ கன் மூலம் முத்து மணியை நடுவில் ஒட்டவும்.பூவில் வைத்த குளூ காய்ந்த பிறகு, ஹேர்பின்னில் குளூ வைக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள பூவினை அதில் ஒட்டவும்.
குழந்தைகளுக்கான அழகிய ஹேர்பின் பூ ரெடி!
(ஹேர்பின் பூச்சூடியுள்ள‌) என் பேத்தியையும் அப்படியே பாருங்க :) 

குறிப்பு:

- ஒவ்வொரு இதழுக்கும் அந்தந்த கலர் நூல் கொடுக்கலாம். நாம் பொருத்தும் முத்துமணி அந்த நூலை மறைக்கும் அளவில் இருந்தால் பிரச்சனையில்லை.

- பூ கழன்றுவிடாமல் இருப்பதற்கு குளூ வைக்கும்போது பூவின் இதழ்கள் அனைத்தும் பொருந்த தேவையான அளவு குளூ வைத்து, சரியாக பொருத்தவும்.


48 comments:

 1. அழகிய முறையில் ஹேர்பின் பூ செய்து காட்டி இருக்கின்றீர்கள்.செய்து தலையில் மாட்டி அழகு பார்க்க பேத்தி இல்லையே?? உங்கள் பேத்தி கொள்ளை அழகு.மாஷா அல்லாஹ்.பெயர் என்ன?

  ReplyDelete
 2. ரொம்ப அருமை அஸ்மா.
  படம் நல்ல தெளிவாக இருக்கு
  பேத்தி மாஷா அல்லா.

  ReplyDelete
 3. உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன்
  முடிந்த போது வந்து பெற்று கொள்ளவும்.

  ReplyDelete
 4. இது என் ஏரியா இல்லை என்றாலும்: பொதுவாக இம்மாதிரி செய்முறைகளில், நன்றாகச் செய்யத் தெரிந்தாலும், தெளிவாக எழுதத் திணறுவார்கள். அப்படியில்லாமல், செய்முறையை விளக்கமாகத் தெளிவாகப் புரியும்படி எழுதியிருப்பது வியப்பாக இருக்கீறது அக்கா.

  உங்கள் சொந்தப் பேத்தியா அக்கா? ஆஹா, நான் உங்களை என்னை மாதிரியே சின்னப்புள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!!

  ReplyDelete
 5. அருமை,அழகு,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. போட்டோக்கள், விளக்கங்கள் மிக அருமை.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா அவர்களே...,
  ஹேர்ப்பின் ரொம்ப அழகாக உள்ளது.நன்றாக செய்து இருக்கின்றீர்கள்.
  அப்புறம் ஆச்சர்யம் பட்ட விஷயம் உங்களுக்கு பேத்தியா....?அழகாக இருக்கின்றாள்.
  உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 8. @ ஸாதிகா...

  //அழகிய முறையில் ஹேர்பின் பூ செய்து காட்டி இருக்கின்றீர்கள். செய்து தலையில் மாட்டி அழகு பார்க்க பேத்தி இல்லையே??//
  நன்றி ஸாதிகா அக்கா! கவலைப்படாதீங்க, விரைவில் பேத்தியும் உங்களுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் :-)

  //உங்கள் பேத்தி கொள்ளை அழகு.மாஷா அல்லாஹ்.பெயர் என்ன?// (மாஷா அல்லாஹ்), நன்றி ஸாதிகா அக்கா :) அவள் பெயர் ஸாலிஹா!

  ReplyDelete
 9. @ Jaleela Kamal...

  //ரொம்ப அருமை அஸ்மா.
  படம் நல்ல தெளிவாக இருக்கு
  பேத்தி மாஷா அல்லா//

  (மாஷா அல்லாஹ்), நன்றி ஜலீலாக்கா!

  ReplyDelete
 10. @ ஹுஸைனம்மா...

  //இது என் ஏரியா இல்லை என்றாலும்:// :))

  //.....அப்படியில்லாமல், செய்முறையை விளக்கமாகத் தெளிவாகப் புரியும்படி எழுதியிருப்பது வியப்பாக இருக்கீறது அக்கா// ரொம்ப நன்றி மிஸஸ் ஹுஸைன்!

  //உங்கள் சொந்தப் பேத்தியா அக்கா? ஆஹா, நான் உங்களை என்னை மாதிரியே சின்னப்புள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!!//

  அப்பவே நினைத்தேன், இதுமாதிரி என்னை கம்பு ஊன்ற வைத்துவிடுவீங்கன்னு :))) அது என் பேத்திதாம்பா... ஆனா என் வளர்ப்பு மகள்(அதாவது அக்கா மகள்) உடைய செல்லக்குட்டி :) போதுமா? இப்ப புரியுதுல்ல.. உங்கள மாதிரி நானும் சின்னப் புள்ளதான்னு... :‍-)?

  ReplyDelete
 11. @ asiya omar...

  //அருமை,அழகு,வாழ்த்துக்கள்// நன்றி ஆசியாக்கா!

  ReplyDelete
 12. @ கே. ஆர்.விஜயன்...

  //போட்டோக்கள், விளக்கங்கள் மிக அருமை//

  நன்றி சகோ.

  ReplyDelete
 13. @ Jaleela Kamal...

  //உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன்
  முடிந்த போது வந்து பெற்று கொள்ளவும்//

  உங்கள் அவார்டை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன் :) ரொம்ப நன்றி ஜலீலாக்கா!

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அழைக்கும்

  அருமை.பேத்தி அழகு.வாழ்த்துக்கள்....

  உங்களுக்கு பேத்தி மகன் வழியா? மகள் வழியா?

  ReplyDelete
 15. ellooraiyum kambu uuNRa vaippathil wamma hussainammaavukku koLLai priyam

  ReplyDelete
 16. ஹேர்பின் ரொம்ப அழகா செய்துருக்கீங்க..குட்டிபாப்பா செம க்யூட்!!

  ReplyDelete
 17. looking very cute, hair pin & the baby

  ReplyDelete
 18. @ ஆயிஷா...

  //அஸ்ஸலாமு அழைக்கும்
  அருமை.பேத்தி அழகு.வாழ்த்துக்கள்....//
  நன்றி ஆயிஷா!

  //உங்களுக்கு பேத்தி மகன் வழியா? மகள் வழியா?// அக்கா மகள் வழி :)))பேத்தி. மேலே ஹுஸைனம்மாவுக்கு விளக்கம் சொல்லியுள்ளேன், அதையும் பாருங்க :)

  ReplyDelete
 19. @ ஸாதிகா...

  //ellooraiyum kambu uuNRa vaippathil wamma hussainammaavukku koLLai priyam//

  அதானே...? பேரன் கண்ட எங்க‌ ஸாதிகா அக்காவே என்றும் பதினாறா, (இளம் பாட்டியா) இருக்காங்க ;) இந்த ஹுஸைனம்மா வரட்டும் கேட்கலாம் :))

  ReplyDelete
 20. @ S.Menaga...

  //ஹேர்பின் ரொம்ப அழகா செய்துருக்கீங்க..குட்டிபாப்பா செம க்யூட்!!//

  நன்றி மேனகா :)

  ReplyDelete
 21. @ vanathy...

  //looking very cute, hair pin & the baby//

  நன்றி வானதி :)

  ReplyDelete
 22. //பேரன் கண்ட எங்க‌ ஸாதிகா அக்காவே என்றும் பதினாறா, (இளம் பாட்டியா) இருக்காங்க//

  ஸாதிகாக்கா, தேவையா? நான் ஒண்ணுமே சொல்லலை; நீங்களாத்தான் போட்டு வாங்கிகிட்டீங்க, அஸ்மாக்காகிட்டருந்து!! ;-)))))

  சரி, சரி, வருத்தப்படாதீங்க!! நீங்க முன்னாடி, நான் பின்னாடி (கம்பு ஊணறதுல!!) அவ்வளவுதானே?

  ReplyDelete
 23. @ ஹுஸைனம்மா & ஸாதிகா...

  //நீங்களாத்தான் போட்டு வாங்கிகிட்டீங்க, அஸ்மாக்காகிட்டருந்து!! ;-)))))//

  அடப் பாவமே..! உண்மையாவே ஸாதிகா அக்கா இளம்பாட்டிதாம்பா, கம்பு ஊன்றுவதா கற்பனைப் பண்ணாதீங்கன்னு சொன்னேன் :) ஹுஸைனம்மா.. நீங்கதான் அவங்கள படுத்துறீங்க :)) அல்லாஹ் அல்லாஹ்! :)

  ஸாதிகா அக்கா! ஹுஸைனம்மா போட்டு விடுறத நம்பாதீங்க, நான் உங்க சப்போர்ட்தான் :-) ok?

  ReplyDelete
 24. வணக்கம் அஸ்மா..........இன்றுதான் உங்கள் தளம்கண்டேன். செயல்முறை அழகாய் தெளிவாய் உள்ளது என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. @ நிலாமதி...

  //இன்றுதான் உங்கள் தளம்கண்டேன். செயல்முறை அழகாய் தெளிவாய் உள்ளது என் பாராட்டுக்கள்//

  வாங்க நிலாமதி! உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 26. ஸலாம் சகோ அஸ்மா...
  இந்த டிபார்மெண்ட்ல எனக்கு வேலை இல்ல..இருந்தாலும்..செயல்முறைவிளக்கம் நல்லாவே இருக்கு போட்டோஸ் சூப்பர்..

  கடைசியா இருக்குற அந்த குட்டிப் பொண்ணு உங்க பேத்தியா..cute girl..மாஷா அல்லாஹ்...

  பிள்ளைகள் கண்குளிர்ச்சின்னு அல்லாஹ் சொல்ரது சும்மா இல்லையே..

  ஸாதிக்கா அக்கா,நீங்கள்ளாம்,பேத்தி பேரன் கண்டவர்களா??...
  பரவாயில்லையே...நல்லா ஆக்டிவா பதிவு போடுரீங்க..

  வாழ்த்துக்கள்ஸ்

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 27. ஸலாம் அஸ்மா... கைவினை பகுதிக்கு திறப்பு விழா நடத்தியாச்சா?செய்முறை விளக்கம் நல்லா இருக்கு...பேத்தி சும்மா மாடல் மாதிரியில்ல போஸ் கொடுக்கிறாங்க... மாஷா ஆல்லாஹ்..உங்க அக்காவுக்கு பேத்தியா..அப்ப உங்களுக்கு அவ்வளவு வயசா?!;) (விட மாட்டோம்ல..)

  என்னை இப்படி எந்த அம்மாவும் கேட்டுடக்கூடாதுன்னுதான் என்றென்றும் பதினாறுன்னு பேர் வச்சிட்டேன்ல..;)

  ReplyDelete
 28. @ apsara-illam...

  //ஆச்சர்யம் பட்ட விஷயம் உங்களுக்கு பேத்தியா....?அழகாக இருக்கின்றாள்.
  உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள்//

  வ அலைக்குமுஸ்ஸலாம்! எனக்கு பேத்திதான் அந்தக்குட்டி :) மேலே மற்ற கருத்துக்களில் விளக்கம் உள்ளதுபா..! பார்த்தீங்கன்னா உங்க ஆச்சரியம் போய்விடும் :) வாழ்த்துக்கு நன்றி அப்சரா.

  ReplyDelete
 29. @ RAZIN ABDUL RAHMAN...

  //..செயல்முறைவிளக்கம் நல்லாவே இருக்கு போட்டோஸ் சூப்பர்..// நன்றி சகோ.

  //cute girl..மாஷா அல்லாஹ்...பிள்ளைகள் கண்குளிர்ச்சின்னு அல்லாஹ் சொல்ரது சும்மா இல்லையே..//

  நிச்சயமா சகோ!

  ReplyDelete
 30. @ enrenrum16...

  //ஸலாம் அஸ்மா... கைவினை பகுதிக்கு திறப்பு விழா நடத்தியாச்சா?செய்முறை விளக்கம் நல்லா இருக்கு...//
  ஸலாம் பானு! ஆமாப்பா.. இதப் போட்டவுடனே உங்களிடம் சொல்லணும்னு நினைத்திருந்தேன். மறந்தேவிட்டது. நல்லவேளை நீங்களே வந்துட்டீங்க :)நன்றி பானு.

  //பேத்தி சும்மா மாடல் மாதிரியில்ல போஸ் கொடுக்கிறாங்க... மாஷா ஆல்லாஹ்..உங்க அக்காவுக்கு பேத்தியா..அப்ப உங்களுக்கு அவ்வளவு வயசா?!;) (விட மாட்டோம்ல..)//

  அந்தக் குட்டிய ஃபோட்டோ எடுப்பதற்குள் அங்குமிங்கும் ஓடி.. அப்புறமா கையில தூக்கி வச்சதும் இப்படி அமைதியா போஸ் கொடுக்குது :) ஆமா பானு, அவ்வ்...வ்வளவு வய‌சுதான் :)) நேற்றைவிட இன்றைக்கு நமக்கு வயசு கூடிடுச்சுதானே? ம்.. நீங்க என்றென்றும் பதினாறாவே இருங்க, நாங்க வேண்டாம்ணு சொல்லல‌ :-)

  ReplyDelete
 31. @ நாஸியா...

  //wow! masha Allah! amazing.. :)//

  ஸாரிமா.. பதில் கொடுக்காம விட்டுப் போச்சு! இப்பதான் கவனித்தேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நாஸியா :)

  ReplyDelete
 32. மாஷா அல்லாஹ் குழந்தை அழகா இருக்கு ..!!!

  இது செய்ய நல்ல பொறுமை அவசியம் :-))

  ஆஹா பாட்டிகள் முன்னேற்ற கழகமா ...ஓக்கே...ஓக்கே...அதான் பதிவுகளில் சும்மா பின்றீங்கப்போல... :-)) இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை

  ReplyDelete
 33. @ ஜெய்லானி...

  //மாஷா அல்லாஹ் குழந்தை அழகா இருக்கு ..!!!// அல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ :)

  //ஆஹா பாட்டிகள் முன்னேற்ற கழகமா ...ஓக்கே...ஓக்கே...அதான் பதிவுகளில் சும்மா பின்றீங்கப்போல... :-)) இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை//

  எல்லோருமா சேர்ந்து சீக்கிரமா வயசாக வச்சிடுவீங்க போல? இதுல கழகம் வேற ஆரம்பிச்சு தர்றீங்களா? :))) ம்ம்... ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல.. :-)

  ReplyDelete
 34. போட்டோவும் செய் முறை விளக்கங்களும் தெளிவாக அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. @ Lakshmi...

  //போட்டோவும் செய் முறை விளக்கங்களும் தெளிவாக அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்//

  வாங்க லஷ்மிமா! உங்களின் முதல் வருகையும் வாழ்த்துக்களும் சந்தோஷமாக உள்ளது :) மிக்க நன்றிமா!

  ReplyDelete
 36. antha pinnum,pin vacha paapavum enga veetukku vantha pothum. naanga intha maathiri chinna craft ellaam seyrathu kidaiyaathu. ethaavathu enga rangeukku sollungalen??? hi hi :)

  ReplyDelete
 37. ennaathithu, appa aarambicha moderation process innum nikkaliya? illa ippa verethenum pirachinaiya? moderation iruppathum oru vithathil nallathuthaan. namma valaila yaaru enna pesanumgira suthanthiraththai naama alakka mudiyum. nadathunga :)

  ReplyDelete
 38. @ அன்னு...

  //antha pinnum,pin vacha paapavum enga veetukku vantha pothum// ரொம்ப சின்ன ஆசைதான் உங்களுக்கு :-)

  //naanga intha maathiri chinna craft ellaam seyrathu kidaiyaathu. ethaavathu enga rangeukku sollungalen??? hi hi :)//

  உங்க ரேஞ்ச் எவ்வளவுன்னு சொல்லுங்க, அது 'A 380' ஏர் பஸ்ஸாவே இருந்தாலும் செஞ்சு காமிச்சுடலாம் :)))

  ReplyDelete
 39. @ அன்னு...

  //ennaathithu, appa aarambicha moderation process innum nikkaliya? illa ippa verethenum pirachinaiya?//

  முன்பு ஒரே ஒரு நாள் மட்டும் moderation போட்டு வைத்து எடுத்துவிட்டேன். பிரச்சனை ஒன்றுமில்ல அன்னு.. வரும் முன் காப்போம் என்ற சிலரின் அட்வைஸ் :) அதனால் மீண்டும் போன மாதத்திலிருந்துதான் ஃபிக்ஸடா போட்டாச்சு :) அடுத்த முறை தங்கிலீஷ் டைப்பிங் இல்லாம இருந்தா நல்லா இருக்கும் அன்னு. ok? ஒரு request தான் :)

  ReplyDelete
 40. ////antha pinnum,pin vacha paapavum enga veetukku vantha pothum// ரொம்ப சின்ன ஆசைதான் உங்களுக்கு :-)//
  ஹெ ஹெ ஹெ... இதை விட சின்னதா ஆசைப்படமுடியாதே அஸ்மா..? சரி வாணாம் போங்க, அந்த ஹேர் பின்னை விட்டுட்டு, குட்டிப்பாப்பாவை அனுப்பினாலும் போதும் நான் adjust செஞ்சுக்கறேன். ஹெ ஹெ

  //உங்க ரேஞ்ச் எவ்வளவுன்னு சொல்லுங்க, அது 'A 380' ஏர் பஸ்ஸாவே இருந்தாலும் செஞ்சு காமிச்சுடலாம் :))) //
  அதுவும் சின்ன ரேஞ்சாத்தான் தெரியுது அஸ்மா... வேண்ணா அதை விட கொஞ்சம் பெரிசா ஒரு பட்டம் அல்லது கப்பல் இந்த மாதிரி செய்யுங்களேன்?

  //அடுத்த முறை தங்கிலீஷ் டைப்பிங் இல்லாம இருந்தா நல்லா இருக்கும் அன்னு. ok? ஒரு request தான் :) //
  வீட்டு main pcல தான் தமிழ்ல எழுத முடியும். இரவு நேரம் வாசிப்பது netbook மூலமா. அதில் அதிகமா எதையும் download செஞ்சு வக்க முடியாது. அதனால்தான் தங்கிலீஷ். உங்களுக்காக வேணும்னா இனிமே பதிவு படிச்சாலும் கமெண்ட்டை தமிழிலேயே எழுதறேன். ஹெ ஹெ

  ReplyDelete
 41. @ அன்னு...

  //அந்த ஹேர் பின்னை விட்டுட்டு, குட்டிப்பாப்பாவை அனுப்பினாலும் போதும் நான் adjust செஞ்சுக்கறேன். ஹெ ஹெ//

  அந்த குட்டியோட உம்மா வர்றா என்னை உதைக்க :)) அனிஷா.. உங்களுக்கு நான் என்னப்பா செஞ்சேன், இப்படியொரு ப்ளானா உங்களுக்கு..? :)))

  //அதுவும் சின்ன ரேஞ்சாத்தான் தெரியுது அஸ்மா... வேண்ணா அதை விட கொஞ்சம் பெரிசா ஒரு பட்டம் அல்லது கப்பல் இந்த மாதிரி செய்யுங்களேன்?//

  நாஸாவுக்கு ஃபோன் போட்டு ஐடியா கேட்டுள்ளேன், பொறுங்க வரட்டும் :))

  //அதில் அதிகமா எதையும் download செஞ்சு வக்க முடியாது. அதனால்தான் தங்கிலீஷ். உங்களுக்காக வேணும்னா இனிமே பதிவு படிச்சாலும் கமெண்ட்டை தமிழிலேயே எழுதறேன்//

  அப்படிலாம் கஷ்டப்படாதீங்கபா! தங்கிலீஷை விட தமிழ் அழகா இருக்குதேன்னு சொன்னேன் :) உடம்பை கவனிச்சுங்க அன்னு! எல்லாத்துக்கும் பதில் கொடுத்துட்டீங்க, நன்றி :-)

  ReplyDelete
 42. //எல்லாத்துக்கும் பதில் கொடுத்துட்டீங்க, நன்றி :-) //
  அப்படின்னா இதுக்கு மேல பதில் எழுதாதீங்கன்னு சொல்றீங்களோ???


  ஹி ஹி ஹி

  ReplyDelete
 43. @ அன்னு...

  //அப்படின்னா இதுக்கு மேல பதில் எழுதாதீங்கன்னு சொல்றீங்களோ???//

  ஓ.. அப்படியொரு அர்த்தம் இருக்கா? :)) நீங்கள்லாம் வந்தாதான் நல்லா இருக்கும் அன்னு :‍) போதுமா? ;)

  ReplyDelete
 44. this is an nice hair pin.

  ReplyDelete
 45. this is an nice hair pin.

  ReplyDelete
 46. வணக்கம்

  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை